இந்த வலைப்பூவில் இதுவரை திகில் கதைகளை எழுதி, உங்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்தேன். இனி வெள்ளித்திரையிலும் கதைகூறும் முதல்முயற்சியாய், 'ஓர் இரவு' என்ற திகில் திரைப்படத்தை, என் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இயக்கியுள்ளேன். இப்படம் வருகிற ஜூன் 11ஆம் தேதி, வெளிவருகிறது..!
இப்படத்தின் ட்ரெயிலர் இதோ...
இப்படத்தின் கதாநாயகன், ஏற்கனவே நீங்கள் என் கதைகளில் படித்த நகுலன் பொன்னுசாமி என்கிற அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்தான்..! இனி, அவர் பணியை வெள்ளித்திரையிலும் கண்டு ரசிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!
நன்றி