Wednesday, April 21, 2010

மூன்லைட் மர்மம்... [சிறுகதை]

வெயில் தனிந்த குளுமையில், ஒரு அழகிய மாலைவேளை...

மூன்லைட் அபார்ட்மெண்ட்-இன் மொட்டை மாடியில் பல ப்ளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருக்க, அபார்ட்மெண்டின் வாசிகள் பலரும் அந்த சேர்களை ஆக்கிரமித்திருந்தனர். எதிரே சில சேரில் அஸோஸியேஷன் தலைகள் ஒரு நாலுபேர் கையில் பேடும் பேனாவுமாக அமர்ந்திருந்தனர். கூட்டத்தின் வலது ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். மீட்டிங் ஆரம்பிப்பதற்குள் இந்த அபார்ட்மெண்ட் பற்றியும், என்னைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

மூன்லைட் அபார்ட்மெண்ட்ஸ், சென்னையின் ஒரு முக்கிய ஏரியாவில் அமைந்திருந்தது. அருகருகிலேயே இதைவிட பெரிய அபார்ட்மெண்டுகள் அதிகம் இருந்தாலும், இந்த கட்டிடம் ஒருவித பழமை கலந்த கம்பீரத்துடன் காட்சியளிக்கும். Flat - A to H என்று 8 ஃப்ளாட்டுக்கள். தரைத்தளத்தையும் சேர்த்து நான்கு தளங்கள். விசாலமான மொட்டை மாடி. ஒரே ஒரு லிஃப்ட். இதுதான் இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு.

நான் சதீஷ், வயது 27. பேச்சுலர். இந்த மூன்லைட் அபார்ட்மெண்ட்டில் இரண்டாவது தளத்திலிருக்கும் ஃப்ளாட் - F, என்னுடையது.

நான் பொதுவாக இதுபோன்ற அஸோஸியேஷன் மீட்டிங்கில் கலந்து கொள்வதில்லை. ஆனால், இன்று எனக்கு ஒரு முக்கிய கோரிக்கை இருந்தது. அதனால் வந்து அமர்ந்துவிட்டேன்...

கூட்டத்தில் அனைவரும் அமைதியாக இருக்கவே, அஸோஸியேஷன் மீட்டிங்கும், கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்தும் ஒரே மாதிரிதானோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்த அதே நேரம் மீட்டிங் தொடங்கியது. சம்பிரதாய பேச்சுக்கள், நன்றி பாராட்டுதல்களுக்கு பிறகு, நான் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த கம்ப்ளைண்ட் & கோரிக்கை சுற்று வந்தது.

கிரவுண்டு ஃப்ளோரில் இருக்கும் தாத்தா என்னைப் பற்றி குறைகூற ஆரம்பித்தார்.

'அடிக்கடி இந்த 'செகண்ட் ஃப்ளோர் சதீஷ்' பைக்-ஐ என் வீட்டை ஒட்டியே பார்க் பண்ணிடுறான். அதை நிறுத்தச் சொல்லுங்கோ..'

'அதான் நிறுத்துறேன் இல்ல..' என்று நான் நக்கலடித்தேன். கூட்டத்தில் ஒருசிலர் சிரித்துக்கொண்டனர்.

'பாத்தேளா..! எவ்வளவு திமிரு..! நான் கிளம்புறேன். எனக்கு இந்த மீட்டிங்க்ல என்ன மரியாதை..' என்று அவர் தன்னை யாராவது தடுப்பார்கள் என்று தெரிந்துக் கொண்டே எழுந்திருக்க முயல, மீட்டிங் தலைவர்கள் தடுத்தனர்.

'ப்ளீஸ் மிஸ்டர். ராகவாச்சாரி, கோவப்படாதீங்க... உட்காருங்க... சதீஷ் யூ ஷூட் நாட் ஸ்பீக் லைக் திஸ்'

இதற்குள் மூன்றாவது தளத்தில் ஃப்ளாட் H-லிருக்கும், மோகனா மேடம் பேசினார், 'நம்ம அபார்ட்மெண்டுக்கு எதிர்தாப்ல இருக்கிற ஆட்டோ ஸ்டாண்டு பசங்க, என் பொண்ணு காலேஜ்க்கு கிளம்பும்போது கிண்டல் பண்றாங்களாம். ஒண்ணு அவங்களை வார்ன் பண்ணி வைங்க, இல்லேன்னா, நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுறேன்'

'சரி மிஸஸ். மோகனா மேடம், கண்டிப்பா வார்ன் பண்ணிடலாம். போலீஸ் கம்ப்ளைண்ட்னு மறுபடியும் இந்த அபார்ட்மெண்டுக்கு போலீஸ் வர வேண்டாம்' என்று அவர் எதையோ நினைத்துக் கொண்டு கூற, உடனே மீட்டிங்கில் அனைவரும் அமைதி காத்தனர்.

இதுதான் சரியான சமயம் என்று  நான் பேச்சை துவங்கினேன்.

'அதுதான் நானும் சொல்றேன். கடந்து 3 வாரத்துல இந்த அபார்ட்மெண்டுக்கு போலீஸ் வந்து வந்து போயிட்டுத்தான் இருக்காங்களே தவிர, இந்த லிஃப்ட் பயம் இன்னும் நம்மளை விட்டு போனமாதிரி தெரியல.. அவங்கவங்க என்னென்னவோ பிரச்சினையைப் பத்தி பேசிட்டிருக்கீங்க... இன்னிக்க இந்த அபார்ட்மெண்டுல இருக்கிற முக்கியப் பிரச்சினை லிஃப்ட் பயம்தான். யாருமே லிஃப்ட்ஐ உபயோகிக்கிறதில்லை. கேட்டா ஏதோ அமானுஷ்யமா சத்தம் வருது, உள்ள உருவம் இருக்கிற மாதிரி க்ளாஸ் ஹோல்-ல தெரியுதுன்னு கிட்டத்தட்ட எல்லோரும் லிஃப்டை புறக்கணிச்சிட்டோம். இதுக்கு முதல்ல ஒரு வழியைச் சொல்லுங்க...'

'அதுக்க என்னப்பா பண்றது. 3 வாரத்துல 2 பேர் அந்த பாழாப் போன லிஃப்டுல இறந்து தொலைச்சிட்டாங்க. அதுவும் கொடூரமான துர்மரணம். அதுக்கு போலீஸ் பாவம் என்ன பண்ணும். இல்லை நம்ம அபார்ட்மெண்ட் ஆளுங்கதான் என்ன பண்ணுவாங்க...'

'அதுதான் சொல்றேன். கோவில்னா பூசாரிதான் பூஜை பண்ணனும், ஹோட்டல்னா சமையல்காரன்தான் சமைக்கணும். அது மாதிரி, இந்த ஆவி பேய் மாதிரி விஷயத்துக்கு நாம போலீஸை தேடாம வேற யாரையாவதுதான் தேடணும்' என்று சற்றே பஞ்ச் டயலாக் போல் பேசிமுடித்தேன். எனக்கே நான் பேசியது அதிகமோ என்று தோன்றிய அதே வேளை... ஒருவர் பேசினார்.

'வேற யாராவதுன்னா, மந்திரவாதிய கூட்டிட்டுவந்து பேயோட்ட சொல்லலாங்கிறியா..?'

'சார், ப்ளீஸ், அதெல்லாம் அப்போ... இதுக்கு இப்போ மாதிரி வேற சொல்யூஷன்ஸ் இருக்கு'

'என்னது அது?'

'நாம ஏன் ஒரு பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டரை கூப்பிடக் கூடாது?'

'பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டரா..? அப்படின்னா..?'

'அமானுஷ்ய துப்பறிவாளர்கள் அல்லது அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள்னு சொல்லலாம்..'

'நம்மூருல அந்த மாதிரி ஆளுங்களும் இருக்காங்களா..?'

'கேரளாவுல நிறைய பேர் இருக்காங்க..! ஆனா, சென்னையில ஒருத்தர் இருக்கார்... நான் YELLOW PAGEல பாத்து குறிச்சி வச்சிருக்கேன். நீங்க சொன்னீங்கன்னா வி ஷல் கால் ஹிம்..' என்று என் மனதிலிருந்ததை கொட்டித்தீர்த்தேன்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். பதில் சொல்வதாயில்லை.

ஒருவர் எழுந்தார். 'தம்பி, கூப்பிடுங்க..! இதுதான் வழின்னா... என்னன்னனு பாத்துர்லாம்...' என்று என் எதிர்த்த ஃப்ளாட்டில் குடியிருந்த ஆடிட்டர் கூறினார்.

ஒருமனதாக அனைவரும் சம்மதிக்க மீட்டிங் முடிந்தது.

---------------

நான் அந்த ஆராய்ச்சியாளருக்கு டயல் செய்தேன்.

'ஹலோ..!' என்றேன்.

'எஸ்..?', குரல் சற்று இளமையாகவே இருந்தது.

'அம் ஐ ஸ்பீக்கிங் டு மிஸ்டர் நகுலன் பொண்ணுசாமி..?'

'எஸ்... ஹோல்டிங்...'

'சார்... என் பேரு சதீஷ்...'

'மிஸ்டர். சதீஷ்..! என்னை நீங்க நகுலன்-னே கூப்பிடலாம்..'

'ஓகே மிஸ்டர். நகுலன்... வி நீட் யுவர் ஹெல்ப்..'

'ரிகார்டிங் வாட்..?'

'ரிகார்டிங்... உங்க சப்ஜெக்ட்தான்... நேர்ல சொல்றேனே..' என்றேன்.

'ஓகே... உங்க அட்ரஸ் கொடுங்க..'

'ஐ வில் SMS யூ..'

'ஓகே... நான் எப்போ உங்களை மீட் பண்றது...' என்று கேட்டார்

'எனி டைம். நீங்களே சொல்லுங்க..?' என்றேன்.

'நீங்க எந்த ஏரியா..?'

சொன்னேன்.

'ஓகே.. அப்போ நான் ஒரு ஒன் அவர்ல அங்க இருக்கிறேன்.'

'ப்ளீஸ் கம்...' என்று ஃபோனை வைத்தேன்.

------------------

ஒரு மணி நேரத்திற்கு பிறகு

காலிங்பெல் ஒலித்தது.

ஆர்வமாக சென்று கதவைத் திறந்தேன். அங்கே நின்றிருந்தவர்... இல்லை.. நின்றிருந்தவன்... இவனை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே... அவன் கண்ணிலும் அதே தேடல், அவனும் என்னை எங்கோ பார்த்திருப்பதுபோல் யோசித்துக் கொண்டிருந்தான்.

'ஹே.. சதீஷ்... நீ K. சதீஷ்குமார்தானே..! டேய்.. சூப்பர்மாமா...'

அவன் அழைத்த அந்த 'சூப்பர்மாமா' பட்டப்பெயர்... நான் அப்போது சூப்பர் பாக்கு அதிகம் போடுவேன். இப்போது பழக்கத்தை விட்டுவிட்டேன். என் பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த பட்டப்பெயர் எப்படி இவனுக்கு தெரிந்தது... அப்படியென்றால் இவன்... இவன்... என் பள்ளி நண்பனா..? ஆங்... எனக்கு ஞாபகம் வந்துவிட்டது இவன் என்னுடன் பள்ளியில் 10வது வரை படித்தவன். பெயர்...

'ஹே... நகுலா... நீதானா அது..'  என்று சகஜமானோம். தேடித்தேடி என் நண்பனைத்தான் அழைத்திருக்கிறேன்.

‘என்னடா பேர், நகுலன் பொண்ணுசாமின்னு மாத்திட்டியா..’

‘மாத்தல்லாம் இல்ல, அப்பா பேரை இனிஷியல் மட்டுமே யூஸ் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் லாஸ்ட் நேமா எக்ஸ்டெண்ட் பண்ணி பொண்ணுசாமின்னு சேத்துக்கிட்டேன்..’

‘அப்படியா... ப்ளீஸ் கம் இன்..’ என்று உள்ளே அழைத்தேன்.

இருவரும், பால்கனியில் பிரம்பு நாற்காலியில். அம்ரந்து காஃபி குடித்தபடி பேசினோம்.

'நீ எப்படிடா இந்த பேயோட்ற ப்ரொபஷனை செலக்ட் பண்ணிட்டே..?' நான்தான் பேச்சை ஆரம்பித்தேன்.

'டேய் பேயோட்றதுன்னு கொச்சையா சொல்லாதடா... கஷ்டப்பட்டு லண்டன்ல போய் இதுக்காக படிச்சிட்டு வந்து ப்ரொஃபஷனலா பண்ணிட்டிருக்கேன்.'

'லண்டன்ல இதுக்கு படிப்பிருக்கா..?'

'ஆமா... மாஸ்டர் ஆஃப் சூப்பர்நேச்சுரல் சைன்ஸ்'

'ஓ... கிரேட்-டா..'

'ம்ம்ம்... தேங்க்ஸ்...'

'சென்னையிலியே நீ ஒருத்தன்தான் இந்த வேலை செய்யுறேன்னு நினைக்கிறேன்..'

'ஆமா.. இந்த ஊருல இந்த ப்ரொஃபஷன் ரொம்ப ரேர் கேஸ்..'

'நீ தனியாதான் வர்க் பண்ணுவியா..?'

'பொதுவா டீம் வர்க்காதான் செய்வாங்க... எனக்கு இன்னும் டீம் கிடைக்கலை.. சோ இப்போதைக்கு தனியா பண்ண பழகிக்கிட்டேன்.. சரி அதைவிடு, உனக்கு என்ன  பிரச்சினை.. அதச்சொல்லு..?'

'சொல்றேன்.. பிரச்சினை எனக்குமட்டுமில்ல... இந்த அபார்ட்மெண்டடுக்கே உண்டு...'

'வாட் இஸ் தட்?'

'வரும்போது எப்படிவந்தே... படிக்கட்டு ஏறிதானே..?'

'ஆமாம்.. லிஃப்ட் அவுட் ஆஃப் ஆர்டர்-னு போட்டிருந்துச்சு'


'அது பொய்..' என்றேன்.

'என்ன பொய்.. அப்போ லிஃப்ட் நல்லா வர்க் ஆகுதா..?'

'நல்லபடியா வர்க் ஆகுது.. ஆனா, பிரச்சினை லிஃப்ட்-க்குள்ள..?'

'என்ன பிரச்சினை..?'

'லிஃப்ட்டுக்குள்ள ஆவி இருக்கு..!' என்றதும், அவன் முகத்தில் மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், நகுலன் மிகவும் சகஜமாக காஃபி குடித்துக் கொண்டிருந்தான். நான் தொடர்ந்தேன்...

'மூன்று வாரத்திற்கு முன்னாடி, லிஃப்டில மின்கசிவு இருக்குன்னு தெரியவந்தது. Hi-Fly-ங்கிற லிஃப்ட் மெயின்டனென்ஸ் ஆளுங்ககிட்ட கம்ப்ளைண்ட் பண்ணோம். அவங்க ஒரு எலக்ட்ரிஷியனை அனுப்பி வைச்சாங்க. அந்த ஆளு பாக்க அய்யனார் சிலை மாதிரி பயங்கரமா இருந்தான். இன்னும் அவன் பார்வை என் கண்ணுலியே இருக்கு... அந்த எலக்ட்ரிஷியன், லிஃப்டோட பேஸ்மெண்ட் ஏரியாவுல இருக்கிற கேபிளை தரைதளத்திலிருந்து சரிசெஞ்சிக்கிட்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக 3வது தளத்திலிருந்த லிஃப்ட் தரை தளத்திற்கு இறங்கிச்சு.  அந்த எலக்ட்ரிஷியன் சுதாரிச்சிக்கிட்டு வெளிய வர்றதுக்குள்ள லிஃப்ட் அவன் மேல அமிழ்ந்திடுச்சு. பாவம்... அந்த எலக்ட்ரிஷியன், நசுங்கிப் போய் இறந்துட்டான். இந்த சம்பவத்துக்கப்புறம் எங்க அபார்ட்மெண்ட் ஆளுங்கள்லாம் ஒரு மாதிரி ஆயிட்டாங்க...'

'சரி... இதுல என்ன பிரச்சினை..?'

'பிரச்சினையே இதுக்கப்புறம்தான்... அந்த ஆளு இறந்ததுக்கப்புறம். லிஃப்ட்ல, ஏதேதோ உருவம் தெரியுது, சத்தம் கேக்குதுன்னு அவனவன் ஒரு கதையை சொல்லிக்கிட்டிருந்தாங்க.. யாருமே லிஃப்டை தொடவே பயந்துட்டு படிக்கட்டையே யூஸ் பண்ணிக்கிட்டிருந்தோம்...'

'சகஜம்தான்.. பயம்தான் காரணம்..'

'ஆனா அதான் இல்ல நகுலன்... இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கப்புறம்... மூணாவது ஃப்ளோருல இருக்கிற ஒரு பையனைப் பாக்க, அவன் ஃப்ரெண்டு லிஃப்டல வந்திருக்கான். அந்த விசிட்டர். லிஃப்ட்ல ரத்தம் கக்கி செத்துட்டான்.'

'ஓ மை காட்..'

'மூணே வாரத்துல ரெண்டு பேர் இப்படி கோரமா செத்துட்டதால, அந்த லிஃப்ட்ல பேய் இருக்கு ஆவி இருக்குன்னு எல்லோருக்குள்ளயும் ஒரு பயம் ஒட்டிக்கிச்சு..'

'நீ என்ன நினைக்கிறே..?' என்று அவன் கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

'நான் என்ன நினைக்கணும்..?' என்றேன்

'அதாவது, உனக்கு ஏதாவது பர்சனல் ஒபீனியன்..?'

'எனக்கும் அந்த லிஃப்டை பாக்கும்போதுல்லாம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..'

'கொஞ்சம் பயமா..? பயத்துல என்ன ரேஷன்...'

'ப்ளீஸ் நகுல்... எனக்கும் பயம்தான் போதுமா..?'

'போதும்...'

'இப்போ நீ இங்க என்ன செய்யப்போறே..?' என்று கேட்டேன். அரை விநாடி நிசப்தமாக காஃபி குடித்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

காஃபி டம்ளரை கீழே வைக்கும்போது, என்னிடம், 'ஒருத்தர்கிட்ட பேசனும்...' என்று நகுலன் என்னிடம் கூறினான்.

'யார்கிட்ட..?'

'அந்த மூணாவது மாடியில இருக்கிற பையன்கிட்ட..'

மூணாவது மாடியில் இருக்கும் பிரபுவிடம், நகுலனை அறிமுகம் செய்துவைத்தேன். நகுலன் அவனிடம் என்ன பேசப்போகிறான் என்று ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

'மிஸ்டர் பிரபு, இறந்துப் போன உங்க ஃப்ரெண்டோட பேர் என்ன..?'

'கணேஷ்..?'

'ஓகே.. கணேஷ் உங்க ஃப்ளாட்டுக்கு வரப்போறார்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா..?'

'தெரியும்..'

'லிஃப்ட்லதான் வருவார்னு நீங்க எதிர்பார்த்தீங்களா..?'

'எதிர்ப்பார்தேன்...'

'லிஃப்ட்ல இப்போ இருக்கிற மாதிரி 'அவுட் ஆஃப் ஆர்டர்'னு போர்டு அப்போவும் இருந்துதா..?'

'இல்ல.. கணேஷ் இறந்ததுக்கப்புறம்தான் அந்த போர்டை ப்ரிண்ட் அவுட் எடுத்து மாட்டுனாங்க..'

'மிஸ்டர் கணேஷ், ஒரு பர்சனல் கேள்வி, உங்களுக்கு இந்த ஆவி பேய் மாதிரி விஷயங்கள்ல நம்பிக்கை இருக்கா..?'

'முழுசா இல்லை... ஆனா இல்லாமலும் இல்ல..'

'சோ.. உங்களுக்கு நம்பிக்கை இருக்கு..'

'இ..இருக்கு..'

'சரி, ஜஸ்ட் ஃப்யூ மோர் க்வெஸ்டின்ஸ்... கணேஷ்கிட்ட லிஃப்ட்-ஐ யூஸ் பண்ணாதேன்னு ஏதாவது வார்ன் பண்ணீங்களா..?'

'பண்ணேன் சார்..!'

'சார்-னு கூப்பிடாதீங்க.. ஜஸ்ட் கால் மீ நகுல்..'

'ஓகே.. ந..நகுல்.. நான் கணேஷுக்கு சிவியரா வார்ன் பண்ணேன்.'

'என்னன்னு வார்ன் பண்ணீங்க..?'

'லிஃப்ட்ல கோஸ்ட் இருக்கு... அப்பப்போ ஏதேதோ உருவம் தெரியுது.. சத்தம் கேக்குது... சோ... வரும்போது மறக்காம படிக்கட்டுல ஏறி வந்துடுன்னு வார்ன் பேண்ணேன்...'

'அதையும் தாண்டி கணேஷ் லிஃப்ட்ல வந்திருக்காரு.. அப்படிதானே..?'

'ஆமாம்.. நான் சொல்ல சொல்ல கேக்காம.. இப்படி அனாவசியமா இறந்துப்போயிட்டான்..!'

'சோ... கணேஷூக்கு இந்த சூப்பர்நேச்சுரல் பவர்ஸ் மேல நம்பிக்கை இல்லைன்னு நினைக்கிறேன்.. இல்லியா..?'

'ஆமா சார்.. நான் கொடுத்த வார்னிங்கையும் அவன் சட்டையே பண்ணலை.. இன் ஃபாக்ட் நான் சொல்லும்போதும் சிரிச்சுக்கிட்டேயிருந்தான்'

'ஓகே மிஸ்டர்.பிரபு... தாங்க்ஸ் ஃபார் யுவர் கோ-ஆபரேஷன்... உங்க நண்பர் இறந்ததுக்காக நான் வருத்தப்படுறேன். மறுபடியும் அந்த சம்பவத்தை நினைக்கவச்சதுக்கு ஐ அம் ரியலி சாரி...'

'பரவாயில்ல சார்..'

'ஜஸ்ட் நகுல்..!'

'ஆங்.. பரவாயில்ல நகுல் சார்! எப்படியாவது இந்த அபார்ட்மெண்ட் பயத்தை போக்கிட்டீங்கன்னா அதுவே போதும்..' என்று பிரபு வருத்தத்துடன் கூறி முடித்தான்.

'என்ன பண்றீங்க மிஸ்டர் பிரபு..?'

'நான் மியூஸிக்கல் ஆல்பம் பண்ணிட்டிருக்கேன். அதுல நடிக்க வைக்கத்தான் கணேஷை வரவழைச்சேன்.. அதுக்குள்ள...' என்று மேற்கொண்டு பேச முடியாமல் பிரபு திணறினான்.

'ஓகே.. லெட்ஸ் கெட் பேக் டு யுவர் ஃப்ளாட்' என்று நகுலன் மீண்டும் என்னைப் பார்த்து சொன்னதும் அங்கிருந்து நானும் நகுலனும் வெளியேறினோம்.

இருவரும் படிக்கட்டில் இறங்கியபடியே பேசிக்கொண்டிருந்தோம்...

'என்ன நகுல் என்ன நினைக்கிறே..?'

'நத்திங்... இறந்துப்போன அந்த பையனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எனக்கு ஒரு காப்பி கிடைக்குமா..?'

'நான் அரேஞ் பண்றேன்..' என்று கூற, எனது இரண்டாவது தளத்திலிருக்கும் லிஃப்ட் கதவு வந்தது.

நகுலன் அங்கேயே நின்றான்... லிஃப்டை சற்று நேரம் உற்றுப் பார்த்தான்... 'நான் நாளைக்கு வர்றேன்...' என்று கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

------------------

மறுநாள், மதியம் மணி 3, காலிங் பெல் ஒலித்தது.

நகுலன்தான்... உள்ளே வரும்போது கையில் ஒரு பேக்-உடன் வந்திருந்தான்.

'டேய் யார்றா அது கிரவுண்ட் ஃப்ளோருல அந்த கிழம்..'

'ஏன்டா ஏதாவது பிரச்சினை பண்ணானா..?'

'ஆமாம்... என் டவேரா வண்டியை அவன் ஃப்ளாட்டு ஒட்டியிருக்கிற கேட்டுல பார்க் பண்ணிட்டேனாம்... வண்டி நிக்கிறதால அவருக்கென்னடா ஆகப்போவுது... அப்படி சத்தம் போடுறான்..?'

'அவரு அப்படிதான் விடுறா..? கிரவுண்ட் ஃப்ளோருல இருக்கிறதால, அவருக்கு லிஃப்ட் பிரச்சினையைப் பத்தி கவலையே இல்லை... அதான். மனுஷன்... தனக்கு சம்பந்தமில்லா பிரச்சினையில ஆர்வம் காட்டவே மாட்டாங்க, ஆதரிக்கவும் மாட்டாங்க..'

'டேய்! சதீஷ்! டயலாக்கெல்லாம் பேசுறே..!'

'சரி, என்னைவிடு, நீ சொல்லு, என்னது இது, பேக் கொண்டு வந்திருக்கே..?'

'சொல்றேன்... நாம இப்போ லிஃப்ட்ல போகப்போறோம்'

'டேய், என்ன விளையாடுறியா..? நான் வரலை நீ வேணும்னா போயிட்டுவா..'

'சரி நானே போறேன்... அதுக்கு முன்னாடி, அந்த கணேஷோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கேட்டிருந்தேனே..? ரெடி பண்ணிடியா..?'

'ஆங், இரு வர்றேன்' என்று கூறி, உள்ளிருந்து, மெயிலில் வந்திருந்த அந்த ரிப்போர்ட்டை லேப் டாப்புடன் கொண்டு வந்து காண்பித்தேன்..

நகுலன் அதை படித்துக் கொண்டிருந்தான். பிறகு தனது பையை எடுத்துக் கொண்டு லிஃப்டில் ஆய்வு நடத்தி வருவதாக வெளியேறினான்.

நான், இவனுக்கு ஏதும் நடந்துவிடக்கூடாதே என்கிற பயத்துடன் காத்திருந்தேன். சரியாக 1.30 மணி நேரம் கழித்து மீண்டும் எனது ஃப்ளாட்டின் காலிங் பெல் ஒலித்தது. நல்லவேளை நகுலன் திரும்பியிருந்தான்.

'என்ன நகுல், ஏதாச்சும் நடந்ததா..?' ஆர்வமாக கேட்டேன்.

'நான் இப்போ கிளம்புறேன். நாளைக்கு என்னோட ரிப்போர்ட்டை உனக்கு மெயில் பண்ணிவிடுறேன்..'

'உன் பேமண்ட்..'

'அதையும் மெயில் பண்றேன், நீ உங்க அஸோஸியேஷன்கிட்ட பேசிட்டு ஏற்பாடு பண்ணு..'

'டேய் நகுலா, ஏதாவது சொல்லிட்டு போடா...'

'போயிட்டு வர்றேன் நண்பா..!' என்று நக்கலாக கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

அன்றிரவு முழுவதும் எனக்கு தூக்கம் சரியாக வரவில்லை, அதிகாலை வந்த அரைகுறை தூக்கத்தில் ஒரு கனவு வந்தது, அந்த கனவில். நகுலன் என் அபார்ட்மெண்ட் லிஃப்டிற்குள் மாட்டிக்கொண்டு திணறுகிறான். லிஃப்டின் கதவு முழுவதுமாக சீல் வைத்தபடி மூடியிருக்கிறது. லிஃப்டின் கதவில், 'நகுலன்- தோற்றம், மறைவு' என்று ஏதேதோ தேதிகள் தெரிகிறது. அலறியடித்து எழுந்தேன்.

அடுத்த நாள் விடிந்தது...

திங்கள் காலை என்பதால் ஆபீஸுக்கு கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன். செல்ஃபோன் ஒலித்தது... நகுலன்தான்.

'ஹலோ நகுல்.. குட்மார்னிங்டா..!'

'குட்மார்னிங் சதீஷ்..'

'டேய்... நேத்து உன்னைப்பத்தி ஏதேதோ கனவு வந்ததுடா..'

'என்ன கனவு..?'

'வேணாம், அதைப்பத்தி நான் டிஸ்கஸ் பண்ண விரும்பல..'

'ஓகே... உன் இஷ்டம்... சரி, நான் என் ரிஸல்ட்-ஐ மெயில் பண்ணியிருக்கேன் படிச்சிக்கோ...'

'அப்படியா... இதோ உடனே.. படிச்சிட்டு ஃபோன் பண்றேன்..' என்று கூறி, உடனே லேப் டாப்-ஐ இயக்கி இன்பாக்ஸை படித்தேன்... அதில்  நகுலனின் ரிப்போர்ட் இருந்தது.



இதைப் படித்து முடித்தும் எனக்குள் ஒரு சின்ன தைரியம் வந்தது. அதென்ன 'தைரியத்தில் ரேஷன்' என்று நகுலன் திட்டுவானோ என்ற எண்ணம் வரவே, (முழு) தைரியத்துடன், தரைத்தளத்திற்கு சென்று, அந்த லிஃப்ட்டை கதவில் பொறுத்தியிருந்த கண்ணாடி துவாரத்தின் வழியாக எட்டிப்பார்த்தேன். உள்ளே ஒரு ஸ்மைலி பால் இருந்தது. திறக்கலாமா வேண்டாமா..? என்று யோசிக்க, இல்லை, இப்போது நான் திறக்கப்போய் எனக்கும் ஷாக்கடித்து, நானும் இறந்துவிட்டால், பிறகு நானும் ஆவியடித்து இறந்ததாகவும், என் ஆவியும் இங்கு சுற்றுவதாகவும் இந்த அபார்ட்மெண்ட் வாசிகள் கதை கட்டிவிடுவார்கள். முதலில் அந்த Hi-Fly லிஃப்ட் மெயின்டனென்ஸ் சர்வீசுக்கு ஃபோன் செய்து, மீண்டும் வந்து மின்சார லீக்கேஜை பழுதுப்பார்க்க சொல்லவேண்டும்.என்று யோசித்துப்படி பின்வாங்கினேன்.

மீண்டும் நகுலனுக்கு ஃபோன் செய்தேன்.

'ரொம்ப தேங்க்ஸ்டா..' என்றேன்

'இட்ஸ் மை ஜாப்... எதுக்கு தேங்க்ஸ்லாம் சொல்றே..'

'சரி, சொல்லல, ஆமா... அதென்ன, லிஃப்டுக்குள்ள ஒரு ஸ்மைலி பால்...?'

'நான்தான் வச்சேன்..'

'எதுக்கு..?'

'அது என்னோட சிக்னேச்சர், நான் இன்வஸ்டிகேட் பண்ண ஹாண்டட் ஸ்பாட்ஸ்ல, ஆல் க்ளியர்னு என் சிக்னேச்சரா வச்சிட்டுப் போறது என் வழக்கம்!' என்றான்.

‘டேய்! இன்ட்ரஸ்டிங் ப்ரொஃபஷனை செலக்ட் பண்ணியிருக்கேடா..’ என்றேன்.

‘ஆமாண்டா, இந்த ப்ரொஃபஷன்ல, ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு சேலன்ஞ்... இதுவரைக்கும் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்களை தீர்த்துவச்ச திருப்தி இருக்கு..’ என்றான்.

‘டேய், உன்கிட்ட நிறைய பேசணும்டா..’ என்றேன்.

‘அப்போ என் வீட்டுக்கு வா, வி வில் ஸ்பீக்..’ என்றான்.

‘ஓகே.. டீல்... நான் கமிங் சண்டே உன் வீட்டுக்கு வர்றேன், ஆனா, நீ உன் ஃப்ரொபஷன்ல சந்திச்ச சில சுவாரஸ்யமான சம்பவங்களை என்கூட ஷேர் பண்ணனும் ஓகேவா..?’ என்றேன்.

‘அவ்வளவுதானே... கண்டிப்பா ஷேர் பண்றேன்... லெட்ஸ் மீட் திஸ் சண்டே..’ என்றான்.

‘ஓகே டேக் கேர்... பை.’ என்று ஃபோனை வைத்தேன். ஞாயிற்றுக்கிழைமைக்கு இன்னும் 7 நாட்களிருக்க, இந்த வாரத்தை விரைவாய் தள்ளுவதற்காக ஆஃபீசுக்கு கிளம்பினேன்.

- முடிந்தது ஆனால் தொடரும் -


Signature

28 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்.......மர்மம், சுவராசியமாய்
இருக்கு.

DREAMER said...

நன்றி நண்பா..! வலையன்பர்கள் ஆதரவு கிடைத்தால், இந்த நகுலன் பொண்ணுசாமி கதைகளை தொடரலாம் என்றிருக்கிறேன்..!

-
DREAMER

Anonymous said...

நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வழக்கமான விறுவிறுப்பு கொஞ்சம் missing boss
வலையன்பர்கள் ஆதரவா? அது எப்போவும் உண்டு ட்ரீமர்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர்ஆ இருக்கு கதை. நெறைய homework பண்ணி எழுதி இருக்கீங்க (உங்க profession அது தானா?) Keep up the good work

பத்மா said...

நாலு வரி எழுதினாலே கஷ்டமா இருக்கு .நீங்க லெட்டர் பாட் எல்லாம் போட்டு கலக்குறீங்க .தொடருங்கள். வாசிக்க நாங்கள் இருக்கிறோம்

DREAMER said...

வாங்க அனானிமஸ்,
ஆதரவிற்கு மிக்க நன்றி!

வாங்க நாய்க்குட்டிமனசு,
இது நான் வெகுநாள்முன்பு இமெயிலில் அனுப்பிய ஒரு ஃபோட்டோக்கதை, அதனால் அதை மாற்றாமல் எழுதியிருக்கிறேன். அடுத்த 'நகுலன் பொண்ணுசாமி' கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டிடுறேன்! ஆதரவிற்கு மிக்க நன்றி!

வாங்க அப்பாவி தங்கமணி,
இது நான் மிகவும் ரசித்து உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் ஹோம் வர்க்-உடன் எழுதினேன். வாழ்த்துக்கு நன்றி!

வாங்க பத்மா,
வாழ்த்துக்கும், தொடர்ந்து வாசிப்பதாக ஆதரவளித்தமைக்கு மிக்க நன்றி! கண்டிப்பாக தொடர்கிறேன்!

Ananya Mahadevan said...

முதல்வாட்டி உங்க தளத்துக்கு வந்திருக்கிறேன். ரொம்ப வித்தியாசமான முயற்சி! வாழ்த்துக்கள்! மேலும் பொன்னுசாமியின் அனுபவங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
:)

சீமான்கனி said...

நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு ஹரீஷ்...கொஞ்சம் நீளம் கூடியது போல உணர்வு மற்றபடி திகிலுக்கு பஞ்சமில்லை...நன்றி ஹரீஷ்...

DREAMER said...

வாங்க அநன்யா மஹாதேவன்,
முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

வாங்க சீமான்கனி,
அடுத்தமுறை நீளம் கொஞ்சம் குறைச்சிக்கிறேன்..!

-
DREAMER

நாடோடி said...

ந‌குல‌ன் பேம‌ண்ட் ப‌ற்றி சொல்ல‌வே இல்லையே!!! அதை சொன்னீங்க‌னா நாம‌ளும் கூப்பிட‌லாமே.......... க‌தை ந‌ல்ல‌ இருக்கு ஹ‌ரீஷ்...

DREAMER said...

நன்றி நாடோடி நண்பரே..! பேமண்ட் பத்தி சபையில டிஸ்கஸ் பண்ண வேண்டாமேன்னு நகுலன் சொல்லாம விட்டுட்டாருன்னு நினைக்கிறேன். கதையை ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

நன்றி தமிழி10 குழுவினர்களுக்கு,
நான் ஏற்கனவே tamil10-ல் எனது பதிப்புகளை தவறாமல் இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

வாங்க இராமசாமி கண்ணன் அவர்களே,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, தொடர்ந்து வாருங்கள்!

-
DREAMER

Yoganathan.N said...

சுவாரசியமான கதை. ரசித்துப் படித்தேன். அடுத்த கதைக்காக கார்த்திருக்கிறேன். வாழ்த்துகள்.

Vijay Chinnasamy said...

good one.

DREAMER said...

நன்றி யோகநாதன்,
அடுத்த கதையை விரைவில் எழுதுகிறேன்... தொடர்ந்து வாருங்கள்!

Welcome Vijay Chinnasamy,
ThanX for your visit..!

-
DREAMER

ரோகிணிசிவா said...

oru padam paakra mathiri irunthuchu sir, superb , building ,,mail photos ellam asathal

DREAMER said...

வாங்க டாக்டர்.ரோகிணிசிவா,
கதையை ரசித்து, 'படம் பார்த்ததுபோல் இருந்த'தாக வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

-
DREAMER

Raghu said...

ந‌ல்ல‌ த்ரில் ஹ‌ரீஷ்...ஏற்க‌ன‌வே அறிந்த‌துதான் என்றாலும்! அடுத்த‌டுத்த‌ ஆராய்ச்சிகளை வாசிக்க‌ ஆர்வ‌முட‌ன் காத்திருக்கிறேன் :)

'ரேஷ‌ன்' ‍வார்த்தைக‌ளில் விளையாட‌ ஆர‌ம்பிச்சுட்டீங்க‌ ;))

ஒரே ஒரு திருத்த‌ம்..'பொன்னுசாமி', 'பொண்ணுசாமி' அல்ல‌

ஒவ்'ஓர் இர‌வு'ம் த்ரில்ல‌ர் க‌தைக‌ளையே யோசிச்சுகிட்டுதான் தூங்க‌ப்போவீங்க‌ போல‌ ;)

KVPS said...

a good start...

DREAMER said...

வாங்க ரகு,
அடுத்த கதை இமெயிலில் அனுப்பாத ஒரு கதைதான்... விரைவில் அதை போஸ்ட் செய்கிறேன்...

'பொண்ணுசாமி' 'பொன்னுசாமி' மாத்திடுறேன்.. சுட்டியதற்கு நன்றி!

//ஒவ்'ஓர் இர‌வு'ம் த்ரில்ல‌ர் க‌தைக‌ளையே யோசிச்சுகிட்டுதான் தூங்க‌ப்போவீங்க‌ போல‌//

ஹா... ஹா... நீங்களும்தான் வார்த்தையில விளையாடுறீங்க..!


வாங்க பிரபு,
ஸ்டார்ட்டிங்-ஐ பாராட்டியதற்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

-
DREAMER

Unknown said...

interestinga pogudhu!!

செந்தில் நாதன் Senthil Nathan said...

ரெம்ப விருவிருப்பா இருந்துச்சு!!
நீளம் கொஞ்சம் ஜாஸ்தி மாதிரி தோணியது!!

நகுலன் பொன்னுசாமி கதைகள் பல எதிர்பார்க்கிறேன்!!

DREAMER said...

நன்றி கோமி..!

நன்றி செந்தில்நாதன், அடுத்த கதையில நீளம் குறைச்சிக்கிட்டேன். நகுலன் கதைகளில் கண்டிப்பாக உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன்.

-
DREAMER

Padmahari said...

ஹரீஷ்.....பிரமாதம்!
ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமாய் கதைகள கொடுக்குறீங்க. வாழ்த்துக்கள்! Paranormal acitivities மாதிரியான, நம்மவர் பலருக்கு அதிகம் பரிச்சயமில்லாத விஷயங்கள எடுத்துக்கிட்டு, அழகான, தெளிவான ஒரு கதையா, விறுவிறுப்பா சொல்லி கலக்கிட்டீங்க! இதைவிட வித்தியாசமான விஷயங்கள உங்ககிட்ட எதிர்பார்க்குறேன்! நன்றி.
http://padmahari.wordpress.com

DREAMER said...

வாங்க ஹரிஜி,
ரொம்ப நன்றி, கண்டிப்பா இன்னும் நிறைய கதைகளை நீங்க எதிர்ப்பாக்குற மாதிரி எழுதுறேன்!

-
DREAMER

Kiruthigan said...

எங்க ஆதரவு உங்களுக்கே..!!!
நிறைய த்ரில்லோட நிறைய எழுதுங்க

Pokkiri said...

wow superb..

VampireVaz said...

Moderate suspense and a feel-good ending..great job Harish

Popular Posts