Sunday, November 28, 2010

கேணிவனம் - சில கேள்வி பதில்கள்


அனைவருக்கும் வணக்கம்,


ஆகஸ்டு 6ஆம் தேதி நான் 'கேணிவனம்' எழுத ஆரம்பித்திலிருந்து, நவம்பர் 24ஆம் தேதி வரை மொத்தம் 111 நாட்கள் தொடர்ந்து இக்கதையை பொறுமையாக காத்திருந்து 30 பாகங்களையும் படித்து வாழ்த்து தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!

கேணிவனம் குறித்து சில வாசக நண்பர்கள் மறுமொழியில் தொடர்ந்து கேட்ட கேள்விகளை இங்கு தொகுத்து பதிகிறேன்.

கேணிவனம் குறித்து உங்களது விமர்சனங்களையோ அல்லது வேறு சந்தேகங்களோ இருந்தால் தவறாமல் கேளுங்கள்..! (Email:- imhareeshnarayan@gmail.com)

கேணிவனம் குறித்து சில பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்கள்

கேள்வி:- தாஸூக்கு வயசாகும்போது அவர் மறுபடி டைம் டிராவல் செய்வாரா..? அவருடைய பிரதிதான் தாத்தா என்றால், அவர் இறந்தபின் அந்த வயதை எப்படி தாஸால் எட்ட முடியும்..? அல்லது சுருக்கமாக, 64 வயதுக்குப்பின் தாஸின் வாழ்வில் என்ன நடக்கும்?

 
விடை:- தாஸின் 64ஆவது வயதில் மீண்டும் இதே நடக்கும் என்று அர்த்தமில்லை..! ஏனென்றால், இப்போது நாம் கதையில் 1ஆம் மற்றும் 2ஆம் காலக்கட்டத்தை பார்த்ததுபோல், தாஸ் தாத்தாவாக பின்னோக்கி பயணித்து வந்தது என்பது மறைமுகமான 3ஆவது காலக்கட்டம். இப்போது நீங்கள் க்ளைமேக்ஸை தெரிந்து கொண்டு மீண்டும் இந்த கதையைப் படித்துப் பார்க்கும்போது, உங்களுக்கு இந்த மறைமுக காலக்கட்டம் பற்றி நன்றாகவே தெரியவரும். தாத்தாவின் ஒவ்வொரு வசனமும் இந்த 3ஆம் காலக்கட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டவை...!


கேள்வி:- கேணியில் விழுந்து தொலைந்து போன ப்ரொஃபஸர் கணேஷ்ராம் என்னவானார்..? அவர் இப்போது எந்த காலக்கட்டத்தில் இருக்கிறார்..?

விடை:-  ப்ரொஃபஸர் கணேஷ்ராம் (1ஆம் காலக்கட்டத்தில் இருந்தவர்) தப்பான நோக்கத்தோடு வெற்றி பெற முயன்றபோது, கேணிக்குள் விழுந்து தொலைந்து போய்விட்டார்..! Lost in Time..! அவர் திரும்பி வருவது அசாத்தியம்.


கேள்வி:- நள்ளியைப் பற்றியும் இராஜசேகர வர்மனைப் பற்றியும் தாஸிடம் சொன்ன சித்தர், தாத்தாவைப்பற்றிய இரகசியத்தை சொல்லாமல் விட்டது ஏன்?
விடை:- நள்ளியைப் பற்றியும் இராஜசேகரவர்மனைப் பற்றியும் சொன்ன சித்தர், தாத்தாவை பற்றி சொல்லாததற்கு காரணம், நள்ளிக்கும்-தாஸூக்கும், இராஜசேகரவர்மனுக்கும்-தாஸூக்கும், எந்த ஒரு உணர்ச்சிகரமான சொந்தமுமில்லை..! அவனது முந்தைய பிறவிகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் தாஸூக்கு ஆச்சர்யமே தவிர வேறு எதுவும் உணர முடியாது. ஆனால், தாத்தாவைப் பற்றி சித்தர் சொன்னால், அவனுக்கு தாத்தாவுக்குமான Emotional Bonding பாதிக்கப்படும், இதனால், தாத்தா உயிருடன் இருக்கும்போதே அவன் அனாதையாக உணரக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று முக்காலமும் உணர்ந்த சித்தர் ஊகித்திருந்ததால் இதைப்பற்றி தாஸிடம் கூறவில்லை...


கேள்வி:- தாத்தாவாகவும் தாஸே இருந்தும், தனது இளைய தாஸிடம் கேணிவனத்தை பற்றி முழுமையாக கூறாததற்கு காரணம் என்ன..?

விடை:- இதற்கு வெவ்வேறு காரணங்கள் உண்டு,
1.  தாத்தா எதிர்காலத்தைப் பற்றி எதையும் கூறக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொண்டதனாலும்.
2. எதையும் தேடிக்கண்டுபிடிப்பதுதான் தாஸின் இயல்புத்தன்மை. அது மாறாமல் இருக்கவும் வேண்டும் என்றும்.
இருந்தாலும், தாத்தா பூடகமாக சில விஷயங்களை அவனுக்கு உணர்த்தி வந்திருப்பார் என்பது நீங்கள் மீண்டும் படித்துப் பார்த்தால் புரியும்.


கேள்வி:- தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தாரா அல்லது தன் காலத்துக்கு தசதரனை எடுத்துக் கொண்டு வந்தாரா?

விடை:- தசரதன் தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தார்.







கேள்வி:- தசரதன் மற்ற ஏழு கேணிகளையும் கண்டுபிடித்துவிட்டார் என்றால் அது அத்தனையுமே இந்தியாவில்தான் இருக்கிறதா..?

விடை:- இந்த கேள்விக்கு விடை அடுத்த பாகத்தின் கதை..!


கேள்வி:- மற்ற கேணிகளை உருவாக்கியவரும் சித்தர் தானா?

விடை:- ஆம், இந்த சித்தர்தான் அமைத்தார்... ஆனால் எப்படி என்பதற்கு விடை முந்தைய கேள்வியின் விடையே..!



கேள்வி:- அடுத்த பாகம் எப்போது..?

விடை:- இந்த பாகத்தை எழுத நான் எடுத்துக் கொண்ட 111 நாட்களில் பெரும்பாலும் முழுநேரமாக தகவல் சேகரிப்பு செய்திருக்கிறேன். ஆனால், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை துவங்கவிருப்பதால் (திரைப்படத்தின் விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன்), ஒரு நியாயமான இடைவெளிக்கு பிறகு, மே-2011-ல் அடுத்த தொடர்கதையை கண்டிப்பாக கேணிவனத்தைப் போலவே சுவாரஸ்யமாக எழுதுகிறேன்.

மேலும் கேள்விகள் திரண்டால், அதையும் தொகுத்து போடுகிறேன். அடுத்த பதிவில் வாசகர்கள் இமெயிலில் அனுப்பிய விமர்சனங்களை தொகுத்து போடுகிறேன்.

இக்கதைக்கான தகவல் சேகரிப்பில் எனக்கு பேருதவியாய் இருந்த புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், நண்பர்கள் போன்றவற்றின் தொகுப்பையும் விரைவில் போடுகிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!


-
DREAMER



Signature

24 comments:

Cable சங்கர் said...

aduththa படமா.. குட்குட்.. கூப்பிடுங்க சீக்கிரம்.

எஸ்.கே said...

அருமை சார்!
அடுத்த படத்திற்கு சிறப்பான வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

அடுத்தபடத்துக்குச் சிறப்பான வரவேற்புக்கு நாங்கரெடி,
நீங்க ரெடியா????

Ramesh said...

aduthu adutha thiraippadama valthukkal

Unknown said...

அடுத்த திரைப்படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Thilak said...

This story deserve to get into a movie or serial (like Marma Desam)..Looking forward to see this happen soon.

Kalyan said...

Thanks a lot for clarifying things

DREAMER said...

வணக்கம் கேபிள்-ஜி,
கண்டிப்பா சொல்றேன்..! வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் எஸ்.கே,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் மாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் லஷ்மி மேடம்,
நானும் ரெடிதான்..! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் பதிவுலகில் பாபு,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் திலக்,
ஊக்கத்திற்கு மிக்க நன்றி! எனக்கும் இக்கதையை விரைவில் திரைவடிவில் கொண்டு வர ஆசை..! I'll see that it happens soon.

வணக்கம் கல்யாண்,
மேலும் ஏதாவது சந்தேகமென்றாலும் கேளுங்கள்..! வாழ்த்துக்கு நன்றி!

-
DREAMER

Kiruthigan said...

வாழ்த்துக்கள்சார்... திரப்படத்துக்கும். அடுத்த பாகத்துக்கும்.

வேங்கை said...

வணக்கம் ஹரிஷ்

ரொம்ப நாள் ஆச்சுங்க உங்க தொடர படிச்சு...
இப்போ தான் டைம் கிடைச்சுது, இருங்கு ஒரு 10 பாகம் பாக்கி இருக்கு படிச்சுட்டு வரேன் .

உங்கள் அடுத்த படத்திற்கு வாழ்த்துக்கள்

Gayathri said...

பொறுமையாக கேள்வி பதிலை எழுதியதற்கே பெரிய நன்றி, உங்கள் திரைப்படம் வெற்றி பேர வாழ்த்துக்கள் , அடுத்த பாகம் எழுத போறேன்னு சொல்லி ரொம்ப சந்தோஷ படுத்திட்டீங்க ரொம்ப நன்றி ப்ரோ..

வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

வணக்கம் ஹரீஷ் ஜி...வெகுநாட்களாய் என்னால் வலைப்பக்கம் சரியா வரமுடியலை...இப்போதுதான் மீண்டும் வருகிறேன் வந்ததும் உங்கள் கதைதான் படித்துக்கொண்டிருக்கிறேன் படித்ததும் நானும் கேள்விகளை கேட்ப்பேன்!!!!...ரெடியா இருங்க.....அடுத்து நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

ஷக்தி said...

நாமும் நட்புடன் இணைந்திருப்போம்.
உங்கள் அடுத்த படத்திற்கு வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் ஹரிஷ், கேணிவணம் எப்போ திரைப்படம் ஆகப்போகுது.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
கதை என்று வரும்போது கற்பனை!!! மித மிஞ்சிய ஹீரோ தன்மை வரும்!! அதில் லாஜிக் பார்க்க கூடாது !!!என்றுதான் கதாசிரியர்கள் சொல்வார்கள் அனால் நீங்கள் அதை எல்லாம் தாண்டி ""கேணிவனம்""" ஒரு உண்மையான சம்பவம் என்பது போல் கொண்டு சென்றீர்கள் அதோடு விடாமல் அதில் எழும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து கொண்டிருக்றீர்கள்
திரைப்பட துறைக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் உள்ளன உங்களிடம்!! நீங்கள் அதே துறைய்ல்தான் இருக்றீர்கள்!!இந்த துறையல் முடிசூட மன்னனாக வலம் வர நான் அன்றாடம் வழிபடும் அந்த ஸ்ரீ மீனாக்ஷி சமேதஸ்ரீ சுந்தரேஸ்வரரை பிரார்த்திக்கிறேன்.. ...

DREAMER said...

வணக்கம் CoolBoy கிருத்திகன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..

வணக்கம் வேங்கை,
மீதமுள்ள 10 பாகத்தையும் பொறுமையா முடிச்சிட்டு கருத்தை சொல்லுங்க..! உங்கள் கருத்துக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்..!

வணக்கம் காயத்ரி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் சீமான்கனி,
கதையை நீங்களும் படித்துக் கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே, கதையை வாசித்து முடித்ததும் உங்கள் கருத்துக்களையும் கேட்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா..! சீக்கிரமே கேணிவனத்தை திரைப்படமா கொண்டு வந்துடலாம்..!

வணக்கம் Hamaragana Sir,
உங்களைப் போன்ற மூத்தோர்களிடமிருந்து அன்பும் ஆசியும் பெறுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயம் உங்கள் ஆசியை உறுதுணையாகவும் ஊக்கமாகவும் கொண்டு இத்துறையில் நல்முறையில் வலம் வருவேன்.

-
DREAMER

Raghu said...

அடுத்த‌ ப‌ட‌த்திற்கு வாழ்த்துக‌ள் ஹ‌ரீஷ். சுடுத‌ல்** முடிக்கும் முன் 'கேணிவ‌ன‌ம்' புத்த‌க‌த்தை வெளியிட‌ முய‌ற்சி செய்யுங்க‌ ஹ‌ரீஷ்..புத்த‌க‌ம் ந‌ல்லா ரீச் ஆச்சுன்னா...'கேணிவ‌ன‌ம் எழுத‌னாரே அவ‌ர் டைர‌க்ட் ப‌ண்ண‌ ப‌ட‌மாம்பா'ன்னு ஒரு ந‌ல்ல‌ டாக் க்ரியேட் ஆகும். என் சிற்ற‌றிவிற்கு எட்டிய‌து :)

கேணிவ‌ன‌ம் ச‌ம்பந்த‌மான‌ என‌து கேள்வி:

இந்த‌ க‌தையில் எதெல்லாம் (அல்ல‌து) எத்த‌னை ச‌த‌வீத‌ம் உண்மை? முழுக்க‌ க‌ற்ப‌னைன்னு சொல்லாதீங்க‌...ந‌ம்ப‌மாட்டேன், அந்த‌ள‌வுக்கு எழுதியிருக்கீங்க‌ :))

**சுடுத‌ல் - ஷூட்டிங்...ஹி..ஹி..:))

DREAMER said...

வணக்கம் ரகு,
'சுடுதல்'-னு நீங்க போட்டதால, நான் ஏதோ ஒரு படத்தை 'சுட்டு' இந்த படத்தை எடுக்கிறேன்னு நினைச்சுட்டீங்களோன்னு பயந்துட்டேன். நல்லவேளை நீங்களே ஸ்டார் போட்டு விளக்கம் கொடுத்துட்டீங்க!

கேணிவனத்தை ஒரு தமிழாசிரியர்கிட்ட பிழைதிருத்தலுக்காக கொடுத்திருக்கேன். அங்கிருந்து வந்ததும் முதல் வேலையா பிரசுரிச்சிடலாம்...

நல்லதொரு கேள்வியை கேட்டிருக்கிறீர்கள்... KENIVANAM FACT & FICTION பற்றி விரைவில் தெளிவாக ஒரு பதிவில் எழுதுகிறேன். வாழ்த்துக்கு நன்றி!

-
DREAMER

தினேஷ்குமார் said...

சாரி ஹரீஸ் கொஞ்சம் வேலைபளு அதிகமாகிவிட்டது புதிய படத்திற்கு வாழ்த்துக்கள்......

என்னோட கேள்வி
கேணிவனம் மறைக்கப்பட்ட மறுக்கப்படாத உண்மையா?

அன்னு said...

ஹரீஷ்ண்ணா...

சாரி சில சொந்த வேலைகளில் பிஸியாக இருந்தமையால் உடனே கமெண்ட் எழுத முடியலை. கேள்வி பதிலை தொகுத்த விதம் அருமை. புதிதாய் இந்த தொடரை படிக்கும் எவர்க்கும் இந்த விளக்கங்கள் இன்னும் பிரமிக்க வைக்கும். அதுவுமில்லாமல் ஒவ்வொரு பதிவிலும் கமெண்ட்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் (அதன் பதில் கதையில் இல்லாத பட்சத்தில் ) தொகுக்க பாருங்கள். இன்னும் இதனை எழுதியதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காகதான் வெயிட்டிங். அதையும் புத்தகத்தில் கண்டிப்பாக பிரசுரிக்கவும். :) சிகரம் தொட வாழ்த்துக்கள் அண்ணா.

Raghu said...

//நான் ஏதோ ஒரு படத்தை 'சுட்டு' இந்த படத்தை எடுக்கிறேன்னு நினைச்சுட்டீங்களோன்னு பயந்துட்டேன்//

ஹ‌ரீஷ், I really didn't mean to hurt you, நான் நிஜ‌மா இந்த‌ மாதிரி அர்த்த‌த்துல‌ டைப் ப‌ண்ண‌ல‌. திடீர்னு அந்த‌ டைம்ல‌ ஷூட்டிங்குக்கு த‌மிழ்ல‌ 'ப‌ட‌ப்பிடிப்பு'ன்னு போட‌ற‌துக்கு ப‌தில், 'சுடுத‌ல்'னு போட‌லாமேன்னு கொஞ்ச‌ம் 'பார்த்திப‌ன்'த‌ன‌மா யோசிச்சுட்டேன்...ரிய‌லி ஸாரி ஹ‌ரீஷ்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை! வாழ்த்துக்கள்!
அடுத்த படத்திற்கு சிறப்பான வாழ்த்துக்கள்!

DREAMER said...

வணக்கம் தினேஷ்,
என்ன நண்பரே, இதற்கெல்லாம் போய் சாரி-யெல்லாம் கேட்டுக்கிட்டு... உங்கள் வாழ்த்து பெற்றுக்கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..!

வணக்கம் அன்னு,
நீங்கள் சொன்னதுபோலவும், கேள்வி பதிலை முடிந்தவரை தொகுக்க முயற்சிக்கிறேன். பட வேலைகள் அதிகம் இருப்பதால், கேணிவனம் குறித்த வேறு பதிவுகளை போட முடியவில்லை..! ஒரு வாரமாக ஊரிலேயே இல்லை..! சமீபத்தில்தான் திரும்பி வந்தேன். விரைவில் போடுகிறேன்.

வணக்கம் ரகு,
அட என்னங்க நீங்க..! நான் சும்மா தமாஷூக்கு கேட்டதுக்கு, நீங்க இவ்வளவு ஃபீலிங்கா எழுதியிருக்கீங்க..! உங்ககிட்ட பிடிச்சதே, இந்த பார்த்திபன் ஸ்டைல் குசும்புகள்தான்..! அதை எக்காரணத்துக்காகவும் விட்டுடாதீங்க...

வணக்கம் பிரஷா,
உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...!

-
DREAMER

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
எனது நூறாவது பதிவு சமயமிருந்தால் கொஞ்சம் வாங்க
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

Popular Posts