அனைவருக்கும் இனிய விஜய ஆண்டு நல்வாழ்த்துக்கள்
பண்டிகை நாட்களில் பல கொண்டாட்டங்கள் இருந்தாலும், பின்வீட்டு அண்ணா ஒருவர் 'வீடியோ டெக்' வாடகைக்கு எடுத்து வந்துவிடுவார்... கூடவே பல திரைப்படங்களின் காசெட்-ஐ அடுக்கிக் கொண்டு வந்து டிவி, டெக், காசெட் சகிதம் வைத்திருப்பார்... அடிக்கடி சென்று அந்த காசெட்டுகள் என்னென்ன படம் என்று டைட்டிலை படித்துவிட்டு அந்த படங்களைப் பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருப்போம். அந்த டெக்-ஐ அவர் இரவுதான் போடுவார், ஆனால் அன்று நாள்முழுவதும் ஒருவித பரவசம் ஆட்கொண்டிருக்கும். மாலையிலிருந்தே டிவியையும் டெக்-ஐயும் இணைக்க பிரம்ம்பிரயத்தனம் செய்துக்கொண்டிருப்பார்கள். ஒருவழியாக டிவியில் டெக் தெரிய ஆரம்பித்ததும் அன்று இரவு நிச்சயம் தூக்கம் தொலைத்த ஏகாதசிதான்...
முதலில் ஒரு சாமி படம் பிறகு 2 அல்லது 3 சமூக திரைப்படம்... சுற்றுவட்டாரத்திலுள்ள அத்தனை பேரும் வந்து அந்த டிவிக்கு எதிரே அமர்ந்திருப்பர். சாமி படத்திற்கு பிறகு போடப்பட்டும் படம் நிச்சயம் சூப்பர்ஹிட் தமிழ்ப்படமாய் இருக்கும். அந்த படம் பலமுறை டெக்-ல் போடப்பட்டு ப்ரிண்ட் தேய்ந்து ஆடியோவும் இழுத்துக்கொண்டு போகும்... ஆனாலும், அந்தப்படத்தை அப்படி பார்த்துக்கொண்டிருப்போம். அது முடிந்ததும் ஒரு சூப்பர் இங்க்லீஷ் படம் இருக்கும் அது ஆக்ஷன் அல்லது ஹாரர் படமாய் இருக்கும். அதைத்தவிர மற்ற சில படங்கள்... சொத்தையோ சொள்ளையோ... அதை வீடியோவில் பார்ப்பது ஒரு தனி ஃபீலிங்தான்.
இன்று
க்ரிஸ்ட்டல் க்ளியர் High Definition க்ளேரிட்டிக்காக வாங்கி வைத்து இன்னமும் பார்க்காத பல ப்ளூ ரே ப்ரிண்டுகள், இது தவிர TVயிலேயே இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக போடப்படும் படங்கள், ஏற்கனவே போடப்பட்ட பலமுறைய TRP வென்ற படங்கள், ஷெட்யூல் போடப்பட்ட வரிசையான சூப்பர்ஹிட் ஆங்கிலப்படங்கள் ஒரு தொலைக்காட்சியில், டப்பிங் படங்கள், பிறமொழிப்படங்கள், தேவையானபோது ரீவைண்டு செய்து பார்த்துக்கொள்ளும், ரெக்கார்ட் செய்து பார்த்துக்கொள்ளும் செட்டாப் பாக்ஸ் வசதி, மேலும், டோரண்ட் உபயத்தில் தேவையான படங்களை தரவிறக்கம் செய்யும் வசதி... இவை தவிர, யூட்யூப்பில் தரமான வெரைட்டியான குறும்படங்கள்... இவ்வளவு இருந்தும், நாள்முழுவதும் இருக்கவேண்டிய பரவசம் மட்டும் __________
2 comments:
//ஹாரர் படமாய் இருக்கும்//
நீங்க அப்பவே அப்படித்தானா ஹரீஷ்? :)
//இவ்வளவு இருந்தும், நாள்முழுவதும் இருக்கவேண்டிய பரவசம் மட்டும்//
missing...indeed!
வாங்க ரகு,
ஆமாம் ரகு அப்பவே அப்படியெல்லாம் பண்ணதாலதான் இப்ப இப்படி... என்ன செய்ய... இந்த ஹாரர்-ஐ நாம விட்டாலும், அது நம்மள விடவே மாட்டேங்குது... அதுசரி, அந்த எதிர்வீட்டு மாடியில ஒரு பையன் சுடுதண்ணி வச்சிக்கிட்டு உங்களையே முறைச்சிக்கிட்டு..? அவர் இன்னும் இருக்காரா..?
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
Post a Comment