Monday, February 03, 2014

மீண்டும் ட்ரீமர்


சிறு வயதில் ஒவ்வொரு புத்தாண்டு  பிறக்கும்போதும் அப்பா டைரி பரிசளிப்பார்... நானும் இந்த வருடம் டைரி எழுதியே தீருவது என்று முடிவு செய்து எழுத ஆரம்பிப்பேன்.. ஆனால், என்னதான் எழுதினாலும், ஜனவரி மாதத்தை தாண்டி எழுத முடியாமல் போய்விடும், அதே போல்தான் என் வலைப்பூவும் ஆகி வருகிறது.. ஒவ்வொரு வருடமும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று எழுத ஆரம்பித்து அப்படியே தேங்கிவிடுகிறது.. இந்த ஆண்டு கண்டிப்பாக அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்...

இந்த வருடம் முக்கியமாக பதிவிட எண்ணியிருக்கும் விஷயங்கள்

  • அம்புலியை தொடர்ந்து எனது அடுத்த திரைப்படத்தையும் இயக்கி முடித்துவிட்டேன்... அதை பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் திரைப்படத்தின் ஆக்கம் (making) குறித்தும் பதிவின் மூலம் விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன்...
  • கேணிவன நாயகன் தாஸ் தோன்றும் இன்னொரு நாவல் நீண்ட நாட்களாக Draft-டிலேயே  தேங்கி இருக்கிறது... அதை முழுமை செய்து விரைவில் வெளியிட வேண்டும்.

இனி.. பதிவு தொடரும் என்று ஒரு நம்பிக்கை...

நம்பிக்கை... அதானே எல்லாம்..

அன்புடன்
ஹரீஷ நாராயண்


Signature

5 comments:

ஆர்வா said...

”திரும்ப வரணும்.. பழைய பன்னீர் செல்வமா வரணும்....”

வெல்கம் சார்... புதுப்படம் பற்றிய ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்...

Vadielan R said...

சார் உங்கள் வரவுக்காக காத்திருக்கும் பலரில் ஒருவன் திரும்ப வாருங்கள் புதிய எழுத்துக்களோடு புதிய எழுச்சியோடு வாழ்த்துக்க்ள்

Kalyan said...

Eagerly awaiting Kenivanam-2.

DREAMER said...

நன்றி நன்றி நன்றி..! விரைவில் ஒரு சிறுகதையுடன் சந்திக்கிறேன்...!!!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Unknown said...

we are waiting with so much eager mr.Hareesh...

keep rock with u r new story...

all the best

Popular Posts