Friday, April 09, 2010

'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03


பகுதி - 03
பிணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப்பின் தளர்வாகவோ இருக்கலாம் என்று எண்ணியபடி பிணத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்க... டாக்டருடன் இருந்த உதவியாளர், இந்த அசைவை கண்டு சத்தம் போட்டிருக்கிறார். இந்த சத்தத்தை நல்லவேளையாக வெளியில் இருந்த நண்பர்கள் சிலர் கேட்டிருக்கின்றனர். ஒருவழியாக அனைவருமாக சேர்ந்து டாக்டரை வற்புறுத்தி பிணத்தை மீண்டும் பரிசோதித்துப் பார்க்குமாறு கெஞ்ச, டாக்டரும் வற்புறுத்தலால் டெட்பாடியை மீண்டும் சோதித்து பார்த்திருக்கிறார். ஆச்சர்யமாக, பிணத்தில் வெப்பம் இருந்திருக்கிறது. ஸ்டெத்தஸ்கோப்பால் செக் செய்து பார்க்க, மிக லேசாக இதயத்துடிப்பு இருப்பதை கவனித்திருக்கிறார். அவரால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒருவழியாக தாவீது உடம்பில் உயிர் இருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

விஷயத்தைக் கேட்ட அனைவர் முகத்திலும் ஆச்சர்யம், ஆனால், தாவீதின் அம்மா முகத்தில் மட்டும் ஒரு சாதனைப் புன்னகை. அவரை புத்திகோணிவிட்டதாக கூறிக்கொண்டிருந்த அனைவர் வாயும் இப்போது ஆச்சர்யத்தில் புகழ ஆரம்பித்திருக்கின்றனர்.

நண்பர்கள் தரப்பில் ஒருவன் ஃபோன் செய்து ஏரியாப் பசங்களுக்கு விஷயத்தைக் கூற, அங்கும் ஒரே ஆச்சர்யம். ஆனால், ஏரியா முழுவதும் தாவீதின் மரணச்செய்தியைக் கூறும், 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவிட்டதை ஒரு நண்பன் கூறி வருந்தியிருக்கிறான். ஆனாலும், நண்பர்கள் கூட்டுசேர்ந்து, பைக்கில் ஏரியா ஏரியாவாக சென்று அந்த போஸ்டர்களை சந்தோஷமாக கிழித்துக் கொண்டிருந்தனர். அதே நேரம் மருத்துவமனையில் இந்த விஷயம் தீபோல் பரவி, டாக்டர்கள் சிலர் கூடி, மீண்டும் மீண்டும் தாவீதின் உடலை பரிசோதித்திருக்கின்றனர். அவர்கள் கூடிப் பேசிமுடித்து தாவீதின் பெற்றோர்களையும், முக்கிய நண்பர்களையும் அழைத்து மீண்டும் ஒரு இடிசெய்தியை கூறியிருக்கின்றனர். அது..!

'உங்க பையன் உடம்புல உயிர் இருக்குன்னு நாங்க ஒத்துக்குறோம். இது ரொம்ப ஆச்சர்யமான விஷயம்தான், ஆனா, இப்ப துடிச்சிட்டிருக்கிறது, விட்டகுறை தொட்டகுறையினால ஊசலாடிக்கிட்டிருக்கிற உயிர்தான். எந்நேரமும் மறுபடியும் உங்க பையன் இறந்துப் போக வாய்ப்பு அதிகமாயிருக்கு..'

இப்படி கூறினால், பாவம், அந்த பெற்றோர்கள் நிலை எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால், தாவீதின் தாயார், அலட்சியமாக...
"நீங்க இறந்துட்டான்னு சொன்னதையே நான் நம்பலை, இனிமே இறந்துடுவான்னு சொல்றீங்க..! இதை நான் நம்பனுமா டாக்டர்..." என்று கூற, மருத்துவர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ, ஏதேனும் விபரீதம் நடந்தால், இந்த அம்மா எப்படி தாங்குவாளோ என்று எண்ணி நண்பர்களிடம் வேதனையடைந்திருக்கின்றனர்.

 தாவீதின் தாய் திருமதி. எஸ்தர் ராணி

ஆனால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தாவீதின் தந்தை அடுத்து என்னதான் செய்யவேண்டும் என்று மன்றாடி கேட்டுள்ளார், அதற்கு தாவீதின் உடலுக்கு ஒரு ஆபரேஷன் செய்யவேண்டும், அவன் மூளைகளை சீராக்க வேண்டும், அப்படியே ஆப்பரேஷன் வெற்றியடைந்தாலும் தாவீது நடைபிணமாகத்தான் அலைவான் என்று ஏதேதோ கூறியுள்ளனர், போதாக்குறைக்கு, ஆபரேஷனின்போது, தாவீதின் உயிர்பிரிய அதிகம் வாய்ப்புள்ளதாகவும், அதனால், தாவீதின் உயிருக்கு முழுப்பொறுப்பையும் பெற்றோர்களே ஏற்கவேண்டுமேயன்றி, மருத்துவர்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர்களிடம் எழுதிவாங்கியுள்ளனர்.

என்ன ஆனாலும் சரி..! என் மகனை எனக்கு மீட்டுத் தாருங்கள் என்று அந்த பெற்றோர்கள் நம்பிக்கையுடன் அந்த கடித்ததை எழுதி அதைவைத்து பிரார்த்தனை செய்து கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர். ஆனால், விபரீதம் ஏதும் நேராமல் பல மணிநேரம் அந்த ஆபரேஷன் நடந்தேறியுள்ளது.

சுயநினைவு திரும்ப காலவரை கொடுக்க முடியாது, நாட்களோ, மாதமோ, வருடமோ ஆகலாம் என்று மருத்துவர்கள் பொதுவாக கூறியிருக்கின்றனர்.ஆனால், 11 நாள்கழித்து நாட்களிலேயே தாவீது கண்விழித்துப் பார்த்திருக்கிறான். அவன் கண்விழித்ததைப் பற்றி அந்த தாய் கூறியபோது, எங்கள் கண்களில் கண்ணீர் வந்ததை எங்களால் தடுக்க முடியவில்லை. அனைவரும் தத்தம் வேலையில் இயந்திரத்தனமாய் இயங்கிக்கொண்டு அவர்கள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தோம்.

'நான் 2 வாரமா பல்லு தேய்க்காம், குளிக்காம அவன் கூடவே உக்காந்திருக்கேன். நேரம் தவறாக பிரார்த்தனைபண்ணி என் பையன் கண்ணுத்தொறக்க தவம் கிடக்குறேன். அப்போ, என் மகன் கண்ணு தொறந்தான். என்னைப் பாத்தான், கைதூக்கி, என் கொண்டையைப் பிடிச்சி ஆட்டிக்கிட்டே, அம்மாங்குறான். நான் அப்படியே அழுதுட்டேன்..' இப்படி ஒரு தாய் தன் பிரசவத்தின்பிறகு குழந்தையை முதன்முதலாய் பார்த்ததுபோல் எங்களிடம் தாவீதின் மீட்சியைப் பற்றி அவன் அம்மா கூறினார்.

தாவீதின் டிஸ்சார்ஜின்போது கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்

பிறகு வீட்டிற்கு தாவீதை கூட்டிவந்து சிரத்தையாய்ப் பார்த்துக் கொண்டதின் பலனாக சீக்கிரமே எழுந்து நடமாடவும் ஆரம்பித்திருக்கிறான். ஆனால், முழுமையாக அவன் மனதால் குணமடையவில்லை, புத்திசுவாதீனம் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. உடம்பில் துணி போட்டுக்கொள்ள அடம்பிடித்ததாகவும், குழந்தையைப் போல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் புலம்பிய அவன் பெற்றோர்கள், நாளடைவில் தீவிர பிரார்த்தனையால் நல்லபடியாக மனதாலும் குணமடைந்து இன்று அவன் வாழ்வில் நடந்த இந்த அற்புதத்தைப் பற்றி, அவர்கள் கிறித்துவ தேவாலயங்களில் சென்று சேதி கூறி வருகின்றனர்.

தாவீதை ஒரு அதிசய மனிதனாகவே அனைவரும் பார்க்கின்றனர், தாவீது, இப்போது பிறருக்காக பிரார்த்தனை செய்கிறானாம்.. பெரும்பாலும் அவனது பிரார்த்தனைகள் பலிக்கிறதாம். எது எப்படி இருப்பினும் அவனது அனுபவம் விநோதமே..! இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, என்று ஆணித்தரமாக அவனது நண்பர்களும் பெற்றோர்களும் நம்பி வருகின்றனர்.

இவன்தான் அந்த "தாவீது"


எனக்கும் எங்கள் குழுவினருக்கும் இந்த மூளை மேட்டர் கொஞ்சம் இடித்துக் கொண்டே இருந்ததால், இதைப் பற்றி அவனிடம் கேட்க, அவன் தனது தலையை என்னைத் தொட்டுப் பார்க்கச் சொன்னான். நானும் தொட்டேன். ஒரு இடத்தில், உள்ளே ஓடு இல்லாமல் வெறும் ஸ்கேல்ப் மட்டும் இருந்தது, அங்கே எனது கைகளால் அழுத்தம் கொடுக்க, அப்படியே எனது கை அவன் மண்டைக்குள் செல்கிறது. அவன் அப்படியே கைவைத்துக் கொண்டிருக்குமாறு கூறி எனது கையுடன் கீழே குனிந்தான், ஏதோ ஒன்று எனது கைகளில் ஸ்கேல்ப்-இன் உள்பக்கத்திலிருந்து வந்து தட்டுப்பட்டது, மீண்டும் அவன் எழுந்திருக்க, அந்த ஏதோ ஒன்று, மீண்டும் உள்ளே சென்று விட்டது... இது நான் அவன் தலையைத் தொட்டுணர்ந்த சொந்த அனுபவம்.

ஓடு உடைந்து ஸ்கேல்ப் மட்டும் இருக்கும் பகுதி.


 அடிப்பட்ட தழும்புகள்
என்னதான் அற்புதம் மேஜிக் என்று பேசிக்கொண்டாலும், மருத்துவர்கள் தாவீதை, தவறாமல் மாதம் ஒருமுறை வந்து சோதித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர், மேலும், தலையில் ஓடு ல்லாமல் இருக்கும் அந்த காலி இடத்தை செயற்கை ஓட்டினால் நிரப்ப வேண்டும் என்றும் அதற்கு தேவையான பணத்தையும் நேரத்தையும் திரட்டிக் கொண்டு ஆபரேஷனுக்கு ஆயத்தமாகும்படி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தாவீதும் தவறாமல் மருத்துவசோதனைகளை தவறாமல் செய்துக்கொள்கிறான.

இன்று இயல்புநிலைக்கு திரும்பியிருக்கும் தாவீது, நன்றாக கிட்டார் வாசிக்கிறான், பாடுகிறான். டிவோஷனல் பாடல்கள்  கொண்ட ஆல்பம் ஒன்றை ஷூட் செய்ய வேண்டும் என்கிற குட்டி லட்சியமெல்லாம் வைத்திருக்கிறான். இரண்டு வாரத்திற்கு முன்புகூட எனக்கு ஃபோன் செய்து, தனக்குத் தெரிந்த ஒரு ஏழை நண்பனுக்கு எடிட்டிங் வேலை ஏதாவது இருந்தால் வாங்கித் தருமாறு என்னிடம் வேண்டுகோள் வைத்துப் பேசினான். உதவும் உள்ளத்துடன் அவன் ஃபோன் பேசியபிறகுதான், அவனைப் பற்றி நான் மறந்திருந்த சென்ற வருட ஞாபகங்களை வலைப்பதிவில் எழுதவேண்டும் என்று ஆசை வந்தது..! எழுதிவிட்டேன்...!

அடுத்த பகுதியில் நானும் எனது குழுவினரும், இதே தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சந்தித்த வெவ்வேறு நபர்களைப் பற்றியும், சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றியும் எழுதுகிறேன்..!


Signature

33 comments:

மதுரை சரவணன் said...

wow...miracle happen even now all gods grace. thanks for sharings.

Anonymous said...

Miracle!!!

சீமான்கனி said...

அற்புதம் தான்...அடுத்த பதிவுகளுக்காய் ஆவலாய் இருக்கிறேன்..பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றி...ஹரீஷ்...

சைவகொத்துப்பரோட்டா said...

அதிசயமான நிகழ்வுதான்!!!
தொடர்ந்து எழுதுங்கள், காத்திருக்கிறேன்,
நன்றி ஹரீஷ்.

ஜெட்லி... said...

பகிர்வுக்கு நன்றி.....

எல் கே said...

உங்கள் கதை வேழம் பத்திரிக்கையின் புத்தாண்டு சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது

அதை படிக்க http://vezham.presspublisher.us/issue/april-i

செந்தில் நாதன் Senthil Nathan said...

:-) நம்ப மறுக்கும் மூளை..எல்லாத்துக்கும் காரணம் இருக்கணுமான்னு கேக்குற மனசு..

அவர் நல்லா இருந்தா சரி... :-)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தாவீதின் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

intersting

நாடோடி said...

ப‌கிர்விற்கு ந‌ன்றி ஹ‌ரீஷ்..... தொட‌ருங்க‌ள்.

வேலுமணி said...

believe god.

puduvaisiva said...

ஹரீஸ், தாவீதிதைப் பற்றி நீங்கள் இயக்கிய அந்த தொடரில் இருந்து சில காட்சிகளை வீடியோவாக இத்த பதிவுடன் இனைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நன்றி.

Kanchana Radhakrishnan said...

அற்புதம்

DREAMER said...

Welcome Madurai Saravanan,
Sure its a miralce...

Welcome Anonymous,
ThanX for the visit...

நன்றி சீமான்கனி, அற்புதம்தான்... சீக்கிரமே அடுத்த பதிவுகளை எழுதுகிறேன்..!

நன்றி சைவகொத்துப்பரோட்டா, தொடர்ந்து தரும் ஆதரவிற்கு நன்றி நண்பா..!
தொடர்கிறேன்..!

வாங்க ஜெட்லி...
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..!

DREAMER said...

நன்றி LK, என் கதையை படித்து ரசித்ததோடு நில்லாமல், அதை உங்கள் சிற்றிதழில் பதிப்பித்தமைக்கு மிக்க நண்பரே..!

வருக்கைக்கு நன்றி செந்தில்நாதன், நம்ம மனசு அப்படி..! என்ன செய்ய..!

வாங்க நாய்க்குட்டி மனசு, தாவீதின் நல்ல உள்ளத்தை வாழ்த்திய நல்ல உள்ளமான உங்களுக்கும் நன்றி..!

நன்றி நாடோடி நண்பரே, கண்டிப்பாக தொடர்கிறேன்...!

நன்றி நாஞ்சில் பிரதாப்..!

வாங்க வேலு...! சரி beleiveவிடுவோம்..!

DREAMER said...

வாங்க புதுவை சிவா..!
தாவீதை வைத்து நான் இயக்கிய அந்த வீடியோ என்னிடம் இருக்கிறது. ஆனால், அது ZEE TVயின் காப்பிரைட் என்பதால் அதை இணையத்தில் ஒளிபரப்ப சங்கடமாக உள்ளது.

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
'அற்புதம்தான் - ஆனால் உண்மை' என்பதை மையமாக வைத்துத்தான் இந்த தொடரை எழுதுகிறேன். வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

Thenammai Lakshmanan said...

பிரம்மிக்க வைத்த அதிசய நிகழ்வு ட்ரீமர்

DREAMER said...

நன்றி தேனம்மை மேடம்..!

துபாய் ராஜா said...

ஆதாரங்களோடு விளக்கியிருப்பது அருமை.அடுத்து வரும் தொடர்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

prabhadamu said...

ட்ரீமர் எனக்கு ஆவி, பேய் எல்லாம் கொஞ்சம் பயம். வந்து பாத்தேன். அப்பரம் எஸ்க்கேப்.

DREAMER said...

வாங்க ராஜா சார்,
தொடர்ந்து படித்து ஆதரவு தருவதற்கு நன்றி! கண்டிப்பாக அடுத்த பகுதியையும் சீக்கிரமாக எழுதி முடிக்கிறேன்..!

-
DREAMER

உண்மையான இஸ்லாமியன் said...

என்னமா கிறிஸ்தவத்தைப் பரப்புறீங்க நண்பரே? இதையா உண்மைனு சொல்லி எல்லோரையும் நம்பச் சொல்றீங்க? சரி, விடுங்க.. ஆத்ம அறுவடையின் இன்னொரு முகம்னு வச்சீகிறுவோம்.. அம்புடுதேன்

DREAMER said...

வாங்க உ.இ. நண்பரே,
நண்பராய் பதிவுகளை நோக்குவோமே தவிர, மதவாதிகளாய் வேண்டாம். அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்.

நான் எடுத்த முதல் எபிசோடில் ஒரு கிறித்தவர் சம்பந்தப்பட்டிருந்ததால் அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். பிற எபிசோடுகளில் ஒரு இஸ்லாமிய பாபா, ஒரு கிராமத்தில் நோய்களை மந்திரித்து விரட்டுகிறார் என்பது பற்றியும் வியந்து எழுதப்போகிறேன். அப்போது என்னை என்ன சொல்வீர்கள்...!

மனிதனைப் பற்றியும் மனிதனையும் அப்பார்ப்பட்ட சக்திகளைப் பற்றியும்தான் எழுதநினைத்தேனே தவிர மதங்களைப் பற்றி அல்ல..! தயவு செய்து அப்படி நீங்கள் பார்ப்பதை தவிருங்கள். இதையும் மீறி நீங்கள் அப்படி பார்த்தால், அதற்கு நானோ எனது எழுத்தோ பொறுப்பல்ல..!

அடுத்த இடுகையில் குமரிக்கண்டத்தை பற்றி எழுதினால் என்னை லெமூரியன் என்று நினைத்துவிடுவீர்கள் போலும்..!

பிடித்திருந்தால், அடுத்து வரவிருக்கும் பகுதிகளையும் வந்து படித்துப் பாருங்கள்..!

-
DREAMER

Raghu said...

50க்கு வாழ்த்துக‌ள் & இன்ட்ர‌ஸ்டிங் ஹ‌ரீஷ்!

/உண்மையான இஸ்லாமியன் said...
என்னமா கிறிஸ்தவத்தைப் பரப்புறீங்க நண்பரே//

ந‌ண்ப‌ரே, ஹ‌ரீஷை என‌க்கு ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ தெரியும். இப்ப‌திவினால் அவ‌ருக்கு பைசா பிர‌யோஜ‌ன‌ம் கிடையாது. அவ‌ர‌றிந்த‌ த‌க‌வ‌லை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்துகொள்கிறார். அவ்வ‌ள‌வே. இப்ப‌திவில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌ ந‌ப‌ர் கிறிஸ்த‌வ‌ர் என்ப‌தால் ஹ‌ரீஷ் கிறிஸ்த‌வ‌த்தை ப‌ர‌ப்புகிறார் என்கிறீர்க‌ளே. இது என்ன‌ லாஜிக்? அவ‌ர் இன்னும்/இனிமேலும் ஹ‌ரீஷ் நாராய‌ண்தான். ஜான் ஸ்மித்தோ, ராப‌ர்ட் க்ளைவோ அல்ல‌....

என‌க்கு கிறிஸ்த‌வ‌த்திலும் ச‌ரி, இஸ்லாமிய‌த்திலும் ச‌ரி, நிறைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். நீங்க‌ள் உங்க‌ள் பெய‌ரை போடாம‌ல் பின்னூட்ட‌ம் இட்டுள்ள‌தே உங்க‌ளின் ஒதுங்கிப்போகும் ம‌ன‌ப்பான்மையை காட்டுகிற‌து. நீங்க‌ளாக‌ வில‌கிப்போய் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குற்ற‌ம் சொன்னால் என்ன‌ செய்ய‌?....:(

DREAMER said...

வாங்க ரகு,
முதல் ஃபாலோவரா நீங்கள் சேர்ந்து என்னை ஊக்குவித்ததைத் தொடர்ந்து, இன்று ப்ளாக்கை தொடரும் நண்பர்கள் எண் 50த் தொட்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது! தொடர்ந்து இணைந்திருப்போம்!

நன்றி!

-
DREAMER

வேங்கை said...

ஹரிஷ் ரொம்ப நல்லா இருக்கு ஹரிஷ்
உங்களை நம்புறோம்
வாழ்த்துக்கள்

DREAMER said...

நன்றி வேங்கை நண்பரே..!

Anonymous said...

பதிவு பிரமாதம்! வருடக்கணக்கில் ஆய்வு செய்யும் உளவியல்/அறிவியல் ஆய்வாளர்களுக்கே ஒரு புரியாப் புதிராய் இருக்கும் NDE அனுபவங்கள் மிகவும் சர்ச்சைக்குறியவை. அத்தகைய ஒரு விடயத்தை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்து (லாவகமாக கையாண்டு) வெற்றி கண்டிருக்கீங்க! பிடிங்க பூங்கொத்து....!!

ஒரு //உங்கள் கதை வேழம் பத்திரிக்கையின் புத்தாண்டு சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது//

//இன்று ப்ளாக்கை தொடரும் நண்பர்கள் எண் 50த் தொட்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது! தொடர்ந்து இணைந்திருப்போம்!//
இதைப் போன்று பல உயரங்களையும், அங்கீகாரங்களையும் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரீஷ்! இறுதியாக ஒரு விஷயம்.....
"போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்" செவ்வனே தொடருங்கள் உங்கள் திகில் (வலைப்)பயணத்தை! நன்றி

Priya said...

அதிசயம் & இன்ட்ரெஸ்டிங்!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்....miracle தான் சந்தேகமில்லாம

DREAMER said...

வாங்க ஹரிஜி,
உங்க பூங்கொத்து ரொம்ப அழகாகவும், ஊட்டச்சத்துக்களுடனும் இருக்கு.. மிக்க நன்றி..! உங்களைப் போன்ற நண்பர்களின் உறுதுணையிருக்க, கண்டிப்பாக இன்னும் நிறைய எழுதலாம்னு நம்பிக்கை வருகிறது. த்ரில் பயணம்னு என் ப்ளாக்-குக்கு ஒரு புதுப்பேரே கொடுத்துட்டீங்க.. மிக்க நன்றி..!

வாங்க ப்ரியா,
வாசிப்புக்கும, வாழ்த்துக்கும் நன்றி..!

வாங்க அப்பாவி தங்கமணி,
miracleஐ ரசித்து படித்ததற்கு மிக்க நன்றி!]

-
DREAMER

Colvin said...

உண்மை இஸ்லாமியன் அவர்களே இறைவனுக்கு இந்த செயல்களை செய்ய ஆற்றல் இல்லை என்கிறீர்களா? உங்கள் இறைபக்தியை இதை வைத்தே மதிப்பிட்டு விடலாம். மாற்று மதத்தினரும் பல அற்புதங்களை கூற கேள்விப்பட்டிருக்கின்றேன். இவரின் பதிவில் பொய்யிருப்பதாக தெரியவில்லை. நீங்கள் ஒரு காரியம் செய்யலாமே இப்பதிவு பொய் எனில் நீங்களே நேரடியாக களத்தில் இறங்கி ஏன் மெய், பொய் தன்மைகளை விசாரிக்க கூடாது?

அவ்வாறு செய்வீர்களாயின் எங்களை போன்றவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

Anonymous said...

நல்ல படம் ....அருமையான ஆக்கங்கள்....

Popular Posts