ஒருவழியாக தாவீதின் மரண அனுபவங்களை முழுமையாக ரெக்கார்ட் செய்துக் கொண்டு, இந்த மரண அனுபவம் பற்றிய எபிசோட்-ஐ சுவாரஸ்யப்படுத்துவதற்காக, மக்களிடையே ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம். அதில் கேட்கப்பட்ட கேள்வி
'மரணத்துக்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான்?'
இந்த கேள்வியைக் கேட்டதும், கொஞ்சம் ஏற இறங்க பார்த்துவிட்டுத்தான் மக்கள் பதிலளித்தார்கள். அதில் சுவாரஸ்யமாக வந்த பதில்கள் இதோ...
'அதென்ன டவுன் பஸ்ஸா..! எங்கே போவாங்கன்னு சொல்றதுக்கு'
'மண்ணோட மண்ணா மக்கிப்போகவேண்டியதுதான்'
'புண்ணியம் செஞ்சவன் சொர்க்கத்துக்கு போவான்... பாவம் செஞ்சவன் நரகத்துக்குப் போவான்..'
இந்த மரணம் தழுவிய அனுபவங்களைப் பற்றி யாராவது, மருத்துவ உலகின் சார்பாக பேட்டி வழங்கினால் நன்றாக இருக்குமே என்று தோன்றவே, தி-நகரில், திரு.ரவி சாமுவேல் என்ற மனோதத்துவ ஆலோசகரிடம் சென்று பேட்டி கண்டோம். அவர் சிறந்த முறையில் இந்த N.D.E.யைப் பற்றி விளக்கியதோடு, இது மருத்துவ உலகை குழப்பத்திற்குள்ளாக்கும் ஒரு அபூர்வமான விஷயம் என்றும் தெரிவித்தார்.
பிறகு எனது நண்பர் ஒருவரிடம் காரில் இந்த எபிசோட்-ஐப் பற்றி விளக்கிக் கொண்டு சென்றபோது, அந்த காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர், அவரது ஊரில் நடந்த விநோதமான ஒரு சம்பவத்தை பற்றிக் கூறினார். அது..!
அவரது ஊரில், ஒரு சின்ன பெண் விஷக்காய்ச்சலால் இறந்துப் போனாளாம், சொந்தபந்தங்கள் கூட, அவளது பிணத்தை ஊர்வலமாக கொண்டு போய் சுடுகாட்டில் கிடத்தி எறிக்க முயலும்போது, திடீரென்று உயிர்வந்து எழுந்து அமர்ந்துவிட்டாளாம். அனைவரும் பேய் பேய்..! என்று அலறிஅடித்து ஓடியிருக்கின்றனர். பிறகு அந்த சுடுகாட்டு வெட்டியான் அந்த பெண்ணை பத்திரமாக அவளது வீட்டிற்கு அழைத்து செல்ல, வீட்டில் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லையாம். கேட்டதற்கு, இறந்துப் பிழைத்த யாரும் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் அது அந்த குடும்பத்திற்கு ஆகாது என்றும் கூறி அவளை திருப்பியனுப்பிவிட்டார்களாம்.
கேட்கவே கொடூரமாக இருந்தது. பாவம்..!

இதே போன்ற இன்னொரு பெண் செத்துப்பிழைத்த சம்பவம், ஒரு தினசரியில் பிரசுரமானது. அதையும் குறித்து எடுத்துக் கொண்டோம்.
தினகரனில், ஜனவரி 4, 2009 அன்று வெளியானது
ஆன்மீக சிந்தனையாளர் வேதாத்ரி மகரிஷியின் அவர்களின் கொள்கைகளை பின்பற்றும் திரு.கமலகணேஷ் என்ற பேராசிரியரிடம், இந்த மரண அனுபவத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றி பேட்டி கண்டோம். அவர் 'கறந்தபால் முலைப்புகா' என்ற சிவவாக்கியரின் சொல்லை மேற்கோளாகக் காட்டி, இறந்தவர்கள் மீண்டும் பிழைப்பது என்பது நடவாத ஒரு காரியம் என்றும் இந்த அனுபவங்கள் உண்மையாயிருக்க சாத்தியமில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார்.
இப்படியாக எல்லோரது கருத்துக்களையும் பதிவு செய்துக் கொண்டு அந்த எபிசோடை செய்து முடித்தோம். 'தாவீதின் மரண அனுபவம்' என்ற நம்பினால் நம்புங்களின் இரண்டாம் எபிசோடு 2009, பிப்ரவி மாதர் 3ஆம் தேதி ZEE TAMIL தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. (முதல் எபிசோடாக எனது நண்பர் திரு.மாதவன் என்ற இயக்குனர் 'அருவியில் சுற்றும் ஆவிகள்' என்ற ஒரு எபிசோடை சிறந்த முறையில் இயக்கியிருந்தார்).
இது போன்ற நிகழ்ச்சியில், மக்களுக்காக நாம் ஷூட் செய்து காட்டுவதுபோக, நாம் தனிப்பட்ட முறையில் நிறைய விஷயங்களையும், நிறைய சந்திப்புகளையும், அனுபவப்படுவது மிக சுவாரஸ்யமாய் இருந்தது. அந்த வகையில், இந்த எபிசோடை நான் இயக்கிமுடித்தபின்பும், இந்த Near Death Experience என்ற விஷயத்தில் இருந்து மீண்டு வர சில நாட்கள் பிடித்தது. அந்நேரத்தில் வடிகாலாய் இருக்கட்டுமே என்று, இந்த N.D.E.யை அடிப்படையாக் கொண்டு பற்றி ஒரு கதையை எழுதினேன். 'பயணம் 12 நிமிடம்' என்ற அந்த கதையை விரைவில் இந்த வலைப்பதிவில் உங்கள் பார்வைக்காக பதிப்பிக்கிறேன்.
அடுத்த எபிசோடுக்காக என்ன எடுக்கலாம் என்று மும்முரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் மூலம், திரு.சந்திரசேகர் என்கிற ரயில்வே எம்ப்ளாயி ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ரெயில்வேயில் வேலை செய்பவர் என்ன பெரிதாய் சொல்லிவிடப் போகிறார் என்று எண்ணியபடி அவரை சந்திக்க அவரது வீட்டுக்குள் சென்ற நான், அடுத்து 2 மணிநேரம் அவருடன் கலந்துரையாடிய போது, அவர் கூறிய விஷயங்களைக் கேட்டு 'கற்றது கையளவு' என்ற பழமொழியை நினைத்துக் கொண்டேன். அவ்வளவு விஷயங்களைப் பற்றி அந்த மனிதர் பேசினார். அதைப்பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்..!

(தொடரும்...)