பாகம் - 03
விட்டத்தில் தாஸ் கண்ட ஓவியம்... அவனது தூக்கத்தை கலைத்து எழுந்து உட்கார வைத்தது.
அந்த ஓவியத்தில் நடுவே ஒரு பெரிய கருப்பு வட்டமும், அந்த வட்டத்திற்கு வெளியே பல மனிதர்கள், பாதி உடம்பு வட்டத்துக்குள்ளும், மீதி உடம்பு வெளியில் இருக்கும்படியும் விழுந்து வணங்குவது போல் வரையப்பட்டிருந்தது.
அந்த வட்டத்திற்கு அலங்காரங்கள் அமர்க்களமாக செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு தாஸ், அந்த ஓவியத்தை பார்க்க முனைந்தபோது, வெளிச்சம் போதாததினால்.... தாஸ் எழுந்து நின்றான். உற்றுப் பார்த்தான். தரையில் மூட்டியிருக்கும் தீயின் வெளிச்சம் போதவில்லை... தீயிலிருந்து, எரிந்துக் கொண்டிருக்கும் ஒரு தீக்குச்சியை எடுத்து மேலே பிடித்தான். அதில் அந்த ஓவியம் நன்றாக புலப்பட்டது.
கூடவே குணாவின் குறட்டை சத்தம், மிகவும் சத்தமாக பின்னனி இசைத்துக் கொண்டிருந்தது.
ஓவியத்தில், அந்த கருப்பு வட்டத்திற்கு நடுவே ஒரு கடவுளின் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவம் கருவறைக்குள் இருக்கும் உடைந்த சிலையுடன் ஒத்துப்போனதை தாஸ் கவனித்தான். கருப்பு வட்டத்தின் வெளியே சற்று தொலைவில், அந்த கடவுளை வணங்கியபடி ஒரு அரசன் போன்ற உருவம் இருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது.
கையில் வைத்திருக்கும் தீக்குச்சியை, ஒருகையால் முடிந்தவரை உயர்த்தி பிடித்து. இன்னொரு கையில் தனது மொபைல் ஃபோனை உயரப்பிடித்து. அந்த ஓவியத்தை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். தீக்குச்சியை தூர எறிந்துவிட்டு, அந்த ஃபோட்டோவை இப்போது கீழிருந்தபடி 'சூம்' செய்து துழாவிப் பார்க்க... அந்த ஓவியத்தின் அடிப்பாகத்தில் தமிழில் மெலிதாக 'கேணிவந... நாதாலய... நிம...' என்று அதற்குமேல் எழுத்துக்கள் அழிந்து போய் தெரிந்தது.
குணாவின் குறட்டை சத்தம் மேலும் அதிகமாகிக் தாஸை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு மீண்டும் தன் கவனத்தை ஃபோட்டோவில் கொண்டுவந்தான்.
'கேணி... வந... நாத... ஆலய... நிம..?' என்று ஒருமுறை தாஸ் சொல்லிப் பார்த்துக் கொண்டே திரும்பி அங்கு கருவறைக்குள் உடைந்த நிலையில் இருக்கும் அடையாளமிழந்த சிலையை பார்த்தான்... மூட்டிய தீயிலிருந்து மீண்டும் ஒரு தீக்குச்சியை எடுத்துக் கொண்டு, கருவறைக்கு அருகில் சென்றான்...
அறையை எட்டிப்பார்த்தான்.
அந்த அறை, நான்கு பக்கமும் சுவர் கொண்டு பெட்டி போல் இல்லாமல், சுற்றியும் ஒரு வட்ட வடிவத்தில் சுவர் அமைக்கபட்டிருந்தது.
சிலை உருவிழந்திருக்க, அது வைக்கப்பட்டிருக்கும் மாடத்தின் அடிப்பாகம் ஒரு வட்டவடிவ மேடை போல். அந்த மேடையின் மேல்பக்கம் வண்டிச்சக்கரம் போன்ற உருவ அமைப்புகளும் செதுக்கப்பட்டிருந்தது.
அறையை மேலும் நோக்குவதற்காக, தாஸ், தயங்கியபடி உள்ளே நுழைந்தான். மெதுவாக சிலையை தொட்டுப் பார்க்கலாம் என்று அதன் மேல் கைகள் வைக்க, அவன் கைவைத்த இடம் சிறு துண்டாக உடைந்து தரையில் உருண்டோடியது... அந்த சத்தத்தில் குணாவின் குறட்டை திடீரென்று நின்று போனது. தாஸ் இன்னும் ஆர்வமுற்றவனாய், அந்த சிலையின் பின்பக்கமாய் போய் சுவற்றைப் பார்த்தான்.
அங்கே இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுவதுபோல் அம்புக்குறி போடப்பட்டிருந்தது. வலது பக்கமாய் திரும்பிப் பார்க்க, அங்கும் அதே போன்றதொரு அம்புக்குறி... அதுபோல், அந்த அறையின் சுவற்றில் வரிசையாய் நான்கு அம்புக்குறிகள் இருந்தது.
எதை இவர்கள் இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே தாஸ் அந்த அம்புக்குறிகளை தொட முயன்றான்.
கையை அருகில் எடுத்துக் கொண்டு போய் அதைத் தொட்டதும்... திடீரென்று 'தாஸ்... என்ன பண்றீங்க..?' என்று எஃகோ எஃபெக்டில் குரல் வந்தது, தாஸ் பயந்துப் போய் திரும்ப....பின்னால், குணா கருவறை வாசலில் நின்றிருந்தான்.
ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே, 'குணா, திடீர்னு ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..?'
'யாரு, நானா... நீங்கதான் என்னை பயமுறுத்துறீங்க... நல்லா தூங்கிட்டிருந்தேன். கல்லு உருளுற சத்தம் கேட்டு தூக்கம் கலைஞ்சு எழுந்துப் பார்த்தா உங்களைக் காணோம். இந்த அடர்ந்த நட்ட நடுக்காட்டுல, தனியா விட்டுட்டு ஓடிப்போயிட்டீங்களோன்னு பயந்துட்டேன்.'
'உஃப்... சரி, ரொம்ப சாரி... உள்ளே வாங்க...' என்று கூற, குணா தயங்கியபடி உள்ளே வந்தான்... மேலே பார்த்தான். அந்த வட்டவடிவ கருவறையின் மேல்பக்கம் ஒரு கூம்பு போல் முடிந்திருப்பதை பார்த்து கொண்டே நடந்தான்.
'என்னங்க இது, ஏதோ ராக்கெட் மாதிரி இருக்கு..'
'ஆமா, இந்த கோவிலோட அமைப்பு ரொம்பவும் வித்தியாசமா இருக்கு... வெளியலருந்து பார்க்க, ஒரு சின்ன மண்டபக்கோவில் மாதிரிதான் இருக்கு, ஆனா, உள்ளே நிறையவே இடம் விட்டு கட்டியிருக்காங்க... கொஞ்சம் பெக்யூலியராத்தான் இருக்கு..'
'நீங்க இங்க என்ன பாத்துட்டிருக்கீங்க..?'
'ஒண்ணுமில்ல... சும்மா சுத்திப்பாத்துட்டிருக்கேன். இந்த கோவில் பேரு தெரிஞ்சுது..'
'என்னது..?'
'கேணிவன நாதர் ஆலயம்..'
'தமிழ் பேரா..? எப்படி..? வித்தியாசமா இருக்கே.. என்ன சாமி இது..?' என்று குணா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...
'நான் என்ன Guide-ஆ... இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டிருக்கீங்க..! எனக்கும் தெரியல... குழப்பமாத்தான் இருக்கு... தெரிஞ்சதும் சொல்றேன்'
'இதென்னா அம்புக்குறி..?' என்று குணா, சுவற்றிலிருக்கும் அம்புக்குறிகளை சுட்டிக்காட்டி கேட்டான்.
'மறுபடியும் கேள்வி...!' என்று ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே... 'அதைத்தான் பாத்துட்டிருந்தேன்..' என்று கூறி மீண்டும் அந்த அம்புக்குறிகளை பார்த்து அதில் கவனம் செலுத்தினான்.
'பேசாம போய் தூங்கிடுலாமே... காலையில வேற எவ்வளவு தூரம் நடக்கனுமோ தெரியல..' என்று கூற, தாஸ் கடுப்பாகி, பின் சுதாரித்து கொண்டு, 'நீங்க வேணும்னா போய் படுங்க குணா, நான் கொஞ்ச நேரத்துல வந்து படுத்துக்குறேன்...' என்று கூறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க...
'தனியா படுக்க பயமாயிருக்குன்னுதானே கூப்டேன்..' என்று சொல்லி, அங்கே நிற்க பிடிக்காதவனாய் அங்கிருந்த சிலையின் மாடத்தில் அமர்ந்து கொண்டான்.
அப்போது அந்த கல் மெல்ல அசைந்து கொடுத்தது. அந்த கடுமையான கற்கள் நகரும் சத்தம் பயத்தை ஏற்படுத்தவே, குணா சட்டென்று எழுந்து நின்றுக்கொண்டான்.
தாஸும் சத்தம் வந்ததில் கலங்கிப் போய் குணாவை பார்த்தான். இருவரும் பயத்தை பார்வையில் பறிமாறிக் கொண்டனர்.
'என்ன ஆச்சு குணா..? என்ன பண்ணீங்க..?' என்று தாஸ் மெதுவாக கேட்டான்.
'நான் ஒண்ணும் பண்ணலை தாஸ், கால் வலிக்குதேன்னு உக்காந்தேன்... அது...'
'எது..?'
'இந்த கல்லு அசைஞ்சுது..' என்று குணா, சிலைக்கு கீழிருக்கும் அந்த வட்டவடிவ மேடையை சுட்டிக்காட்டினான்.
'எப்படி..?'
'தெரியல, ஆனா, வாசல் பக்கமா சாயற மாதிரி அசைஞ்சது... பதறி எழுந்துட்டேன்..' என்று அவன் உட்கார்ந்த இடத்தை காட்டினான்.
தாஸ் அந்த இடத்தை உற்றுப் பார்த்தான். அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லில் குணா அமர்ந்திருந்தது தெரிந்தது. மேலும் அந்த கல்லின் மேலிருந்த சிலை, சற்றே திரும்பியிருந்தது.
திடீரென்று தாஸ் கையில் வைத்திருக்கும் தீக்குச்சி அணைந்தது.
இருட்டு...
'அய்யோ, தாஸ் பயமாயிருக்கு... வாங்க போயிடலாம்..'
'ஒண்ணும் ஆகாது இருங்க...' என்று கூறி தனது மொபைலிலிருக்கும் டார்ச் வெளிச்சத்தை இயக்கினான். அது அந்த அறையை முன்பைக்காட்டிலும் நல்ல பிரகாசமாக காட்டியது...
'தாஸ்... உங்க மொபைல் என்ன மாடல்..?' என்று குணா சம்மந்தமில்லாமல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், தாஸ் தொடர்ந்து கொஞ்சமாக திரும்பியிருந்த அந்த சிலையை பார்த்துக்கொண்டே இருந்தான். மீண்டும் அந்த அம்புக்குறிகளைப் பார்த்தான்... அவனுக்கு ஒருவிஷயம் புரிந்தது. அந்த சிலை முன்பிருந்த நிலையிலிருந்து, இடமிருந்து வலமாய் திரும்பியிருந்தது. அந்த அம்புக்குறி சுட்டிக்காட்டிய திசை...
'என்னாச்சு தாஸ், சிலையை இப்படி உத்துப்பாக்குறீங்க..'
'குணா, கொஞ்சம் இந்த மொபைல பிடிங்களேன்..' என்று கூறி குணாவிடம் மொபைலைக் கொடுக்க, அவன் அந்த மொபைலை டார்ச் போல் பிடித்தான்.
'என்ன பண்ணப் போறீங்க..?'
'தெரியல..' என்று கூறிக்கொண்டே சிலையின் கீழிருக்கும் அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லைப் பிடித்து மெல்ல இடமிருந்து வலமாய் திருப்ப முயன்றான்.
ட்ர்ர்ரரரக் என்ற பெரும் சத்தத்துடன் திரும்பியது. கூடவே அந்த சாமி சிலையும் திரும்பியது...
'தாஸ்... பயமாயிருக்கு... நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..! போய் படுத்துடலாமே..!'
தாஸ் மேலும் திருப்பினான்... மேலும் ட்ர்ர்ரரக்க்க் என்று சத்தத்துடன் திரும்பியது... இம்முறை இன்னும் பலமாக திருப்பினான். சுழற்சி இப்போது சுலபமாக இருந்தது. மூன்று சுற்றுக்கள் அந்த கல்லை சுழற்றிக்கொண்டே அந்த கருவறைக்குள் சுற்றிவர... இப்போது, 'டம்' என்ற பெரிய சத்தத்துடன் அந்த கல் சற்று மேலெழும்பியது...
தாஸ் நின்றான்... சிரித்தபடி குணாவைப் பார்க்க, அவன் புரியாமல் பேந்த பேந்த விழித்தான்.
'என்னாச்சு, எனக்கு ஒண்ணும் புரியல தாஸ்..' என்று கேட்க
'இதுக்குள்ள என்னமோ இருக்கு..'
'என்னது..? புதையலா..?'
'தெரியல... பாத்துடலாம்... கொஞ்சம் இந்த கல்லை நீங்களும் தள்ளுங்க...' என்று கூற, குணா மொபைலை ஒரு கையில் வைத்தபடியே ஒரு கையால் தள்ளினான்... ஒரு கையில் தள்ள அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது...
தாஸ் இதைப் புரிந்து கொண்டு, 'குணா, அந்த மொபைலைக் கொடுங்க..' என்று வாங்கி, தனது டீசர்ட்டில், கழுத்துக்கு கீழே காலரில், மொபைலின் பின்பக்க ஹூக்கை மாட்டிக் கொண்டான். இப்போது கச்சிதமாக வெளிச்சம் நேரே அடித்தது.
'இப்போ ரெண்டு கையால நல்லா பலமா தள்ளுங்க..' என்று தாஸ் கூற, இருவரும் பலங்கொண்ட மட்டும் அந்த கல்லை தள்ளினார்கள்...
பலமான சத்தத்துடன் அந்த கல் கொஞ்சமாக அசைந்து கொடுத்து வழிவிட்டது. உள்ளே பெரிய துவாரம் தெரிந்தது...
அந்த வட்டவடிவ கல்லுக்கு கீழே மேடைபோல் அமைந்திருந்த பகுதி இப்போது பார்க்க கிணற்றுச்சுவர் போன்ற தோற்றத்திலும், அந்த வட்டவடிவ கல், அந்த கிணற்றுக்கு மூடிபோலும் தெரிந்தது.
'என்ன தாஸ் இது, ஏதோ கிணறு மாதிரி இருக்கு...' என்று குணா கேட்டான்.
'அதான் இந்த கோவிலோட பேர்..'
'என்ன பேர் சொன்னீங்க..?'
'கேணி வன நாதர்.. ஆலயம்...'
'அப்படின்னா..'
'கேணி-ன்னா கிணறு, வனம் - காடு..'
'கிணத்துக்காடா..?'
'ஆமா..'
'நாதர்..'
'ப்ச், அது பொதுவா, கடவுள்னு சொல்றது..' என்று தாஸ் கூற, குணா வாயைப்பிளந்து அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தான்.
'இதுக்குள்ள தண்ணி இருக்குமா..?'
'தெரியல... இறங்கிப் பாக்குறீங்களா..?' என்று தாஸ் கலாய்க்க...
'அய்யய்யோ... ஆள விடுங்க நீங்க.. அதான் பாத்தாச்சுல்ல... வாங்க போய் படுக்கலாம்....தூக்கம் வருது..' என்று குணா அங்கிருந்து புலம்பிக்கொண்டே வெளியேறினான்.
'எதுக்கு ட்ரெயின்ல வந்தேன்.. இங்கே என்ன பண்ணிட்டிருக்கேன்.. இதெல்லாம் எனக்கு தேவையா.. எல்லா இந்த ஆளால வந்தது... தம் அடிக்கலாமான்னு கேட்டு கவுத்துட்டான்... நானும் ஒரு சிகரெட்டுக்கு ஆசப்பட்டு கவுந்துட்டேன்' என்று புலம்பிக்கொண்டிருக்க...
தாஸ், குணாவின் புலம்பலை பொருட்படுத்தாமல், அந்த கிணற்றுக்குள் ஒரு கல்லை எடுத்து போட்டுப் பார்த்தான்... அது அடியைத் தொட்டு சத்தம் எழுப்பும் என்று காத்திருந்தான். ஆனால், சத்தம் வரவேயில்லை....
அவ்வளவு ஆழமா? என்று எண்ணியபடி அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருக்க...
வெளியே, குணாவின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது. 'ஏதோ, இன்னிக்கி மழை வந்தது, தண்ணியாவது குடிச்சோம், பசிக்கல... நாளைக்கு மழை வருமோ வராதோ..? அப்புறம் பசிக்கு என்ன பண்றது..'
கருவறைக்குள் தாஸ் அந்த கிணற்று துவாரத்தில் உள்ளே மெல்ல எட்டிப்பார்க்க, அவன் கழுத்து காலரிலிருக்கும் மொபைல் வெளிச்சம் அந்த கிணற்றுக்குள் அடிக்கிறது. அந்த வெளிச்சத்தில், கிணற்று சுவற்றுக்கு உள்புறமாய் தமிழில் ஏதோ எழுதியிருப்பது தெரிகிறது... அதை சிரமப்பட்டு படிக்கிறான்.
அதில்...
துஆரமது ந்தூரமா ய்ங்காலமதுங்
காணா மற்போகுவதுக்கொரு
கேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு
இதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு
(தொடரும்)

23 comments:
me the 1 stuuuuuu...
நல்லா மிரட்டிறீங்க ஹரிஷ்.
வழக்கம் போல கலக்கல்...
ஆஹா பயங்கர சுவாரஸ்யமா திரில்லா இருக்கு ஹரீஷ்...அந்த கேணியில் அப்படி என்னதான் எழதி இருக்கு அவசரமாய் தொடருங்கள்...ஆவலாய் நான்...
ரெம்ப சுவரஸ்யமா போகுது.... திகில் கொஞ்சமும் குறையவில்லை.. தொடருங்கள் ஹரீஸ்.
real story writter நீங்க தான். நூறு சதவீதம் கற்பனையுடன் கதை கொண்டு செல்லத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
hey... hey.. story is interesting.. & more importantly your style is very nice.
Sometimes, I smell crime mannar Rajesh Kumar's (Crime Novelist) style..
ஹரிஷ் இப்போ தான் டைம் கிடைச்சது
நல்லா போகுது ஹரிஷ்
நாங்களும் கூடவே போறோம்
தடதடன்னு போகுது கதை...பாட்டெல்லாம் எழுதி எழுத்தாளர் இ.செள. மாதிரி கலக்கறீங்க....
ஹரீஷ், இதை அப்படியே பதிவோட விட்றாதீங்க. விஷுவலாகவோ, ப்ரிண்ட் மீடியாவுக்கோ கொண்டு போங்க
விஷுவலா பண்ணா நல்லா மிரட்டுவீங்கன்னு தோணுது...பண்ணுங்க ஹரீஷ்
இப்படி திரில் கொடுகறீங்க பாஸ், வெயிட் பண்ணுறேன் அடுத்த பதிவுக்கு
நன்றி First Reader சீமான்கனி... கேணியில் இருந்த பாடலைப் பற்றி தாஸ் விரைவில் வரவிருக்கும் எபிசோடுகளில் சொல்வார்..! கண்டிப்பாக சீக்கிரம் தொடர்கிறேன் நண்பா..!
நன்றி இராமசாமி கண்ணன்...
நன்றி CoolBoy கிருத்திகன்...
நன்றி நாடோடி நண்பரே... தொடர்கிறேன்...
நன்றி நாய்க்குட்டி மனசு, 100% சதவிகிதம் கற்பனைக்கு காரணம், உங்கள் போன்ற 100% சப்போர்ட் கொடுக்கும் நண்பர்கள்தான்...
நன்றி மாதவன், ராஜேஷ்குமார் போன்ற தலைகளுடன் என் எழுத்தையும் ஒப்பிட்டு பாராட்டியதற்கு தலைவணங்குகிறேன்...
நன்றி வேங்கை, நடையை ரசித்து பாராட்டியதற்கு நன்றி..! இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்டிப்பாக எழுதுகிறேன்.
வாங்க ரகு, ஆஹா, நம்ம ஃபேவரைட் இந்திராஜியை ஞாபகப்படுத்தி பாராட்டியதற்கு நன்றி ரகு..! அவரெல்லாம் எப்படித்தான் அத்தனை 'ப்ரிலூட்' பாடல்களை எழுதுனாரோ... இந்த ஒரு பாட்டு எழுதுனதுக்கே யப்பாஆ..! நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா இதை விஷூவல் மீடியாவா கொண்டு வர்ற ஐடியா இருக்கு ரகு..! நல்ல ப்ரொட்யூஸர் கிடைச்சாங்கன்னா, தமிழ்ல 'மினி சிரீஸ்' மாதிரி டைப்ல இது பண்ணா பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் நினைக்கிறேன்..! யார் முன்வராங்கன்னு பாப்போம்.
நன்றி அருண் பிரசாத், த்ரில்லை அனுபவித்து ரசித்தமைக்கு நன்றி... அடுத்த பாகம் வந்துக்கிட்டே இருக்கு...! சீக்கிரமா போட்டுடறேன்.
-
DREAMER
ஆஹா பயமாக இருக்கு ஆனால் ஆர்வத்தை அதிகரிக்கிறது உங்களின் எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி நண்பரே
செம டெம்போ.....
தொடருங்க....
நன்றி பனித்துளி சங்கர்...
நன்றி அகல்விளக்கு, தொடர்கிறேன்...
-
DREAMER
செம இண்ட்ரிஸ்டிங்கா போகுது..பாஸ்...அடுத்த பாகத்துக்காக காத்திட்டிருக்கேன்...
கதை சூப்பரா இருக்குங்க.. படிக்க படிக்க ரொம்ப ஆர்வத்தை தூண்டுது.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலிஸ் பண்ணுங்க..
surangamaa>?
very interesting ....its like indra soundarrajan novel... eager to read next part.. pls post it soon
நன்றி ரமேஷ்... அடுத்த பாகம் முடிந்துவிட்டது இன்னும் 2 மணி நேரத்தில் ப்ரூஃப் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்...
நன்றி அப்துல்லாகாதர், இதோ அடுத்த பாகம் வந்துக்கிட்டேயிருக்கு...
வாங்க LK,
//சுரங்கமா..?//
அடுத்த பாகத்தில் தெரிஞ்சிடும்...
வாங்க வெங்கட்,
என் ஃபேவரைட் எழுத்தாளர் அவர்... அடுத்த பாகம் 'spell check' போயிட்டிருக்கு... இன்னும் 2 மணி நேரத்தில் போட்டுடறேன்...
-
DREAMER
Unbearable suspense thalaiva
ThanX Vaz...
வழக்கம் போல கலக்கல்...
Post a Comment