Saturday, August 21, 2010

"கேணிவனம்" - பாகம் 05 - [தொடர்கதை]



 பாகம் - 05
 
தாஸ் இன்னமும் ரயிலுக்கு உள்ளே செல்லாமல், கதவருகிலேயே நின்றிருந்தான். அந்த காலை வேளையில், மிதமான ரயிலோசை அவனை பொறுத்தவரை, ஒரு தியானம் போல் இருந்தது.

நடந்ததை சொன்னால், யார் நம்புவார்கள்... எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்குள் எழும்பிய எண்ணங்களை அடக்கி, தன் மனதை ரயிலோசையில் லயிக்க விட்டான்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்று அறியாத வண்ணம் நேரம் கடந்துக் கொண்டிருதது... இதுவும் ஒரு வகையில் டைம் ட்ராவல்தான்...

நான் காலத்தை கடந்தவன்... ஒரு சின்ன திருத்தம்.... பின்னுக்கு கடந்தவன்... ஸ்தூல உருவத்தில், ஒரு காலத்திலிருந்து, இன்னொரு காலத்திற்கு பயணப்பட்டிருக்கிறோம்... இது சாத்தியமா..? அவன் வரையில் அது சாத்தியமாகியிருக்கிறது...
உலகில் எத்தனை பேர், எத்தனை அறிஞர்கள், எத்தனை விஞ்ஞானிகள் இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிட்டாத ஒரு அறிய விஷயம், என்வரையில் கிட்டியிருக்கிறது... இதை நினைத்து பெருமைப்படுவதா, பயப்படுவதா...

விடிந்து விட்டது...

ஏதோ ஸ்டேஷன் வந்தது... வண்டி நின்றதும், அவனுக்கு குணாவின் ஞாபகம் வந்தது.

அடடே..! குணா என்னவாகியிருப்பான். அவன் கூறியதுபோல், அவனை தனியாக விட்டு வந்துவிட்டோமே..? என்று எண்ணியபடி குழப்பத்துடன் இனி இங்கு நிற்க வேண்டாம், இருக்கைக்கு செல்வோம் என்று அதிரடியாக உள்ளே நுழைந்தவன், திடீரென்று எதிரில் வந்தவன் மீது மோதிவிட்டான்.

'வோவ்... வாட்ச் அவுட்..' என்று எதிரில் வந்த அந்த நபரின் குரல், மிகவும் பரிச்சயமாகபட்டது. அது குணாவின் குரல்...

'ஹே... குணா... நீங்க எப்படி இங்க வந்தீங்க..?'

'காட்டுலருந்தா வருவாங்க... நான் என் சீட்லருந்துதான் வர்றேன்...! ஹலோ... வெயிட்... என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்..?' என்று குணா குழப்பம் காட்டினான்.

'என்ன குணா... என்னாச்சு உங்களுக்கு... என்னை ஞாபகம் இல்லையா..?' என்றவனை குணா ஏற இறங்க பார்த்தான்.

பிறகு பதிலளிக்க விரும்பாதவனாய், குணா அவனைக் கடந்து டாய்லெடுக்குள் நுழைந்தான்.

இது சரியல்ல... அடுத்த ஸ்டேஷனிலேயே இறங்கி, ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்து, உடனே சென்னைக்கு திரும்ப வேண்டும்... இனிதான் நிறைய வேலையிருக்கிறது... என்று நினைத்தான்.

-------------------------

அடுத்த நாள்...

தாஸ் சென்னைக்கு அவசர அவசரமாக திரும்பியிருந்தான்...

தாஸ், சென்னை திருவான்மியூரில், "ANCIENT PARK" என்று ஒரு ப்ரைவேட் லைப்ரரி மற்றும் ஆர்டிஃபேக்ட் கலெக்ஷன்ஸ் கேலரி நடத்திவந்தான். அந்த கட்டிடத்தை, அவனது ரசனைக்கேற்ப மிகவும், பழைய சின்னங்களால் அலங்கரிக்கபட்ட ஒரு காஸ்ட்லி எலைட் மியூஸியம் போல் வடிவமைத்திருந்தான். தமிழ் மற்றும் இதர மொழிகளில், மிகவும் அரிய புத்தகங்கள், பெரும்பாலும் அவன் சேகரித்து வைத்திருக்கும் பழமையான ஓவியங்கள், கலைப்பொருட்கள் என்று அந்த லைப்ரரி படிப்பதற்கு மட்டுமில்லாமல் பார்ப்பதற்கும் மிகவும் அழகாய் இருக்கும்.

அந்த லைப்ரரியின் மாடியறையில் தனது ஆபீஸ் ரூமை அமைத்திருந்தான். அந்த அறையிலிருக்கும் பெரிய கண்ணாடியின்மூலம் பார்த்தால், அவனது லைப்ரரி மற்றும் கேலரி மொத்தமும் தெரியும். அந்த அறையின் மறுபக்கம் ஜன்னலில் பார்த்தால், வெளிப்புறம் கடல் தெரியும்... அங்கு அமர்ந்தபடிதான் எப்போதும், கதை எழுதுவது அவன் வழக்கம்... ஏசியை அணைத்துவிட்டு, ஜன்னலைத்திறந்தால், கடல்காற்று வாங்க முடியும்... இன்று அவன் கதை எழுதும் மூடிலும் இல்லை...கடல்காற்று வாங்கும் நிலையிலும் இல்லை...

மிகவும் குழப்பமாக இருந்தான்.

மேஜைமேல் இருக்கும் நோட்பேடில், பென்ஸிலைக் கொண்டு தனது மொபைலைப் பார்த்து, காட்டுக்கோவிலில் அவன் படம் பிடித்த, அந்த பாடலை எழுதிக் கொண்டிருந்தான்...

துஆரமது ந்தூரமா ய்ங்காலமதுங்
துஆரமதுந் - துவாரமதும்
தூரமாய் - தூரமாய்
காலமதுங் - காலமதும்

காணா மற்போகுவதுக்கொரு
காணாமல் போகுவதுக்கு ஒரு

கேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு
கேணி அது  உண்டென உரைப்பதை கேளு

இதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு
இதன் உள் அட்ங்குவானுக்கு அற்றுப் போகும் கோளு

துவாரம் அது தூரமாய் காலம் அதுவும்
காணாமல் போவதற்கு ஒரு
கேணி அது உண்டேன உரைப்பதைக் கேளு
இதனுள் அடங்குவானுக்கு அற்றுப் போகும் கோளு


என்று எழுதிமுடித்தான்.

அவன் மொபைல் ஒலித்தது...

தாஸ் பழைய பாடல் விரும்பி என்பதால், அவனது மொபைலில் பழைய பாடல்கள் நிறையே ஏற்றியிருந்தான். ஒவ்வொரு முறையும், தனது மொபைல் ரிங் ஆகும்போது, ரேண்டமாக பழைய பாடல்கள் வருவது போல் ரிங்டோன் வைத்திருந்தான்.

இம்முறை வந்த பாடல்...

கண்ணெதிரே தோன்றினாள்...
கனிமுகத்தை காட்டினாள்...
நேர்வழியில் மாற்றினாள்...
நேற்றுவரை ஏமாற்றினாள்...


ஃபோனை ஆன் செய்தான்.

'பாஸ்... ப்ரிண்ட் அவுட் ரெடி... வந்துக்கிட்டே இருக்கேன்... கொஞ்சம் ட்ராஃபிக்கா இருக்கு... வந்துடுறேன்..', என்று மறுமுனையில் சந்தோஷ்... தாஸின் அஸிஸ்டென்ட்...

'என்ன சந்தோஷ், பர்மிஷன் கேக்குறியா..?'

'அப்படியெல்லாம் இல்ல பாஸ்..'

'முதல்ல என்னை பாஸ்னு கூப்பிடாதே... ஒண்ணு, தாஸ்-னு கூப்பிடு, இல்லை என் முழுப்பேரு தசரதன்-னாவது பேரைச் சொல்லி கூப்பிடு... பாஸ் சவுண்ட்ஸ் ஆட் சந்தோஷ்..'

'சாரி.. பாஸ்... எனக்கு வர்ற மாதிரி நான் கூப்பிடுறேன்...'

'லிஷா எங்கே..?'

'அவ இன்னும் ஆஃபீஸ் வரலையா..?'

'உங்கூட இல்லியா..?'

'இல்லியே..?'

'நீயெல்லாம் ஒரு லவ்வராடா... ஒரே இடத்துலதானே ரெண்டு பேரும் வர்க் பண்றீங்க..? ரெண்டு பேரும் ஒண்ணா வர்றதுக்கு என்ன..? லவ் பண்ற பொண்ணை ஆஃபீஸுக்கு பைக்ல ஏத்திக்கிட்டு வராத நீயெல்லாம் ஒரு லவ்வரா..?'

'பாஸ், நீங்க யாரையாவது லவ் பண்ணிப் பாருங்க... அப்ப தெரியும் கஷ்டம்... அவ ரெடியாகவே ரொம்ப நேரமாகும்பாஸ், அவ ஹாஸ்டல்ல போய் தேவுடு காக்க சொல்றீங்களா..? அதெல்லாம் நம்மால முடியாது...'

'சரி.. சரி.. வா..'

'ஓகே பாஸ்..'

தாஸ் தனது மொபைலை கட் செய்தான். டிஸ்ப்ளேவில், வால்பேப்பராக, அவன் அந்த கோவிலில் கண்டெடுத்த ஓவியத்தை வைத்திருந்தான். அந்த ஓவியத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே என்னென்னமோ எண்ணங்கள் வந்து போயின... கிணற்றில் கதறியபடி இறங்குவதுபோல், தீக்குச்சியை வைத்துக் கொண்டு கருவறைக்குள் நுழைவது போல்...

அவன் மொபைல் மீண்டும் ஒலித்து அவன் கவனத்தை கலைத்தது...

ரிங்டோன்...
'ஓ ரசிக்கும் சீமானே' பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங் ரிங்டோனாக ஒலித்தது...

டிஸ்ப்ளேவில் 'லிஷா காலிங்...' என்றிருந்தது...

'ஹாய் லிஷா..?'

'ஹலோ மிஸ்டர். டைம் ட்ராவலர்..' என்று மறுமுனையில், இனிமையான குரலில் தாஸின் இன்னொரு அஸிஸ்டென்ட்-ம், சந்தோஷின் காதலியுமான லிஷா பேசினாள்.

'என்ன தாஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தியரிக்கு, ஒரு வாழும் உதாரணமா வந்திருக்கீங்க போலிருக்கு..'

'ஹே கமான், நீ ஓட்றியா இல்லை பாராட்டுறியா..?'

'சாரி, நீங்க நேத்து ஃபோன்ல சொன்னது உண்மையா பொய்யான்னு எனக்கு சொல்ல தெரியல... ஆனா, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது... அப்புறம் ஒரு சின்ன விஷயம்... நான் இன்னிக்கி ஆஃபீஸ் வரமுடியாது..?'

'ஏன்..?'

'உங்கவிஷயமாத்தான்... எனக்கொரு க்ளூ கிடைச்சிருக்கு... அது கன்ஃபர்ம் பண்ண வேண்டியிருக்கு... என்னன்னு வந்து சொல்றேனே..?'

'ஓகே..'

'ஆமா..? எங்கே என் ஃப்யூச்சர் ஹஸ்பெண்ட்.. சாண்டி(Sandy)... இன்னுமா ஆஃபீஸ்க்கு வரலே..?'

'டிராஃபிக்ல மாட்டிக்கிட்டானாம்... வந்துக்கிட்டே இருக்கான்.'

'ஓகே..! நீங்க அந்த கோவில்ல கிணத்துக்குள்ள பாத்ததா சொன்ன பாட்டை எனக்கு இமெயில் பண்ணிடுறீங்களா..?'

'இல்ல வேணாம் லிஷா... நானே அதை ஆல்மோஸ்ட் டீகோட் பண்ணிட்டேன்.'

'எனிதிங் இன்ட்ரஸ்டிங்..?'

'ம்ம்ம்... அது 'டைம் டிராவலைப்' பத்தி அந்தக் காலத்துல சொன்ன மாதிரி எழுதியிருக்கு..'

'அப்போன்னா... நீங்க டீகோட் பண்ண அந்த பாட்டை எனக்கு இமெயில்ல அனுப்பி வையுங்க..'

'ஓகே... அனுப்பிடுறேன்.' என்று பேசிக்கொண்டிருக்கும்போதே சந்தோஷ் உள்ளே நுழைந்தான்.

'சாரி... சாரி...' என்று ஜெபித்தபடி வந்தான்.

சந்தோஷ், ஜீன்ஸ்-ம் வெள்ளை டி-ஷர்ட்டும் அணிந்து ஆள் மிகவும் ஸ்லிம்-ஆகவும் ஸ்மார்ட்டாகவும் இருந்தான்.

'ஹலோ பாஸ்... யார் ஃபோன்ல..?'

'லிஷாதான்..' என்று கூறிய தாஸ், ஃபோனை கையால் மறைத்தபடி மெதுவாக சந்தோஷிடம்... 'நீ ஹாஸ்டல்ல வெயிட் பண்ண முடியாதுன்னு சலிச்சிக்கிட்டதை அவகிட்ட சொல்லவா..?'

'அய்யோ... வேண்டாம் பாஸ்... அப்புறம் அவளை சமாதானப்படுத்த, சத்யம் தியேட்டருக்கோ, இல்ல பி.வி.ஆருக்கோ கூட்டிட்டு போய், இண்டர்வெல்ல டோனட், சாண்ட்விட்ச், ஐஸ்க்ரீம்னு செலவு பண்ணனும்... ரொம்ப காஸ்ட்லி, அதுக்கு பதிலா, நான் உங்க கால்ல வேணும்னாலும் விழுந்துடுறேன்.. நீங்க தயவு செஞ்சு கால்-ஐ கட் பண்ணுங்க...'

'ஹாஹா...' என்று தாஸ் சிரித்துக் கொண்டே மொபைலில் லிஷாவிடம்.. 'ஓகே லிஷா... நான் உனக்கு அப்புறம் ஃபோன் பண்றேன்.. சந்தோஷ் வந்திருக்கான் பேசுறியா..?'

'அவன்கிட்ட என்ன வெட்டிப்பேச்சு... வச்சிடுறேன்..' என்று கூறி ஃபோனை கட் செய்துவிட்டாள்.

'என்ன பாஸ் சொல்றா...?'

'உன் மேல ரொம்ப அன்பா இருக்கா..' என்று தாஸ் சிரிக்க...

'எல்லாம் நடிப்பு... வேலைன்னு வந்துட்டா அவதான் எனக்கு காம்படிட்டர்... இப்போ உங்க டைம் டிராவல் விஷயத்துல, நான் அதிகமா ஹெல்ப் பண்றேனா... இல்லை அவ அதிகமா ஹெல்ப் பண்றாளான்னு ஒரு காம்படிஷன் ஓடிக்கிட்டிருக்கு...'

'நல்லதுதானே... சரி... விஷயத்துக்கு வருவோம்... இப்ப சொல்லு... நான் ஃபோன்ல சொன்னதைப் பத்தி நீ என்ன நினைக்கிற..' என்று தாஸ் ஆவலுடன் சந்தோஷைப் பார்த்தான்.

சந்தோஷ் கொஞ்சம் தயங்கியவனாய்... 'பாஸ்... நீங்க சொன்னதை வச்சி பாக்கும்போது, நீங்க டைம் டிராவல் பண்ணியிருக்கீங்க..'

'ஐ நோ தட்..'

'இதை டைஜஸ்ட் பண்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு... நீங்க உங்க ஆயுள்ல கிட்டதட்ட 30 மணி நேரம் எக்ஸ்ட்ரா வாழ்ந்திருக்கீங்க..'

'நல்ல வர்ணனை'  என்று இடையில் தாஸ் பாராட்டினான்.

'தேங்க்ஸ்... ஆனா பாஸ், உங்களுக்கு பிஸிகலி எதுவுமே ஆகலை... இது உண்மையா இருந்தா..?' என்று அவன் இன்னும் சந்தேகத்துடனே பேச...

'அப்ப இன்னும் நீ என்னை நம்பலியா..?' என்று தாஸ் அவனை நிறுத்தினான்.

'நோ நோ.. நான் அப்படி சொல்லலை பாஸ்... நீங்க கொடுத்திருக்கிற ஓவியமும் பாடலும் ப்ரூஃப் இருக்கு... நாம ஏன் கவர்மெண்ட்கிட்ட இதைப் போய் சொல்லக்கூடாது..'

'நம்பமாட்டாங்க சந்தோஷ்..'

'அப்ப என்ன பண்றது..?'

'நாம இன்னும் டீடெய்ல்ஸ்-ஓட போகணும்...'

'எந்த மாதிரி டீடெய்ல்ஸ்..'

'எனக்கே தெரியல... அந்த ப்ரிண்ட் அவுட்-ஐ கொடு..?' என்று கேட்க, சந்தோஷ், தான் கொண்டு வந்திருந்த ப்ரிண்ட் அவுட்டை எடுத்து தாஸிடம் கொடுத்தான்.

அதை மேஜைமேல் வைத்துவிட்டு, தாஸ் எழுந்து அதை பார்க்க, சந்தோஷும்கூட எழுந்து அந்த டேபிளில் எதிரெதிரே நின்றபடி அந்த ஓவிய ப்ரிண்ட் அவுட்டை உற்றுப்பார்த்தான்

அப்போது, தாஸின் மொபைல் ஃபோன் ஒலித்தது...

ரிங்டோனில் பழைய பாடல்...

பொன்னெழில் பூத்தது புதுவானில்...
வெண்பனி தூவும் நிலவே நில்...

புது நம்பர்... ஆன் செய்தான்...

'ஹலோ...'

'மிஸ்டர். தாஸ்...?'

'யெஸ்..'

'ரைட்டர் தாஸ்தானே..?'

'ஆமாங்க... நீங்க..?'

'யோவ் தாஸ்... என்னைக் காட்டுல தனியா விட்டுட்டு வந்துட்டியே... இது உனக்கே நல்லாருக்கா..?'

'யாரு..? கு...குணாவா..?'

'ஆமா... குணாதான்... இன்னும் உயிரோடதான் இருக்கேன்...'

(தொடரும்...)




Signature

21 comments:

அருண் பிரசாத் said...

first

அருண் பிரசாத் said...

விறுவிறுப்பா போகுது பாஸ். இண்ட்லில சப்மிட் பண்ணலயா?

hamaragana said...

அன்புடன் வணக்கம் ரெண்டுநாள இதே நினைப்புதான் சரி அடுத்து ??((((பசிகிரவனுக்கு சாப்பிட்ட உடனே அடுத்த சாப்பாடு எப்போ ???
இதுதான் எண்ணம் !! எனக்கு பசி ???))))

நாடோடி said...

சூப்ப‌ர் ஹ‌ரீஷ்... எல்லா பாக‌த்தின் முடிவிலும் அடுத்த‌ பாக‌த்தை எதிர்பார்க்க‌ வைச்சிடுறீங்க‌..

Madhavan Srinivasagopalan said...

இங்கிட்டுதான் டிவிஸ்டா..
பேஷ் பேஷ்.. நல்லாவே இருக்குது.. கன்டினியூ

Unknown said...

என்னங்க அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்க..

நான் கதைய வேற கோணத்துல யோசிச்சு வச்சிருந்தேன்.. ஆவலை ஏற்படுத்துற ரொம்ப நல்ல திருப்பம்.. அடுத்த பாகத்திற்கு காத்திட்டிருக்கேன்..

இன்ட்லி, தமிழ் 10 ரெண்டுலயுமே ஓட்டு விழமாட்டேங்குதே..

வேங்கை said...

ஹரிஷ் எங்கடா குணாவ காணோம்னு பாத்தேன்

குணாவே வந்துட்டாரு !!! அபாரம் கதை நடை

ஹரிஷ் என்ன ரெண்டு குணாவா ? -interesting

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பிஸி ஆக இருப்பீங்கன்னு நானே இன்டலி யில் சேர்த்துட்டேன், தப்பில்லையே ? கதை நல்லா போகுது. கொஞ்சம் குழப்புது

Gayathri said...

aaha kadhai miga miga swarasiyama poguthu....rombha nalla irukku aduththa paagathukkaagaka kaththukittu iruken

Kiruthigan said...

மறுபடியும் விறுவிறுப்ப கூட்டீட்டீங்க..

க ரா said...

சூப்பர் :)

சீமான்கனி said...

ஹரிஷ்ஜி ம்ம்ம்ம்...கதை இன்னொடு தளத்துக்கு இன்னும் விறுவிறுப்பா போகுது...குணாவின் அடுத்த கட்ட மிரட்டளுக்காய் ஆவலுடன் நான்...

Raghu said...

ஹ‌ரீஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! ஹுஹும்..செம‌ ஃபார்ம்ல‌ போயிட்டிருக்கீங்க‌ :)

இதுமாதிரி த்ரில் க‌தைக‌ள்ல‌ ஏதாவ‌து ஒரு இட‌த்துல‌ டெம்போ கொஞ்ச‌ம் குறையும். ஆனா இந்த‌ க‌தைல‌ இதுவ‌ரைக்கும் அந்த‌ மாதிரி என‌க்கு தோண‌வேயில்ல‌. ஒவ்வொரு ப‌குதி முடிவிலேயும்..அடுத்து என்ன‌ அடுத்து என்ன‌ன்னு எகிற‌வைக்க‌றீங்க‌..

Ramesh said...

ட்ரெயின்ல இடிச்சிட்டு அடையாளம் தெரியாத மாதிரி யாருன்னு கேட்டுட்டு போன குணா....அதே நேரம் கேணிவனநாதர் ஆலயத்துல வெயிட் பன்ற குணா...இண்ட்ரஸ்டிங்....தாஸ் கேரக்டரைவிட அந்த கேரக்டர் என்ன பன்னும்னுதான் ரொம்ப ஆர்வமா இருங்குங்க....ஆனா கொஞ்சம் குழப்பமாவும் இருக்கு.. குணாவைப் பொருத்தவரைக்கும், தாஸ் கிணத்துக்குள்ள விழுந்தவன்..அவனுக்கு தாஸுக்கு கால் பண்ணனும்னு எப்படி தோனும்..அதுவும் இல்லாம..மொபைல் உட்பட எதுவுமே கையில் இல்லாமல் இருந்த குணா எங்க இருந்து கால் பன்றான்....சீக்கிரம் அடுத்த பாகத்த வெளியிடுங்க பாஸ்...

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
ட்வின் டவர்ல இப்பதான் flight மோதின மாதிரி இருந்த்தது எனக்கு 'யோவ் தாஸ்... என்னைக் காட்டுல தனியா விட்டுட்டு வந்துட்டியே... இது உனக்கே நல்லாருக்கா..?'

'யாரு..? கு...குணாவா..?'

'ஆமா... குணாதான்... இன்னும் உயிரோடதான் இருக்கேன்...'


http://marumlogam.blogspot.com

DREAMER said...

நன்றி அருண் பிரசாத்... அதிக வேலைகளுக்கு நடுவில் பதிவு போட வேண்டிய சூழ்நிலை... அதனால் இண்ட்லில சப்மிட் பண்ண முடியலை...

வாங்க hamaragaana... அடுத்த பதிவு இன்னும் சில நாட்களில் போடுகிறேன்

நன்றி நாடோடி நண்பரே...

நன்றி மாதவன்...

வாங்க அப்துல்காதர்... படித்து ரசித்ததற்கு மிக்க நன்றி...

நன்றி வேங்கை... ஆமா 2 குணாதான்...

வாங்க நாய்க்குட்டி மனசு... நான் இப்போ ஊர்ல இருக்கேன்... நான் இருக்கிற இடத்துல நெட் கனெக்ஷன் ரொம்ப slow-ஆ இருக்கு... அதனால திரட்டிகள்ல இணைக்க முடியாம தவிசிட்டிருந்தேன்... நல்ல வேள நீங்களே இணைச்சிட்டீங்க... ரொம்ப நன்றி

நன்றி காயத்ரி... அடுத்த பாகத்தை விரைவில் போட்டுடறேன்...

நன்றி CoolBoy க்ருதிகன்...

நன்றி இராமசாமி கண்ணன்...

நன்றி சீமான்கனி... குணாவின் மிரட்டல் விரைவில் தொடரும்

வாங்க ரகு, ஒவ்வொரு தடவ பதிவு போடும்போதும் நீங்க சொன்ன விஷயம்தான் எனக்கும் பயமா இருக்கும்... எவ்வளவு தூரம் போகுதுன்னு பாப்போம்

வாங்க ரமேஷ்... உங்க குழப்பதுக்கான விடைகள் அடுத்த பாகதுலருந்து வரும்... வாழ்த்துக்கு நன்றி

வாங்க தினேஷ் குமார்... ஆஹா, கதையை ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கீங்க... ரொம்ப நன்றி...

-
Dreamer

VampireVaz said...
This comment has been removed by the author.
VampireVaz said...

Tale is taking a tortuous route.. bravo!

செம்மொழியான் said...

கேணிவனம் கதை நால்லா விருவிருப்பா போகுது....சிக்கிறம் அடுத்த பாகத்தை போடுங்க.....

DREAMER said...

நன்றி Vaz...

நன்றி செம்மொழியான்...

சமுத்ரா said...

Great sir...I'm jealous of you :D
good writing and good concept..

Popular Posts