Saturday, February 05, 2011

"அம்புலி - 3D" A Steroscopic Thriller : எனது அடுத்த திரைப்படம்




வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்று உங்களுடன் ஒரு நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று முதல்... "அம்புலி" என்ற 3D திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். 20 வருடத்திற்கு  பிறகு வரும் இந்த 3D திரைப்படத்தை குழந்தைகள் படம் போலல்லாமல், வளர்ந்த குழந்தைகளும் பார்க்கும் விதத்தில் படமாக்கவிருக்கிறோம்.

இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, திரு. ரா. பார்த்திபன் அவர்கள், இதில் ஒரு பெரும்பங்காற்ற இருக்கிறார்.

KTVR CREATIVE REELS சார்பில் திரு. V. LOGANATHAN அவர்கள் தயாரிக்கிறார். நானும் எனது நண்பர் ஹரி ஷங்கரும் இப்படத்தை இயக்குகிறோம். எங்களது முந்தைய திரைப்படத்தை வித்தியாசமாக படம்பிடித்து கொடுத்த நண்பர் சதீஷ். G இப்படத்தின் ஒளிப்பதிவாளர். 

நீண்ட நாட்களாக பதிவை எழுத முடியவில்லையே என்றிருந்தேன். இனி, 'அம்புலி' படப்பிடிப்பில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

30 comments:

க ரா said...

best wishes harish :) keep rocking :)

Anisha Yunus said...

kalakkal anna

Anisha Yunus said...

ஆஹா... நொடியில முத வெட்டை விட்டுட்டேன்...இருந்தாலும் மிக மிக சந்தோஷம் ஹரீஷ்ண்ணா.. உங்க கேணிவனம் கதை போலவே இண்டிரஸ்டிங்காகவும், ஓர் இரவு போல த்ரில்லிங்காகவும், வாழ்த்துக்களுடனும் வெற்ரியுடனும் பயணம் துவங்கவும், அதுவண்ணமே முடியவும் அவா... பின்னுங்க !! :)

bandhu said...

best wishes

வேங்கை said...

வணக்கம் ஹரிஷ்

அம்புலி ஸ்டில்ல பார்த்தும் ஓர் இனம் புரியாத சந்தோசம்

என் நண்பர்களிடம் பகிர்ந்தேன் உங்களை பற்றி

என் வாழ்த்துக்கள் ஒரு சகோதரனை போல்

வெற்றி நண்பரே

எஸ்.கே said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

best wishes sir...

Chitra said...

Super news!!!!! Best wishes!

அனு said...

வாழ்த்துக்கள் ஹரிஷ்!!

Vijay Venkatraman Janarthanan said...

All the best, Haresh! I am keen to regularly read your updates on this :-)

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் நண்பா...

நேற்றே நான் தினசரிகளில் பார்த்தேன்...

உங்கள் முயற்சி மாபெரும் வெற்றியடையட்டும்...

Vadielan R said...

தல வாழ்த்துக்கள் தல உங்கள் அம்புலி திரைப்படம் வெற்றி பெற்று நிறைய விருதுகள் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். தல அதோட உங்களுடைய ஓர் இரவு டிவிடி ரீலிஸ் பண்ணுங்க தல வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தல அந்த படத்தை பார்க்க. பிலிம் பெஸ்டிவல்ல அந்த படம் பார்க்க முடியாத மாதிரி வேலைகள் வந்து விட்டது. தல Please Release DVD OOR IRAVU

Madhavan Srinivasagopalan said...

வெற்றி பெற உங்களுக்கு வாழ்த்துக்கள்..

Kalyan said...

all the best Harish

பிரபல பதிவர் said...

க்ரேட்.... நேத்தே தினத்தந்தில ஸ்டில் பாத்து சந்தோஷப்பட்டேன்......

மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... நண்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓர் இரவு போலவே வித்தியாசமாக எடுக்க வாழ்த்துக்கள்

Raghu said...

ஹ‌ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீஷ்....அம்புலி ப‌ற்றி ஒன்றிர‌ண்டு த‌க‌வ‌ல்க‌ளை நீங்க‌ள் ப‌கிர்ந்திருந்தாலும், 'பார்த்திப‌ன்'...அன்எக்ஸ்பெக்ட‌ட்! அவ‌ர் கேணிவ‌ன‌ம் ப‌டிச்சாரா? அவ‌ரை லைட்டா கிண்ட‌ல் ப‌ண்ணி ஒரு க‌மெண்ட் போட்டிருந்தேன் :)

Raghu said...

ப‌ட‌ம் மிக‌ப்பெரும் வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்

One thing I want to say..."Please never compromise yourself for anything"

அக்னிபாசுதன் said...

வாழ்த்துக்கள், ஹரிஷ் :)

சொன்னா நம்ப மாட்டீக, சற்று முன்னர் தான் ‘அம்புலி‘ படம் பற்றிய அறிவிப்பு ஒன்றைச் சினிமா செய்தித் தளமொன்றில் பார்வையிட நேர்ந்தது! ஓர் இரவு directorsன் படம் என்றதும் பத்திக்கிச்சு! அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்திங்கு பாத்தாக்க matter ஆல்ரெடி அறிவிப்பாகி... 18 அப்பளாசும் வாங்கியாச்சுன்னு தெளிவாச்சு.

எப்டியிருப்பினும், வித்தியாச சிறுத்தைகளான உங்களனைவருடனும்...இன்னோர் வித்தியாச புலி பார்த்திபனும் சேர்ந்து பாயப்போகும் ‘அம்புலி‘ ‘ஓர் இரவை‘ப் போன்று இன்னோர் அசத்தல்ப் படைப்பாயிருக்குமென நம்புகிறேன்!

I look forward to viewing more updates and the stills of your upcoming movie in the near future!

ALL THE BEST AND KEEP GOING BUDDY :)

Abbas..! said...

All the Very Best Harish !!
Keep Rocking !

Anbudan, Abbas

Unknown said...

வாழ்த்துக்கள் ஹரீஷ்..

Anonymous said...

வணக்கம் நண்பரே.
அதிக வேலை பளுவால் நீண்ட காலமாக உங்க வளைபக்கம் வர முடியவில்லை இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
படபிடிப்பு தள அனுபவங்களை உங்கள் மொழியில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
புதுமை முயற்சிகளுக்கு தயங்காதவர் பார்த்திபன். நல்ல நடிகர். உங்கள் கதாபாத்திரமாக வருவதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் நாட்டு திரையரங்குகளில் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே.
விலானி ராஜ்,
மலேசியா.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்.

DREAMER said...

வணக்கம் இராமசாமி,
வாழ்த்துக்கு நன்றி...

வணக்கம் அன்னு,
கண்டிப்பாக ஒரு நல்லதொரு படைப்பை கொடுக்க என்னாலான முயற்சியை என் குழவினருடன் சேர்ந்து செய்கிறேன் சகோதரி. வாழ்த்துக்கு நன்றி...
வணக்கம் bandhu,
Thanx for the wishes...

வணக்கம் வேங்கை,
'இனம் புரியாத சந்தோஷம்' அந்த இனத்தின் பெயர் 'நட்பு' வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே...

வணக்கம் எஸ்.கே,,
வாழ்த்துக்கு மிக்க நன்றி...

வணக்கம் பிரஷா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி...

வணக்கம் சித்ரா,
ThanX a lot for your best wishes...

வணக்கம் அனு,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் Dr. Vijay,
I'll try to update the progress regularly...! ThanX for your wishes...

வணக்கம் அகல்விளக்கு,
தினசரியில் படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் வடிவேலன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! இந்த படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால், 'ஓர் இரவு' திரைப்படத்தின் டிவிடி-ஐ ரிலீஸ் செய்வதில் சற்றே காலதாமதம் ஆகிறது. கண்டிப்பாக கூடிய விரைவில் வெளியிட முயல்கிறேன். ThanX for showing Interest.

வணக்கம் மாதவன்,
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கல்யாண்,
ThanX for your wishes...

வணக்கம் சிவகாசி மாப்பிள்ளை,
தினத்தந்தியில் பார்த்து மகிழ்ந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நண்பா...

வணக்கம் நல்லவன் ரமேஷ்,
கண்டிப்பாக வித்தியாசமாக படைக்கிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் ரகு,
பார்த்திபன் சார் இன்னும் கேணிவனம் படிக்கலை... உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..! Compromise ஆகாமல் எடுக்கிறேன். இதில் M.S. பாஸ்கர், 'நான் கடவுள்' ராஜேந்திரன், எஸ்.வி. சேகர், கலைராணி, 'அயன்' ஜெகன், உமா ரியாஸ், இயக்குனர் ஜெகன், இயக்குனர் கிருஷ்ண சேகர் போன்ற நிறைய நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள். ஜஸ்ட் ஒரு எக்ஸ்ட்ரா தகவல்...

வணக்கம் அக்னிபாசுதன்,
18 அப்ளாஸ் என்னங்க.... இந்த 'அப்ளாஸ்' மட்டும் எவ்வளவு வாங்கினாலும், கடைசி அப்ளாசை தேடித்தான் மனது அலைகிறது. எனவே, எத்தனை முறை வேண்டுமானாலும் அப்ளாஸ் வாங்கலாம். சிறுத்தை, புலி கம்பாரிஷன் சூப்பர்... I'll try to update regularly

வணக்கம் அப்பாஸ்,
ThanX for your best wishes...

வணக்கம் பதிவுலகில் பாபு,
வாழ்த்துக்கு மிக்க நன்றி...

வணக்கம் விலானி ராஜ்,
இந்த படம் கண்டிப்பாக உங்களது ஊரிலும் ரிலீஸ் ஆகும் என்றே நினைக்கிறேன். உங்கள் ஊரிலிருக்கும் 3D திரையரங்குகளில் தமிழ் திரைப்படம் போடுவார்கள் என்றால் கண்டிப்பாக ரிலீஸ் செய்யலாம். வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே..!

வணக்கம் ஹுஸைனம்மா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

-
DREAMER

சீமான்கனி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரீஷ் "ஜி" ...

hamaragana said...

அன்புடன் வணக்கம்
இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வரவில்லை .புதிதாக செய்தி அம்புலி 3D... படபிடிப்பு துவக்கம் உங்கள் படம் வெற்றி வகை சூட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. ..

Unknown said...

அருமையான செய்தி ஹரிஷ்!!! இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!! அதை போல ஓர் இரவு படத்தின் dvd எப்போது வெளியிட போறீங்க????

Ramesh said...

மிக்க மகிழ்ச்சி ஹரீஷ்.. வாழ்த்துக்கள்.. அடுத்து ஒரு வித்தியாசமான படத்திற்காக காத்திருக்கிறோம்..

swamirajan said...

வாழ்த்துக்கள் ஹரீஷ், உங்க படத்தை பற்றி தட்ஸ்தமிழ்-லில் வந்து இருக்கிறது...அந்த லிங்க் கீழே..http://thatstamil.oneindia.in/movies/heroes/2011/02/11-actor-parthiban-first-3d-movie-ambuli-aid0128.ஹ்த்ம்ல் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் - swami

VampireVaz said...

Pinni Pedal Edunga Hareesh! Vazhthukal... first day first show than

Popular Posts