Friday, August 19, 2011

இன்று "அம்புலி 3D" இசை வெளியீடு LIVE ON WEB...







நண்பர்களுக்கு வணக்கம்,


போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து பதிவு எழுத முடியவில்லை..! இன்று 'அம்புலி 3D' இசை வெளியீடு... சென்னை காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது...


நேரில் கலந்து கொள்ள முடியாத வெளிநாட்டு நண்பர்களும் மற்றும் உள்நாட்டு நண்பர்களும் இசை வெளியீட்டு விழாவை கண்டு களிப்பதற்காக இணையதளத்தில் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கண்டிப்பாக பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.


AMBUILI 3D LIVE AUDIO LAUNCH LINKS


WWW.AMBULI3D.COM
WWW.FACEBOOK.COM/AMBULI3D
WWW.CHENNAIONLINE.COM


அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

12 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

All the best nanpa. I ll try to come...

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹரிஷ் சார் நேற்றே செய்தித்தாள்களில் பார்த்தேன் "நாளை இசை வெளியீடு என்று".நேற்றே advance வாழ்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைதேன்.ஆனால் மறந்துவிட்டேன்.பாடல்கள் எப்படி இருக்கும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது.பாடல்களை எப்படியாவது இப்போதே கேட்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.ஆனால் எங்கும் CD கிடைக்காது என்று நன்றாக தெரியும்,நாளை எப்படியாவது பாடல்களை கேட்டுவிடுவேன்.நானும் நிச்சயம் கலந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.பாடல்கள் பெரிய வெற்றி பெறவும்,விழா நல்லபடியாக நடக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாடல்கள் வெற்றி பெறவும்,விழா நல்லபடியாக நடக்கவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஆர்வா said...

பாடல்களை கேட்க மிக ஆவலாய் இருக்கிறோம்... வாழ்த்துக்கள் ஹரிஷ் சார்..

Raghu said...

இன்விடேஷ‌ன் வ‌ர‌ல‌ ஹ‌ரீஷ்..அது இல்லாம‌ உள்ளே அனும‌திப்பாங்க‌ளான்னு ஒரு கூச்ச‌ம் க‌ல‌ந்த‌ ச‌ந்தேக‌ம் இருந்த‌து. அதுதான் போக‌லாமா வேணாமான்னு ட‌புள் மைண்ட்ல‌ இருந்துட்டேன். க‌ண்டிப்பா நீங்க‌ளும் பிஸியா இருப்பீங்க‌, உங்க‌ளை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ற‌துக்கும் விருப்ப‌மில்ல‌. வீடியோ பார்த்துட்டு, ஆடியோ கேட்டுட்டு சொல்றேன். இப்போதைக்கு வாழ்த்துக‌ள் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Great to know "Ambuli" reached post production stage... All the best... nice show
Regards,
Bhuvana

வேங்கை said...

வணக்கம் ஹரிஷ்
வாழ்த்துக்கள் ... ஆவலுடன் அம்புலியை எதிர் பார்க்கிறோம்

Raghu said...

இப்போதான் ஃபோட்டோஸ்லாம் பார்த்தேன் ஹ‌ரீஷ். ரொம்ப‌ நாளைக்கு (மாத‌ங்க‌ள்?) அப்புற‌ம் இப்ப‌தான் நீங்க‌ளும், ஹ‌ரியும் தாடியை விட்டு வெளியே வ‌ந்திருக்கீங்க‌ போல‌..:-)

DREAMER said...

வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு நன்றி..!

வணக்கம் ஸ்வீட் ராஸ்கல்,
பாடல்கள் இப்போது இணையதளத்தில் இருக்குது... கேட்டுட்டு கண்டிப்பா எப்படியிருக்குன்னு ணொல்லுங்க...

வணக்கம் வெறும்பய,
உங்கள் வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி...

வணக்கம் கவிதை காதலன்,
பாடல்கள் வெளியாகிவிட்டமையால், கேட்டுவிட்டு எப்படியுள்ளது என்று கருத்து தெரிவிக்கவும்.

வணக்கம் ரகு,
இன்விடேஷன் இல்லாமலே நீங்க நேர்ல வந்திருக்கலாம் ரகு, அல்லது எனக்கு ஒரு ஃபோன் பண்ணி கேட்டுட்டு வந்திருக்கலாமே..! நான் என்னதான் பிஸியின்னாலும், விழா நல்லமுறையில நடக்க நண்பர்களும் தேவையில்லையா, போங்க ரகு... உங்களை நேர்ல எதிர்ப்பார்த்தேன். பாடல் வெளியாகிவிட்டது கேட்டுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க...

வணக்கம் அப்பாவி தங்கமணி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! பாடல்களை கேட்டுட்டு கருத்து தெரிவியுங்க...

வணக்கம் வேங்கை,
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க..!

Selvamani said...

பாடல்கள் நன்றாக உள்ளது ஹரீஷ். waiting for my t-shirt.. :-) . இந்த திரைப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

DREAMER said...

வணக்கம் செல்வமணி,
பாடலை கேட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி..! டி-ஷர்ட் திங்கள் முதல் (நாளை முதல்) கொரியரில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... கண்டிப்பாக வந்துவிடும்...

-
DREAMER

Alana Rodriguez said...

வணக்கம் ஹரிஷ் வாழ்த்துக்கள் ... ஆவலுடன் அம்புலியை எதிர் பார்க்கிறோம்

Popular Posts