Showing posts with label அம்புலி 3D. Show all posts
Showing posts with label அம்புலி 3D. Show all posts

Saturday, June 14, 2014

'ஆ'மயம் 10 - சினிமா (எ) சாத்தான்காரர்கள்


ஜப்பானில் ஸ்டுடியோவில் பெரும்பாலும் இரவு நேர ஷூட்டிங்தான் போய்க்கொண்டிருந்தது... சீர் என்றால் அப்படி ஒரு சீரான அமைப்பு அந்த ஸ்டுடியோ க்ரியேச்சூரில். இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை ஃப்ளோர் எங்கள் வசம். இரவு 10:55க்குதான் ஃப்ளோர் சாவி கையில் கொடுக்கப்படும்... உள்ளே செல்லும்போது, நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கும் பொருட்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. குண்டூசியானாலும் சரி, X-Ray Machine ஆனாலும் சரி, புத்தர் சிலையானாலும் சரி... அது எவ்விடத்திலிருக்கிறதோ அதை ஃபோட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காலை மீண்டும் ஃப்ளோரை ஒப்படைக்கும்பொழுது.. அந்தந்த பொருட்களை அதே இடத்தில் (ஃபோட்டோவை பார்த்து) அடுக்கி வைத்துவிட்டு.. சுத்தமாக அறையை காலி செய்து 7:55க்கு சாவியை திருப்பி கொடுத்துவிட வேண்டும். இதில் கொஞ்சம் பிசகினாலும், வாடகை கூட்டப்படும், பொருட்களின் சேதாரத்திற்கேற்ப ஃபைன் போடப்படும்.

FUMIKO MASE

இந்த விதிமுறைகள் எல்லாம் பயமுறுத்துவதற்காக அல்ல... வேலை சுத்தமாக இருக்க மட்டுமே.. எனவே இதை பின்பற்றுவதில் தவறொன்றுமில்லை.. காரணம், நாங்கள் சென்னையில் ஒரு பிரதான பகுதியில் இருக்கும் ஒரு ஸ்கூலை ஷூட்டிங்கிற்கு கேட்டபோது, சினிமாக்காரர்கள் எல்லாம் சாத்தான்கள்.. அவர்களுக்கு ஸ்கூல் கொடுக்கூடாது.. என்று கூறினார்கள். எங்களுக்கு அவமானமாகிவிட்டது.. ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்க, ஏற்கனவே அந்த ஸ்கூலை ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஷூட்டிங்கிற்கு கொடுக்கவும், அவர்கள் ஷூட்டிங் நடத்தியபோது, அவ்விடத்தை போதுமானளவிற்கு சேதாரம் விளைவித்து, அசுத்தம் செய்துவிட்டு போயிருப்பதே இவர்களின் சாத்தான் பயத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படது. எனவே, மேலே சொன்ன விதிமுறைகள் ஒருவகையில் நம்மை சாத்தானாக்காமல் காப்பாறும் வல்லமை படைத்தது...

Knock Knock - Its a wrong Door
நாங்கள் புக் செய்திருந்த ஃப்ளோர் அந்த பில்டிங்கின் கடைசி மாடிக்கு ஒரு அடுக்கு கீழே இருந்தது... எங்கள் கேமிராமேன் இரவு இடைவேளையில் சுமார் 2:30 மணிக்கு ப்ரேக் முடித்துவிட்டு ஷூட்டிங் ஃப்ளோர்தான் என்று தப்பாக நினைத்து ஏதோ ஒரு ஃப்ளோரை தட்ட.. அறைக்கதவை ஒரு சுமோ மனிதர் (ஜப்பானிய மல்யுத்த குண்டு வீரர்) திறந்திருக்கிறார்.


அவர் கண்களில் அப்படி ஒரு தூக்கம கலைந்த கோபம் கொப்பளித்திருக்கிறது. 'என்ன' என்று கேட்க.. சதீஷ் (கேமிராமேன்) பணிவாக ஷூட்டிங் என்று கூறியிருக்கிறார். அவர், 'ஸ்டுடியோ கீழே' என்று கோபமாக கைகாட்டிவிட்டு கதவை படார் என்று கோபத்துடன் சாத்திவிட்டு ஏதோ புலம்பியபடி போயிருக்கிறார்... ஒரு நிமிடம் அவர் தன்னை தொடைபிடித்து தூக்கி மல்யுத்த ஸ்டைலில் படிகளில் உருட்டிவிட்டுவிடுவாரோ என்று பயந்ததாக பிறகு சதீஷ் தெரிவித்தார்...

Image Courtesy : http://www.akiodesigns.com

(தொடரும்)


Signature

Friday, April 06, 2012

அம்புலி 50வது நாள் நன்றியுரை

பிறை நிலவாய் பேப்பரில் இருந்த கதையை
திரைவடிவில் கொண்டுவர
தந்தையாய் உதவிய தயாரிப்பாளரான...
திரு. கே.டி.வீ.ஆர். லோகநாதன் சாருக்கு நன்றி..!

ரேஷன் கார்டில் எங்கள் பெயரில்லையே தவிர
அவர் குடும்பத்தவர்கள் நேசம் பாராட்டிய விதத்தில்
நாங்களும் அவர் குடும்ப அங்கத்தினரானோம்
அவர்கள் அன்புக்கும் அதரவுக்கும் நன்றி..!

எண்ணத்திரையிலிருந்த அம்புலியை
வண்ணத்திரைக்கு வரைந்து கொடுத்த
தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி..!

இதயத்துடிப்பில் வடித்த கதையைப்படித்து
உணர்வுகளேற்றி உயிரைக்கொடுத்து
நடித்துக் காட்டிய நடிகர்களுக்கு நன்றி..!

இப்படத்தின் தனித்தன்மையை கண்டறிந்து
'குடும்பச்சித்திரம்' என்று சான்று வழங்கி
தணிக்கைக் குழுவிற்கு நன்றி..!

வித்தியாச விளம்பர உத்திகளை
பேப்பர், டிவி, ரேடியோ, மொபைல், இண்டர்நெட் என்று
உரிய இடங்களில் உரக்கச் சொல்லி
உச்சம் தொட வைத்த
ஊடக நண்பர்களுக்கு நன்றி..!

நிறைகுறைகளை பக்குவமாய் சொல்லி
இப்படத்தின் வெற்றியை கணித்து
ஆருடம் சொன்ன
விமர்சகர்களுக்கு நன்றி..!

வியாபாரச் சந்தையில்
வெற்றிவியூகமமைத்து
விஸ்வரூப வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்த
விநியோகஸ்தர்களுக்கு நன்றி

அம்புலியை
அனைவரிடமும் கொண்டு சேர்த்து
ஐம்பது நாளைத் தாண்டி அரங்கமளித்து உதவிவரும்
திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்றி...

திருட்டு விசிடிக்கு குட்பை சொல்லி
திரையரங்குகளில், 3D கண்ணாடியணிந்து
குடும்பத்தோடு கண்டுகளித்த
பார்வையாளர்களுக்கு நன்றி..!

தான் உழைத்த பணம் கொடுத்து
படம் பார்த்து... பிடித்துப் போனதும்...
'படம் சூப்பராயிருக்கு... போய் பாருங்க..' என்று
வாய்வழி விளம்பரம் செய்து
மெய்வருத்தக் கூலி தந்த
அந்த முகமறியா ரசிகனைப் போன்ற ஒவ்வொருவருக்கும்
அம்புலி திரைப்படக்குழுவினரின் மனமார்ந்த நன்றி..!

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு அன்புடன்
ஹரீஷ் நாராயண் & "அம்புலி 3D" திரைப்படக் குழுவினர்


Signature

Monday, March 19, 2012

"அம்புலி 3D" : விமர்சனக்கோவை


நண்பர்களுக்கு வணக்கம்,


அம்புலி வெளியாகி வெற்றிகரமாக இன்று 32வது நாள்... பரீட்சைக் காலத்திலும் அம்புலி நன்றாக போய்க்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் குழந்தைகள்... நண்பர்கள் பலரும் ஃபோன் செய்யும்போது அவரவர் வீட்டுக் குழந்தைகள் அம்புலியைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பதாய் தெரிவித்தார்கள்... உச்சக்கட்டமாய் பெரம்பூரைச் சேர்ந்த எனது தந்தையின் நண்பர் அமரவாணன் என்பவரின் குழந்தை தனது பெயரை 'ஆர்த்தி'யிலிருந்து 'அம்புலி' ஆர்த்தி என்று மாற்றிக் கொள்ள விரும்பி அடம்பிடிப்பதாய் புலம்பினார்... தாங்க்ஸ் அம்புலி ஆர்த்தி...!



படத்தை பார்த்த நண்பர்கள் பலரும் நிறைகளை நிறையவே சொல்லியும் குறைகளை கூடுமானவரை பக்குவமாயும் எடுத்துரைத்தனர்...



A, B, C என்று அனைத்துத் தரப்பிலும் படம் சென்றடைந்திருப்பதாக எங்கள் அலுவலக அக்கௌண்டன்ட் எடுத்துரைத்தார்... மகிழ்ச்சி..!



அம்புலி குறித்து வெளியான ஆஹா ஓஹோ என்ற விமர்சனங்களும்... அய்யய்யே..! சே..! த்தூ..! போன்ற விமர்சனங்களும் எல்லாம் வந்தாகிவிட்டது... இதுவரை நான் பதிவெழுதாததற்கு முக்கியக் காரணம்... படம் வருவதற்கு முன்பு அதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சுயவிளம்பரம் செய்யலாம். ஆனால் படம் வெளிவந்ததும் அந்தப்படத்தின் தரம்தான் விளம்பரம்... அது பார்வையாளர்களின் வழியே பரவும் வாய்வழி விளம்பரம்... அந்த வகையில் 'அம்புலி 3D' படத்திற்கு மிக நல்ல Mouth Publicity கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..!



எனது எழுத்துப்பயிற்சி பதிவுலகிலிருந்து தொடங்கியதால், பதிவுலகில் நம் படம் எப்படி பேசப்படுகிறது என்ற ஆவல் எனக்கு தனிப்பட்ட முறையில் படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே இருந்து வந்தது...



பதிவுலக நண்பர்கள் 'அம்புலி'யை விமர்சித்து எழுதிய பதிவுகளை முடிந்தவரை திரட்டியிருக்கிறேன்... இவை தவிர உங்களுக்கு தெரிந்து வேறு விமர்சனங்கள் இருந்தாலும் தெரிவியுங்கள்...



கேபிள் சங்கர் http://www.cablesankaronline.com/2012/02/3.html

ரிலீசுக்கு முன்பே படத்தைப் பார்க்க கேபிளாரைஅழைத்திருந்தேன்... அவரும் குடும்பத்துடன் வந்து சத்யம் ப்ரீமியரில் கலந்துக் கொண்டார்..! நன்றி ஜி..!



ரஹும் கஸாலி http://www.rahimgazzali.com/2012/02/ampuli-3d-review.html

அரசியல் பதிவுகளுக்கு மிகவும் பிரசித்தமான நண்பர் ரஹும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி பாராட்டினார்..! அவருடன் சேர்ந்து படம் பார்த்த மற்ற புதுக்கோட்டை நண்பர்களையும் டெலிஃபோனில் பேச வைத்தார்... அவருக்கும் இந்நேரத்தில் மிக்க நன்றி..!


குறும்புகள் ரகு http://www.kurumbugal.blogspot.in/2012/02/3d.html

என் நெருங்கிய நண்பர்... நான் BPOவில் பணிபுரியும்போது இவரும் என் சக ஊழியர். பணி இடைவேளைகளில் நானும் இவரும் நள்ளிரவு 1.30மணிக்கு எடுக்கும் ப்ரேக்கில் என் கதைகளை கேட்டுக் கொண்டே தூக்கம் தொலைப்பவர். கதையை கேட்டதோடல்லாமல், ஊகத்தோடு ஊக்கத்தொகையும், நட்புக்கரத்தோடு கரண்ஸியும் கொடுத்து என் முதல் குறும்படத்திற்கு தயாரிப்பாளராய் மாறியவர். இவருக்கு இந்த பதிவின் மூல(மு)ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் திரைப்படங்களுக்கு நண்பனாய் மட்டுமில்லாமல் நடுநிலை விமர்சனங்கனாய் எழுதுவது எனது எதிர்ப்பார்ப்புக்குறியது...


எழுத்தாளர் சுப்ரஜா http://www.nanumcinemavum.blogspot.in/

சமீபத்தில் அறிமுகமான இவர் மிக நல்ல நண்பர்... படத்தை பார்த்து பாராட்டியதோடு தன்னுடைய குருநாதர் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான ஸ்ரீதர் சார்) அவர்களின் படத்தோடு சில காட்சிகளை ஒப்பிட்டு கூரியதில் மெய் சிலிர்த்தது...! ரொம்ப நன்றி சார்..!



உண்மைத்தமிழன் http://truetamilans.blogspot.com/2012/02/3-d.html

பத்திரிகை நண்பர்களுக்கான பிரத்யேக காட்சியில்தான் இவரை சந்தித்தேன்... தானும் ஒரு பதிவர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்... இவரது வலைப்பூவின் பெயைரக் கேட்டதும்... 'நீங்கதானா அது..' என்று நான் காட்டிய ஆச்சர்யத்தை அவர் படத்தைப் பார்த்து என்னிடம் காட்டினார்... அப்போதே பாராட்டி... அன்றே பேட்டி பதிவு செய்து... உடனே தன்னுடைய சேனலில் (NDTV HINDU) அம்புலி குறித்த செய்திகள் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்...



'மெட்ராஸ்பவன்' சிவகுமார்

நான் முதல் வாரம் அம்புலி குழுவுடன் தியேட்டர் ரவுண்ட்ஸ் போகும்வழியில் ஒரு ஃபோன் வந்தது... 'தன்னை சிவகுமார் என்று அறிமுகம் செய்துக் கொண்ட ஒரு பதிவர்... இதற்கு முன் தனக்கு த்ரில்லர் வகையில் தமிழில் பிடித்த படம் 'அதே கண்கள்'தான் எனவும், அதன் பிறகு 'அம்புலி'தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறி மனம் நெகிழ வைத்தார்...' அவர் எழுதிய அம்புலி விமர்சனம் இதோ... http://www.madrasbhavan.com/2012/02/3d.html



கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் சில பதிவர்களுக்கு நான் Passive Reader... நான் விரும்பி படித்த பதிவர்களும் சில புதியவர்களும் (எனக்கு) அம்புலி படத்துக்களித்த விமர்சனம் இதோ...


சி.பி. செந்தில்குமார் http://www.adrasaka.com/2012/02/3_19.html

'யாவரும் நலம்' வெங்கட் http://www.yaavarumnalam.com/2012/02/3d.html

'லக்கிலுக்' யுவகிருஷ்ணா http://www.luckylookonline.com/2012/02/blog-post_21.html

'பிலாஸஃபி' பிரபாகரன் http://www.philosophyprabhakaran.com/2012/02/3d.html

'வாங்க ப்ளாகலாம்' அனந்து http://pesalamblogalam.blogspot.in/2012/02/blog-post_19.html

'தகவல் களஞ்சியம்' கார்த்திக் http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/03/3.html

'வீடுதிரும்பல்' மோகன் குமார் http://veeduthirumbal.blogspot.in/2012/03/79.html



நண்பர் ரஹும் அம்புலி பற்றிய விமர்சனத்தை மற்றும் போட்டதோடல்லாமல் இமெயில் மூலமாய் சில கேள்விகளையனுப்பி அதற்கான விடைகளை தொகுத்து எனது பேட்டியையும் வெளியிட்டார்...

பேட்டி இதோ... http://www.rahimgazzali.com/2012/02/interview-with-ampuli-director-hareesh.html



இவையெல்லாவற்றையும் தாண்டி வழக்கமாக ஒரு படத்தின் தரத்தை மதிப்பிடக்கூடிய சினிமா சம்மந்தப்பட்ட இணையதளங்களில் வெளியான அம்புலியின் சில முக்கிய விமர்சனங்கள் இதோ..!



Behindwoods

"Ambuli is definitely a pioneer in Tamil Cinema. It has the grip of a thriller and the charm of a grandmother’s tale or folklore..."



Indiaglitz

"Call it a visual treat and a unique experience for the audience. One gets the feeling that the entire story unfolds almost in front of him /her! To Tamil audience for whom 3D films would mean those from Hollywood, here comes 'Ambuli'..."



Galatta

"Director duo Hari Shankar and Hareesh Narayan, who amazed us with their technical brilliance in Orr Iravu, is once again back with yet another supernatural thriller titled Ambuli. This is in fact a good 3D watch for Kollywood fans..!"



தினத்தந்தி

"3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மிரட்டலான படம் அம்புலி..."



குங்குமம்

"ரசிகர்களின் எந்த கணிப்பையும் தாண்டிவிடும் கதைப் பின்னல் இயக்குநர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள்..."



விகடன்

40/100... கதை நடக்கும் காலம், இரவு நேர 3டி எஃபெக்ட், திகிலூட்டும் பின்னனி இசை ஆகியவை அம்புலியை ரசிக்க வைக்கிறது...



அம்புலி பற்றி மேலும் தகவல்களுக்கு...

http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.youtube.com/ambuli3d



அங்கிங்கென்று எங்கும் அம்புலி அலை சுனாமியளவுக்கு இல்லையென்றாலும் சுமாரான அளவில் நல்லமுறையில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்ற திருப்தி...



இனி பதிவுகள் எழுத தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் நான்...



அன்புடன்

ஹரீஷ் நாராயண்


Signature

Wednesday, February 08, 2012

ஸ்டார்ஸ் ஆஃப் அம்புலி 3D


வணக்கம் நண்பர்களே...

'அம்புலி 3D' திரைப்படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களை பற்றிய பாத்திரப்படைப்பு விவரங்களை அளிக்கும் 'ஸ்டார்ஸ் ஆஃப் அம்புலி' என்ற மைக்ரோ விளம்பர வீடியோக்களை இன்றுமுதல் வெளியிட்டிருக்கிறோம். அந்த வரிசையில் முதல் வீடியோவில் படத்தின் கதைநாயகனான வேந்தன் பற்றிய காணொளி இதோ...



தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய மைக்ரோ வீடியோக்கள் விரைவில் வெளிவரும்... பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Monday, January 02, 2012

அம்புலி 3D : புத்தாண்டு மேஜிக் போஸ்டர்

வணக்கம்,

கடினங்களை கடந்த வருடமே கடந்துவிட்டதால்...
இனி வரும் இந்த புதிய வருடம்...
இனிமைகளை வாரி இரைத்திட...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

எனது பள்ளிக்காலத்தில் ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்த கிறித்துவ மத நண்பர்கள், கையில் ஒரு துண்டுபிரச்சார சீட்டை கொடுத்தார்கள்... அதில் கருப்பு வெள்ளையின் கலவையில் ஒரு டிசைன் இருந்தது... அதை 30 விநாடிகள் உற்றுப்பார்த்துவிட்டு வானத்தை பார்க்கும்படி போட்டிருந்தது... அப்படி செய்ததும் துண்டு சீட்டில் நாம் பார்த்த அந்த டிசைன் வானத்தில் இயேசு கிறித்துவாய் தெரியும்... இதைப்பார்த்தும் நானும் எனது நண்பர்களும் மலைத்துப் போனோம்...

அடடே..! வானத்தில் இயேசு தெரிகிறார் என்று கொண்டாட ஆரம்பித்தோம். அன்று அந்த துண்டுச்சீட்டுக்கு அப்படி ஒரு டிமாண்ட் இருந்தது... அனைவரும் வீட்டிற்கு கொண்டு போய் பெற்றோர்களிடமும் அதைக் காட்டி அவர்களையும் ஆச்சர்யப்படுத்தினோம்... சுமார் ஒரு வாரத்திற்கு பள்ளியில் இதே பேச்சாய் இருந்தது...


இதுதான் அந்த டிசைன்...

இன்று அப்படிப்பட்ட இல்யூஷன் வகை டிசைன்களை இண்டர்நெட்டிலும் நிறைய  காணக்கிடைக்கிறது... ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், பின் லேடன், ஒபாமா... இப்படி பல பிரபலங்களின் முகங்களை இந்த வகை இல்யூஷன் டிஸைன்களில் நீங்களும் ஃபேஸ்புக்கில் கண்டிருக்கலாம்...

அந்த வகையில், அம்புலி படத்திற்கு ஒரு டிசைன் செய்ய எண்ணி செயல்படுத்தியிருக்கிறோம்... நேற்றைய புத்தாண்டு சிறப்பு டிசைனாக தமிழ் நாளிதழ்களில் வெளியான டிசைன் இதோ உங்கள் பார்வைக்கு...

தமிழ் நாளிதழ்களில் அம்புலி புத்தாண்டு சிறப்பு டிசைன்

டிசைனைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, December 25, 2011

'அம்புலி 3D' : முதல் ட்ரெய்லர்

வணக்கம் நண்பர்களே,
அம்புலி படத்தின் டீசர் ட்ரெய்லரை இப்பதிவுடன் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்...

AMBULI FIRST TEASER

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, November 05, 2011

"அம்புலி 3D" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 2

புகைப்படம் #008
எடுத்த நாள் : February 12, 2011
இந்த புகைப்படம் KTVR கல்லூரியில் நள்ளிரவு படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது... ரேடியோவில் கேட்கும் எம்.ஜி.ஆர். பாடலை ('ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன்...') நாயகன் அஜய் கேட்டு நடனமாடுவது போன்ற காட்சியமைப்பு...  உற்சாகமான பாடலென்பதால் அனைவரும் தூக்கத்தையும் களைப்பையும் மறந்து செயலாற்ற அப்பாடல் உதவியாக இருந்தது...
------------------------------


புகைப்படம் #009
எடுத்த நாள் : March 09, 2011
நாயகன் அஜய் சைக்கிளில் 3D ரிக் சங்கதிகளை மாட்டிக்கொண்டு வண்டி ஓட்ட ஆயத்தமானபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...
------------------------------


புகைப்படம் #010
எடுத்த நாள் : April 14,, 2011
'குட்டுப்பட்டாலும் மோதிர கையால் குட்டுப்பட வேண்டும்' என்று சொல்வார்கள்... இந்த காட்சியில் நாயகன் ஸ்ரீஜித். நடிகர் திரு.தம்பி ராமையா அவர்களிடம் அறை வாங்குவது பல ரீடேக் எடுக்கபட்டபோது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு...
------------------------------

புகைப்படம் #011

 எடுத்த நாள் : March 04, 2011
நடிகை உமா ரியாஸ் மேடம் , 40 அடி க்ரேனில் மேலே ஏற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை கேமிராமேனிடம் தெரிவிக்க... படப்பிடிப்பின் ஓய்வுநேரத்தில் நிறைவேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 ------------------------------

 புகைப்படம் #012
எடுத்த நாள் : February 16, 2011
நடிகை கலைராணி மேடம், இரகசியங்களை காலம்காலமாக சுமக்கும் ஒரு சீமாட்டி என்ற மூதாட்டியின் கதாபாத்திரத்தில் நடித்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்... க்ளாப் அடிப்பவர் உதவி இயக்குநர் உசேன்... பின்னால் கருப்பு சட்டையில் நடிகர் ஜெகன்... மற்றும் ஸ்ரீஜித் அஜய் (மறைவாய்)
 ------------------------------

புகைப்படம் #013 
எடுத்த நாள் : March 17, 2011
கலை இயக்குநர் ரெமியன் அவர்கள், ஒரு ஊதுபத்தி தொழிற்சாலை செட் போட்டு முடித்த சந்தோஷத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு... அருகில் தொப்பி போட்டு நடப்பவர் துணை கலை இயக்குநர் அஷோக் அவர்கள்.... 
 ------------------------------


புகைப்படம் #014

எடுத்த நாள் : February 02, 2011
கலை இயக்குநரின் மற்றுமொரு கலைவெளிப்பாடாய் இந்த மரவீடு செட்... இத்தனை பேரின் பாரத்தை தாங்கியபடி சற்றே உயரத்தில் கட்டப்பட்ட செட்... நானும் (ஹரீஷ் நாராயண்) நண்பர் ஹரியும் மாணிட்டரை பார்த்தபடியிருக்க, பின்னனியில் படக்குழுவினர் அடுத்த காட்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...

(தொடரும்)


Signature

Monday, October 17, 2011

"அம்புலி 3D" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 1

அம்புலி 3D திரைப்படத்தளத்தில் எடுத்த சில புகைபடங்களை, அவற்றை எடுக்கும்போது நடந்த சுவாரஸ்ய தகவல்களை எழுதி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..!

புகைப்படம் #001

எடுத்த நாள் : February 08, 2011

ஒரு பாடல் காட்சியின்  படப்பிடிப்பில் இடைவேளையின்போது எடுத்த புகைப்படம்... நடனக்கலைஞர் சந்தியா அபிநயம் பிடிக்கும் முறையை நடிகை சனம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்...
------------------------------------------------------------------------


 புகைப்படம் #002
 எடுத்த நாள் : February 11, 2011

(இடம்) : துணை இயக்குநர் தினேஷா நடித்துக்காட்டுகிறார்

(வலம்) : நடிகை உமா ரியாஸ் அவர்கள்... குழந்தை நட்சத்திரம் ஃபாஸில்-உடன் சேர்ந்து நடிக்கும்போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------

புகைப்படம் #003
 எடுத்த நாள் : February 10, 2011


ஒளிப்பதிவாளர் சதீஷ். ஜி சுமார் 100 அடி  உயரத்திலிருந்து ஒரு அபாயகரமான காட்சி ஒன்றை படம்பிடிக்கும்போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------


புகைப்படம் #004
 எடுத்த நாள் : February 11, 2011


இடைவேளையில்... உதவி இயக்குநர்கள் குழு ஒன்றுகூடி எடுத்துக்கொண்ட புகைப்படம்...

பின்னனி குரல் : 'ஷாட் ரெடி... அஸிஸ்டெண்ட்ஸ்லாம் எங்கப்பா போய் தொலஞ்சீங்க...? ஒருத்தரையும் காணோம்...!'
------------------------------------------------------------------------


புகைப்படம் #005
 எடுத்த நாள் : April 15, 2011


'ராக் & ரோல்' பாடல் படப்பிடிப்பின்போது டான்ஸ் மாஸ்டர் தினாவும் அவரது உதவியாளர்களும் நடிகர்களுக்கு நடனப்பயிற்சியளித்த போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------


புகைப்படம் #006
எடுத்த நாள் : February 11, 2011 


(இடது) படத்தின் 2 இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷங்கர், நடிகர் அஜய்-க்கு சைக்கிளை ஃப்ரேமில் எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்று தடம் குறித்து காட்டியபோது எடுத்தது...

(வலது) பயிற்சிக்கு பிறகு நடிகர் அஜய், ஸ்ரீஜித்துடன் சைக்கிளில் தடம் மாறி சுவற்றில் முட்டிக்கொண்டபோது எடுத்த புகைப்படம்...
------------------------------------------------------------------------


புகைப்படம் #007
எடுத்த நாள் : April 25, 2011


இந்த காட்சி பாடலுக்கு இடையில் வரும் ஒரு இன்ஸர்ட்... காட்சிப்படி நடிகர் தம்பி ராமையா அவர்களுக்கு மாணவர்கள் தயிர் சாதம் ஊட்டிவிடுவது போல் எடுக்கவேண்டியது... சில எக்ஸ்ட்ரா டேக் வாங்கியபின் காட்சிமுடிந்து  டின்னர் ப்ரேக் விடப்பட்டது.. 'தம்பியண்ணன்' (இப்படி நான் அவரை அழைப்பது வழக்கம்) அவர்களை சாப்பிட அழைத்தபோது 'அடப்போ தம்பி... அதான் பசங்க எல்லாம் போதுமானளவுக்கு ஊட்டிவிட்டுட்டாங்களே... எனக்கு டின்னரே வேண்டாம்...' என்று கூறிவிட்டார்...


மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, August 21, 2011

அம்புலி 3D பாடல்கள்...




அம்புலி 3D திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது. என்னுடன் படித்த பள்ளி நண்பர்களும், கல்லூரி நண்பர்களும், உடன் வேலைசெய்த நண்பர்களும் வந்திருந்தனர். வலையுலக நண்பர்களில் 'கேபிள் சங்கர்' சில பதிவர்களுடன் வந்திருப்பதாக தெரிவித்தார். வந்திருந்து வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி..!


விழா நடந்தேறிய விதத்தையும் புகைப்படத்தையும் பிறகு பதிகிறேன்..! முதலில் செவிக்கு உணவு...

அம்புலி திரையிசை பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.


01. HAPPY FAREWELL DAY
பாடகர்கள் : பென்னி தயாள், பாப் ஷாலினி, S ரஷ்மிதா, ப்ரியங்கா
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : மெர்வின் சாலமன்



அம்புலி படத்தின் 4 இசையமைப்பாளர்களில் இந்த பாடலுக்கு இசையமைத்த மெர்வின் சாலமன் எங்கள் குழுவுக்கு புதியவர், நால்வரில் இளையவர்.  'பொறியல்' என்ற RockBand நடத்தி வரும் இளைஞர்.கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மெர்வினை ஒரு RockBand நிகழ்ச்சியில் சந்தித்து தேர்வு செய்தோம்.இந்த பாடலை அவர் கம்போஸ் செய்யும்போது, கல்லூரியில் அவருக்கு இறுதியாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. பாவம்... புத்தகத்தையும், கீ-போர்டையும் ஒன்றாக வாசிக்க வேண்டிய கட்டாயம்... ஆனால் பாடப்பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டார், பாடல் பரீட்சையில் வெற்றி பெற்றிருக்கிறாரா என்று நீங்கள் கேட்டுப் பார்த்து சொல்லுங்கள்...

---------------------------------------------------------

02. நெஞ்சுக்குள்ள யாரு....
பாடகர்கள் : கார்த்திக், சின்மயி
பாடல் : கவிஞர் தாமரை
இசை : சாம் C.S.



இந்த பாடலின் இசையமைப்பாளர் சாம் C.S. எங்கள் நீண்ட நாளைய நண்பர், கலையம்சத்தில் பன்முகம் கொண்டவர். எனக்கு முதலில் பாடலாசிரியரென அறிமுகமானாலும் அவர் இசையில் வல்லவர் என்பது அவர் இசையமைத்த "14 For Teen" என்ற ஆல்பம் மூலமாக உணர்ந்தேன். மெலோடி பாடல்கள் இவரது ஸ்பெஷாலிட்டி. அம்புலியில் இனிமையான ஒரு செமி ஃபேன்டஸி மெலோடியை அவரிடம் கேட்டபோது அவர் இசைத்து கொடுத்த பாடல்தான் இந்த 'நெஞ்சுக்குள்ள யாரு...'

---------------------------------------------------------


03. மழைக்காடே... மணல்மேடே....
பாடகர்கள் : மதுபாலகிருஷ்ணன்
பாடல் : நெல்லை ஜெயந்தா
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்




இந்த பாடலுக்கு இசை வெங்கட் பிரபு ஷங்கர் (நண்பர் ஹரியின் தம்பி)... இவர் இளையராஜா சாரின் தீவிர ரசிகர். அம்புலி படத்தின் பின்னனி இசையில் ஒரிஜினல் ஸ்கோர் இவர்தான். எனவே, கதையினூடே வரும் ஒரு சந்தர்ப்பத்தில் கிராமத்து மக்களின் ஒட்டுமொத்த வலியை பிரதிபலிக்கும் பாடலான இந்த 'மழைக்காடே மணல்மேடே' பாடலை இவரே இசையமைத்து பாடல் வடிவம் கொடுத்தார்... கேட்டுப்பாருங்கள்.. எப்படியாவது இவரது பாடலை இளையராஜா சாரிடம் போட்டு காட்டி கருத்து கேட்க வேண்டும் என்பது எங்கள் குழுவினரின் உள்ளாசை... அவரிடம் கேட்கும்போது கேட்டுக் கொள்ளலாம். இப்போது நீங்கள் கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள்


---------------------------------------------------------


04. சந்திரன சூரியன....
பாடகர்கள் : விஜய்பிரகாஷ்
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : சதீஷ்




சதீஷ்... இவரை சில வருடங்களுக்கு முன்பு சந்திக்கும்போது 'ஐயப்பன் பக்தி பாடல்களை வெளியிட முயன்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த ட்யூன்கள் மிக அருமையாக இருந்து. எனது முதல் குறும்படமான 'இராமன் எஃபெக்ட்'-ற்கு இவர்தான் சிறப்பாக இசையமைத்து கொடுத்தார். அதன்பிறகு 'ஓர் இரவு', இப்போது 'அம்புலி'யில் முக்கியமான ஒரு கூட்டுப்பிரார்த்தனை பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். எந்த ஒரு கடவுளையும் குறிப்பாக சொல்லாமல் பொதுவாக ஆதிசக்தியை வணங்குவது போன்ற ஒரு பாடல் இது. இந்த பாடல் படப்பிடிப்பின் போதுதான் கிலியான சில அனுபவங்கள் ஏற்ப்பட்டது என்று எனது படப்பிடிப்பு அனபவத்தில் எழுதியிருக்கிறேன்.




---------------------------------------------------------


05. Rock'N Roll
பாடகர்கள் : ரஞ்சித், பாப் ஷாலினி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : சாம் C.S.




70-களில் ஈஸ்ட்மென் கலரில் பார்க்கும் சில பாடலை போன்ற ஜாலியான பாடலிது. கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் மிகவும் ரசித்தபடி எழுதி கொடுத்தார். இசையமைப்பாளர் சாம், இந்த பாடலில் 70களில் ஸ்டைலில் விசில், பியானோ, ட்ரம்ஸ் என்று உபயோகித்து வாசித்து கொடுத்தார். குறிப்பாக பாடலுக்கு நடுவில் வரும் ஒரு பியானோ ரன்னிங்-ஐ பலமுறை ப்ராக்டீஸ் செய்து, ஒரு நள்ளிரவில் வாசித்து காட்டினார். அதை அவர் வாசிப்பதை பார்த்தாலே டான்ஸ் ஆடுவது போலிருக்கும்... எனவே, இது நிச்சயமாக கேட்பவர்களை ஆடத்தூண்டும் என்ற நம்பிக்கையில்.... இதோ...





---------------------------------------------------------


06. ஆத்தா நீ பெத்தாயே....
பாடகர்கள் : தஞ்சை செல்வி
பாடல் : நெல்லை ஜெயந்தா
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்




தூங்க வைப்பதற்கு பாடப்படும் தாலாட்டு பாடலை சற்றே மாற்றி 'தூக்கம் தொலைத்து மிரட்சியில் படுத்திருக்கும்' ஒரு கிராமத்து மக்களுக்காக, ஒரு வயதான மூதாட்டி பாடுவதை போன்ற பாடல் இது. இதை 'பாட்டியின் புலம்பல்' என்றும் கூறலாம். இப்பாடலுக்கு இசை K. வெங்கட் பிரபு ஷங்கர், இந்த பாடலுக்காக இவர் ஏற்கனவே 2 ட்யூன்களை இசைத்து வைத்திருந்தார். ஆனால், அவை போதாமல் இன்னும் தேவை தேவை என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கவே, ஒரு நாள் (சற்றே) கோபமாக, இரவு வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்குள் இந்த பாடலுக்கான ட்யூனையும் முடித்து, அதற்குமேல் சிறப்பு சப்தங்களை சேர்த்து அலங்கரித்து காட்டினார். அது மிகவும் திருப்திகரமாக அமைந்தது. பாடலை 'ஈசன்' புகழ் 'தஞ்சை செல்வி' அவர்கள் உணர்ந்து பாடிக் கொடுத்தார். பாடலுக்கேற்ற முகபாவங்களுடன் மிகவும் சிறப்பாக கலைராணி மேடம் நடித்து கொடுத்தார்.


---------------------------------------------------------


07. Theme of AMBULI
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்



படம் வெளியாவதற்கு முன் ஒரு படத்தின் கதையை பொதுவாக வெளியில் சொல்லமாட்டார்கள். ஆனால், இசையமைப்பாளர் பிரபு தைரியமாக இந்த அம்புலியின் கதையை இசைவடிவில் தீம் மியூஸிக்காக சொல்லியிருக்கிறார். நல்லவேளை வார்த்தையாக விளங்கி கொள்ள முடியாது என்றாலும் இசை மொழியில் சொல்லப்பட்டதால் உணர்வாய் உணர்ந்து கொள்ளுங்கள்...


---------------------------------------------------------


08. 3D ERA
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ப்ளாஸி
பாடல் : ப்ளாஸி & அம்புலி டீம்
இசை : சதீஷ்



அம்புலி, தமிழ் சினிமாவில் முதல் முழுநீள 3D டிஜிட்டல் திரைப்படம் என்பதை பிரகடனப்படுத்தும் வகையில் அமைந்த கொண்டாட்டமான இந்த பாடல் கடைசி நிமிடத்தில் முடிவாகி ஆடியோ வரிசையில் சேர்க்கப்பட்டது. ஆனால், பாடலில் அந்த கடைசி நேர அவசரம் தெரியாதபடி மேன்மை தீட்டியவர் இசையமைப்பாளர் சதீஷ். இந்த பாடலை எங்களால் மறக்கவே முடியாது. காரணம், ஒரு நாள் டின்னர் முடித்துவிட்டு இரவு வேளையில் அலுவலகத்தில் அம்புலி குழுவினர்கள் அனைவரும் கும்பலாக அமர்ந்து இந்த பாடலுக்கான தமிழ் வரிகளை கூவி கூவி பாடிப்பார்த்து எழுதினோம் (பாவம் அபார்ட்மெண்ட்-ல் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்). 'நன்றாக வந்துள்ளதோ..?' என்ற சின்ன நம்பிக்கை பிறந்ததுமே சேவல் கூவியது. பேனா மூடி மூடப்பட்டது. 'நரேஷ் ஐயர்' குரலில் குதூகலம் கொஞ்ச,. ஆங்கில வரிகளை 'ப்ளாஸி' எழுதியும் பாடியும் பாடலை பிரமாதப்படுத்திவிட்டார்கள்.


---------------------------------------------------------

எட்டு பாடல்களும் கேட்டுவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பாடலை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!


அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Songs Courtesy : www.raaga.com
Source : http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003125


Signature

Friday, August 19, 2011

இன்று "அம்புலி 3D" இசை வெளியீடு LIVE ON WEB...







நண்பர்களுக்கு வணக்கம்,


போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து பதிவு எழுத முடியவில்லை..! இன்று 'அம்புலி 3D' இசை வெளியீடு... சென்னை காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது...


நேரில் கலந்து கொள்ள முடியாத வெளிநாட்டு நண்பர்களும் மற்றும் உள்நாட்டு நண்பர்களும் இசை வெளியீட்டு விழாவை கண்டு களிப்பதற்காக இணையதளத்தில் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கண்டிப்பாக பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.


AMBUILI 3D LIVE AUDIO LAUNCH LINKS


WWW.AMBULI3D.COM
WWW.FACEBOOK.COM/AMBULI3D
WWW.CHENNAIONLINE.COM


அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, July 23, 2011

நடிகர் ஆர்யா அம்புலி 3D வெப்ஸைட் துவக்கி வைத்தார்..!


PLEASE VISIT WWW.AMBULI3D.COM FOR "AMBULI 3D"s OFFICIAL WEBSITE

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடிகர் ஆர்யா அவர்கள் "அம்புலி 3D" திரைப்படத்தின் இணையதளத்தை துவக்கி வைத்தார். இணையதளத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு கருத்து தெரிவித்தார்.

நெற்றியில் ஒரு சின்ன வெட்டுக்காயம் என்றாலும், பார்க்க அழகான ஹாரிபாட்டர் போலவே தெரிந்தார்.

படத்தின் சில காட்சிகளையும், ட்ரெய்லரையும் பார்த்துவிட்டு "நல்ல முயற்சி நன்றாக உள்ளது" என்று பாராட்டினார்.

அவர் அம்புலி திரைத்தளத்தை துவக்கி வைத்த காணொளி இதோ...









இணையதளத்தை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண் (DREAMER)


Signature

Tuesday, July 19, 2011

'அம்புலி 3D' படக்குழுவினர்களுக்காக 'ஓர் இரவு' சிறப்புக் காட்சி

எங்கள் குழுவின் முதல் படமான 'ஓர் இரவு' திரைப்படத்தை 'அம்புலி 3D' டீம் பார்ப்பதற்காக பிரத்யேக காட்சி ஒன்றை சென்ற வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு, தேவி ஸ்ரீ தேவி ப்ரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தோம்.



↑ 'ஓர் இரவு' இயக்குனர்கள்
ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்


'அம்புலி 3D' குழுவினரில் சுமார் 60% ஆட்கள் வந்திருந்து சிறப்பித்தனர். மீதமிருந்த நண்பர்கள் தத்தம் பணியில் வெளியூர்களில் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.

படத்தை பார்த்து பாராட்டியதோடு பலரும் 'ஏன் இந்த படத்துக்கு நீங்கள் சரியாக பப்ளிசிட்டி செய்யவில்லை..! ஏன் A சென்டர் தியேட்டர்களில் திரையிடவில்லை' என்று ஏகத்துக்கும் திட்டி தீர்த்தனர். கண்டிப்பாக 'ஓர் இரவு' படத்தை ரீ-ரிலீஸ் செய்யும்படி அறிவுறுத்தி சென்றனர்.




↑  டான்ஸ் மாஸ்டர் தினா அவர்களுடன்


↑  ஸ்டண்ட் மாஸ்டர் T.ரமேஷ் அவர்களுடன்


↑  திரு. டேனியல் ப்ரொடக்ஷன் மேனேஜர் சக்தி அவர்களுடன்


↑  அண்ணன் தேனி முருகன் & ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் சந்தனபாண்டியன் அவர்களுடன்


↑  கோகுல் மற்றும் நண்பர்கள்


↑  உமா ரியாஸ்



↑  மேக்கப் சசி (நடுவில் இருப்பவர்) அவர்களுடன்



↑  காஸ்ட்யூமர் பாபு (குழந்தையுடன்)


↑  லைட் டிபார்ட்மெண்ட் ஷக்தி (ப்ரௌன் ஷர்ட்)


குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட IOB-ல் பணிபுரியும் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள், படத்தை பார்த்த அடுத்த நாள் எனக்கும் ஹரிக்கும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு நீண்ட நேரம் பேசி பாராட்டி கொண்டிருந்தார். படத்தை பார்த்து பயந்த அவரது இன்ஜினியரிங் படிக்கும் மகன், இரவு 1.30 மணியளவில் கதவு தட்டி அப்பா அம்மாவுக்கு நடுவில் படுத்து கொண்டதாக கூறினார். இப்படம் சரியான ஆடியன்சுக்கு போய் சேர்ந்திருந்தால் இது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும், எப்படியாவது ரீரிலீசுக்கு முயலுங்கள் என்று வற்புறுத்தினார். 70களில் அன்னக்கிளி படத்தை முதலில் ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிறகு அந்த படத்தையும் இசையையும் கொண்டாடியதை உதாரணம் கூறினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாங்களும் அந்த எண்ணத்தில் (ரீ-ரிலீஸ்) இருப்பதால்தான் இப்படம் குறித்த எந்த உரிமையையும் இன்னும் எவ்விடத்திலும் வியாபாரப்படுத்தாமல் வைத்திருக்கிறோம்.

↑  IOB ஸ்டாஃப் நண்பர்கள்


↑ மற்றும் நண்பர்களின் குடும்ப நபர்கள்


இந்த பிரத்யேக காட்சி, 'அம்புலி 3D'படப்பிடிப்பில் உடன் பணியாற்றிய அத்தனை நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் ஒரு get togetherஆக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி..!


Signature

Thursday, July 14, 2011

First News about "AMBULI 3D" on Net..!

INDIAGLITZ : 'Ambuli 3D' - With a difference

For all those of you who sulk at this, the makers of 'Ambuli 3D' vouch that you will be awed and proud of this 3D film that's take you onto a rural journey into Indian villages, in 3D!

Sounds interesting right?

'Ambuli 3D' is the brainchild of the makers who had come out with 'Orr Eravuu' last year, the latter was a horror thriller with a scientific approach to supernatural beings. The film also won the 'Best Independent Film' at the Chennai International Film Festival.

'Ambuli 3D' is inspired from a folklore tale which is being told in various parts of village in south India. The film is canned in various parts of villages in Tamil Nadu.

The USP of the film is that it is shot using a state of the art 'Panasonic 3D camera' claim the makers. Normally, a 3D film is shot with two cameras fit in a single huge rig  and have lot of constrain in using the rig because of its huge, heavy and consumes a lot of time for setting it up.

With this, constrains have been overcome. It�s digital, compact and has two lenses fixed in a single body which acts like a human eye (just like the camera used in Avatar) which gives a brilliant 3D effect and setting the convergence is also made simple. At the same time while shooting itself you will be able to see the output live in 3D.

This feature film that is coming up in 3D will see a website launch on July 15.



Signature

Monday, July 11, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 8

மூணாறில் "அம்புலி 3D"


யாரோ சென்ற வருடம் (2010) எனது பிறந்தநாளுக்கு வாழ்த்தும்போது, 'அடுத்த பிறந்த நாளுக்கு நீ நல்ல உயரமான இடத்தில் இருக்க வேண்டும்' என்று வாழ்த்தியிருப்பார்கள் போல... அதனாலோ என்னவோ, இந்த முறை எனது பிறந்த நாள் 6600 அடி உயர மலைப்பிரதேசமான 'மூணாறில்' கொண்டாடப்பட்டது. அதுவும், எனது "அம்புலி 3D" படப்பிடிப்பு குழுவினருடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய அனுபவம் என்றென்றும் மறக்கமுடியாது. என்ன ஒரே வித்தியாசம் 'ஹேப்பி பர்த்டே டு யூ' பாடலுக்கு பதிலாக, நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த டூயட் பாடல்தான் பின்னனியில் ஒலித்து கொண்டிருந்தது.



↑ தயாரிப்பு நிர்வாகி திரு. சக்திவேல் கத்தியை கொடுக்க...


↑  ஹரியுடன்...

↑  கேமிராமேன் சதீஷூடன்...

↑  டான்ஸ் மாஸ்டர் தினாவுடன்...


கேக் வெட்டும்போது முகத்தில் கரி பூசுவது போல் கேக்-ஐ பூசும் பழக்கத்தை யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை... கேக் வெட்டி, கொண்டாடி முடித்து பார்க்கும்போது, எல்லோர் முகத்திலும் ஹுரோயின் முகத்தில் போடும் மேக்கப்-ஐ காட்டிலும் அதிகமான க்ரீம் பூசப்பட்டிருந்தது.


சாமிக்கு வெண்ணை சாற்றியது போல் தெரிபவர்
துணை இயக்குனர் தினேஷா


வெட்கத்துடன் கேக்-ஐ பெற்று கொள்பவர் சாம் (இசையமைப்பாளர்)


கேக்கினால் நலுங்கு வைத்து கொள்பவர்
துணை இயக்குனர்


அன்புத்தொல்லையால் அவதிப்படுபவர்
உதவி இயக்குனர் தளபதி (பெயரே தளபதிதான்)


லைட்மேன் சீஃப் மோகன் அவர்களுடன்...


கொண்டாட்டத்திற்கு பிறகு
எங்கள் திறந்தவெளி டெம்பரவரி ரெஸ்டாரண்ட்-ல்

மூணாறு... கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் கடவுளுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் பூலோக சுவர்க்கம். மலைப்பாதையில் பயணம் செய்யும் போது 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்...' பாடல் ஞாபகம் வரும், சில சிகரங்களைப் பார்க்கும்போது இயற்கையை பற்றி க(வி)தை எழுத தோணும். இங்கு வாழும் மலைவாழ் மக்களை பார்க்கும்போது 'கொடுத்து வைத்தவர்கள் ' என்று போற்ற தோன்றும். 'வருடத்தில் ஒரு மாதமாவது வந்து தங்கிவிட்டு போக வேண்டும்' என்று உறுதிமொழி எடுக்க தோன்றும். கடமைக்கென்றில்லாமல், கண்ட நேரத்தில் பெய்யும் மழையின் சாரல்கள் நம்மை அடிக்கடி மயிர்கூச்செரிய செய்யும்.

"அம்புலி 3D"-ன் நான்கு இசையமைப்பாளர்களில் ஒருவரான 'சாம்' அவர்களின் பிறந்த  ஊர் மூணாறுதான் என்பதால், அவர்மூலமாக நல்ல லொகேஷன்களை கேட்டு தெரிந்து கொண்டோம். 'மைனா' புகழ் திரு. மூணாறு சுப்பிரமணி அவர்கள்தான் லொகேஷன் மேனேஜர்... அவரிடம் இடங்களை கூறி லொகேஷன்களை தேடிப்பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை...

மூணாறில் இன்னொரு விஷயம் மிகவும் பிரசித்தம். அது இங்கிருக்கும் 'அட்டை பூச்சிகள்'... காட்டுமிருகங்களான புலி, சிங்கம்,கரடி போன்றவைகள் நம்மை மிரட்டாத அளவுக்கு ஒரு மிரட்டலை இங்கிருக்கும் அட்டை பூச்சிகள் நமக்கு கொடுக்கின்றன. எங்கள் படப்பிடிப்பு குழுவில் இருந்த அத்தனை பேரும், புல்தரையில் பணிபுரியும்போது, பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பெருமை இந்த அட்டைபூச்சிகளையே சாரும். (ஒரு சின்ன சீக்ரெட் : மேலிருக்கும் பர்த்டே ஃபோட்டோவில் நன்றாக உற்று பாருங்கள்.., அனைவரும் பேண்ட்-ஐ முட்டிவரை தூக்கிவிட்டிருப்பதை காணலாம்... எல்லாம் அட்டை பயம்தான்.)

அன்று மூணாறு ஷெட்யூலில் கடைசி நாள்... ஒரு கோல்ஃப் கிரவுண்டில் டூயட் பாடல் எடுத்துக் கொண்டிருந்தோம்... நடன இயக்குனர் திரு. தினா மாஸ்டர் நேர்த்தியாக பாடலை முடித்து கொண்டிருந்தார். ஆனால், வழக்கமாய் மாலை மட்டுமே பெய்யும் மழை அன்று கொஞ்சம் முன்னாலேயே வந்துவிட்டது. மழை நிற்கட்டுமே என்று அனைவரும் ஒரு பெரிய டார்பாலின் விரிப்பிற்குள் கமுக்கமாய் நின்று கொண்டோம். மழை நிற்காமல் வந்து கொண்டேயிருந்தது. நேரம் அதிகமாகவே, ஷூட்டிங் தாமதமாய்க்கொண்டிருப்பதால்... எங்களுக்குள் கலக்கம் கொஞ்சமாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. எங்கள் கலக்கத்தை குறைப்பதற்காக, கேமிராமேன் சதீஷ்... தனது அஸிஸ்டென்ட் மொபைலில் 'ஊரவிட்டு ஊருவந்து...' என்ற பாடலை போட்டு, அந்த செல்ஃபோனை மைக்-ல் பிடித்தார். அந்த பாடல் ஸ்பீக்கரில் நல்ல சத்தமாக கேட்க ஆரம்பித்தது. ப்ரொடக்ஷன் டீமில் ஜெகதீஷ் என்ற ஒருவர் திடீரென்று பாடலை கேட்டதும் நடனமாட ஆரம்பித்தார். மழையில் அவர் ஆடிய ஆட்டம்... கதகளியும் குத்தாட்டமும் கலந்து ஒரு புது மாதிரியாக இருந்தது. அனைவரும் அவரை ரசித்து ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர். பாட்டு முடியவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. அன்று மாலைக்குள் பாடல் படப்பிடிப்பும் நல்லபடியாக நடந்து முடிந்தது.

மூணாறு படப்பிடிப்புடன் அவுட்டோர் ஷூட்டிங் மொத்தமும் நல்லபடியாக  நிறைவுபெற்றது. அன்றே யூனிட் அனைத்தையும் பேக்-அப் செய்து அனுப்பிவிட்டு... அடுத்தநாள், எங்கள் முதல் படமான 'ஓர் இரவு'  படப்பிடிப்பு நடத்திய வீட்டை சென்று தரிசித்துவிட்டு வந்தோம்.


'ஓர் இரவு' வீடு...

'ஓர் இரவு' ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட நண்பர்களில், லொகேஷன் மேனேஜர் திரு.நிக்ஸன் மற்றும், சரவண பவன் ஹோட்டலில் உணவு உபசரிப்பாளர் திரு.அழகர்சாமி ஆகியோரை  சந்தித்தோம். மூணாறில், வியூபாய்ண்ட் என்னும் இடத்திலுள்ள டீகடையில் (நாங்கள் வழக்கமாக டீ அருந்தும் இடத்தில்) ஏலக்காய் வாசனையுடன் டீ குடித்துவிட்டு... கிளம்பினோம்... சென்னைக்கு அல்ல... வரும் வழியில் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது...

அதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்...

(தொடரும்)


Signature

Popular Posts