Saturday, November 05, 2011

"அம்புலி 3D" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 2

புகைப்படம் #008
எடுத்த நாள் : February 12, 2011
இந்த புகைப்படம் KTVR கல்லூரியில் நள்ளிரவு படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது... ரேடியோவில் கேட்கும் எம்.ஜி.ஆர். பாடலை ('ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன்...') நாயகன் அஜய் கேட்டு நடனமாடுவது போன்ற காட்சியமைப்பு...  உற்சாகமான பாடலென்பதால் அனைவரும் தூக்கத்தையும் களைப்பையும் மறந்து செயலாற்ற அப்பாடல் உதவியாக இருந்தது...
------------------------------


புகைப்படம் #009
எடுத்த நாள் : March 09, 2011
நாயகன் அஜய் சைக்கிளில் 3D ரிக் சங்கதிகளை மாட்டிக்கொண்டு வண்டி ஓட்ட ஆயத்தமானபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...
------------------------------


புகைப்படம் #010
எடுத்த நாள் : April 14,, 2011
'குட்டுப்பட்டாலும் மோதிர கையால் குட்டுப்பட வேண்டும்' என்று சொல்வார்கள்... இந்த காட்சியில் நாயகன் ஸ்ரீஜித். நடிகர் திரு.தம்பி ராமையா அவர்களிடம் அறை வாங்குவது பல ரீடேக் எடுக்கபட்டபோது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு...
------------------------------

புகைப்படம் #011

 எடுத்த நாள் : March 04, 2011
நடிகை உமா ரியாஸ் மேடம் , 40 அடி க்ரேனில் மேலே ஏற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை கேமிராமேனிடம் தெரிவிக்க... படப்பிடிப்பின் ஓய்வுநேரத்தில் நிறைவேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 ------------------------------

 புகைப்படம் #012
எடுத்த நாள் : February 16, 2011
நடிகை கலைராணி மேடம், இரகசியங்களை காலம்காலமாக சுமக்கும் ஒரு சீமாட்டி என்ற மூதாட்டியின் கதாபாத்திரத்தில் நடித்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்... க்ளாப் அடிப்பவர் உதவி இயக்குநர் உசேன்... பின்னால் கருப்பு சட்டையில் நடிகர் ஜெகன்... மற்றும் ஸ்ரீஜித் அஜய் (மறைவாய்)
 ------------------------------

புகைப்படம் #013 
எடுத்த நாள் : March 17, 2011
கலை இயக்குநர் ரெமியன் அவர்கள், ஒரு ஊதுபத்தி தொழிற்சாலை செட் போட்டு முடித்த சந்தோஷத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு... அருகில் தொப்பி போட்டு நடப்பவர் துணை கலை இயக்குநர் அஷோக் அவர்கள்.... 
 ------------------------------


புகைப்படம் #014

எடுத்த நாள் : February 02, 2011
கலை இயக்குநரின் மற்றுமொரு கலைவெளிப்பாடாய் இந்த மரவீடு செட்... இத்தனை பேரின் பாரத்தை தாங்கியபடி சற்றே உயரத்தில் கட்டப்பட்ட செட்... நானும் (ஹரீஷ் நாராயண்) நண்பர் ஹரியும் மாணிட்டரை பார்த்தபடியிருக்க, பின்னனியில் படக்குழுவினர் அடுத்த காட்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...

(தொடரும்)


Signature

7 comments:

ஆர்வா said...

ஃபோட்டோக்கள் எல்லாம் கலக்குது.. அதுவும் கலைராணி மேடம் ஸ்டில் நிறைய கதைகளை சொல்லுது.. அவங்க கேரக்டர் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போல.. சீக்கிரம் வெளியிடுங்க சார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super. Waiting for ur movie :)

DREAMER said...

வணக்கம் கவிதை காதலன்,
கலைராணி மேடம் கூட படப்பிடிப்பில் கிடைத்த அனுபவங்களை தனியா ஒரு பதிவு எழுதலாமென்றிருக்கிறேன். அந்தளவுக்கு நல்ல ஒரு ஆர்டிஸ்ட்... பெயருக்கு ஏற்றாற்போல் அவர் கலைகளின் ராணிதான்...

வணக்கமன் ரமேஷ்,
காத்திருப்புக்கு மிக்க நன்றி..!

-
DREAMER

அருண் said...

பாஸ் எல்லாமே சூப்பர்,படமும் சூப்பரா இருக்கும்னு நம்புறோம்,எப்போ ரிலீஸ்?
-அருண்-

Raghu said...

ஃபோட்டோஸ் எல்லாமே சூப்ப‌ர் ஹ‌ரீஷ். பாவ‌ம் Sreejith. ப‌ச்ச‌ம‌ண்ணுங்க‌ அது. அத‌ப்போய் அறை வாங்க‌ற‌ மாதிரி 4 டேக்!

க‌டைசி ஃபோட்டோவோட‌ லைட்டிங் பிர‌மாத‌ம். யார் எடுத்த‌ ஃபோட்டோ? ச‌தீஷ்?

DREAMER said...

வணக்கம் அருண்,
படத்தை ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..! ரிலீஸ் குறித்த தவகலை விரைவில் தெரிவிக்கிறேன்...

வணக்கம் ரகு,
ஸ்ரீஜித்தை பத்தி 'வாழ்க்கையில அடிவாங்கியே முன்னுக்கு வந்தவன்னு' நாளைக்கு வரலாறு பேசனுமில்லியா..! அந்த ஃபோட்டோ எடுத்தவரு பேரு ஜி.கே... அவர்தான் நம்ம படத்துக்கு ஸ்டில் ஃபோட்டோகிராஃபர்

-
DREAMER

Unknown said...

Padam parkka wait pannittu irukken..

:-)

Popular Posts