இரண்டு மாதமாய் சேர்த்து வைத்திருந்த எனது பாக்கெட் மணி மொத்தம் 300
ரூபாய் சேர்ந்திருந்தது. 5ஆவது படிக்கும் எனக்குத்தான் தெரியும் 300 ரூபாய் சேர்த்து வைப்பது எவ்வளவு சிரமம் என்று...
அதை என் தெருவில் வசிக்கும் 'வாட்சு கடை' தாத்தாவிடம் கொடுத்தேன்.
அவர் 300 ரூபாயை 100 தடவை எண்ணிவிட்டு தன் கடைக்குள் அனுமதித்தார்
அங்கிருந்த சின்ன P.C.O. பூத் போன்ற அறைக்குள் நுழைந்தேன். மேலே இருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேவில் ‘22, நவம்பர் 2012’ என்றிருந்தது
உள்ளிருந்தபடி திரும்பி பார்த்து கேட்டேன்...
'தாத்தா... நிச்சயமா நீ சொன்னது நடக்குமா தாத்தா..? முப்பது நாள் நான் முன் நோக்கி போய்டுவேனா..?'
'சந்தேகமா..?'
'இல்ல.. 300 ரூபாய்க்கு டைம் டிராவல் ரொம்ப சீப்-ஆ இருக்கே... அதான்..'
'எனக்கு இப்போதைய தேவை 300 ரூபா.. அது உனக்கு சீப்.. ஆனா எனக்கு அது ரொம்ப காஸ்ட்லி..’ என்றபடி, வாட்சு கடை தாத்தா பூத்திற்குள் அனுப்பி கதவை சாத்திக் கொண்டார்
பிறகு, வெளியே ஏதேதோ சத்தம் கேட்டது...
திடீரென்று பூத்திற்குள், மின்னல் போல் வெளிச்சம் அந்த கடையெங்கும் நிரம்பி வழிந்தது.. பயந்து கண்களை மூடிக்கொண்டேன்.
சிறிது நேரத்தில் கண்திறந்து பார்த்தபோது... அந்த பூத்தின் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேயில்
21, டிசம்பர் 2012 என்றிருந்தது
ஆவலுடன் பூத் கதவை திறந்தேன்...
பூத்தின் வெளியே கடல்நீர்... சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கடல் நீர்... என் வீடு... தெரு.. ஏரியா.. எல்லாம் கடல் நீர் மூடியிருந்தது... என் பூத் எங்கோ அடித்துக் கொண்டு வரப்பட்டு கொஞ்சமாய்.. மிக கொஞ்சமாய் இருந்த நிலப்பரப்பில் நின்றுக் கொண்டிருந்தேன்... சுற்றி யாருமேயில்லை... மிதந்து வந்த செய்தித்தாள் பேப்பரில் கீழ்கண்ட வாசகம்
‘நாளை 21 டிசம்பர் 2012 எந்த ஆபத்தும் இல்லை - புயலோ.. .சுனாமியோ வாய்ப்பே இல்லை... வானிலை ஆராய்ச்சி மையம்’
Image Courtesy : http://london2005.medialint.com/
Image Courtesy : http://london2005.medialint.com/
7 comments:
nice
ஓ..இதுதான் முன்னோக்கு சிந்தனை போல.. நல்ல சின்னஞ்சிறுகதை
ஏறக்குறைய இதே மாதிரி ஒரு கதையை நானும் ட்ரை பண்ணியிருக்கேன் ஹரிஷ். பட், நினைச்சதை எழுத்தில் கொண்டு வர முடியல. கொஞ்சம் சொதப்பலாவே இருக்கும்.
http://kurumbugal.blogspot.com/2010/06/2104.html
http://kurumbugal.blogspot.com/2010/06/2104-2.html
ரொம்ப நல்லா இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வணக்கம் சாம்,
நன்றி...
வணக்கம் ரஹீம்,
கருத்துக்கு நன்றி...
வணக்கம் ரகு,
உங்கள் கதை படிச்சேன்... நல்லாயிருந்தது... 2 வருஷம் முன்னாடியே இதை எழுதியிருக்கீங்க... நான்தான் லேட்..
வணக்கம் Easy,
கருத்துக்கு நன்றி..!
Super twist...:)
Post a Comment