டிஸ்கி : கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நான் கண்ணார கண்டு அனுபவப்பட்டு எனது நண்பர்களிடம் பகிர்ந்த போது, அவர்களும் SAME BLOOD..! என்று கூறி என்னுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களின் தொகுப்பு... இதை பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களையும் உஷார் படுத்தலாமே என்று எழுதியது...
- இது பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி குறிப்பிடும் பதிவல்ல...
- உலக சந்தையில் பெட்ரோலை வைத்து நடத்தப்படும் உலக அரசியல் பற்றி குறிப்பிடும் பதிவும் அல்ல...
- நமக்கு மிக அருகில் இருக்கும் பல பெட்ரோல் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றி குறிப்பிடும் பதிவு...
'100 ரூபாக்கு போடுப்பா..' என்று 100 ரூபாய் தாளோடு வெயிலிலும், புழுதியிலும் வாடி வதங்கி வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து லாவகமாக ஏமாற்றும் PETROL GUN ஊழியர்ள் சிலரைத்தான் (அனைவரும் அல்ல..) இதில் PIRATES என்று குறிப்பிட்டிருக்கிறேன்...
பெட்ரோல் வங்கிகளில் வழக்கமாய் மீட்டரை வைத்து 10, 20 என்று திருடுவார்கள்... இது அனைவரும் அறிந்ததே... ஆனால் தற்போது நடைபெறும் நூதன திருட்டுகளின் மூலம், 10, 20 ரூபாய்க்குத்தான் பெட்ரோலே போடுகிறார்கள் மீதி பணம் முழுவதையும் ஏமாற்றுகிறார்கள். நான் 2006ஆம் ஆண்டு வங்கியில் லோன் போட்டு புது பைக் வாங்கிய சமயம் மேத்தா நகரில் SKYWALKக்கு அடுத்துள்ள இடதுபுற பெட்ரோல் பங்க்கில் 100 ரூபாய் ஏமாற்றப்பட்டேன். அந்த சம்பவத்தை என் நண்பர்களுடன் பகிர, பலரும் இதே போல பல பங்க்குகளில் ஏமாற்றப்பட்டிருப்பதாக கூறி 'ரெட் அலர்ட் மார்க்' செய்த பங்க்குகளை தெரிவித்தார்கள்... கிட்டத்தட்ட பல பங்க்குகள் அந்த லிஸ்ட்டில் உள்ளது தெரியவந்தது... அன்றிலிருந்து இன்றுவரை காராக இருந்தாலும், டூ வீலராக இருந்தாலும், மீட்டரில் ZERO காட்டாமல் பெட்ரோல் போட்டுக்கொள்வதே இல்லை...
இது எப்படி நடக்கிறது..? ஒரு உதாரணம், நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வந்தால், ஏற்கனவே உங்களுக்கு முன்னாலிருப்பவருக்கு 50 ரூபாய் போட்டிருந்தால், மீட்டரை RESET செய்யாமல் உங்களிடம் பேச்சு கொடுத்தபடியே 51ல் ஆரம்பித்து 100 ரூபாய்க்கு போடுவார்கள். இதன்மூலம், பாதிக்கு பாதி அவர்களுக்கு லாபம்... இது அந்த பெட்ரோல் வங்கி முதலாளிக்கும் போய் சேருவதில்லை... அவர்களே பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
மோசடி ஊழியர்கள், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிமுறைகள்
பொதுவாய் சில பெட்ரோல் வங்கியில் ஊழியர்கள் கேப் அணிந்திருப்பார்கள்.... அந்த கேப்-ஐ வைத்து உங்களுக்கு முன்னால், சரியாக மீட்டரை மறைத்தபடி நின்று கொள்வார்கள். நீங்கள் அப்படி இப்படி அசைந்து கொடுத்து மீட்டரை பார்ப்பதற்குள் பெட்ரோல் போட ஆரம்பித்து விடுவார்கள்.
சில இடத்தில் PETROL GUN-ன் கருப்பு கேபிள் அந்த மீட்டரின் குறுக்கே ஓடி, மீட்டரை பார்க்க முடியாதபடி மறைத்திருக்கும்... இதனால், தோராயமாகத்தான் உங்களால் மீட்டரை கணிக்க முடியும்.
இன்னும் சில இடத்தில் மீட்டர் RESET ஆவது போல் பீப் சவுண்ட் கொடுக்கும் ஆனால் மீட்டர் RESET ஆகாது... 'என்ன ZERO வரலை..?' என்று கேள்வி கேட்டால், மீண்டும் சரியாக RESET செய்துவிட்டு, 'மீட்டர் பிரச்சினை சார்' என்று கூலாக பதில் கொடுப்பார்கள்...
இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நின்றிருந்தால்... உஷார்.... நிச்சயம் ஏதோ தப்பு நடக்கவிருக்கிறது என்பதை கவனித்து கொண்டு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
ஒருவர் PETROL GUNஐ டேங்க்கிற்குள் செலுத்தியதும் RESET செய்வது போல் பாவ்லா காட்டுவார்... அப்போது இன்னொருவர் வந்து உங்களிடம் காசு கேட்பார்.. நீங்கள் உடனே காசு கொடுத்துவிட்டால் சில்லறை கொடுங்கள்... ரவுண்டாக போட்டுக் கொள்ளுங்கள் என்று பேச்சை மாற்றுவார்... அல்லது உங்கள் வண்டியை புகழ்ந்து பேசியபடி நலம் விசாரிப்பார்.. இல்லையெனில், உங்கள் பைக்கில் பெட்ரோல் KNOBஐ சுட்டிக்காட்டி, 'PETROL KNOB திறந்தேயிருக்கு பாருங்க சார்.. அதை மூடிடுங்க..' என்று கூறுவார்.. வாடிக்கையாளரும் ஓரிரு செகண்ட் அப்படி இப்படி என்று கவனம் சிதறும் அந்த நொடிப்பொழுதில் கவனம் கலையும். இப்படியாக விதவிதமாய் பேசி உங்கள் கவனத்தை திசை மாற்றி... நீங்கள் சுதாரிப்பதற்குள் மீட்டர் ZERO வராமலே ஓட ஆரம்பித்துவிடும்...
ஒரு சில இடங்களில் ZERO பார்த்துவிட்டு பெட்ரோல் போட ஆரம்பித்தாலும் உஷாராக இருக்க வேண்டும்... 200 ரூபாய்க்கு நீங்கள் பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்களென்றால்... 40 ரூபாய்க்கு மீட்டர் ஓடிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருப்பவர் உங்கள் கவனம் கலைப்பார்... பெட்ரோல் போடுபவர் உடனே மீட்டரை மீண்டும் ZEROஆக்கிவிட்டு உங்கள் வரிசையில் நின்றிருக்கும் அடுத்தவரை அழைத்துவிடுவார்... நீங்களும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாகிவிட்டது என்று நினைத்து நகர்ந்து விடுவீர்கள்... ஆனால், 40 ரூபாய்க்கான பெட்ரோல்தான் உங்கள் வண்டியில் இருக்கும்...
பைக்கில் அடிக்கும் கொள்ளைகள் இப்படியென்றால் இதில் அடுத்த கட்டம், காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் கொள்ளை அடிப்பது... காரணம், இதில் தொகை பெரியது... அதுவும் காரில் வருபவர்கள் காரிலிருந்து இறங்காமல் பெரும்பாலும் மீட்டரிலிருந்து சற்று தொலைவிலிருந்தபடி பெட்ரோல் போடுவதால் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகிறது.
காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் 'மெம்பர்ஷிப் ப்ளான், ஆயில் சேன்ஞ் பற்றி பேசி கவனத்தை கலைக்க முயல்வார்கள்.
காரிலிருந்து பெட்ரோல் போடும்போது, பெரும்பாலும் இறங்கி அருகில் சென்று மீட்டரை கண்காணித்தபடி போடுவது மிக நல்லது...
காரிலிருந்து பெட்ரோல் போடும்போது, பெரும்பாலும் இறங்கி அருகில் சென்று மீட்டரை கண்காணித்தபடி போடுவது மிக நல்லது...
உங்கள் வண்டியில் யாரிருந்தாலும், பெட்ரோல் போட்டுவிட்டு வரும்வரை பேசாமல் இருக்கும்படி கூறிவிடுவது நல்லது... பேசினால் கவனம் கலையலாம்..
இப்படி இவர்கள் கொள்ளையடித்து சம்பாதிக்கும் பணம் அந்தந்த பெட்ரோல் வங்கியின் முதலாளிக்கும் போய் சேர்வதில்லை.. இதை இந்த மோசடி ஊழியர்கள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி வைத்து நடத்துவதால், எவ்வளவு ரூபாய் ஏமாற்றியிருக்கிறோம் என்ற கணக்கை அவரவருக்கு தெரிந்த சங்கேத பாஷையில் குறித்துக் கொள்கிறார்கள். அன்றைய நாள் இறுதியில் கலெக்ஷன் கணக்கெடுக்கும்போது, கொள்ளையடித்த பணத்தை தனியாய் எடுத்து பிரித்துக் கொள்கிறார்கள்.
பெட்ரோல் விலை அதிகம் என்று தெரிந்து வருத்தபடும் நாம், இவ்வளவு அதிக விலைக்கு நாம் போட்டுக் கொள்ளும் பெட்ரோல் முழுவதுமாய் நமக்கு வந்து சேருவதில்லும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வளவு கரெப்ஷன் இருந்தும். இன்றும் சில பெட்ரோல் வங்கிகளில் நாம் கவனக்குறைவாக இருந்தாலும் "சார் ZERO பாத்துக்கோங்க சார்.." என்று நம்மை அழைத்து மீட்டரை காண்பிக்கும் அந்த நல்ல நபர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...
இவ்வளவு கரெப்ஷன் இருந்தும். இன்றும் சில பெட்ரோல் வங்கிகளில் நாம் கவனக்குறைவாக இருந்தாலும் "சார் ZERO பாத்துக்கோங்க சார்.." என்று நம்மை அழைத்து மீட்டரை காண்பிக்கும் அந்த நல்ல நபர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...
4 comments:
Good one Hareesh. Guess we should start having a container that specifies the liters and get petrol in the container :) atleast we are sure what we get... but kodumai !
நல்ல ஐடியா Bingleஜி,
May be the future bikes should have some electronic meter (something more than what we have now) for fuel...
உண்மையில் பயனுள்ள ஓர் பதிவு.
Good one and it's true.
Post a Comment