நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
நீண்ட நாளாகவே புத்தகங்களுக்கு ஒலிவடிவம் கொடுக்க வேண்டும் என்ற ஆவல், எனக்கும் எனது குழுவினருக்கும் எப்போதுமே உண்டு... எனவே, அதை தொடங்கி வைக்கும் முயற்சியில், "ஒலிப்பெட்டி" என்ற குழாமத்தை தொடங்கி, அதே பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து... நல்ல புத்தகங்களை தேர்வு செய்து அதற்கு ஒலிவடிவம் கொடுக்கும் பணியை துவக்கியுள்ளோம்.
முதல் புத்தகமாக, கடந்த மாதம் 'ஐயப்பன் அருள்விளையாடல்' என்ற ஒரு ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டிருந்தோம். ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, எனக்கும் என் குழுவினருக்கும் எப்போதுமே பிடித்த அமரர் கல்கி அவர்களின் படைப்பில் 'மோகினித் தீவு' என்ற புத்தகத்தை ஒலிப்புத்தகமாய் ஒலிவடிவமைத்திருக்கிறோம். பின்னனியிசையுடன் சிறப்பு சப்தங்களுடன் கேட்கும்போது, கேட்பவர்கள் சரித்திர காலத்தில் அந்த காட்சிக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும்படியாக ஒலிநுட்பம் செய்துள்ளோம்.
இக்கதை 50 வருடத்திற்கு முன்பு எழுதியதுதானா என்று சந்தேகம் வருமளவிற்கு கல்கி அவர்களின் எழுத்துத்திறன் வழக்கம்போல் ஆச்சர்யப்படும்படி இருக்கிறது. சரித்திர நாவல்கள் எப்போதுமே கேட்பவர்களை அல்லது படிப்பவர்களை ஆர்வத்தில் கட்டிப்போடும்.. அப்படித்தான் இந்த கதையும் சுவாரஸ்யத்திற்கு எள்ளளவும் பஞ்சமில்லாமல், எங்கள் முயற்சி நல்லபடியாய் வெளிவர பெரிதும் கைகொடுத்துள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் இதை வெளியிட வேண்டும் என்ற முயற்சியுடன் கடந்த மூன்று மாதமாய் உழைத்து வந்ததில் இதோ இப்போது விற்பனைக்கு தயாராய் உள்ளது.. தற்போது நடந்துக் கொண்டிருக்கும் 36ஆவது சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
கண்காட்சியில் "மோகினித் தீவு" கிடைக்கும் ஸ்டால்கள் விவரம்
1. Softview (Stall #266)
2. Singa Rohini Trading Company (Stall #202, #203)
3. School ROM Multimedia (Stall #193)
4. புத்தகப் பூங்கா (Stall #137)
இன்னும் ஓரிரு தினங்களில் ஆன்லைனிலும் விற்பனைக்கு வந்துவிடும். கூடிய விரைவில் அந்த விவரங்களையும்... ஆடியோவின் சில பகுதிகளையும் பகிர்கிறேன்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
3 comments:
புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் ஹரீஷ்.
தவறாக நினைக்க வேண்டாம். LET'S LISTEN என்பது ஒகே. ஆனால், ENOUGH READING என்பது.......ஸாரி :(((
கேப்ஷன் கடுமையாக அமைந்தமைக்கு மன்னிக்கவும் ரகு... மாற்றிவிடலாம்
Oli puththagam - you mean we can listen instead of reading right??? this is a good try (especially the blind people could read/listen the stories)... By the way I am searching for Ponniyin selvan novel - in a voice format..
Post a Comment