Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, April 27, 2013

கூண்டு [சிறுகதை]




2 மணி நேரத்திற்கு முன்னால்...

'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின பணத்தை திருப்பி கொடுத்துடு.. இல்லன்னா நடக்கிறதே வேற..' என்று காளிதாஸ் தான் இருக்குமிடம் ஹாஸ்பிடல் அறை என்பதையும், தான் ஒரு பேஷண்டிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து கத்திக்கொண்டிருந்தான். அவ்வளவு கோபம்...

ஆனால் அவனுக்கெதிரே பேஷ்ண்டாய் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த கணேஷிடம் அவன் கோபத்தை சட்டை செய்யாத ஒருவிதமான ஏளனம் தெரிந்தது.

'காளி நீ எப்டி கேட்டாலும் என்னான்ட இப்ப பணமில்ல...'

'கடங்கார நாயே... 2 லட்சத்தை திருப்பிக் கொடுக்க வக்கில்லாத உனக்கெல்லாம் எதுக்குடா xxxxxxxxxx' என்று காளி மேற்கொண்டு பேசியதை டைப் செய்ய முடியாதளவிற்கு கொச்சைத்தனம் நிரம்பியிருந்தது

அதை கேட்ட கணேஷிற்கு தன்னிலை மறந்து கோபம் வந்தது... கட்டிலிலிருந்து எழுந்துவிட்டான்... உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ சகிதங்களையும் மறந்து தன்னிடம் மிச்சமிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் பிரயோகித்து காளிதாஸின்மீது கோபமாய் பாய்ந்தான். அந்த அறையில் அடிதடி நடந்தேறியது... 


2 மணி நேரத்திற்கு பிறகு

அந்த ஹாஸ்பிடலின் 7வது தள லிஃப்ட் தனது நீண்டவாயை திறந்து கொண்டது.

உள்ளே ஒரு குடித்தனமே நடத்தலாம் என்றளவுக்கு பெரிய இடம்கொண்ட லிஃப்ட் அறை கண்கூசாத ட்யூப்லைட் வெளிச்சத்துடன் வரவேற்றது.

வார்டுபாய் நிதின் தான் தள்ளிவந்த ஸ்ட்ரெட்சருடன் உள்ளே நுழைந்தான்... ஸ்ட்ரெட்சரில் பிணமாய் கணேஷ்...

வார்டுபாய் நிதின், லிஃப்டில் "G" என்ற 'கிரவுண்டு ஃப்ளோருக்கு' அழைத்து செல்லும் பட்டனை அழுத்த.. லிஃப்ட் வாயை மூடிக்கொள்ள பார்த்தது. திடீரென்று லிஃப்ட் கதவுக்கு நடுவே ஒரு அழகான கையும் ஒரு ரிப்போர்ட் ஃபைலும் உள்நுழையப் பார்க்க லிஃப்ட் மீண்டும் மூடிய வாயை திறந்துக் கொண்டது.

அந்த அழகான கை... நர்ஸ் 'ஸ்வேதா'வுடையது. கைமட்டுமல்ல... அவளும்தான் அழகு... நிதினை பார்த்தும் பார்க்காத்துபோல் வேறுபக்கம் திரும்பிக் கொண்டு ஏற்கனவே அழுத்தியிருந்த "G" பட்டனை மீண்டும் அழுத்தினாள்.

இந்தமுறை கதவு முழுவதுமாய் மூடிக்கொள்ள லிஃப்ட் தனது டிஸ்ப்ளேயில் '7' என்ற பட்டனுக்கு அருகில் ஒரு கீழ்நோக்கு அம்புக்குறியை காட்டியபடி கீழிறங்கியது. லிஃப்டுக்குள்ளே ஏ.ஆர்.ரஹ்மானின் 'காதல் ரோஜாவே' என்ற பாடலின் இன்ஸ்ட்ரூமெண்ட்டல் பாடல் மெலிதாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

வார்டுபாய் நிதின்... தனக்கருகே இருக்கும் ஸ்ட்ரெட்சருக்கு மறுபுறம் நின்றிருந்த நர்ஸ் ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குள்ளே ஓடும் காதல் எபிசோடுக்கு சொந்தக்காரி அவள்.

நிதின் அந்த ஹாஸ்பிடலில் கடந்த 4 மாதங்களாய் வார்டுபாயாக வேலை செய்துவருபவன்.

அவன் வேலைகு சேந்த அன்று, 4வது தளத்தில் ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன்-ஐ சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டு, 4வது தளத்திற்கு வந்தடைந்தான். யார் அந்த சரவணன் என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த போது. இதே லிஃப்டுக்குள்ளிருந்து ஒரு அழகான நர்ஸ் வெளியேறினாள். (ஸ்வேதாதான்) அவளை பார்த்ததும் நிதினுக்கு இந்த ஹாஸ்பிடல் மிகவும் பிடித்துப் போனது. அவளிடம் சென்று  ஃப்ளோர் இன்சார்ஜ் எங்கேயென்று கேட்கலாம் என்று லிஃப்ட்-ஐ நெருங்கவும். அவள் இவனிடம் 'சார் இங்க ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன் எங்கேயிருக்காருன்னு தெரியுமா..' என்று கேட்டாள். நிதின் சிரித்துவிட்டான்.

பின் இருவரும் சேர்ந்து சரவணனை கண்டுபிடித்தனர். ஆனால், அதன்பிறகு அவளுக்கும் நிதினுக்கும் வெவ்வேறு ஷிஃப்ட்-இல் வேலை வாய்த்தது... இவன் வேலை முடிந்து வரும்போது, அவள் வேலையிலிருந்து கிளம்பிக்கொண்டிருப்பாள். அல்லது அவள் வேலைக்கு வரும்போது இவன் ஷிஃப்ட் முடிந்து வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருப்பான். இதனால் ஸ்வேதாவிடம் சகஜமாக பேசி பழக முடியாத நிலை. இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. இவளிடம் தனக்கிருக்கும் ஈர்ப்பு காதல்தான் என்று தனக்கு தெரிந்தாலும், அதை எவரிடமும் பகிர்ந்துக் கொள்ள தைரியமும், சந்தர்ப்பமும் கிடைக்காத ஒரு அசௌகரியமான நிலையில் நிதின் இருந்துவந்தான். ஆனால் இன்று...

இதோ... ஸ்வேதா அவன் எதிரே... யாருமில்லாத இந்த அறையில்... யாருமில்லை என்று சொல்ல முடியாது. தன் முன்னே ஒரு பிணம் அதுவும் கொலை செய்யபட்ட பிணம்... அதனால், நிதினின் மனம், பேசு.. பேசு.. ஸ்வேதாவிடம் உன்னைப்பற்றி ஞாபகப்படுத்தி அறிமுகமாகிவிடு... இம்முறையும் தவறவிட்டால் பிறகு சந்தர்ப்பம் கிடைப்பது அரிதாகிவிடும்.

இதற்குள் லிஃப்ட் டிஸ்ப்ளேயில் 5வது தளம் என்று வந்து கீழ்நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. சே.. என்ன இது அவசரம் அதிகபட்சம் பத்து அல்லது இருபது விநாடியெல்லாம் ஒரு சந்தர்ப்பமா.. அவளிடம் பேச நான்கு மாதங்களாக காத்திருந்த எனக்கு இந்த இருபது விநாடிகள்தான் சந்தர்ப்பமா... கடவுளே என்வரையில் நீ ஒரு கஞ்சன். ஒரு PAUSE பட்டன் அழுத்தி என் வாழ்க்கையை இந்த இடத்திலேயே கொஞ்சம் நிறுத்திவைக்கக் கூடாதா என்று அவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கரண்ட் கட் ஆனது... 

ஆண்டவன் செயலல்ல... அரசாங்கத்தின் செயல்...

லிஃப்ட் நின்றது.. உள்ளேயிருக்கும் வெளிச்சம் அணைந்து எமர்ஜென்சி லைட் எரிந்து மிதமான வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

நிதின் சுற்றும் முற்றும் பார்த்து ஸ்வேதாவை பார்த்தான்.. அவளும்தான். 

'இது ரெகுலர் பவர்கட்டா?' என்றாள்.

'ஆஆமாங்க.. 12 to 2' என்றான்

'ஜெனரேட்டர் போட்டுருவாங்கதானே..' என்றாள்

'ஆ...' என்றான்

போடாமல் இருந்தால் நன்றாயிருக்கும் என்றது மனம்.

ஒரு இரண்டு நிமிட மௌனம்.

நேரம் கிடைக்கவில்லை என்று காத்துக்கிடந்தவன் இரண்டு நிமிடத்தை வீணாக்கிவிட்டோமே என்று நினைத்துக் கொண்டான்.

'நீங்க ஸ்வேதாதானே..?' என்றான்

'ஆமா.. உங்களுக்கெப்படி தெரியும்..?'

'என்னங்க... என்னை மறந்துட்டீங்களா..? ரெண்டு பேரும் ஒன்னாத்தான் இங்க வேலைக்கு சேர்ந்தோம்... ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணனை-ஐ ஒண்ணா தேடிட்டிருந்தோமே..?' என்றான்

'ஆ... ஆமாமா... இப்ப ஓண்ணா லிஃப்ட்ல மாட்டிட்டிருக்கோம்..' என்று சொல்லி சிரித்தாள்

கொள்ளை கொள்ளும் சிரிப்பு... போதும்... இது போதும்... கடவுளே... இந்த லிஃப்டில் மேலும் ஒரு பிணம் விழாமல் பார்த்துக்கொள்... 

'அழகா சிரிக்கிறீங்க..' என்றான். ஆனால், அவள் பதிலெதுவும் கூறாமல், ஸ்ட்ரெட்சரில் முகம் போர்த்தியிருந்த பிணத்தை கொஞ்சமாய் போர்வை விலக்கி பார்த்தாள்.

'என்னாச்சு..?'

'இந்தாளு செம கதை... ஹார்ட் பேஷண்ட்.. இவனை பாக்க வந்த விசிட்டருக்கும் இவனுக்கும் ஏதோ தகராறாம்... இரண்டும் அடிச்சிக்கிட்டாங்க... பேஷ்ண்ட் கீழ விழுந்து அதிரிச்சியல் போயிட்டான்... கொன்னவன் ஆள் எஸ்கேப்... ஹாஸ்பிட்டல் ஃபுல்லா தேடிட்டாங்க.. ஆள் எங்கேன்னே தெரியல..'

'நம்ம ஹாஸ்பிட்டல்ல இப்படி ஒரு கொலையா.. கடவுளே..! போலீஸ் வரலையா..?'

'வந்து ஃபோட்டோல்லாம் எடுத்தாங்க... ச்சீஃப் டாக்டர்ட்டல்லாம் பேசிட்டு போனாங்க... பாடிய ஜி.எச்.க்கு கொண்டு போகணுமாம்... கீழ ஒரு கான்ஸ்டபிள் மட்டும் நிக்கிறாரு..' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரெட்சர் லேசாக ஆடியது... இருவரும் அதிர்ந்தனர்.. பிறகு பிரமை என்று சுதாரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

சிரிப்பொலியுடன் லிஃப்டின் ஃபோன் ஒலித்தது

'ஹலோ..'

'உள்ளே யாரிருக்கீங்க..?'

'சார் நான் வார்டுபாய் நிதின்.. கூட நர்ஸ் ஸ்வேதா இருக்காங்க..'

'டெட்பாடி எங்கே..?'

'அதுவும் லிஃப்ட்லாதான் இருக்கு... ஜெனரேட்டர் இன்னும் போடலியா சார்..?'

'இங்க ஒரு ப்ராப்ளம்.. நேத்து ராத்திரி ஜெனரேட்டர் சர்வீஸ் பண்ண வந்தவங்க... மினிம்ம் பேக்-அப் மட்டும் கொடுத்துட்டு, 4ல இரண்டு லிஃப்ட்க்கு ஜென் பவர் போகாதுன்னு அட்மின்கிட்ட சொல்லிட்டு போயிருக்காங்க.. அந்தாளு ரிப்போர்ட் பண்ணாம போயிட்டான். நீங்க இருக்கிற லிஃப்ட்டும், பக்கத்துல காலியா ஒரு லிஃப்ட் மாட்டிக்கிச்சு... லோக்கல் எலக்ட்ரீசியன்கிட்ட சொல்லியிருக்கோம். வந்துருவாரு.. வந்ததும். லைன்-ஐ மாத்தி கொடுத்து லிஃப்ட்-ஐ ஆன் பண்ணிடலாம். அதுவரைக்கும் பத்திரமா இருங்க..' என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தான்.

கடவுள் லிஃப்டுக்குள்தான் இருக்கிறாரோ.. நாம் எண்ணப்படி நடக்கிறதே என்று நிதின் ஆச்சர்யப்பட்டான். விஷயத்தை ஸ்வேதாவிடமும் சொன்னான்.

மீண்டும் இரண்டு நிமிட மௌனம்.

'உங்களுக்கு எப்படி என்னை கரெக்டா ஞாபகம் இருக்கு..?' என்று கேட்டாள்

'இவ்ளோ அழகான ஒரு பொண்ணை அவ்ளோ சீக்கிரமா யாராவது மறந்துருவாங்களா என்ன..?!' என்றான். வெட்கப்பட்டு சிரித்தாள்

இதுதான் சமயம்... சொல்.. சொல்லு.. சொல்லிவிடு... மனக்குரல் கேட்டுக்கொண்டேயிருக்க...

'நான்... நான்... உங்களை ரொம்ப லவ் பண்றேங்க..' என்றான்

அவள் முகம் குழப்பமாய் மாறியது...

'கோவிச்சுக்காதீங்க ஸ்வேதா.. எனக்கு தெரியும்... நான் உங்களை லவ் பண்றது தப்புதான்... ஆனா, உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு... நாலு மாசமா உங்ககிட்ட பேசணும், எப்படியாவது ஃப்ரெண்டாயிடனும்னு நிறைய முயற்சி பண்ணேன். சேன்ஸே கிடைக்கல... உங்களை பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்... உங்க பேரு.. நீங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்-னு.. ஆனா உங்ககூட பேசதான் வாய்ப்பே கிடைக்கல.. இன்னைக்கு கிடைச்சிடுச்சி'

'உங்க பேரென்ன..?'

'நிதின்'

'நிதின்... நான் உங்கள திட்டவோ, இல்ல கம்ப்ளைண்ட் பண்ணவோ போறதில்ல... நீங்க உங்களுக்கு பிடிச்சதா சொல்லியிருக்கீங்க.. ஆனா, எனக்கு உங்களை பிடிக்கிறமாதிரி எதுவுமே நடக்கலியே.. முதல் நாள் நாம ரெண்டு பேரும் சேந்து இந்த ஹாஸ்பிடல்ல ஜாய்ன் பண்ணினோம்... நான் நர்ஸ்.. நீங்க வார்டுபாய்... காம்பினேஷன் கொஞ்சம் கஷ்டம். ஆனா எனக்கு பிடிச்சி போச்சுன்னா, என் வீட்ல எந்த பிராப்ளமும் இருக்காது... நான் சொல்றதுதான். ஆனா, எனக்கு உங்களை பிடிக்கணும். பாக்கலாம், இதே ஹாஸ்பிடல்லதான் ஒண்ணா வர்க் பண்ண போறோம். ஏதாவது எனக்கு பிடிக்கிற மாதிரி ஒரு விஷயம் நடக்காமலா போயிடப்போகுது...' என்றாள்

இவள் ஆம் என்கிறாளா இல்லை என்கிறாளா..? புரியாமல் நிதின் விழித்தான்

'நான் கரெஸ்பாண்டென்ஸ்ல படிச்சிட்டிருக்கேன்... எப்படியும் நல்லா வந்துருவேன். ஓரளவுக்கு இங்கிலீஷ்ம் தெரியும். நாம ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துவரும்னு எனக்கு தோணுது... இந்த லிஃப்ட்டுக்குள்ள இப்ப நீங்க என்கூட தனியா இருக்கிறதே ஒரு ஸ்பெஷலா அமைஞ்ச சந்த்ர்ப்பம்தான். உங்ககூட மனசுவிட்டுப் பேச கடவுளா பாத்து அமைச்சிகொடுத்த சந்தர்ப்பமாத்தான் நான் நினைக்கிறேன்'

'இருக்கலாம்... நம்புங்க... ஆனா, எனக்கு பிடிக்கிற மாதிரி ஏதாவது நடக்கணுமாயில்லியா..?' என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் லிஃப்ட் டெலிஃபோன் ஒலித்தது.

'ஹலோ.?'

'நிதின்... நிதின்..'

'ஆமா சார் சொல்லூங்க...'

'நிதின் உள்ள எதுவும் ப்ராப்ளம் இல்லியே..?' 

'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்..'

'நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.  நான் சொல்றதை கவனமா கேளுங்க... இங்க செக்யூரிட்டி கேமிராவுல அந்த மர்டர் பண்ண ஆள் யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம்.. அதவிட முக்கியமான ஒருவிஷயம்... நான் சொல்லப்போறத கேட்டு பதறாதீங்க..'

'என்ன சார்..' என்று அவன் முகம் குழம்பியது

'அந்த கொலைகாரன் இப்ப உங்ககூட லிஃப்டுக்குள்ள இருந்தாலும் இருக்கலாம்னு கெஸ் பண்றோம்..' என்றதும், நிதின் வயிற்றில் ஒரு அமில ஆறு ஓடியதுபோல் இருந்தது. 

'என்ன சார் சொல்றீங்க..?'

'பதற்றமா பேசாதீங்க... கேஷூவலா பதில் சொல்லுங்க... நீங்க டெட்பாடிய தள்ளிட்டு வந்திருக்கிற ஸ்ட்ரெட்சர்ல கீழவரைக்கும் பெரிய துணி மூடியிருக்கா..........'

'அ... ஆமா சார்..' நிதினுக்கு வியர்த்தது... ஸ்வேதா அவனை ஆர்வமாக பார்த்தாள்

'அந்தாளு ஸ்ட்ரெட்சருக்கு பின்னாடி போய் மறைஞ்சிக்கிட்டது ரெக்கார்டு ஆயிருக்கு... அதுக்குள்ள அவன் இருந்தாலும் இருக்கலாம்...'

'சார்ர்ர்..'

'பதறாதீங்க.. உங்ககூட இருக்கிற நர்ஸ் கிட்ட ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டு அப்படியே இருங்க... இங்க லோக்கல் எலக்ட்ரீஷியன் வந்துட்டாரு.. 5 நிமிஷத்தலு லிஃப்ட்-ஐ கீழே இறக்கிடலாம்... கிரவுண்ட் ஃப்ளோர் வந்ததும் ஸ்ட்ரெட்சரை அப்படியே லிஃப்டுல விட்டுட்டு, நீங்களும் உங்ககூட இருக்கிற நர்சும் டக்குன்னு வெளிய வந்துடுங்க' என்று கூறி அவர் ஃபோனை வைத்துவிட

நிதின் ஃபோனை இன்னமும் கையிலேயே வைத்துக்கொண்டு ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்

ஸ்வேதா, 'என்னாச்சு நிதின்...?' என்றாள்

'ஓ...ஓண்ணுமில்ல... ரி..ரிப்பேர் பண்ண்... ணிட்டிருக்காங்களாம்...'

'ஓ.. உங்க முகம் ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி வெளிறிப்போயிடுச்சி...' என்றாள்

நிதின் எச்சில் விழுங்கியபடி குனிந்து டெட்பாடியிருந்த ஸ்ட்ரெட்சரை பார்த்தான்

'இ..இல்லியே..'

'நான சொன்னதை கேட்டு வருத்தப்படுறீங்களா..?' என்றாள்

இவள் என்ன சொன்னாள்.. 'அ..ஆமாம்...' என்றான்

நிதினின் பார்வை மொத்தமும் அந்த ஸ்ட்ரெட்சரிலேயே இருந்தது... ஸ்ட்ரெட்சரில் இருந்த வெள்ளைத் துணி மெல்ல அசைந்து கொடுத்தபடி இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்

'நீங்க ஒருவகையில தைரியமானவர்தான் நிதின்' என்றாள்

அவன் அவளை ஏறிட்டு பார்த்துவிட்டு மீண்டும் குனிந்தான்.

'ஏன் சொல்றேன்னா, நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையனை லவ் பண்ணேன். ஆனா, அதை அவங்கிட்ட சொல்றதுக்குள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டேன். பட் அந்த பையன் சிம்பிளா 'நோ' சொல்லிட்டு போயிட்டான். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். அதனாலதான் நான் உங்ககிட்ட பட்டுன்னு 'நோ' சொல்ல்லை...'

'சரி'

'என்ன சரி... நான் மட்டும் நீங்க சொன்னதை ஒரு இஷ்யூ ஆக்கி கம்பளைண்ட் பண்ணியிருந்தா உங்க வேலையே போயிருக்கும்.. இல்லையா..'

நிதின் குனிந்த நிலையிலேயே 'ஆமாமா... போயிருக்கும்... தைரியம்தான்'. திடீரென்று ஃபோன் மீண்டும் ஒலித்தது

'ஆஆஆஆ..' நிதின் லேசாக அலறிவிட்டான்

'ஹ்ஹ்ஹ்ஹலோ..'

'நிதின்.. நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். ஆர் யூ ஆல்ரைட்'

'ம்ம்'

'இங்க ரிப்பேர் இன்னும் லேட்டாவும்னு நினைக்கிறேன். நீங்க இப்போ 3வது 4வது ஃப்ளோருக்கு நடுவுல மாட்டிட்டு இருக்கீங்க... ஒரு கான்ஸ்டபிள் 4வது ஃப்ளோர் கதவை திறந்து உள்ளே இற்ங்கி உங்க லிஃப்டுக்கு மேலே வருவாரு... உங்க லிஃப்ட் ஃபேனுக்கு மேலே ஒரு துவாரமிருக்கு அதுவழியா துப்பாக்கிய வச்சிக்கிட்டு உங்களுக்கு பாதுகாப்பா இருப்பாரு பயப்பட வேண்டாம்' என்றார்

'சரி சார்..' என்றான்

'இப்ப என்னவாம்', ஸ்வேதா கேட்டாள்

'ஒண்ணுமில்ல... ஒரு கான்ஸ்டபிள்..' என்று கூறி நிறுத்திக் கொண்டான்.

'என்ன..?'

'இல்ல.. ஒண்ணுமில்ல..' என்று கூறிக்கொண்டிருக்க.. இப்போது மீண்டும் ஸ்ட்ரெட்சர் அசைந்தது. திடீரென்று அதனுள்ளிருந்து ஒளிந்திருந்த அந்த கொலைகாரன் வெளியே வந்தான்

'ஆஆஆஆஆஆஆஆஆ' இம்முறை ஸ்வேதா மட்டுமே அலறினாள்

'ஏஏஏஏய்... கத்தாத... ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்' என்றபடி ஒரு ஆபரேஷன் கத்தியை கையில் வைத்தபடி கூவினான்

சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி கடைசியாய் நிதினிடம் திரும்பினான்

'ஏய்... மஜ்னு... ஃபோன்ல பேசுனது யாரு..?'

'எ..எலக்ட்ரீசியன்'

'சார்.. சார்..னு பேசினுருந்தே..'

'நான் எல்லாரையும் மரியாதையாதான் கூப்பிடுவேன்... சார்..' என்றான்

'பொய் சொல்லாத... போலீஸ் கீழே ரெடியா இருக்குன்னு இவகிட்ட சொன்னேல்ல..?'

'ஆமா..'

'நான் இங்கருந்து தப்பிக்கனும்... எனக்கு உதவி பண்ணு... இல்லன்னா..'

'இல்லன்னா..?'

'இதோ உன் லைலாவ கொன்னுடுவேன் என்று அவளை பிடித்து கட்டிக்கொண்டு கழுத்தில் கத்தி வைத்தான்

'ஆஆ' ஸ்வேதா பயந்தாள்

'ஐயோ.. சார்.. ப்ளீஸ். அவங்களை விட்டுடுங்க...' என்றான்

'சும்மா டைம் வேஸ்ட் பண்ணாத.. எனக்கு ஹெல்ப் பண்ணு... அதோ... அந்த ஃபேனுக்கு மேலே கேப் தெரியுது பாரு... ஃபேனை கழட்டிட்டு அந்த கேப்புல என்னை ஏத்திவிட்டுடு... நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.. நீங்க கல்யாணம் பண்ணின்னு நல்லாருங்க... ஏதாவது ராங்கு பண்ணா... நீ கல்யாணம் பண்ணாமலே விதவையாயிடுவே' என்று நிதினைப் பார்த்து கூவினான்

நிதினுக்கு உண்மையிலேயே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்

'ச..சரி..' என்றான்

ஆனால் ஸ்வேதா தடுத்தாள்... 'நிதின் வேண்டாம்.. இவன் ஒரு கொலை பண்ணியிருக்கான்... இவனுக்கு நாம ஹெல்ப் பண்ணக்கூடாது' என்றாள்

'ஏஏ... ரொம்ப பேசாத... கொரவள துண்டாயிடும்' என்று கத்தியை அழுத்தினான்

'ஆஆஆ...'

'டேய்.. பொம்பள பேச்ச கேட்டுகுனு தப்பா ஏதாச்சும் பண்ணே... மவனே இவ பொணத்தைத்தான் பாப்பே..' என்றான்

நிதின் யோசித்தான்... எப்படியும் அந்த கான்ஸ்டபிள் கையில் துப்பாக்கியுடன் லிஃப்டுக்கு மேலே வரப்போகிறார். இவனை தப்பிக்க வைத்தாலும், அங்கே இவன் கைது செய்யபடுவான் அல்லது சுடப்படுவான். எனவே, முடிவெடுத்தான்

'சாரி ஸ்வேதா, நான்... ச..சாருக்கு... ஹெல்ப் பண்ணத்தான் போறேன்' என்றபடி ஸ்ட்ரெட்சரை லிஃப்டுக்கு நடுவே இழுத்தான்...

அதன்மேலே ஏறிக்கொண்டு ஃபேனை கழட்டப்பார்த்தான். ஃபேன் எட்டவில்லை... வேறுவழியின்றி பிணத்தின்மேல் ஏறி நின்று ஃபேனை எட்டிப்பிடித்தான்...

'சார்.. உ..உங்க... க..கத்திய கொடுங்க..?' என்றான்

'ஏய்..?'

'ஸ்க்ரூவை கழட்டனும் சார்.. வெறும் கையால எப்படி கழட்டறது' என்றான்

கொடுத்தான்

கத்திமுனைக்கும் ஸ்க்ரூவுக்கும் சற்றே இடைவெளி இருந்தது. குதிகாலை தூக்கி மேலும் எம்பினான்... இன்னும் கொஞ்சம்

கொஞ்சமாய் ஜம்ப் செய்தபடி ஸ்க்ரூவை எட்டினான். பிடிபட்டது.

திருகினான் பிடி தளர்ந்தது

மேலும் பிணத்தின் மேலிருந்தபடி ஒரு குட்டி ஜம்ப் எம்பி பிடித்தான்

ஃபேனில் தொங்கியபடி ஸ்க்ரூவை கழட்டிக்கொண்டிருக்க.. திடீரென்று பிடி தளர்ந்து தொப்பென்று பிணத்தின்மீது விழுந்தான்.

'ஹெஃப்ஃப்ஃப்' என்று கேவலமாக இருமியபடி அந்த பிணம்(?) உயிருடன் எழுந்து அமர்ந்தான்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அனைவரும் ஒன்றாக அலறினார்கள்

'கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..?' என்றான் கொலைகாரன்

'கா.. கா.. காளிதாசு... காளி...' என்று பெருமூச்சு வாங்கியபடி எழுந்தமர்ந்த ex-பிணமான கணேஷ் பேசினான்

"கணேஷ்... முழிச்சிட்டியா... யப்பா... யப்பா...' என்று சந்தோஷப்பட்டான்

தானே கொன்ற ஒருவன் பிழைத்துக் கொண்டதற்கு கொலைகாரன் சந்தோஷப்படும் அந்த அதிசய காட்சியை ஸ்வேதாவும், நிதினும் பார்த்தவண்ணமிருந்தனர்

காளிதாஸ் தொடர்ந்தான், 'கணேஷ் என்னை மன்னிச்சிடுப்பா, நான் உன்னை கொன்னது தப்புதான், என்னதான் கந்துவட்டி விடுறவனா இருந்தாலும், கொலையெல்லாம் நான் செஞ்சதேயில்லப்பா, உன்ன கொன்னுட்டு அழாத குறையா, போலீஸ்கிட்ட மாட்டிக்குவோமோன்னு பயந்துட்டிருந்தேன். அப்படி மாட்டியிருந்தா என் பொண்டாட்டி பசங்க கதி என்னாயிருக்கும், ஊர்ல அவங்களுக்கு எவ்ளோ கெட்ட பேரு... வேண்டாம்பா, என்க்கு நீ பணமே திருப்பி கொடுக்க வேண்டாம். என் வாழ்க்கைய திருப்பிக் கொடுத்தியே அதுவே போதும்' என்றான்

'இல்ல காளி...  தப்பு என் பேர்லதான், சின்னவயசுலருந்தே ஊதாரித்தனமா செலவு செஞ்சி பழகிட்டேன். அதனால கடனும் நிறை ஆயிருச்சு... திருப்பிக் கொடுக்க முடியாம எல்லாரையும் ஏமாத்தினுருந்தேன். நான் செத்ததும், ஒண்ணுமே புரியல, ஒரே கரும்புள்ளியா போச்சு, ஏதோ வெளிச்சம் மாதிரி தெரிஞ்சுது, அந்த வெளிச்சத்தை பாத்ததும் மனசெல்லாம் லேசாகி சும்மா பூ கணக்கா பறந்தேன்... திடீர்னு என் மேல ஒரு பெரிய பாரத்தை தூக்கி வச்ச மாதிரி இருந்துச்சு... அந்த பாரத்தோட என்னால அந்த வெளிச்சத்த எட்டவே முடியல... அந்த வெளிச்சத்தை பாத்ததுலருந்து நான் ஒரு குழந்தை மாதிரியாயிட்டேன்ப்பா... நான் பண்ணதுதான் தப்பு... உன் பணத்தை திருப்பி கொடுத்துடுறேன். சத்தியமா கொடுத்துடுறேன். ஆனா, அந்த வெளிச்சம்..' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்

ஸ்வேதாவும், நிதினும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, லிஃப்ட்-ல் பெரிய லைட் வந்தது. லிஃப்ட் இயங்கியது...

மீண்டும் காதல் ரோஜாவே பாடல் இசை ஆரம்பத்திலிருந்து ஒலிக்க துவங்க

காளிதாஸ் புலம்பினான் 'ஐயோ, கீழே போலீஸ் எனக்காக காத்துட்டிருக்காங்களே..? என்ன செய்ய..' என்று பதறினான்

'காளி சார், அதான் நீங்க கொலையே பண்ணலியே... செத்தவரே பிழைச்சிக்கிட்டாரு.. போலீஸ் என்ன செய்ய போவுது' என்றான் நிதின்

'ஆ...ஆமால்ல..'

'ஆமா காளிதாஸ்... நானே போலீஸ்கிட்ட உன்னிய விட்டுறச்சொல்றேன்..' என்றான்

'விட்டுருவாங்களா..? விட்டுருவாங்களா..? அப்படி விட்டுட்டா.. உங்க ரெண்டு பேரு கல்யாணத்தை நானே ஜாம்ஜாம்னு நடத்தி வைக்கிறேன்' என்று ஸ்வேதாவையும் நிதினையும் பார்த்து சொன்னான்.

இதற்குள் 'கிரவுண்ட் ஃப்ளோர்' என்று கணினி குரல் அழைக்க, லிஃப்ட் திறந்துக் கொண்டது

வெளியே ரெண்டு மூன்று காக்கிச்சட்டைக்காரர்கள் துப்பாக்கியுடன் நின்றிருக்க, அவர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த ஹாஸ்பிட்டல் கூட்டமும் நின்றிருந்தது

மேலும் 2 மணி நேரத்திற்கு பிறகு

ஹாஸ்பிடல் ரிசப்ஷன் டேபிளுக்கு அருகே நின்றிருந்த ஸ்வேதா சிரித்தாள். 

எதிரே வார்டுபாய் உடையிலிருந்து கலர் உடைக்கு மாறியிருந்த நிதின் நின்றிருந்தான்

'ஏன் ஸ்வேதா சிரிக்கிறீங்க..'

'நான் இன்னும் உங்களை லவ் பண்றேன்னே சொல்லலை... அதுக்குள்ள அந்தாளு நம்மளை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னானே..?'

'என்ன ஸ்வேதா... அப்போ உங்களுக்கு என்னை இன்னும் பிடிக்கலியா..?'

'என் உயிர் போவக்கூடாதுன்னு கிரிமனலுக்கே ஹெல்ப் பண்ண துணிஞ்சதால கொஞ்சமா பிடிச்சிருக்கு... பார்க்கலாம்... இன்னும் டைம் இருக்கு... நாம இங்கே ஒண்ணாத்தானே வர்க் பண்ணப்போறோம்..' என்று கூறிக்கொண்டிருக்க, அருகில் ஒருவர் வந்து

'மேடம், லிஃப்ட் சர்வீசுக்கு வந்திருக்கோம்... 4த் ஃப்ளோர் டோர் டேமேஜாமே... ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன் எங்கருக்காரு..' என்றான்


- நிறைவு -


Signature

Friday, April 13, 2012

IMPRESS ME... [சிறுகதை]






---------------------------------------------------------
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்…”
---------------------------------------------------------

டீயில் இனிப்பு ரொம்ப அதிகமாக இருந்தது...

'டீ ரொம்ப நல்லாயிருக்கு..' என்று டீயுறிஞ்சிய கண்ணன், தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் த்ரியாவை பார்த்து பொய் சொன்னான்

அவனருகில் அமர்ந்திருந்த அன்பு (கண்ணனின் நண்பன்) கண்ணனைப் பார்த்து முறைத்தான்.

அவன் முறைப்பின் அர்த்தம் இது டீயா..? பாயாசம்னு வேணும்னா சொல்லு... நல்ல டீய நீ சாப்டதே இல்லையா என்று கேட்பது போல் இருந்தது

த்ரியா கண்ணனின் பாராட்டை பெற்றுக்கொண்டு 'அது நான் வைக்கல... எங்கம்மா செஞ்சது..' என்று அம்மாவை கண்காட்ட... அவள் அம்மா அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். கண்ணனும் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்

'தம்பி எப்படி..? டீ காஃபி ரொம்ப விரும்பி சாப்பிடுவாரோ..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனை எடை போட முயன்று கொண்டிருந்தார்.

'அதிகமில்ல சார்... ரொம்ப லிமிட்டா சாப்பிடுவான். அதுவும் ப்ரெண்ட்ஸ்ங்க நாங்க ரொம்ப கம்பெல் பண்ணும்போது மட்டும் லைட்டா சாப்பிடுவான் அவ்ளோதான்..' என்று கண்ணனின் நண்பன் அன்பு உளறினான்

'டேய்... அவர் டீ சாப்பிடுறபத்தி கேட்கறாருடா... நீ வேற ஏதோ சொல்லிட்டிருக்கே' என்று முகத்தில் அவசரமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டு வருங்கால மாமனாரைப் பார்த்து அசடு வழிந்தான்.

பெண் பார்க்கும் படலம் கண்ணனுக்கு ரொம்ப புதிது... ஒரே சௌகரியம்.. த்ரியாவும் கண்ணனும் ஏற்கனவே காதலர்கள்... கண்ணன் வீட்டில் ஏற்கனவே சம்மதம்... த்ரியா வீட்டில்தான் இன்னும் இழுபறி... எனவே இன்று நடப்பது மாப்பிளையை மாமனார் பார்க்கும் படலம்... இன்றிவன் தேறிவிட்டால்... கல்யாணம் நிச்சயம்...

ஆனால் நிலைமை அவ்வளவு சாதகமாய் இல்லை... கண்ணன், என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். யார் முகத்தை பார்த்தாலும் அவனை எடை போடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்... யார் கண்ணையும் சந்திக்க தைரியமில்லாமல் டீ உறிஞ்சிக் கொண்டே அவர்கள் ஹாலில் இருக்கும் மீன் தொட்டியை பார்த்தான். அழகாக மீன்கள் கவலையில்லாமல் அங்குமிங்கும் பறப்பது போல் மிதந்துக் கொண்டிருந்தது... அக்காட்சி மனதை சற்றே லேசாக்கியது.

த்ரியா மிகவும் பதற்றமாய் இருந்தாள்...

தன்னைக்காட்டிலும் கண்ணனுக்கு அவள் முகம் பார்க்க கவலையாக இருந்தது... த்ரியாவை நிதமும் சந்தோஷமாய் பார்க்க நினைத்தவன், இன்று தன்னால் அவள் முகம் வாடிப்போயிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை...

இன்று என்ன நடக்குமோ என்று இருவரின் மனமும் போராடிக் கொண்டிருந்தன...

அங்கிருந்த மௌனத்தை அவன் நண்பன் அன்பு உடைத்தான்

'சார், வரப்போற ‘அப்ரெய்சல்’லருந்து கண்ணன் ரேஞ்சே தனி... கண்டிப்பா இவன்தான் டீம் லீடர்... ப்ரொமோஷன் நிச்சயம்' என்றான்

'இவர் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டா தம்பி..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனைப் பார்த்து கேட்டார்...

'ஆமா சார்..'

'உங்க பேரென்ன தம்பி..?' என்று அன்பை பார்த்து கேட்டார்

'சார் எ.. என் பேரு.. அன்பு..'

'நீங்க என்ன சம்பாதிக்கிறீங்க..?'

சொன்னான்

'நல்லது... உங்களுக்கு சிகரெட்... லிக்கர்... பழக்கமெல்லாம் உண்டா..?'

அன்பு திணறினான். திரும்பி கண்ணனைப் பார்த்தான்.

கண்ணன் சட்டென்று, 'உண்டு சார்.. ஆனா அவங்கிட்ட ஏன் இதெல்லாம் கேக்கறீங்க..?' என்றான்

'பழைய டெக்னிக்தான்... உன் நண்பனை பற்றி சொல்... உன்னைப் பற்றி சொல்கிறேன்... கேள்விப்பட்டதுண்டா..?' என்றார்

'ஆனா, பொண்ணை எனக்குக்குத்தானே கொடுப்பீங்க..?' என்று அசந்தர்ப்பமாய் கண்ணன் கேட்டுவைக்க... அவர் த்ரியாவைப் பார்த்தார்

த்ரியா மனதிற்குள் கண்ணனை திட்டிக் கொண்டாள் 'ஏண்டா அலையறே... ஒழுங்கா பதில் சொல்லு.. நான் உனக்குத்தான்' என்று சொல்லிக் கொண்டாள்

கண்ணன் சட்டென்று எழுந்தான்... 'பாத்ரூம் எங்கயிருக்கு..' என்று த்ரியாவைப் பார்த்து கேட்டான்... அவள் தன் அம்மாவைப் பார்க்க...

அவள், 'இப்படி வாங்க மாப்ள' என்றாள்…

மாப்ள... ஆஹா... கண்ணன் குளிர்ந்தான்... அவள் சுட்டிக்காட்டிய திசையில் சென்றான். கதவை தாழிட்டுக் கொண்டான். அழாத குறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

நான் என் வாழ்நாளில் இப்படி சொதப்பியதில்லை... த்ரியாவிடம் காதல் சொல்லும்போதுகூட இப்படி பயந்ததில்லை... இந்த இண்டர்வியூ மட்டும் சுமூகமாக முடிந்தால்... நானும் த்ரியாவும் கணவன் மனைவி... நினைத்துப் பார்க்கவே டீயை விட இனிமையாக இருந்தது...  கடவுளே.. என்னால் முடியவில்லை... ஏதேனும் அற்புதத்தை நிகழ்த்து... வீட்டுக்கருகில் இருக்கும் கோவிலுக்கு பாத யாத்திரையாய் நடந்து வருகிறேன்... என்று மனதில் வேண்டிக் கொண்டான்.

மீண்டும் ஹாலில்...

த்ரியாவின் அப்பா 'நீங்க என் பொண்ணை இம்ப்ரெஸ் பண்ண மாதிரி என்னை இம்ப்ரெஸ் பண்ணவேயில்லையே தம்பி... அப்புறம் எப்படி..?' என்று தீவிர சிந்தனையுடன் கூறினார்.

'சார்.. நான் உங்க பொண்ணை நல்லா வச்சிப்பேன் சார்.. ஐ மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வச்சிப்பேன் சார்...' என்றான்... டேய் ஏண்டா உளர்றே என்று உள்ளுக்குள தன்னைத்தானே திட்டிக்கொண்டான்

'இல்ல தம்பி.. லவ் வேற.. லைஃப் வேற...' என்று அவர் கிட்டத்தட்ட இல்லை என்பது போல் பதில்கூறவே, கண்ணனுக்கு வயிறு கலக்கியது... அழுகை வரும்போலிருந்தது.. அருகிலிருந்த மீன் தொட்டியில் மீன்கள் அங்குமிங்கும் தாவித்தாவி அசாதாரணமாய் சுற்றியது... கண்ணனுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது...

ஹாலில் அனைவரும் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு கலவரமாயினர்...

'டேய் தலை சுத்துறமாதிரியில்ல..?' என்றான் அன்பு... இவனுக்கு எப்படி தெரியும் என்று கண்ணன் எண்ணும்போது...

'என்னனங்க பில்டிங் ஆடுது' என்று த்ரியாவின் அம்மா கத்தினாள்... 

'ஹய்யோ... பூகம்பம்... பூகம்பம்...' என்று த்ரியாவின் அப்பாவும் கத்தினார்...

கண்ணன் உஷாரானான்... ஆமாம்... தனக்கு வந்த தலைசுற்றல் பூகம்பத்தால்தான் என்று தெரிந்ததும் சுதாரித்துக் கொண்டு எழுந்தான்...

'வாங்க... வெளிய போயிடலாம்..' என்று அங்கிருந்து அனைவரையும் துரிதமாய் ஃப்ளாட்டை விட்டு வெளியே தள்ளிக்கொண்டு தானும் வெளியே வந்தான்... அது 4ஆவது மாடிக்கட்டிடம்... மற்ற ஃப்ளாட்டுகளிலிருப்பவர்களும் வெளியேறிக்கொண்டிருந்தனர்...

'கீழே இறங்குங்க... சீக்கிரம் சீக்கிரம்..' யாரோ கத்தினார்கள்

அன்பு லிப்ட் பட்டனை அழுத்தினான்

'சார் லிஃப்டு வேண்டாம்... படியில இறங்கிப் போங்க...' மீண்டும் ஏதோ குரல்

'ஏன் சார்... லிஃப்ட் கவுந்துடுமா..?' அன்பு கேட்க

'இல்ல... இது கரண்ட் கட் ஆகுற டைம்...' என்று த்ரியா கூறிக்கொண்டே படியிறங்கினாள். கண்னன் துணிச்சலாய் அவள் கையைப் பற்றிக்கொண்டு அவளை கீழே இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.

அடப்பாவி தன்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கீழே ஓடுகிறானே... என்று அன்பு அவனைத் திட்டிக் கொண்டே இறங்கினான்.

படியில் இறங்கும்போதும் த்ரியாவின் அம்மா இன்னொரு ஃப்ளாட் ஆண்டியிடம் 'அதோ பொண்ணு கைய பிடிச்சிட்டு போறாரே... அவர்தான் மாப்ள..' என்று கூறிக்கொண்டிருந்தாள்...

அதற்கு அந்த ஆண்டி... 'அப்படியா.... பையன் என்ன பண்றான்' என்றாள்

அன்பு எரிச்சலுடன் 'பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டு இருக்கான்...' என்றதும் அந்த ஆண்ட்டி அன்பை பார்த்து முறைத்தாள்... 'சீக்கிரம் கீழே போங்க... அப்புறம் பேசிக்கலாம்' என்று எரிச்சலுடன் இறங்கினான்

அந்த அபார்ட்மெண்டில் இருந்த அனைவரும் வெளியேறினர்... இவ்வளவு பேரும் இந்த அபார்ட்மெண்ட்டில் இருந்தார்களா.... என்றெண்ணும்படி ஒரே கூட்டமாய் இருந்தது... அனைவரும் பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர்...

பபுள் டாப்பில் தண்ணீர் குலுங்கியதாம்... டேபிள் சேர் குலுங்கியதாம்... சில பொய்யர்கள், கட்டிலிலிருந்து அந்தரத்தில் 5 ஐடி தூக்கிப்போடப்பட்டார்களாம் இப்படி ஏகத்துக்கும் குரல்கள் காதில் விழுந்துக் கொண்டிருந்தது

ரோட்டில் ஓரமாக மூடியிருந்த கார்-ஐ சுட்டிக்காட்டி ஒருவர் உரக்கமாக... 'அங்க பாருங்க... கார் இன்னமும் ஆடுது...' என்றார்... உண்மைதான் கார் அசைந்துக் கொண்டிருந்தது. அனைவரும் சென்று தொட்டுப் பார்த்தனர்...

ஃபோன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் லைவ் அப்டேட் கொடுத்தார்

'சுமித்ரா தீவுல நிலநடுக்கமாம்..'

'சார் அது சுமத்ரா தீவு..'

'நானும் அதான் சொன்னேன்... சுனாமி வார்னிங்காமே...' என்றார்

இதைக்கேட்ட ஒரு கிழவர் 'அய்யோ சுனாமியா..? கண்ணா..?' என்று வானத்தை பார்த்து புலம்பினார்

‘சொல்லுங்க..’ என்று கண்ணன் திரும்பினான்.

‘உன்னையில்ல...’ என்று த்ரியா அவனை தன் பக்கம் திருப்பி பாவமாக பார்த்தாள்... கும்பலில் இருவரும் சற்று தள்ளியே நின்றிருந்தனர்... கண்ணன் இன்னமும் த்ரியாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். 

கண்ணன் அவளைப் பார்த்து 'ஹே சாரிப்பா..' என்றான்

'விடு கண்ணா பரவாயில்ல... நீ என்ன பண்ணுவே... அப்பாதான் பிடிவாதம் பிடிக்கிறாரே... '

'நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணதுக்கு ஒரு ரீசன் இருக்கு... அவரை எப்படி இம்ப்ரெஸ் பண்றது..?' என்றான். இதற்குள் த்ரியாவின் அப்பாவும் அம்மாவும் இவர்களை நெருங்கி வந்தனர்

கண்ணன் அவரிடம், ‘ஆர் யூ ஆல்ரைட் அங்கிள்..’ என்று கேட்டான்

அவர் பதிலளிக்காமல் த்ரியாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்...

ரோட்டில் செல்பவர் அனைவரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றார்கள்

‘5 மணிக்கு சென்னையிலயும் சுனாமி வருதாம்..’ என்று யாரோ செல்ஃபோன் கேட்டு ஆருடம் சொன்னதும், கூட்டத்தில் முணுமுணுப்பு அதிகமாக கேட்டது...

‘ரோலண்ட் எமரிஃக் வாஸ் ரைட்... 2012 படத்துல காட்டுனதுதான் நடக்கப்போகுது‘ என்று ஒரு டீன் ஏஜ் பையன் ஆரம்பித்தான்...

‘பிரதர்... அது மாயன்ஸ் சொன்னது... நாட் எம்ரிஃக்...‘ என்று கண்ணன் மறுத்தான்

‘வாட்எவர்..’ என்று புலம்பியபடி அந்த விடலையன் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று அனைவரையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்

‘என்னடா பண்றே.. விழுந்துடப்போறே..?’ என்று ஒருவர் அதட்டினார்

‘ஃபேஸ்புக்ல போடுறதுக்கு ஒரு ஃபோட்டோ..’ என்றான்

‘இந்தவாட்டி சுனாமி வந்தா 30 கி.மீ. கடல் வெளிய வந்துருமாம்... கிட்டத்தட்ட ஆவடி வரைக்கும் பீச் இருக்குமாம்..’ என்று ஒருவர் கிலி கிளப்பினார்

உடனே த்ரியாவின் அம்மா அவர் கணவனைப் பார்த்து... ‘ஏங்க, பேசாம உங்கம்மா வீடு ஒண்ணு ஆவடியில இருக்குல்ல... அங்க போயிடலாம்’ என்றாள்

‘டேய்... கவனிச்சியா... த்ரியாவை நீ கட்டிக்கிட்டா, அந்த பீச் ஹவுஸ் உனக்குத்தான்..’ என்று அன்பு கண்ணனின் காதோரம் கிசுகிசுத்தான்

ஒரு பெண்மனி திடீரென்று... ‘ஐயோ..?’ என்று கத்தினாள்...

‘என்னாச்சு..’

‘என் மாமியார் ரூம்லியே இருக்காங்க... பயத்துல நான் மட்டும் இறங்கி வந்துட்டேன்’ என்று அழுதாள்

‘நல்ல மருமகள்..’ என்று அன்பு சொல்லிக்கொண்டான்...

‘அடக்கடவுளே... அவங்களால இறங்க முடியாதே..! யாராவது போய் தூக்கிண்டு வாங்களேன்..?’ என்று கூறிய அந்த பெண் கூட்டத்தில் இளைஞனாய் இருந்த கண்ணன் பக்கம் திரும்ப

கண்ணன் சுற்றும் முற்றும் பார்த்தான். பலரும் இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

இம்ப்ரஸ் செய்ய இதுதான் நேரமோ.. என்று மனதில் நினைத்துக்கொண்டு

‘எந்த ஃப்ளாட்டு..’ என்றான்

‘9th ஃப்ளோர் ஃப்ளாட் நம்பர் N7’

‘ஓகே..’ என்று கண்ணன் வீரமாக கிளம்ப, த்ரியா அவன் கைகளைப் பிடித்தாள்

‘த்ரியா.. ஐ வில் பி ஃபைன்... டோண்ட் ஒர்ரி...’

‘வரும்போது அப்படியே என் ஃப்ளாட்லருந்து செல்ஃபோனையும் எடுத்துட்டு வந்துருங்களேன்... விட்டுட்டு வந்துட்டேன்’ என்றாள்.

அன்பு சிரித்தான். கண்ணன் அவனையும் இழுத்துக்கொண்டு ‘வாடா போலாம்...’ என்று வீரமாக அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான்.

அன்றுகாலைவரை கலகலவென்று இருந்த அந்த அபார்ட்மெண்ட்... இப்போது யாருமேயில்லாமல் கரண்ட்டும் இல்லாமல் காலியாக இருந்தது... படிக்கட்டில் மெல்ல ஏறிக்கொண்டிருந்தார்கள்

‘டேய் என்னை ஏண்டா இழுத்துட்டு வந்தே..’ என்று அன்பு கோவப்பட்டான்

‘த்ரியா அப்பாவை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ணனும்டா...’ என்றான்

‘நீ உன் ஆளோட அப்பாவை இம்ப்ரெஸ் பண்றதுக்கு என்னை ஏண்டா உள்ளே இழுத்தே... பில்டிங் விழுந்தா மூணு பேரும் கம்ப்ரெஸ் ஆயிடுவோம்..’

‘மூணு பேரா..?’

‘மாடியில இருக்கிற ஆயாவையும் சேத்து சொன்னேன்..’

‘அவங்க ஆயா இல்லடா பாட்டி...’

‘ரொம்ப முக்கியம்... சீக்கிரம் ஏறு..’

ஒன்பதாவது மாடியில் ஃப்ளாட்டிற்குள் நுழைந்தனர்...

அறை திறந்தே இருந்தது...

டிவி ஓடிக்கொண்டிருந்தது... (இண்வர்டர் உபயம்)

டிவியில் LIVE என்று போட்டிருந்தது… கடல் அலை உயரே கிளம்பி ஊருக்குள் புகுந்து கார், பஸ், என எதையும் விட்டு வைக்காமல் துவம்சம் செய்ய… தொடர்ந்து வந்த அலைகள் மக்கள் கூட்டத்தை ஒரே வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு… என்று காட்சி படுமோசமாக தெரிய… 

அன்பு அதைப்பார்த்து பதறினான்... ‘போச்சுடா... 5 மணிக்கு வரவேண்டிய சுனாமி சீக்கிரமா வந்திடுச்சு போலருக்கு...’ என்றான்

கண்ணனும் உறைந்தான்... அடக்கடவுளே... த்ரியாவுடனான வாழ்க்கை வெறும் கனவுதானா...

டிவியில் ‘நேயர்களே இதே போல் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் மீண்டும் சுனாமி வரும் அபாயம் உள்ளது... இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 2004ல் சுனாமி தமிழகத்தை தாக்கிய ஒரு காட்சி..’ என்றான்

அன்பு கடுப்பானான்…

‘அதை ஏண்டா இப்போ காட்றீங்க... தியேட்டர்ல புதுப்படம் பொட்டி வரலைன்னா பழைய படத்தை போடுவாங்கல்ல.. அந்தமாதிரி போடுறாங்க பாரு’ என்று திட்டிக்கொண்டே அன்பு டிவியை அணைத்தான்... 

ஃப்ளாட்டில் கண்ணன் அங்குமிங்கும் தேடினான்... அறையில் பாட்டி கட்டிலில் படுத்திருந்தாள்...

‘இதோ இருக்காங்க.. அப்படியே தூக்கிடலாம் வாடா...’ என்று கண்ணன் அவளை தூக்க போக, பாட்டி கையிலிருந்து ஊசியால் கண்ணனின் கையில் குத்தினாள்

‘ஆஆ...’ என்று விலகினான்

‘என்னடா ஆச்சு..?’

‘குத்துறாங்கடா..? கையில ஊசியிருக்கு ‘ என்றான்

‘டேய்.. யாருடா நீங்க...’ என்று பாட்டி அதட்டினாள்

‘ஐயோ... பாட்டி.. நாங்க உன்னை காப்பாத்த வந்துருக்கோம்..’

‘தனியாய இருக்கிற பொம்பளை கிட்ட கலாட்டா பண்றீங்களா..?’

‘ஆமா... ஈவ் டீசிங் பண்றாங்க... பாட்டி உனக்கே இது ஓவரா இல்ல...’ என்று கண்ணன் அவள் கையிலிருந்த ஊசியை பிடுங்கி தூர எறிந்தான்

‘தூக்குடா பாட்டிய..’  என்று இருவரும் அவளைத் தூக்கி கொண்டு நடக்க...

பாட்டி அவர்களிடம், ‘டேய் இருங்கடா... 5 மணிக்கு டிவியில கைலாச யாத்திரை போடுறாங்க நான் பாக்கணும்..’ என்றாள்

‘5 மணிக்கு கைலாசத்துக்கே போய் பாக்கலாம் பாட்டி... சுனாமி வருதாம்...’ என்றான்

‘என்னடா உளர்றே...’ என்றாள்

‘உனக்கு என்ன வயசு பாட்டி..?’ என்று அன்பு கேட்டான்

'படிச்சவன்தானே நீ... பொம்னாட்டிகிட்ட வயசு கேக்க கூடாதுன்னு தெரியாதா உனக்கு..' என்றாள்

'என்ன ஒரு 90 இருக்குமா..'

‘அடப்பாவி 84தான்டா ஆறது...’ என்றாள்

‘டேய்... நம்ம ரெண்டு பேரு வயசை கூட்டினாலும் இவங்க வயசு வரலை... இவங்களை காப்பாத்துறதுக்கு நம்ம ரெண்டு பேரு உசுர பணயம் வைக்கணுமா..?’ என்றான்

‘டேய் பாவம்டா..’ என்று கண்ணன் கருணை காட்டினான்

திடீரென்று அன்பு கால்கள் குறுகுறுத்தது ஒருவிதமாக அதிர்ந்தது...

‘ஐயோ.. மறுபடியும்... ஆடுது... ஆடுது..’ என்று கத்தினான்

‘என்னடா... என்னாச்சு..’ என்று கண்ணனும் பதறினான்

‘சே.. சாரிடா, பேண்ட் பேக்கெட்ல மொபைல் வைப்ரேட் ஆச்சா... நான் பயந்துட்டேன்’ என்று அமைதியானான்

‘முட்டாப்பய..’ என்றாள் பாட்டி

இருவரும் நாலாவது ஃப்ளோருக்கு வந்தடைந்து த்ரியாவின் ஃப்ளாட்டில் நுழைந்தனர்... கண்ணன் த்ரியாவின் மொபைலை தேடி எடுத்துக் கொண்டான்

அந்த ஃப்ளாட்டின் மெயின் கதவில் ஏதோ வித்தியாசமான எல்க்ட்ரானிக் பூட்டு பொறுத்தப்பட்டிருக்க... அதை ஆர்வமாய் பார்த்த அன்பு ‘என்னடா லாக் சிஸ்டம் இது.. வித்தியாசமாயிருக்கு...’ என்று கூறியபடி கதவை மூடினான். பட்டென்று மிகத்தீவிரமாக அது மூடிக்கொண்டது...

‘என்னடா பண்ணே..?’ என்று கண்ணன் அதிர்ச்சியுடன் வந்து கதவை திறக்க முயல... திறக்க முடியவில்லை... அந்த எலக்ட்ரானிக் நம்பர் சிஸ்டத்தில் கால்குலேட்டர் நம்பர் பேட் போல் எண்களைக் காட்டியது...

‘அடப்பாவி... இது நம்பர் லாக்டா... நம்பர் தெரியாம துறக்க முடியாது...’ என்று கண்ணன் கோபமாக கத்தினான்

‘அழகான பொண்ணு இருக்கிற வீட்டுக்கெல்லாம் இப்போ நம்பர் லாக்-லாம் வைக்கிறாங்கன்னு எனகெப்படிடா தெரியும்..’ என்று அன்பு புலம்பினான்

‘5 மணி ஆச்சாடாப்பா..?’ என்று அந்த பாட்டி விபரீதம் புரியாமல் கேட்டது... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்... திடீரென்று மீன் தொட்டி மீண்டும் ஆட்டம் கண்டது... சுற்றும் முற்றும் பார்க்க... ஹால் மீண்டும் அதிர்ந்தது.

‘அய்யோ... ரெண்டாவது ஷேக்... மறுபடியும் பூகம்பம்..’ என்று அன்பு கத்தினான். கண்ணன் அந்த கதவை திறக்க முயன்று முடியாதவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான்... பால்கனி தெரியவே... ஓடிச்சென்று அதை எட்டிப் பார்த்தான். அந்த பால்கனி, கட்டிடத்தின் பின்பக்கத்தில் அமைந்திருந்தது... ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி... யாரையும் உதவிக்கும் கூப்பிட முடியாது... என்ன செய்யலாம் என்று பயந்த நிலையில் நின்றிருந்தான்..

இம்முறை ஆட்டம் அதிகமாக இருக்கவே... அன்பைப் பார்த்து ‘டேய் உள்ள இருக்கிறது ரிஸ்க்… தூக்குடா பாட்டிய..?’ என்றான்

…………………

அதே நேரம் வெளிப்புறத்தில்... இரண்டாவது முறையாக பில்டிங் அதிர்ந்துவிட்டு பிறகு அமைதியானதைப் பார்த்து வெளியே நின்றிருந்த அனைவரும் அய்யோ.. அய்யோ.. என்று அலறிக்கொண்டிருந்தனர்...

த்ரியாவும் பயத்தில் கிட்டத்தட்ட அழுதுக் கொண்டிருந்தாள்... 

'அழாதேம்மா... வந்துருவாங்க’ என்று அவள் அப்பா தேற்றிக்கொண்டிருந்தார்...

அதோ பாருங்க கார் இன்னும் ஆடுது... என்று மீண்டும் காரை வைத்து நிலநடுக்கத்தை அளந்து கொண்டிருந்தனர்.

‘இரண்டாவது தடவை ட்ரெமர் வர்றது ரொம்ப ஆபத்து... பில்டிங்க்கு உள்ள போனவங்களுக்கு என்னாச்சோ..?’ என்று ஒருவர் சங்கூதினார்...

‘ஐயோ... என் மாமியாருக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவர் என்னை தொலைச்சிடுவார்...’ என்று பாசமான மருமகளும் புலம்பிக்கொண்டிருந்தாள்...

இதைப் பார்த்து மேலும் பொறுமையாயிருக்க மனம் வராமல், த்ரியா அருகிலிருக்கும் ஒருவரிடம் மொபைல் வாங்கி கண்ணன் நம்பருக்கு டயல் செய்தாள். லைன் கிடைத்தது

‘கண்ணா..?’

‘த்...த்... த்ரியா.. சொல்லு..?’

‘எங்கேப்பா இருக்க..? மறுபடியும் நிலநடுக்கம் வந்துச்சு... சீக்கிரமா வெளியே வா..?’ என்றாள்

‘ந... நான் பில்டிங்கலருந்து வெளியே வந்துட்டேன்... ஜஸ்ட் தட்... இ... இன்னும் லேண்ட் ஆகலை..’ என்றான்

‘என்னடா குழப்பறே..?’ என்றாள்

‘உ... உங்க.. ஏரியாவுல எவ்வளவு நேரம் கரண்ட் கட்...?’ என்றான்

‘இப்போ 4.40 ஆகுது... 5 மணிக்கு வந்துடும்...’

‘பெட்டர் 5 மணிக்கே வரட்டும்...’ என்றான்

‘ஏன் கேக்குறே..?’

‘ஏன்னா.. உங்க அபார்ட்மெண்ட் பவர் லைன்லருந்துதான் கி...கீழ இறங்கிட்டு இருக்கோம்..’ என்றான்

‘வாட்..?’

-------------

பாட்டியை கண்ணன் உப்பு மூட்டை போல் தூக்கியிருக்க... மூவரும் அந்த அபார்ட்மெண்டின் பவர் கனெக்ஷன் கொண்டு செல்லும் பைப்லைனில்... டூம் போன்ற பாதையில் இறங்கிக் கொண்டிருந்தனர்... இதற்குள் அங்கு த்ரியாவும் வந்து சேர அவளைத் தொடர்ந்து இன்னும் சிலரும் வந்தடைந்தனர்... மேலே அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்

மணி 4.50...

‘கரண்ட் வர்றதுக்கு இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு... சீக்கிரம் இறங்குங்க..’ என்று ஒருவர் கீழிருந்து கத்திக்கொண்டிருக்க...

கண்ணன் முதுகில் அமர்ந்திருந்த பாட்டி அவன் கழுத்தை இறுகப்பற்றியிருந்ததால் திணறினான்

‘பாட்டி... க... க... கழுத்து....’

‘ஏண்டா... நான் பாட்டுக்கு சிவனேன்னு ரூமுல படுத்துட்டிருந்தேன்... இந்த வயசுல என்னை தூக்கிட்டு போறியே நியாயமா..?’ என்றாள்

‘ஆமா பாட்டி... உன்னை கடத்திட்டு போய் கல்யாணமா பண்ணப்போறோம்... பேசாம வா..?’ என்று அன்பு அந்தரத்திலிருந்தே அதட்டினான்...

‘இன்னும் 8 நிமிஷம்தான் இருக்கு...’ என்று மீண்டும் தரையிலிருந்து குரல்

‘ஏன் சார்... யாரு சார் அது.. ரன்னிங் கமெண்ட்ரி குடுக்கிறது... இ... இங்க சொல்றதுக்கு பதிலா... E.B.ஆஃபீசுக்கு ஃபோன் ப.. பண்ணி சொல்லலாமில்ல..?’ என்று கண்ணன் கூறவே

‘அட ஆமால்ல... இ.பி. நம்பர் உங்கிட்ட இருக்காப்பா..’ என்று கீழே முணகல் கேட்டது...

‘சரியாப் போச்சு..’ என்று மீண்டும் இறங்க ஆரம்பித்தனர்...

ஒருவழியாக தரையைத் தொட்டு பாட்டியை பத்திரமாக இறக்கி விட்டதும்... பட் என்று சத்தத்துடன் கரண்ட் வந்தது... அனைவரும் தன்னையறியாமல் கைதட்டினர்...

மீண்டும் அனைவரும் கூடியிருந்த வெளிப்புற இடத்துக்கு வந்தனர்... வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லாமல் (பயம்தான்..) அனைவரும் அங்கேயே ஆளுக்கொரு திட்டிலும், மேட்டிலும் அமர்ந்தனர்...

‘சார் டீ..’ என்று ஒருவன் வந்து டீயை நீட்டினான்

‘வேண்டாம்ப்பா..’ என்று கண்ணன் மறுத்தான்

‘சார்... பாட்டிய காப்பாத்தியிருக்கீங்க... இந்த ரோட்லியே இன்னிக்கி நீங்கதான் ஹுரோ... உங்களுக்காகவே சூப்பரா செஞ்ச ஸ்பெஷல் சுனாமி டீ... சார்.. வேண்டாம்னு சொல்லாதீங்க...’

‘சுனாமி டீயா... ஹாஹ்ஹா...’ என்று சிரித்தபடி வாங்கி குடித்தான். அவனது வருங்கால மாமியார் போட்ட டீயை விட நன்றாகவே இருந்தது...

அன்பு அவனருகில் வந்தான்... ‘ஏண்டா... சும்மாயிருந்த பாட்டிய தூக்கி தோள்ல போட்டுட்டு வந்துட்டு... ஹுரோவா  நீ... இதை  வெளிய சொல்லாத…’ என்றான்

இப்போது த்ரியாவின் அப்பா வந்தார்...

‘தம்பி இங்க எதுக்கு உக்காந்துக்கிட்டு... அதான் ஒண்ணும் ஆபத்து இல்லன்னு ஆயிடுச்சே... வாங்க வீட்டுக்குள்ளேயே போய் பேசுவோம்...’

‘இருக்கட்டும் சார்... காலையிலியே உங்களுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுத்துட்டேன்... ரொம்ப சாரி சார்... ஆனா மறுபடியும் வருவேன் சார்... உங்களை எப்படி இம்ப்ரெஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்... ஏன்னா எனக்கு த்ரியா ரொம்ப முக்கியம்’ என்று அவளையே பார்த்தான்

‘வரவேண்டியது நீயில்லப்பா நாங்கதான்... வாழ்கையே தற்காலிகம்னு ஆயிடுச்சி... இன்னிக்கி வராத சுனாமி வந்திருந்தா... நான் என்னத்தை கட்டிக்கிட்டு போயிருப்பேன்... சீக்கிரமே உங்கப்பா அம்மாவை பாக்க நாங்க வர்றோம்...’ என்று கூற... த்ரியா வெட்கப்பட்டாள்...

‘ஹே..!’ என்று சந்தோஷத்தில் கண்ணனும் குதித்தான்...

கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து அனைவரும் மீண்டும் கான்க்ரீட் கூண்டில் சென்று அடைப்பட்டுக்கொண்டதும்...

த்ரியாவும் கண்ணனும் மட்டும் அவர்களின் பைக் பார்க்கிங் இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்...

சற்று தொலைவில் நின்றிருந்த அன்பு... ‘அதான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்கள்ல... போதும் வாங்க கண்ணன் சார்..’ என்று அலுப்புடன் கூப்பிட

‘சரி.. நான் கிளம்புறேன்... பை குட்நைட்’ என்று திரும்பி திரும்பி பார்த்து வெட்கப்பட்டு கொண்டே அன்பு ஏறியிருந்த பைக்-ஐ வந்தடைந்தான்.

த்ரியா உள்ளே சென்று மறைந்தாள்

அன்பும், கண்ணனும் கிளம்பி போகும்போது...

அன்று அடிக்கடி ஆடிக்கொண்டிருந்த அந்த பூகம்ப கார்... மீண்டும் ஆடிக்கொண்டிருந்தது...

அந்த காரை இருவரும் ஆர்மவாக நெருங்க சடாரென்று அந்த கார் கதவு திறந்து கொண்டது... அதிலிருந்து ஒரு புடவை அணிந்த பெண் விறுவிறுவென்று நடந்து எதிரில் இருக்கும் இன்னொரு தெருவில் சென்று மறைந்துவிட... காருக்குள்ளிருந்து கண்ணாடியணிந்த ஒருவன் கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து காரை மீண்டும் பூட்டிவிட்டு எதுவும் தெரியாதபடி நடந்து அபார்ட்மெண்டுக்குள் நுழைந்து சென்றான்...

அன்பு கண்ணனைப் பார்த்து ‘இப்ப தெரியுதா… ஏன் ஊருக்குள்ள பூகம்பம்லாம் வருதுன்னு..’ என்றான்

- நிறைவு -



Signature

Monday, April 02, 2012

ஒரு பெண்... ஒரு பூச்சி... [சிறுகதை]






பரந்து விரிந்திருந்து அந்த மணற்பரப்பில் திடீரென்று விழுந்த ஒளிக்கீற்றில் இரண்டு நிர்வாண உடல்கள் பொத்தென்று விழுந்தது...


விழுந்தவர்களில் ஒரு ஆண் ஒரு பெண்... இருவரும் அசிங்கமில்லாத முழு நிர்வாணக் கோலத்திலிருந்தனர்... ஒருவரையொருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்... சுற்றிலும் வெற்று மணலும், ஆங்காங்கே முளைத்திருந்த காட்டுச்செடிகள் கரிய நிழலும் தெரிந்துக் கொண்டிருந்தது...


இருவரும் வெவ்வேறு திசையில் ஓடிப்போய் அந்த காட்டுச்செடிக்குப்பின்னால் மறைவாய் நின்றுக் கொண்டனர்.. சுற்றும் முற்றும் பார்த்தனர்... 


அந்த இடம், ஏதோ ஆறு ஓடும் தடம்போல் தோன்றியது...


அந்த ஆண்... அந்த இடத்தை அறிந்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்... பார்வையால் தூரங்களை அளந்தான்... வெகு தொலைவில் ஒரு ஓலைக்குடிசை மட்டும் தெரிந்தது...


அந்த பெண்ணைப் பார்த்து... அந்த குடிசைக்கு போகலாம்... என்று சைகை செய்தான்


இருவரும் அந்த குடிசையை நோக்கி ஓட ஆரம்பித்தனர்...
--------------------


குடிசைக்குள்... ஒரு லாந்தர் விளக்கு மிகவும் குறைவான வெளிச்சத்துடன் எறிந்துக் கொண்டிருந்தது...  தரையில் ஒரு மூதாட்டி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கருகில் ஒரு நாய் உறங்கிக் கொண்டிருந்தது...


ஏதோ உள்ளுணர்வால், திடீரென்று அந்த நாய் விழித்துக் கொண்டது... குடிசையின் பின்வாசலைப் பார்த்து குரைத்தது...


'வௌவ்... வௌவ்...' என்ற பயங்கர குரைத்தலைக் கேட்டு பாட்டி திடுக்கிட்டு கண்விழித்தாள்.


தூக்கம் கலைந்த பாட்டி, 'ஏய் மணி... கம்முனக்கட..' என்று அதட்டியபடி மீண்டும் உறங்க எத்தணித்தாள்


நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருக்கவே... எழுந்து சென்று பின்வாசல் பக்கம் நோட்டம் விட்டாள்... நாய் அவளுக்கு முன்பாய் தாவிச் சென்று வெளியே ஒரே திசையைப் பார்த்து குரைத்தது... 


வெளியே துணி காயவைக்கும் கம்பியைப் பார்த்த அந்த மூதாட்டி  'அடப்பாவிகளா... கனவாணிப்பசங்களா... எம் புடவையை கொண்டு போய்ட்டீங்களா..' என்று புலம்ப ஆரம்பிக்க...


'இல்ல பாட்டி... நான்தான் எடுத்தேன்... மன்னிச்சிக்குங்க' என்று ஒரு இனிமையான பெண்ணின் குரல் கேட்டது.. குரல் வந்த பக்கமாய் பார்த்து நாய் மீண்டும் வெறியுடன் குரைக்க...


'ந்தா.. மணி... சும்மாயிரு...' என்று அந்த பாட்டி குரல் வந்த பக்கமாய் பார்வையை கூர்மையாக்கினாள்  அங்கே ஒரு அழகான இளம்பெண் தனது சேலையை வெறுமனே சுற்றியபடி உடல்மறைத்து இருட்டில் நின்றிரு்நதாள்...


'யாரும்மா நீ..' என்று அந்த இளம்பெண்ணைப் பார்த்து பாட்டி கேட்க... புடவையை  கட்டத்தெரியாமல் வெறுமனே சுற்றியிருந்த அந்த அழகான பெண் அருகில் வந்தாள்...


பாட்டி குழப்பத்துடன் 'இந்நேரத்துல தனியா இங்கென்னம்மா பண்றே..'


'அவ தனியா இல்ல பாட்டி... நானும் கூட இருக்கேன்..' என்றபடி அந்த பெண்ணுக்குப் பின்னால், அவளுடன் வந்த ஆணும், நிர்வாணக்கோலத்தில் தன்னை மறைத்தபடி எட்டிப்பார்த்தான்.


நாய் மீண்டும் குரைத்தது...


பாட்டியின் கண்கள் குழப்பத்தில் விரிந்தது...
-------------------------


குடிசைக்குள் விளக்கு பிரகாசப்படுத்தப்பட்டிருக்க... அந்த ஆணும் பெண்ணும் பழைய சோற்றை குழைத்து பசியாறிக் கொண்டிரு்நதார்கள்... பாட்டி இவர்கள் வெறியுடன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.


'யாருப்பா நீங்க..?'


'என் பேரு கவின்... இவ மின்மினி...'


'ரெண்டு பேரும் காதலிச்சி வூட்டை வுட்டு ஓடி வந்துட்டீங்களா..?'


'ஆமா.. பாட்டி...' என்று வாயில் பழைய சோற்றுடன் கவின் பதிலளித்தான்...


'ஏன் இப்படி அம்மணக்கட்டையா சுத்திட்டிருக்கீங்க... யாராவது வழிப்பறி பண்ணிட்டாங்களா..?' என்று பாட்டி கேட்க


'இல்ல பாட்டி.. சொன்ன நீங்க நம்பமாட்டீங்க... நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் உசுருக்குசுரா காதலிச்சோம்... ஒரு நாள் ராத்திரி எங்களை வேற்றுகிரகவாசிகள் கடத்திட்டாங்க..'  என்று அதிர்ச்சியுடன் மின்மினி கூறினாள்...


பாட்டி ஏளனச்சிரிப்புடன் 'என்ன..? வேற்றுகிரகவாசிகளா..?' என்றாள். இவர்கள் பேசுவது புரியாமல் நாய் மூவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது...


'ஆமா பாட்டி... நான் சொல்லலை நீங்க நம்பமாட்டீங்கன்னு..?!'


அவளைத் தொடர்ந்து கவின், 'ஒரு வாரம் செவ்வாய் கிரகத்துல வச்சிருந்து என்னென்னமோ சோதனை செஞ்சாங்க... அப்புறம் இன்னிக்கு கொண்டாந்து விட்டுட்டாங்க..'


'ஒரு வாரமா வேற கிரகத்துல இருந்தீங்களா..? அதான் இந்த பழைய சோத்த இப்படி துண்றீங்களா..?அங்க என்ன துண்ணீங்க..?' என்று பாட்டி கேட்க


'ஏதோ நீலக்கலர்ல... பாதி திரவமா கொடுத்தாங்க.. அதை நினைச்சாலே..! உவ்வே..!' என்று மின்மினி கூறும்போதே வாந்தி எடுத்தாள்...


பாட்டி திடுக்கிட்டாள்...


'என்னப்பா... பொண்ணு மசக்கையா..?' என்றவள் கவினைப் பார்க்க...


அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஒரு சின்ன மௌனத்திற்கு பின், 'இருக்கலாம்...' என்றவன் சந்தேகத்துடன் கூறி மீண்டும் சாப்பிடத் துவங்கினான்...


'செவ்வாய் கிரகத்துல ரெண்டு பேரும் கூடுனீங்களா..?'


'கூடச்சொன்னாங்க... 7 நாளும் கூடவெச்சாங்க..! இது என்ன இடம் பாட்டி..?' என்றான்


'செந்தூரம் கிராமம்'


'பக்கத்துல பெரிய ஊர் என்னயிருக்கு.?'


'பூந்தமல்லி...'


'நல்ல வேளை பக்கம்தான்... நாங்க ஆவடி பக்கத்துல சேக்காடுக்கு போகணும்... எங்க வீட்டுல என்ன களேபரமோ தெரியல... 7 நாளா எங்களை காணாம போலீசுக்கு போயிருந்தாலும் போயிருப்பாங்க...'


'இந்நேரத்துல வேண்டாம் கண்ணு... ரெண்டு பேரும் விடிஞ்சதும் கிளம்புங்கய்யா...' என்று கரிசனத்துடன் அந்த பாட்டி கூறியதை கவின் ஏற்றுக் கொண்டான்


'சரி பாட்டி..' என்றவன் மின்மினியைப் பார்க்க, அவளும் சரி என்று நன்றியுடன் தலையசைத்தாள்...


---------------


அடுத்த நாள்...


ஒரு ஃப்ளாட்டில் ரேடியோவில் 'தர்மயுத்தம்' படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்த்  நடித்த பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது...


'ஒரு தங்க ரதத்தில்... பொன்மஞ்சள் நிலவு... ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு...'


இதை கேட்டுக் கொண்டே, நைட்டி அணிந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது நரைத்த தலைமுடியை கையில் கோதியபடி வீட்டுக் கதவைத் திறந்தாள்... வெளியே நியூஸ் பேப்பரும் பால் பாட்டிலும் இருந்தது... அதை எடுக்க குனிந்து மீண்டும் நிமிரவும் எதிரில் கவினும், மின்மினியும் நின்றிருந்தனர்... 


கவினைக் கண்ட அந்த நடுத்தர வயது பெண்மனிக்கு முகத்தில் ஏகப்பட்ட குழப்ப ரேகைகள் தோன்றியது.. 'நீங்க.. நீ..' என்று அவள் கண்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு புருவம் உயர்த்த... 'கவின்... அண்ணா...' என்று கத்தியே விட்டாள்...


கவினும் குழப்பத்துடன் அவளைப் பார்த்து கண்கள் விரிய... அவள் கண்கள் சொறுகி மயக்கம் வந்து விழப்போனாள். மயங்கிவிழுவதைப் பார்த்து கவினும், மின்மினியும் அவளை கைத்தாங்களாய் பிடித்துக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பயத்துடன் பார்த்துக் கொண்டனர்...


வீட்டிற்குள்ளிருந்து அந்த பெண்ணின்  கணவர்.. ஓடிவந்து.. 'ஹே... ஹேமா என்னாச்சு... டேய்.. யார் நீங்க...' என்று அருகிலிருந்த கவினையும் மின்மினியையும் பார்த்து கேட்க...


'சார் இவ என் சிஸ்டர்தான்... ஹேமலதா..' என்று கவின் கூறினான்...


'என் பொண்டாட்டிக்கு தம்பி யாரும் இல்லியே...' என்று கணவன் குழம்பினான்


'நான் தம்பியில்ல சார்... இவளோட அண்ணன்..' என்றான்...


கணவன் குழப்பத்துடன் தனது மனைவியையும் கவினையும் மாறி மாறி பார்த்தான்... ஆனால் கவின் குழப்பத்துடன் மயங்கி கிடக்கும் பெண்ணைப் பார்த்து 'இவ என் தங்கைதான்... ஆனா, ஏன் இப்படி வயசானமாதிரியிருக்கா..?' என்று கேட்க ஹேமாவின் கணவன் அவளை ஏற இறங்க பார்த்தான்....


------------


சற்று நேரத்தில் அந்த வீட்டினுள் கவின் ஆச்சர்யத்துடன் நியூஸ் பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் மின்மினி அமைதியாகவும், ஹேமாவின் கணவன் குழப்பமாகவும் அமர்ந்திருக்க, ஹேமா சோஃபாவில் கிடத்தப்பட்டிருந்தாள்...


கவின் புலம்பினான் 'இப்போ வருஷம் 2040-ஆ... என்னால நம்பவே முடியல சார்... நானும் மின்மினியும் காணாம போனது 2013ல, நாங்க தொலைஞ்சி போய்  7 நாள்தான் சார் ஆச்சு.. ஆனா...'


'நீங்க சொல்றது ஒண்ணும் எனக்கு புரியல...' என்று அந்த கணவன் இன்னும் கடுப்பாகவே இருந்தான்


'சார்.. நான்தான் சொல்றேனே... நான் ஹேமாவோட அண்ணன்... 7 நாளுக்கு முன்னாடி என் லவ்வரோட செவ்வாய் கிரக வாசிங்களால ரெண்டு பேரும் கடத்தப்பட்டோம்... எ ப்யூர் அப்டக்ஷன்...  7 நாள் எங்களை செவ்வாய் கிரகத்துல வச்சிருந்துட்டு இப்போ கொண்டுவந்து விட்டுட்டாங்க.. இங்க வந்து  பாத்தா... 27வருஷமாச்சுன்னு சொல்றீங்க... ஹவ் கம் சார்..?' என்று கவின் புலம்பினான்


இதற்குள் ஹேமா மெல்ல கண்விழித்தாள்...


'அண்ணா... கவின் அண்ணா..? எப்படின்னா இருக்கே..?' என்று கவினையும் மின்மினியையும் மாறி மாறி பார்த்தபடி அழுகையுடன் கேட்டாள்... கவின் எழுந்து சென்று அவளைக் கட்டிக் கொண்டான்.


'ஹேமா... இப்பவாவது என்னை கண்டுபிடிச்சியே... நான் நல்லாருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..! அப்பா அம்மா. எங்க?' என்றவன்  கேட்க


'ரெண்டு பேரும்..!' என்று அவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் மீண்டும் அழத்துவங்க்கினாள்... அவளது கணவன் தொடர்ந்தான்...


'அவங்க ரெண்டு பேரும் அமர்நாத்துக்கு டூர் போனவங்க... அங்க லேண்ட்ஸ்லைட்ல மாட்டிக்கிட்டு இறந்துட்டாங்க...' என்றான்


'ஓ...' என்று கவினும் சோர்ந்தான்... மின்மினி அவனை தேற்றினாள்


'அழாதேப்பா..' என்று ஆறுதல் கூறினாள்... அவன் அவளைக் கட்டிக்கொண்டான்.


'நீ எப்டீண்ணா அப்படியே இருக்கே..! மின்மினியும் அப்படியே இருக்காங்க... நீங்க ரெண்டு பேரும் திடீர்னு ஓடிப்போனதும் நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா..?'


'நாங்க ஓடிப்போலேமா... எங்களை கடத்திட்டாங்க..?'


'யார்ணா..?'


'செவ்வாய் கிரகத்து ஆளுங்க..'


'என்னண்ணா சொல்றே..?'  என்றாள்... இதற்குள் அந்த அறைக்குள் ஒரு இளம்பெண் நுழைந்தாள்... அனைவரதுஉ கவனமும் அவள் மீது திரும்பியது...


ஹேமா அவளைப் பார்த்ததும் உற்சாகமாக... 'வீணா..?! இதுதான் உன் மாமாடி..! ஃபோட்டோல காட்டுவேனே..! ஞாபகமிருக்கா..? அண்ணா... இது என் பொண்ணுண்னா, வீணா... 25 வயசாகுது...' என்று கூறினாள்...


அவள் கவினை ஆழமாய் பார்த்தாள்... அவனுக்கு 22 வயதுதான்...


'இவர் என் மாமாவா... லவ் பண்ணி ஓடிப்போனதா சொல்லுவியே இவர்தானா அது..? யூ ஆர் சோ யங் டு பீ மை மாமா...  இவங்கதான் உங்க கேர்ள்ஃப்ரெண்டா... சோ க்யூட் அண்ட் யங்... ஹாய்..' என்றாள்


மின்மினியும் பதிலுக்கு  'ஹாய்' என்றாள்...


அவள் மேற்கொண்டு அங்கு நிற்காமல், 'ஐம் கெட்டிங் லேட் ஃபார் மை காலேஜ்... சீ யூ கைஸ் இன் தி ஈவ்னிங்... வந்ததும் உங்க லவ் ஸ்டோரிய நிச்சயம் எங்கிட்ட சொல்லனும் மாமா... பாய் ஆல்... பாய் மா' என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வீல்-ஐ எடுத்து நான்காய் திறக்க அது சைக்கிளாகிப் போனது... அதை தோளில் தூக்கிக் கொண்டு ஏதோ ஆங்கிலப்பாடலை முணகிக் கொண்டே படியிறங்கினாள். 


ஹேமா வியந்தாள்... இது என்ன குழப்பம்... தன் பெண்ணுக்கு தன் அண்ணனைவிட மூன்றுவயது அதிகம்... அடக்கடவுளே..! எப்படி மாறியது இந்த கணக்கு என்று பயந்தாள்...


உடனே வீணா மீண்டும் உள்ளே எட்டிப்பார்த்து 'ம்மா.. சொல்ல மறந்துட்டேன்... கரண்ட் கார்டு ஃரேடியோவுக்கு மேல வச்சிருக்கேன்... அப்பா இன்னிக்கு மறக்காம ரேஷனுக்கு போய் ரீசார்ஜ் பண்ணிட்டு வந்துருங்க...'என்று மீண்டும் அங்கிருந்து மறைந்தாள்


மின்மினி குழப்பத்துடன் அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள். கவின் பேப்பரில் 'கன்னித்தீவு' படித்துக் கொண்டிரு்நதான்...


'1. சிந்துபாத்  பாறை வடிவிலிருந்த அந்த அரக்கனை அடையாளம் கண்டுகொண்டான்... 2. அருகில் சென்று அந்த பாறையை மலையிலிருந்து உருட்டி கீழேயிருக்கும் கடலில் தள்ளிவிட்டான்... 3. பாறை கீழேவிழுந்து வெடித்துச் சிதறியது... 4. 'ஹா..ஹ்..ஹா... என்னை ஏமாற்ற பார்த்தாயா.. என்று சிந்துபாத் வீரத்தோடு சிரித்தான் (தொடரும்)' என்றது கன்னித்தீவு...


ஹேமா கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் 'கொஞ்சம் இருங்க நான் குடிக்க காஃபி கொண்டு வர்றேன்...' என்று எழுந்தாள்


கவின் அவளிடம், 'ஹேமா... டிவி போடேன்...'


'இல்லண்ணா... டிவியெல்லாம் அவுட் ஆஃப் டேட், ஸோலார் ரேடியோதான்... இப்போ எல்லாமே சோலார் சோர்ஸ்தான்... பவர் ரொம்ப ரேஷன்... ஃபேண் போடுலாம்னு பாத்தா இப்போபாத்து கரண்ட் தீந்துடுச்சு... இன்னிக்கி ரேஷனுக்கு போய் கரண்ட் கார்ட்-ஐ ரீசார்ஜ் பண்ணாத்தான் வீட்டுல ஃபேன்கூட சுத்தும்... என்னங்க.. வீணா சொன்னமாதிரி'


'ஆங்.. ஆங்.. போறேன் போறேன்...' என்று அவள் கணவன் புரிந்துக் கொண்டு பதிலளித்தான்.


'என்னது கரண்ட்டு ரேஷன்ல வாங்கணுமா..?' என்று மின்மினி கேட்டாள்


இதுவரை அமைதியாயிருந்த ஹேமாவின் கணவன் 'ஆமா மச்சான்... ஒரு வீட்டுக்கு மாசத்துக்கு 30 மணி நேரம்தான் கரண்ட்... எல்லாம் ரேஷன்தான்... எப்பபெப்போ வேணுமோ அப்பப்போ கரண்ட் கார்டு ஸ்வைப் பண்ணி யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்... இருங்க உங்க ரெண்டு பேருக்கும் நல்ல ட்ரெஸ் எடுத்துட்டு வர்றேன்...' என்று ஹேமாவின் கணவரும் அங்கிருந்து எழுந்து சென்றார்... கவினும் மின்மினியும் ஒருவரையொருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்...


-----------------


அன்று மாலை வீணாவும், கவினும், மின்மினியும், அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றிருந்தனர்... சுற்றித்தெரிந்த  அத்தனை கட்டிடங்களும் உயரமான கோபுரங்களுமென்று கொஞ்சம் கூட சீரில்லாத குப்பைக்களங்கள் போலிருந்தது... ஒரே நல்ல விஷயம்... எல்லா மாடியிலும் கண்ணாடிக்கூண்டு போன்று ஒரு சிறு பகுதியில் எல்லோரும் செடிகளை வளர்த்து ஒரு குட்டிப்பூங்கா போன்ற அமைப்பு சீராய் அமைந்திருந்தது... ஆனாலும், சுற்றுச்சூழலின் அசுத்த தன்மை, ஒருவித மாசுப்படிந்த கலரை சென்னை நகரத்துக்கு கொடுத்திருந்தது... இதனால் அந்த நகரம் மொத்தமாய் பார்க்க ஒரு அழுக்கான கார்ப்பரேட் சேரி போல காட்சியளித்தது...


வீணா தனது பெற்றோர்களின் கல்யாண ஆல்பத்திலிருந்து தனது பெர்சனல் ஆல்பம் வரைக்கும் கவினுக்கும், மின்மினிக்கும் காட்டிக்கொண்டிருந்தாள்...


கவின் ஆவலாக அந்த ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான்... மூவரும் சிரித்தபடி அந்த ஆல்பத்தை முழுவதுமாக பார்த்து முடித்திருந்தனர்...


வீணா மின்மினியைப் பார்த்து, 'என் ட்ரெஸ்ல என்னைவிட நீங்கதான் ரொம்ப அழகாயிருக்கீங்க மினி... உங்களை மினின்னு கூப்பிடலாம்லா..?' என்றாள்... பதிலுக்கு மின்மினி ஒரு சிரிப்பை உதிர்த்தாள்... 


வீணா மீண்டும் கவினிடம் திரும்பி 'என்ன மாமா, இவங்க இப்படி வெட்கப்படுறாங்க... இப்படி பேசாமலே இருந்தும் எப்படி உங்களை கவுத்தாங்க..?'


'ஃபேஸ்புலதான்..!!! வீட்டுக்கு பக்கத்துலியே இருந்தாளும் இவளை நேர்ல பாத்து பேசுனதைவிட, ஃபேஸ்புக்லதான அடிக்கடி பாத்து Chat பண்ணுவோம்... இவளோட ஃபோட்டோஸை மணிக்கணக்கா உத்துப் பாத்துட்டிருப்பேன்' என்றான் கவின்


'ஃபேஸ்புக்கா... யூ மீன் தட் ஓல்டு சோஷியல் நெட்வெர்க் சைட்..?'


'ஃபேஸ்புக் ஓல்டா.. இப்போ இல்லியா..?' என்றாள் மின்மினி


'உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்னா, ஃபேஸ்புக்லாம் இப்போ சுதேசமித்திரன் மாதிரி அதரப்பழசு...' என்றாள்


'ஓ இப்போ மொபைலாவது இருக்கா இல்லியா..?' என்று மின்மினி ஆச்சர்யமாக கேட்டாள்....


'யூ மீன் கைல தனியா ஒரு பீஸை வச்சுக்கிடு டயல் பண்ணி பேசுவீங்களே அதுவா..? நோ... வே..!'


'அப்போ நீ எப்படி பேசுவே..' என்று கவின் கேட்டான்.


'வெயிட்...' என்று நிமிர்ந்தவள்... 'ஒமேகா... வேக் அப்' என்றதும் தனது கழுத்தில் மாட்டியிருந்த டாலர் சமாச்சாரத்திலிருந்து ஒரு ஒளிப்பிழம்பு அவளுக்கு எதிரில் காற்றில் ப்ரொஜெக்ட் ஆகி திரைபோல் காட்டியது...


'கால் ரூடி...' என்றாள்.  தன் கழுத்துக்கெதிரில் இருந்த திரையில் இரண்டு மூன்று பெயர்கள் வந்து நின்றது... ஜான் ரூடி, ரூட்யார்ட் கிப்ளிங்... என்று திரை காட்டிஇயது... 'நோ.. நோ..  ரூடி அலியாஸ் ருத்ரமூர்த்தி' என்றாள்


உடனே மறுமுனையில் ரூடி என்ற பெயருக்கு சற்றும் பொறுந்தாத ஒரு இளம் வழுக்கு மண்டையன் பேசினான்


'ஹே வீணா... வணக்கம்' என்றான்


'வணக்கம் ரூடி... என்னடா பண்றே..?'


'இன்னிக்கு என் சிறுகதை ரேடியோல வருது...  கேட்கிறதுக்காக காத்துட்டிருக்கேன்...'


'நல்ல வேளை ஞாபகப்படுத்தினே..!'


'நீயும் கேக்கப்போறியா..?'


'இல்ல... உன் கதை வருதுன்னு சொன்னதால ரேடியோ கிட்டயே போவமாட்டேன்...'


'ஹே.. கமான் வீணா... அவ்ளோ ஒண்ணும் மோசமா இருக்காது..'


'ஓகே.. வில் ட்ரை... நன்றி வணக்கம்..' என்று அவன் திரையிலிருந்து மறைந்ததும் 'ஒமேகா  ஸ்லீப்' என்றாள்... உடனே திரை மறைந்து, மீண்டும் அவள் கழுத்தில் டாலர் மட்டும் தொங்கிக்கொண்டிருந்தது...


கவினும் மின்மினியும் ஏதோ மேஜிக் பார்த்தவர்கள் போல ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்...


'ஓகே... இப்போ சொல்லு கவின் மாமா... உங்க லவ் ஸ்டோரி என்ன..?' என்று வீணா இருவர் பக்கமாய் திரும்பி கேட்டாள்
----------------------


அதே நேரம்... அவர்கள் வீட்டுக்குள் பெட்ரூமில் ஜன்னலோரம் அமைந்திருந்த இரட்டை நாற்காலியில் ஹேமாவும் அவளது கணவனும் அமர்ந்துக் கொண்டிருக்க... ஹேமா தன் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்...


'இவங்க ரெண்டு பேரும் தொலைஞ்சி போனது 2013ல, அப்போ மலிவு மின்சாரத்துக்கு பற்றாக்குறை வந்து, தினமும் விட்டு விட்டு 15 மணி நேரம் பவர் கட் பண்ணுவாங்களே நினைவிருக்கா...'


'ஆமா தெரியும் எங்க ஏரியாவுலயும் பண்ணுவாங்களே...  போராட்டமெல்லாம் நடந்தது. ஆனா அப்போக்கூட ஒரு நாளைக்கு தாராளமா 10 மணி நேரம் கரண்ட் இருந்த்து... இப்போதான்... !' என்று கணவன் அவளை ஆமோதித்தான்


'ஹ்ம்... அப்போ இங்க எல்லாமே தனித்தனி வீடுங்களா இருந்தது... எல்லாரும் ஈவ்னிங் கரண்ட் ஆஃப் ஆனதும்... மாடியில வந்து ஒண்ணுக்கூடுவோம்...'
---------------------


மாடியில் இதே விஷயத்தை மின்மினியும் வீணாவிடம் விளக்கிக் கொண்டிருந்தாள்...


'எல்லாரும் மாடியில ஜாலியா பேசுவோம்... பாட்டுக்கு பாட்டு விளையாடுவோம்... ராத்திரி நிலாச்சோறு சாப்பிடுவோம்.. இப்படி எங்க ஏரியாவே கரண்ட் கட்-ஐ தனக்கு சாதகமா மாத்திக்கிட்டு அனுபவிச்சிட்டிருந்தோம்...'


கவினும் தொடர்ந்தான், 'எனக்கு பக்கத்து வீட்டுல இருந்த இவ மேல லவ் ஆயிடுச்சு... எனக்கு இவகிட்ட ரொம்ப பிடிச்சதே இவ பேருதான்... மின்மினி... கரண்ட் கட் ஆனாலும், இருட்டுல அவ்வளவு பிரகாசமா தெரியுற முகம்.. ஆப்தான பேரு... இவளுக்கு பேரு வச்சவங்க செம்ம கில்லாடி... எப்படியோ இவளுக்கும் என்னை பிடிச்சு போச்சு...'


'ஓ... சோ ரொமேண்டிக் மாமா' என்று வீணா ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள்...
------------------


அறையில் ஹேமா தன் கணவனிடம் தொடர்ந்தாள்....


'தினமும் கரண்ட் கட்-ஆகி மறுபடியும் கரண்ட் வந்ததும் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள போயிடுவாங்க... ஆனா இவங்க ரெண்டு பேரு மட்டும் மாடியிலியே இருந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க... எங்க வீடுலியே இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்... வீட்ல சொல்லிடலாம்னு நான் அண்ணாகிட்ட கேட்டப்போ... இன்னும் கொஞ்ச நாளாகட்டும்னு தட்டிக்கழிச்சுக்கிட்டு வந்தான்... ஆனா... ஒருநாள் எங்கப்பாவுக்கு விஷயம் தெரியவந்துடுச்சு... ரெண்டு குடும்பத்துக்கும் பயங்கர சண்டை...'
------------------


அதே நேரம் மாடியில்...


மின்மினி 'ஆஆஆ' என்று அலறினாள்...


கவின் திடுக்கிட்டான்... 'என்ன ஆச்சு மின்மினி..?'


ஒரு கரப்பான்பூச்சி மின்மினியன் உடையில் ஏறிக்கொண்டிருந்தது...


கவின் அந்த கரப்பானை உற்றுப்பார்த்து, அதன் மீசையைப் பிடித்து எடுத்தான்


'எப்படியோ தப்பிச்சிடுச்சு..! ஊரு என்னதான் மாறினாலும், கன்னித்தீவும், கரப்பான்பூச்சியும் அழியவே மாட்டேங்குதுல்ல...' என்று கவின் சிரித்தபடி கூற... வீணாவும் இதை ரசித்தாள்...


--------------------


அறையில் ஹேமா தொடர்ந்தாள்...


'ஒரு நாள் ராத்திரி... எல்லாரும் மாடியில இருக்கும்போது, ஒரு பெரிய வெளிச்சம் மின்னல் மாதிரி ஆனா நீலக்கலர்ல வானத்துல வந்துப்போச்சு... எல்லாரும் ஆச்சரியமா அதையே பாத்துட்டு இருந்தாங்க... அன்னிக்கு மட்டும்... கரண்ட் வழக்கத்தைவிட 3 மணி நேரம் எக்ஸ்ட்ரா கட் ஆச்சு... வழக்கம்போல, கரண்ட் வந்ததும் எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள போயிட்டாங்க... ஆனா, எங்கண்ணாவும்... மின்மினியும் வரவேயில்ல... ரொம்ப லேட்டானதால, அப்பா ரொம்ப சத்தம் போட்டார்... மாடியில போய் கூட்டிட்டு வர்றேன்னு மேல போனார்... கையும் களவுமா மாட்டிக்கப்போறாருன்னு நான் ரொம்ப பயந்தேன்... ஆனா... ஆனா... மேல அண்ணாவைக் காணோம்... மின்மினியையும் காணோம்னு அவங்க மாடியில அவங்கப்பா அம்மாவும் தேடிட்டு இருந்தாங்க... பெரிய பிரச்சினையாச்சு... ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டாங்கன்னு போலீஸ்கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்து, அது இதுன்னு ஏகப்பட்ட கலவரமாச்சு... அவமானம் தாங்க முடியாம மின்மினியோட  ஃபேமிலி காலி பண்ணிக்கிட்டு இந்த ஏரியாவை விட்டே போயிட்டாங்க...' என்று நடந்த விஷயத்தை கூறி முடித்தாள்


ஹேமாவின் கணவன் தொடர்ந்தான், 'ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போகலையில்லியா... செவ்வாய் கிரகத்துக்காரங்க வந்து கடத்திட்டு போயிருக்காங்கன்னு இவங்க சொல்றாங்க... இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கருதுன்னே தெரியல ஹேமா...' என்றான்


'தெரியலீங்க... எப்படியோ... எங்கண்ணா திரும்பி வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... அவன் வயசு அப்படியே இருந்தா என்ன... எனக்கு எங்கண்ணா அண்ணாதான்... அவனுக்கு ரொம்ப பிடிச்ச மாங்காய் சாம்பாரும்... மட்டன் வறுவலும் செஞ்சி வச்சிருக்கேன்... இருங்க கூட்டிட்டு வர்றேன்...' என்றுகூறிவிட்டு எழுந்தாள்... சோலார் பேணலில் இயங்கும் லிஃப்டில் ஏறினாள்... 34ஆவது நம்பர் பட்டனை அழுத்தி லிஃப்டுக்குள் காத்திருந்தாள்... அறை திறந்தது... வெளியேறி மீண்டும் சில படிகளேறி மொட்டை மாடிக்கு வந்தடைந்தாள்...


'அண்ணா..' என்று சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள்...


மாடி காலியாக இருந்தது...


'வீணா..?' என்று மீண்டும் சத்தம் போட்டாள்... யாரும் இல்லை...


'இங்கேதானே பேசிட்டிருக்கேன்னு சொன்னா..? எங்கே போனாங்க..?' என்று குழம்பியபடியே... திரும்பி பார்த்துக் கொண்டிருக்க... திடீரென்று ஒரு மின்னல் வெளிச்சம் போல நீலக்கலரில் ஊரெங்கும் பரவி அடங்கியது...


ஹேமாவிற்க்கு வயிற்றுக்குள் ஏதோ புளியைக் கரைத்தது போலிருந்தது... அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள்... தூரத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதுபோல் தெரிந்தது... பயத்தில் மயங்கி விழுந்தாள்...
----------------


வீணா மெல்ல கண் திறந்தாள்... அவள் ஏதோ ஒரு விசேஷ ராட்டினம் போன்ற ஒரு கூண்டில் இருப்பதை உணர்ந்தாள்.... இது என்ன இடம் என்று குழப்பத்துடன் சுற்றிலும் பார்க்க...


அவளுக்கு எதிரே ஒரு விநோத உருவம் நின்றிருந்தது.. அந்த உருவத்துக்கு அருகில் கவினும், மின்மினியும் புன்னகையுடன் நின்றிருந்தனர்... ஒரு சின்ன வித்தியாசம் அவர்களது கண்கள் இப்போது முழுவதுமாய் கருப்பு நிறத்தில் இருந்தது... கண்ணிமை மேலும் கீழும் என்றில்லாமல் இடமும் வலமுமாய் அடித்துக் கொண்டது... அந்த உருவம் இவர்களிடம் ஏதோ ஒரு விநோத குரலில் புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தது... 


அந்த உரையாடலின் தமிழாக்கம்


'உங்களை பூமிவாசிகள் சந்தேகிக்கவில்லையே..?'


'இல்லை... எங்களை நம்பிவிட்டார்கள்... மேலும், நாங்கள் கடத்தபட்டது செவ்வாய் கிரகத்து மக்களால்தான் என்றும் அவர்களை நம்பவைத்துவிட்டோம்...'


'நல்லது அவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று முழுமையாக தேடவே பல வருடங்களாகும்... இதில் சூரியகுடும்பத்தை தாண்டி வசிக்கும் நம்மை அவர்கள் அண்டுவதற்கு நிச்சயம் பல நூற்றாண்டுகளாகும்..' என்ற அந்த விநோத உருவம் வீணாவை உற்றுப் பார்தது... 'இவளைப் கடத்துவதில் சிரமமேதுமில்லையே..?' என்று கேட்டது...


'இவள் தானாகவே எங்களிடம் தனியாக வந்து மாட்டிக் கொண்டாள்... ஆனால், இந்த பூச்சியைப் பிடிக்கத்தான் பெரும்பாடு படவேண்டியிருந்தது...' என்று கவின் வடிவிலிருந்த அ(து)வன்  தனது பாக்கெட்டிலிருந்த கரப்பான் பூச்சியை எடுத்துக் காட்டினான்...


அந்த விநோத உருவம் ஆர்வமாக கரப்பான்பூச்சியை பார்வையிட்டது... 'பல ஆண்டுகளாய் பூமியில் வாழும் உயிரினம்... இதுதான்... ஆஹா.. ஒரு மனிதப்பெண்... ஒரு பூச்சி... நாம் நினைத்தது கிடைத்துவிட்டது... இனி நம் கிரகம் சுபிட்சமடையும்' என்று சிரிக்கத் தெரியாமல் ஒரு விநோத சப்தமிட்டது..!!!


- நிறைவு -


Signature

Popular Posts