Monday, April 05, 2010

'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01



நம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய் போன்றவற்றின்மீது பயம், மாந்த்ரீகத்தின் மேஜிக்கல் சம்பவங்கள், இது போன்ற விஷயங்களில் யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் பிடிப்பு ஏற்படுவதில்லை... ஆனால், அது அவரவர்களுக்கென்று தனிப்பட்ட அனுபவம் இல்லாத வரையில் மட்டும்தான்..!

இது போன்ற அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி நிறைய புத்தகத்தில் படித்திருக்கிறேன்..! கதைகள் படிக்க சுவாரஸ்யமாய்த்தான் இருக்கும்..! ஆனால், இதெல்லாம் உண்மையா..? இல்லை பொய்யா..? இதற்கு பதில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் மத்தியில் இருக்கிறது. அந்த பதிலைத் தேடி அலைந்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..!

சென்ற வருடம் (2009) ஜனவரி மாதத்தில், நான் ஜீ.டிவியில் 'நம்பினால் நம்புங்கள்' என்ற நிகழ்ச்சியை இயக்கிக்கொண்டிருந்தேன். டிவிக்கு நான் மிகவும் புதியவன் என்பதால், இந்த நிகழ்ச்சியை எப்படியும் சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற ஆவல், எனக்கும் என் குழுவினருக்கும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நம்பமுடியாத சம்பவங்களை நேரில் சென்று, சம்பந்தபட்டவர்களின் பேட்டி கண்டு, ஆதாரம் தேடி, சில சம்பவங்களின் காட்சிகளை நடிகர்களை வைத்து சித்தரிக்கபட்ட காட்சிகள் என்று படம்பிடித்து வழங்க வேண்டும். இதில் அலசப்படும் வழக்குகள் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாக இருத்தல் மிக முக்கியம் என்று சேனல் தரப்பில் கூறியிருந்தனர்.

பொதுவாக இந்த நிகழ்ச்சிக்கு, ஆவி, பேய், அமானுஷ்யம், மாந்த்ரீகம் போன்ற தலைப்பின்கீழ்தான் சம்பவங்கள் அமையும். எனவே, பார்ப்போரிடமெல்லாம், 'உங்களுக்கு தெரிஞ்சு யாருக்காவது பேய் பிடிச்சிருக்கா, உ.தெ.யா...வது பில்லி சூன்யம் வச்சிருக்காங்களா..' என்று கேட்டுக்கொண்டிருந்தேன். என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்களோ..?

ஒருவழியாக நண்பன் ஒருவன் மூலம், சென்னையை அடுத்துள்ள பட்டாபிராம்-ல் 'தாவீது' என்ற ஒரு இளைஞனின் ஒரு சம்பவம் கிடைத்தது. அந்த சம்பவத்தை கேட்டதும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. 'தாவீது' என்ற அந்த இளைஞன், பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு லாரி விபத்தில் இறந்து போய், 14 மணிநேரத்திற்குப் பிறகு, சவக்கிடங்கிலிருந்து மீண்டும் உயிர்த்து எழுந்திருக்கிறான். இந்த நிகழ்வுக்கு அவன் வசிக்கும் ஏரியாவே சாட்சி சொன்னது. அதைவிட சுவாரஸ்யம் என்னவெனில், அவன் இறந்துகிடந்த அந்த மரண நேரத்தில் அவனுக்கு சில விநோத அனுபவங்கள் நிகழ்ந்துள்ளது. இதுவரை மனிதன் தெரிந்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் AFTERLIFE என்ற விஷயத்துக்கு நம்மூரிலேயே ஒரு ஆதாரம் கிடைத்தது ஆச்சர்யமே..!

எனது சின்ன வயதில், எங்கள் எதிர்வீட்டில் ஒரு பாட்டி இறந்து போன 4 மணிநேரம் கழித்து மீண்டும் உயிருடன் எழுந்து உட்கார்ந்துவிட, எங்கள் தெருவே அந்த பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். இந்த சம்பவம் என் மனதில் ஆழப்பதிந்திருந்தது... காரணம்... நானும் எனது நண்பர்களும், அந்த பாட்டிவீட்டில் கூடிய ஜனத்திரளால், தெருவில் க்ரிக்கெட் விளையாட முடியாமல் தவித்தோம்.

இறந்து எழுந்த அந்த பாட்டி, எமதர்மன் வந்து தன்னை அழைத்துப் போனதாகவும், வழியில் பெரிய பெரிய அரிசியும் அகத்திக்கீரையையும் சாப்பிட கொடுத்ததாகவும் என்னென்னவோ புலம்பியதாக நண்பர்கள் சொன்னார்கள். அது போல், இந்த தாவீது இறந்து கிடந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி என்ன சொல்லப்போகிறான் என்ற எண்ணம் எங்கள் குழுவின் ஆர்வத்தை கூட்டியது.

இந்த மரண அனுபவம் (Near Death Experience) குறித்து சில புத்தகங்களை தேடிப்படித்தேன். அதில் குறிப்பிட்டு சொல்வதென்றால், The Powerful Effect of Near Death Experience, Heading Towards Omega போன்ற புத்தகங்கள் Google Booksல் கிடைத்தது. மேலும் தமிழில் திரு.விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் எழுதிய 'செத்துப் பிழைத்தவர்கள் சொன்ன செய்தி' என்ற புத்தகமும் மிகவும் உபயோகமாக இருந்தது.

ஒருவழியாக கேள்விகளை தொகுத்து பேட்டி காண ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது... ப்ரொடக்ஷன் அலுவலகத்தில்  இருந்து ஃபோன் வந்தது..!

'ஹரீஷ்? உங்க எபிசோடுக்கு மேட்டர் ரெடியா..?'

'ரெடி சார்..! NEAR DEATH EXPERIENCE பற்றிய ஒரு கேஸ் கிடைச்சிருக்கு..!'

'ஓ.. நல்லது..! எந்த ஏரியா..?'

'பட்டாபிராம்..!'

'சரி, நல்ல டாபிக்தான். கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும்..! சேனல்ல தலைப்பு கேட்டுகிட்டே இருக்காங்க.. டைட்டில் ரெடி பண்ணிட்டீங்களா..?'

'ரெடி பண்ணிட்டேன் சார்... "தாவீதின் மரண அனுபவம்..!"'

'என்ன ஹரீஷ்... ஏதோ டப்பிங் படம் டைட்டில் மாதிரி இருக்கு..?'

'ஆமா சார்... ஆனா, பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்..!'

'சரி... ப்ரொசீட் பண்ணுங்க..' என்று கூற, அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு கிளம்பினோம்...

(தொடரும்...)


Signature

24 comments:

Anonymous said...

"எமதர்மன் வந்து தன்னை அழைத்துப் போனதாகவும், வழியில் பெரிய பெரிய அரிசியும் அகத்திக்கீரையையும் சாப்பிட கொடுத்ததாகவும் என்னென்னவோ புலம்பியதாக நண்பர்கள் சொன்னார்கள்"
it is problem happen when the grad mother are ate the Ration shop Rs.1/- rice not after the death.

very funny write more DREAMER

Chief Devil * * * * * * *
1000 Light
Chennai.

சைவகொத்துப்பரோட்டா said...

அய்!!! சுவராசியமான
மேட்டர்தான், சட்டுன்னு
தொடரும் போட்டு விட்டீர்களே ஹரீஷ்.
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,
பெற்று கொள்ளவும், நன்றி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இந்த ஆவி விஷயங்கள் தான் முழுவதும் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சுவாரஸ்யமான தொடர் தொடங்கி விட்டது. வரவேற்பும் ,வாழ்த்துக்களும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த மாதிரி ஒரு மேட்டர் எங்க அம்மா சின்ன வயசுல நடந்தத சொல்லி கேட்டு இருக்கேன்... அதே பெரிய அரிசி மேட்டர் தான் அவங்களுக்கும் யாரோ சொன்னதா சொன்னங்க...நல்லா போயிட்டு இருக்கு... கலக்குங்க

Prathap Kumar S. said...

அட சுவாஸ்யம்...இனியும் தொடருங்கள்....

Sri said...

Superb sir...first i read u article..
very well......We Expect more ...........

Aaqil Muzammil said...

super boss

சீமான்கனி said...

ம்ம்ம்ம்...அருமையான அனுபவம் தான்..தொடரட்டும் திரிலர்...

நாடோடி said...

மேட்ட‌ர் கொஞ்ச‌ம் சொல்வீங்க‌ என்று பார்த்தேன்.. க‌டைசியில் தொட‌ரும் போட்டு விட்டீர்க‌ளே.. அடுத்த‌ ப‌திவை எதிர்பார்க்குறேன்..

DREAMER said...

Hello Chief Devil,
Happy to have a Devil as my first comment writer. Especially for this post. ThanX for the visit..!

வாங்க சைவகொத்துப்பரோட்டா,
நண்பா விருது கொடுத்து கௌவித்ததற்கும், தொடர்ந்து வழங்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி..! கொஞ்சம் வேலை அதிகம் அதுதான் அதிகம் எழுத முடியவில்லை..! அடுத்த பகுதியில் அதிகம் எழுதுகிறேன்.

வாங்க நாய்க்குட்டி மனசு,
உண்மைதான், இந்த ஆவி விஷயங்கள் கேள்கவிக்குள் கேள்விகள் என்று recursiveஆக போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால், அதுதான் இது போன்ற விஷயங்களில் பிடித்தது..! சுவாரஸ்யமான தொடர் என்று நம்பிக்கையுடன் அழைத்ததற்கு நன்றி..!

DREAMER said...

வாங்க அப்பாவி தங்கமணி,
ஆஹா, உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா..! சூப்பர்..!

வாங்க நாஞ்சில் பிரதாப்,
ஊக்கத்திற்கு நன்றி நண்பரே, கண்டிப்பாக தொடர்கிறேன்..!

Hello & Welcome Sri,
ThanX for the visit..!

வாங்க சீமான்கனி,
அனுபவத்தை அனுபவித்து படித்ததற்கு நன்றி..! தொடர்கிறேன்..!

வாங்க நாடோடி நண்பரே,
வேலை பளு அதிகம் இருந்ததால் நிறைய எழுத முடியவில்லை..! விஷயம் நிறைய இருக்கு... கண்டிப்பாக அடுத்த பகுதியில் அதிகம் எழுதுகிறேன்..! தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கும் ஆதரவிற்கு நன்றி..!

ப்ரியமுடன் வசந்த் said...

சுவாரஸ்யம் இனிதான் போல எழுதுங்க எழுதுங்க சீக்கிரம்....வெயிட்டிங்கு

துபாய் ராஜா said...

அருமையான ஆரம்பம். தாவீதின் மரண அனுபவம். தலைப்பே அட்டகாசம்.'சரி... ப்ரொசீட் பண்ணுங்க..' என்று கூறி, அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

prabhadamu said...

ஆவி விஷயங்கள் தான் முழுவதும் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.


வாழ்த்துக்களும் நண்பா. ஆனா எனக்கு ஆவி, பேய் எல்லாம் பயம். படம் பார்க்க கூட.

Anonymous said...

ஹரீஷ்.....பிரமாதம்! உங்க தொடருக்கு சரியான தொடக்கம்.கலக்குங்க....ஆமா, நீங்க ஒரு இயக்குனரா.....சொல்லவேல்ல?!
//'தாவீது' என்ற அந்த இளைஞன், பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு லாரி விபத்தில் இறந்து போய், 14 மணிநேரத்திற்குப் பிறகு, சவக்கிடங்கிலிருந்து மீண்டும் உயிர்த்து எழுந்திருக்கிறான். இந்த நிகழ்வுக்கு அவன் வசிக்கும் ஏரியாவே சாட்சி சொன்னது. அதைவிட சுவாரஸ்யம் என்னவெனில், அவன் இறந்துகிடந்த அந்த மரண நேரத்தில் அவனுக்கு சில விநோத அனுபவங்கள் நிகழ்ந்துள்ளது. இதுவரை மனிதன் தெரிந்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் AFTERLIFE என்ற விஷயத்துக்கு நம்மூரிலேயே ஒரு ஆதாரம் கிடைத்தது ஆச்சர்யமே..!//
இதை நம்புவதா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, (14 மணி நேரம்)இது எந்த அளவுக்கு சாத்தியமென்பதிலேயே யோசனை(மூளை) நின்றுவிடுகிறது. ஏன்னா, மருத்துவத்தில் 'சஸ்பென்டெட் அனிமேஷன்(Suspended animation)'என்று ஒன்றை கண்டுபிடித்துள்ளார்அமெரிக்க ஆய்வாளர் மார்க் ராத் சமீபத்தில்! அதை பற்றிய ஒரு பதிவு எழுதும் எண்ணமும் இருக்கிறது விரைவில்! அவரின் உரையை காண....
http://www.ted.com/talks/mark_roth_suspended_animation.html
நன்றி,
http://padmahari.wordpress.com

Madhavan Srinivasagopalan said...

Interesting.. continue sir.
I am surprised to know that you are TV prog. Dir.

Unknown said...

ம்ம்ம்ம்ம்...

பொதுவா இந்த மாதிரி விசயங்கள் எதுவுமே அறிவுக்கு ஒப்பாத ஒன்றாக இருக்கிறது, இதப்பற்றி மருத்துவர் ருத்ரன் அவர்களிடம் கேட்டால் மிகவும் நன்றாய் சொல்வார்.

என்ன இருந்தாலும் அடுத்த பதிவுக்கு ஆவலாய் இருக்கிறது :)

DREAMER said...

வாங்க ப்ரியமுடன் வசந்த்,
வருக்கைக்கு நன்றி..! அடுத்த இடுகையை சீக்கிரம் போஸ்ட் பண்றேன்..!

வாங்க ராஜா சார் (துபாய் ராஜா)
ஆரம்பத்தை ஆதரித்ததற்கு நன்றி! சீக்கிரம் ப்ரொசீட் பண்ணுகிறேன்...

வாங்க பிரபாதாமு,
ரொம்ப நாளாச்சு..! என்னது உங்களுக்கு ஆவி பேய்கள்னா அவ்வளவு பயமா..? அப்போ என் திரைப்படத்தை பாக்கமாட்டீங்களா..? அதுவும் பேய்ப்படம்தானே..!

வாங்க ஹரிஜி (padmahari)
இயக்குனர் என்று லேட்டா சொன்னதுக்கு சாரி.... சொல்லும்படி சந்தர்ப்பம் அமையவில்லை. நீங்க கொடுத்த லிங்க்-ஐ கண்டிப்பாக பார்க்கிறேன். நான் இந்த நிகழ்ச்சியை இயக்கியபோது, சில டாக்டர்களிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர்களும் இந்த நிகழ்வு சாத்தியமில்லை என்றும், ஆனால், இந்த N.D.E.யை மறுக்கவும் முடியவில்லை என்றே தெரிவித்தனர். மேலும், இந்த தாவீதின் மரணத்தை ஊர்ஜிதப்படுத்திய ரிப்போர்ட் ஒன்றின் நகலைப் பார்த்தேன். நம்பாமலும் இருக்க முடிவில்லை..!

DREAMER said...

Hello Madhavan,
I "was" a TV Director. Now i'm doing a Film. ThanX 4 appreciating the post.

வாங்க மஸ்தான்,
இதுபோன்ற நம்பமுடியாத அனுபவங்கள் இந்த நிகழ்ச்சியை இயக்கும்போது நிறைய ஏற்பட்டது. அதற்காகத்தான் இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன்.
திரு.ருத்ரன் சாரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை, ஆனால், திரு.ரவிசாமுவேல் என்ற ஒரு மனோதத்துவ ஆலோசகரை இந்த நிகழ்வு குறித்து சந்தித்து பேட்டி கண்டோம். அதையும் விரைவில் எழுதுகிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..!

-
DREAMER

Raghu said...

ம‌றுப‌டியும் சிங்க‌ம் குகைக்கு திரும்பிடுச்சு (ஹார‌ர்)...:)) இது நீங்க‌ ஏற்க‌ன‌வே சொல்லி கேட்டிருந்தாலும், ப‌டிக்கும்போது சுவார‌ஸ்யமாவே இருக்கு, தொட‌ருங்க‌ ஹ‌ரீஷ்!

Raghu said...

//ஆமா, நீங்க ஒரு இயக்குனரா.....சொல்லவேல்ல?!//

அடுத்த‌ ப‌திவுல‌ நீங்க‌ ஒரு செல்ஃப் இன்ட்ரோ குடுக்க‌லாமே ஹ‌ரீஷ்

DREAMER said...

வாங்க ரகு,
கண்டிப்பா செல்ஃப் இன்ட்ரோவை ஒரு நல்ல சேதியோட சீக்கிரம் பகிர்ந்துக்கிறேன்.

-
DREAMER

Anonymous said...

//வழியில் பெரிய பெரிய அரிசியும் அகத்திக்கீரையையும் சாப்பிட கொடுத்ததாகவும் என்னென்னவோ புலம்பியதாக நண்பர்கள் சொன்னார்கள்//

அடப்பாவிகளா, இப்பல்லாம் ரேஷன் அரிசியை மேலோகத்திற்கும் கடத்த ஆரம்பிச்சாச்சா!

அகத்திக்கீரை export கம்பனி யாருங்க ஆரம்பிச்சது.
மேலோகத்திற்கும் உங்களுக்கும் money transaction
என்ன கரன்சியிலங்க!

DREAMER said...

வாங்க பரிதி நிலவன்,
உங்களது இந்த கேள்விகளுக்கு நான் இறந்துப்பார்த்துதான் பதில் கூற வேண்டும், நான் வேணும்னா, இறந்ததுக்கப்புறமா, உங்க கனவுல வந்து ரகசியமா எல்லாத்தையும் சொல்றேன், நீங்க அடுத்தவங்ககிட்ட சொல்லிடுங்க..! டீல் ஓகேவா..!

Popular Posts