உலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃபா முஸ்தஃபா நட்பு ஏற்பட்டு... எங்கள் படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்கள். அந்த இருவர்... பாலா & கெஞ்சி (ஜப்பானியர்). இவர்கள் இருவரும் 'ஆ' ஜப்பானிய படப்பிடிப்பின்போது, திக்'கோ திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள்
காதல் மட்டும்தான் அற்புதமானதா..? காதலில் மட்டும்தான் அற்புதகங்கள் நிகழுமா...? இல்லை.. இது நட்பிலும் நிகழும் என்பதற்கு இந்த ப்ளாக் & வயிட் ஃப்ரெண்ட்ஸ்தான் சாட்சி... இருவருக்கும் மொழி வேறு, நாடு வேறு, கலாச்சாரம் வேறு.. இப்படியிருக்க... ஷூட்டிங்கிற்காக சந்தித்த வெகுசில நாட்களில் இருவரும் இப்படி ஒரு நட்பாய் இருக்கமுடியுமா என்று வாய்பிளக்க வைத்த ஒரு நட்புக்காக கதை...
பாலா கெஞ்சிக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதும்... அவர் இவருக்கு ஜப்பானிய மொழி சொல்லிக்கொடுப்பதும்.. அவர் நடித்த ஷாட்டுக்கு இவர் கைத்தட்டுவதும், இவர் நடித்த ஷாட்டுக்கு அவர் 'சாய்க்கோ' என்று ஜப்பானிய மொழியில் பாராட்டுவதும்.. ப்ரேக் டைமில் இருவரும் இருநாட்டு வளநலங்களை பற்றி பேசி சிலாகித்து கொள்வதும்... நம் நாட்டு ரஜினி ஸ்டைலை பற்றியும், ஜப்பானின் சுத்தம் மற்றும் நேரத்தவறாமை பற்றியும்... என்று இவர்களது நட்பு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருந்தது...
கலகலப்பாக போய்க்கொண்டிருந்த அவர்களது நட்புக்கதை... நாங்கள் ஷூட்டிங் முடிந்து ஒரு சின்ன ஃபேர்வெல் பௌலிங் கேம் விளையாடி பிரிந்த போது... இவர்கள் இருவர் மட்டும் விரைவாக விளையாடி முடித்து.. அவர்களுக்கு மட்டுமே புரிந்த அந்த தமிழும் ஜப்பானும் கலந்த மொழியில் நட்பு பாராட்டி வந்தனர்...
பௌலிங் முடிந்து அனைவரும் புகைப்படம் பரிமாறிக்கொண்ட போது... இவர்களது முகம் மட்டும் விட்டுப்பிரியப்போகும் வாட்டத்தை கொண்டிருந்ததை நாங்கள் அனைவரும் காண நேரிட்டது... இருவரும் பிரியும்போது கண்ணீருடன் விடை கொடுத்து கொண்ட அந்த செண்டிமெண்ட் காட்சி இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை... உண்மையில் இந்த நட்புக்கு முன்ஜென்ம முடிச்சு ஏதோ ஒன்று இருக்க வேண்டும்... அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... இவர்களுக்காகவாவது நாங்கள் மீண்டும் ஜப்பான் போய் படம் எடுத்தால் நன்றாக இருக்குமோ? என்று எங்களை யோசிக்க வைத்த இந்த நட்புக்காக கதை... என்றென்றும் தொடர, இந்திய, ஜப்பானிய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்...
(தொடரும்)
2 comments:
eppo release?
விரைவில் ரமேஷ்... நிச்சயம் தேதி குறித்ததும் தெரியப்படுத்துகிறேன்...
Post a Comment