'ஆ' ஒரு ஹாரர் படம் என்பதால்... Themeக்கு ஏற்றபடி சிங்கிள் ட்ராக் வெளியிட்டை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று முடிவானதும்... எப்படி செய்யலாம் என்று ஆளுக்கொரு ஐடியாவை யோசித்து கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் மக்கள் தொடர்பாளர் திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் ஒரு அருமையான ஐடியாவை கூறினார். நள்ளிரவு 12 மணிக்கு பாட்டை FMல் ஒளிபரப்பலாம் என்றதும், எங்கள் அனைவருக்குள்ளும் 'அடடே' என்று ஒருமித்தமாக பல்பு எரிந்தது... அவர் ஐடியாவை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், அதை செயல்முறைப்படுத்த SURYAN FM-ல் பேசி ஏற்பாடு செய்தும் கொடுத்துவிட்டார்... அதன் பலனாய்.. இதோ இன்று நள்ளிரவு 12 மணிக்கு... பேய்களின் PEAK TIMEல் SINGLES BREAK...
இந்த சிங்கிள்ஸ் பாடலை பற்றி சில விவரங்கள்
'கண்ணாடிதான்டா..' என்ற இந்த பாடலை எழுதி பாடியவர் 'கானா பாலா'... இன்றைய தேதிக்கு 'கானா பாலா'வை 'உள்ளூர் ஹனி சிங்' என்றே கூறலாம்... அந்தளவுக்கு அவர் சிங்கிள்ஸ் பாடலில்லாத தமிழ்ப்படமே இல்லை... ஆனால் 'ஆ' படத்தில் வழக்கமான காதல் கானாவாக இல்லாமல்... பத்து வருடம் கழித்து சந்திக்கும் பள்ளிக்கால நண்பர்களின் REUNION PARTYயில் பாடப்படும் GET-TOGHETHER GAANAவாக அமைத்திருக்கிறோம்... பள்ளிக்கால நினைவுகளை அலசும் பாடல்வரிகளை அற்புதமாக எழுதிக்கொடுத்து பாடியிருக்கிறார் கானா பாலா...
அடுத்த பதிவில் இந்த பாடல் பற்றிய கூடுதல் விவரங்களை பகிர்கிறேன்...
TRIVIA
கானா பாலா, இந்த பாடல் வரிகளை எழுதி முடித்ததும் தன் பள்ளி நண்பர்களை சந்திக்கும் ஆவல் மிகவும் ஏற்பட்டதாக கூறினார்... இதனால், ஃபோனில் இருக்கும் நம்பரை வைத்து மேலும் சில நம்பரை தேடிப்பிடித்து பள்ளி நண்பர்களோடு ஃபோனில் பேசியதாக கூறினார்...
No comments:
Post a Comment