வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்று உங்களுடன் ஒரு நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று முதல்... "அம்புலி" என்ற 3D திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். 20 வருடத்திற்கு பிறகு வரும் இந்த 3D திரைப்படத்தை குழந்தைகள் படம் போலல்லாமல், வளர்ந்த குழந்தைகளும் பார்க்கும் விதத்தில் படமாக்கவிருக்கிறோம்.
இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, திரு. ரா. பார்த்திபன் அவர்கள், இதில் ஒரு பெரும்பங்காற்ற இருக்கிறார்.
KTVR CREATIVE REELS சார்பில் திரு. V. LOGANATHAN அவர்கள் தயாரிக்கிறார். நானும் எனது நண்பர் ஹரி ஷங்கரும் இப்படத்தை இயக்குகிறோம். எங்களது முந்தைய திரைப்படத்தை வித்தியாசமாக படம்பிடித்து கொடுத்த நண்பர் சதீஷ். G இப்படத்தின் ஒளிப்பதிவாளர்.
நீண்ட நாட்களாக பதிவை எழுத முடியவில்லையே என்றிருந்தேன். இனி, 'அம்புலி' படப்பிடிப்பில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!
அன்புடன்
ஹரீஷ் நாராயண்

