ஜப்பான் என்றால் எது ஃபேமசோ இல்லையோ நில நடுக்கம் பூகம்பம் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மிகவும் ஃபேமஸ். நாங்கள் ஷூட் செய்தபோது பெரிய அளவில் இல்லை என்றாலும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் மட்டும் நடந்தது...
ஜப்பானில் ஒரு வீட்டில் ஷூட்டிங் செய்துக்கொண்டிருந்தோம். அந்த வீட்டின் நடுவே அழகாக ஒரு மினி விளக்கு அமைக்கபட்டிருந்தது... அந்த காட்சி ஷூட் செய்து முடித்ததும். அந்த வீட்டு ஓனர் திரு.முரளி மற்றும் திருமதி. வள்ளி முரளி அவர்கள், இப்போது ஒரு சின்ன நிலநடுக்கம் வந்து சென்றது என்று பேசிக்கொண்டனர்..
எங்களுக்கு உடனே 2012, DAY AFTER TOMORROW போன்ற விஷூவல்கள் உள்ளுக்குள் தோன்றி கிலியை ஏற்படுத்த... முகத்தை மட்டும் தைரியமாக வைத்துக் கொண்டு, 'எங்களுக்கு எதுவுமே நிலநடுக்கம் தெரியவில்லையே' என்று கேட்டதற்கு, ஜப்பானில் உள்ள பெரும்பாலான வீடுகள் நிலநடுக்கத்தையும், பூகம்பத்தையும் தாங்கும்படியாய் விசேஷ அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் நடுக்கம் ஏற்படும் போது நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாது என்று கூறினார்.
பின்னே எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, நாங்கள் ஷூட் செய்த வீட்டின் நடுவே தொங்கும் அந்த விளக்கில் ஒரு சின்ன செயின் தொங்கிக் கொண்டிருந்தது.. (லைட் ஸ்விட்ச்தான்) அந்த செயின் ஆடினால், நிலம் நடுங்கி கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம்.
செயின் தெரிகிறதா..?
நிலநடுக்கத்தையும், பூகம்பத்தையும், இன்னபிற இயற்கை சீற்றங்களையும் அறிய எத்தனையோ வகையிருக்கிறதில்லையா... அதுபோலதான் இதுவும்.. என்று கூறினர்.. அனைவரும் அந்த செயினையே கொஞ்ச நேரம் சத்தமின்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.. அது மெல்ல ஆடுவது போலவே எங்களுக்கு தெரிந்து கொண்டிருந்தது...
அந்த ஹாலில் அடுத்து கேட்ட சத்தம்... 'பேக் அப்'
1 comment:
light adiyathu oruvelai katrinalo or unmaiyil nila nadukkam vanthatho anyway ellam enbamayamga vanthu vetriyudan vanthu serntheergal.padam nooru (100) vaarangal oda ellam vall iravanai vendikolgiren
Post a Comment