படத்தில் நடிக்க வந்த ஜப்பானியர்களிடம்.. முறையே வணக்கம் வைத்து அவர்களுடன் நடிப்பதற்கு முன் சற்றே கலந்துரையாடினோம்... யார் முதலில் பேசுவது என்று இருந்த தயக்கத்தை நான் உடைத்தேன்.. 'அனைவருக்கும் கொனிச்சிவ்வா...' (வணக்கம்) என்றேன்... அவர்கள் அனைவரும் அவர்கள் முறைப்படி குனிந்து வணக்கம் வைத்தார்கள்...
அடுத்ததாக, 'நீங்கள் நடிக்கப்போவது ஹாரர் படம்' என்று கூற... கொல்லென்று சிரித்தார்கள். எங்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது... ஒரு பெண் நடிகை எங்களிடம் ஜப்பான் மொழியில் ஏதோ சொல்ல... அது புரியாமல் நாங்கள் பேய் முழி முழிக்க... உடன் இருந்த நண்பர் திரு.கௌரி ஷங்கர்.. மொழிப்பெயர்த்தார்... அவர்களில் பலருக்கு பேய் என்றால் பயங்கர பயமாம்... அவர்கள் இதுவரை முழுதாக எந்த ஹாரர் படத்தையும் பார்த்ததில்லையாம்... இடையிடையே கண்கள் மூடிக்கொள்வார்களாம்... அட பெண்கள்தான் அப்படி என்றால், கூட நடித்த ஆண்களும் அதையேத்தான் கூறினார்கள்.
ஜப்பானில் ஹாரர் படங்கள் ஃபேமஸ் என்றுதானே இவ்வளவு தூரம் வந்து படமாக்க விரும்பினோம்.. இப்படி வந்தவர்கள் பயந்தால் எப்படி..? என்று முழித்திருக்க... 'கோழி குருடா இருந்தா என்ன..? குழம்பு ருசியா இருந்தா சரி..' என்ற கவுண்டர் தியரிப்படி, 'நடிகர்களுக்கு பயம் இருந்தால் என்ன... பார்ப்பவர்களுக்கு பயம் வந்தால் சரி...' என்று ஷூட்டிங்-ஐ தொடர்ந்தோம்... அவர்களது பேய் பயம் திரையில் தெரியும்படி நன்றாக நடித்து கொடுத்ததால், அவுட்புட்-ல் ஆல் இஸ் வெல்... அது போதுமே..!!!
குறிப்பாக, பேபி மியாபி என்ற குட்டிப்பெண் பேயைக்கண்டு பயப்படுவது போலவும்... பிறகு அவளே (சாரி.. கதை சொல்லக்கூடாது) அசத்தினாள்.. இரவு ஷூட்டிங்கில் தூங்காமல் நடித்து கொடுத்த அந்த பேபி மியாபி, சென்றமுறை அம்புலியில் நடித்த 'நான் கடவுள்' ராஜேந்திரன் கதாபாத்திரத்தின் மகளாக வரும் செவ்வந்தி (பேபி ப்ரியா) கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தினாள்...
(தொடரும்)
3 comments:
konnichiva endral vanakkam ,ok. ennum sila japaniya varthaigalai arimugam seithal engu naangalum katrukolvom sir
Post a Comment