எக்சாம் எழுதும்போது அடிஷனல் ஷீட் வாங்கி பார்த்திருக்கிறேன்.. 'ஆ' படத்தின் கதைநாயகன் கோகுல் தனது பாஸ்போர்ட் புக்-கில் அடிஷனல் புக் வாங்கி வைத்திருப்பவர்... அந்தளவுக்கு உலகத்தில் பல ஊர் சுற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். இவரை உலக சுற்றும் வாலிபன் என்று சொல்வது சாலப்பொருந்தும். எங்கள் குழுவில் இவருடன் எப்போது ஃபோன் பேசினாலும், 'இந்தியாவுல இருக்கீங்களா..?' என்றுதான் பரிகசித்துதான் பேச ஆரம்பிப்போம்...
Gokul
இவர் இதற்கு முன்னமே நான்கு முறை ஜப்பானிற்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஜப்பானில் நிகழ்ச்சி நடத்திய வரலாறும் உண்டு என்று தெரிந்தது.. இதனால், கோகுலுக்கு அந்த ஊரில் ரசிகர்கள் அதிகம்... நம்மூர் தமிழ் மக்கள் மட்டுமின்றி, அந்த ஊர் நேட்டிவ் ஜப்பானிய மக்களிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு என்று அங்கு சென்றபோதுதான் பார்க்க முடிந்தது...
Aaaah Team Nori & Tamami
இதுமட்டுமின்றி, நாங்கள் ஜப்பானியர்களோடு ஷூட் செய்துக்கொண்டிருக்கும்போது, ஷூட்டிங் இடைவேளையில் இவரது ஃபேமஸ் மைமிங்கான 'ஹேட் மைம்' செய்து காட்டினார்.. அதை பார்த்த மாத்திரத்திலிருந்து, அங்கிருந்த நடிகர்கள் 12 பேரும் இவருக்கு புது ரசிகர்களாகிவிட்டார்கள். Proud to be his friend...
(தொடரும்)
1 comment:
Mr.gokulidam niraiya talent iruppathinal japanilum avarukku pugaz undu endru ninaikiren.
Post a Comment