Sunday, July 13, 2014

'ஆ'மயம் 18 - மானாட மயிலாட நிகழ்ச்சியில் இன்று 'ஆ' பாடல் வெளியீடு

இன்று 'ஆ' படக்குழுவினருக்கு ஹேப்பி சண்டே.. காரணம், இன்று எங்கள் படத்தின் பாடல் வெளியீடு.. கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் நடக்கவிருக்கிறது...


இந்த நிகழ்ச்சியில் 'ஆ' படத்தின் ஹீரோ கோகுல், ஹீரோயின் மேக்னா, வில்லன் சிம்ஹா, காமெடியன் பாலா, டைரக்டர்க்ள் நான் & நண்பர் ஹரி, கேமிராமேன் சதீஷ், இசை அமைப்பாளர்கள் K வெங்கட் பிரபு ஷங்கர், சாம் CS, கொரியோகிராஃபர் SANDY என்று அனைவரும் குழுவாய் கலந்து கொண்டு உரையாடியுள்ளோம்.

கலா மாஸ்டர், குஷ்பு மற்றும் நமீதா.. மூவரும் இந்நிகழ்ச்சியின் சார்பாக எங்களிடம் படத்தை பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளோம்.

'ஆ' படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. இந்த மூன்று ட்ராக்குக்கும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டேன்ஸ் ப்ர்ஃபாமென்ஸ் நடைபெறும்.. 

நிகழ்ச்சியை பற்றிய ஒரு சின்ன ப்ரொமோ வீடியோ இதோ....


அடுத்த பதிவில் பாடல்களை பற்றிய மேலும் விவரங்களை பகிர்கிறேன்...

(தொடரும்)


Signature

Friday, July 11, 2014

'ஆ'மயம் 17 - இன்று நள்ளிரவு 12 முதல் 'ஆ' ஆடியோ (SINGLES)


'ஆ'  ஒரு ஹாரர் படம் என்பதால்... Themeக்கு ஏற்றபடி சிங்கிள் ட்ராக் வெளியிட்டை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று முடிவானதும்... எப்படி செய்யலாம் என்று ஆளுக்கொரு ஐடியாவை யோசித்து கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் மக்கள் தொடர்பாளர் திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் ஒரு அருமையான ஐடியாவை கூறினார். நள்ளிரவு 12 மணிக்கு பாட்டை FMல் ஒளிபரப்பலாம் என்றதும், எங்கள் அனைவருக்குள்ளும் 'அடடே' என்று ஒருமித்தமாக பல்பு எரிந்தது... அவர் ஐடியாவை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், அதை செயல்முறைப்படுத்த SURYAN FM-ல் பேசி ஏற்பாடு செய்தும் கொடுத்துவிட்டார்... அதன் பலனாய்.. இதோ இன்று நள்ளிரவு 12 மணிக்கு... பேய்களின் PEAK TIMEல் SINGLES BREAK...



இந்த சிங்கிள்ஸ் பாடலை பற்றி சில விவரங்கள்

'கண்ணாடிதான்டா..'  என்ற இந்த பாடலை எழுதி பாடியவர் 'கானா பாலா'... இன்றைய தேதிக்கு 'கானா பாலா'வை 'உள்ளூர் ஹனி சிங்' என்றே கூறலாம்... அந்தளவுக்கு அவர் சிங்கிள்ஸ் பாடலில்லாத தமிழ்ப்படமே இல்லை... ஆனால் 'ஆ' படத்தில் வழக்கமான காதல் கானாவாக இல்லாமல்... பத்து வருடம் கழித்து சந்திக்கும் பள்ளிக்கால நண்பர்களின் REUNION PARTYயில் பாடப்படும் GET-TOGHETHER GAANAவாக அமைத்திருக்கிறோம்... பள்ளிக்கால நினைவுகளை அலசும் பாடல்வரிகளை அற்புதமாக எழுதிக்கொடுத்து பாடியிருக்கிறார் கானா பாலா...



அடுத்த பதிவில் இந்த பாடல் பற்றிய கூடுதல் விவரங்களை பகிர்கிறேன்...

TRIVIA
கானா பாலா, இந்த பாடல் வரிகளை எழுதி முடித்ததும் தன் பள்ளி நண்பர்களை சந்திக்கும் ஆவல் மிகவும் ஏற்பட்டதாக கூறினார்... இதனால், ஃபோனில் இருக்கும் நம்பரை வைத்து மேலும் சில நம்பரை தேடிப்பிடித்து பள்ளி நண்பர்களோடு ஃபோனில் பேசியதாக கூறினார்...


Signature

Monday, July 07, 2014

'ஆ'மயம் 16 - டீசருக்குள்ளே ஒரு Surprise Gift

'ஆ'மயத்தில் ஜப்பான் படப்பிடிப்பு குறித்த சில சுவாரஸ்யமான அனுபவங்களை என் நினைவுகளுக்கு எட்டியவைர நினைத்து நினைத்து பகிர்ந்திருக்கிறேன்... இன்னும் ஓரிரு அத்தியாயங்களில் ஜப்பான் படப்பிடிப்பு அனுபவங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது அதை தொடர்ந்து வேறு இடங்களில் நடந்த படப்பிடிப்பு அனுபவங்களை தொடர்கிறேன்... அதற்குமுன், 'ஆ' திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர்.. இதோ உங்கள் பார்வைக்கு...


பார்வையாளர்கள் பணிவான கவனத்திற்கு... இந்த டீசர் ட்ரெய்லரை நன்றாக பாருங்கள்.. குறிப்பாக சொல்லப்போனால், ஸ்மார்ட் கண்களுடன் பாருங்கள்... அப்படி பார்ப்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைசான கிஃப்ட் காத்திருக்கிறது...

பார்த்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. இந்த டீசர் பிடித்திருந்தால்.. உங்களது வலைதளங்களிலும் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Thursday, July 03, 2014

'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா



உலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃபா முஸ்தஃபா நட்பு ஏற்பட்டு... எங்கள் படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்கள். அந்த இருவர்... பாலா & கெஞ்சி (ஜப்பானியர்). இவர்கள் இருவரும் 'ஆ' ஜப்பானிய படப்பிடிப்பின்போது, திக்'கோ திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள்

காதல் மட்டும்தான் அற்புதமானதா..? காதலில் மட்டும்தான் அற்புதகங்கள் நிகழுமா...? இல்லை.. இது நட்பிலும் நிகழும் என்பதற்கு இந்த ப்ளாக் & வயிட் ஃப்ரெண்ட்ஸ்தான் சாட்சி... இருவருக்கும் மொழி வேறு, நாடு வேறு, கலாச்சாரம் வேறு.. இப்படியிருக்க... ஷூட்டிங்கிற்காக சந்தித்த வெகுசில நாட்களில் இருவரும் இப்படி ஒரு நட்பாய் இருக்கமுடியுமா என்று வாய்பிளக்க வைத்த ஒரு நட்புக்காக கதை...

பாலா கெஞ்சிக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதும்... அவர் இவருக்கு ஜப்பானிய மொழி சொல்லிக்கொடுப்பதும்.. அவர் நடித்த ஷாட்டுக்கு இவர் கைத்தட்டுவதும், இவர் நடித்த ஷாட்டுக்கு அவர் 'சாய்க்கோ' என்று ஜப்பானிய மொழியில் பாராட்டுவதும்.. ப்ரேக் டைமில் இருவரும் இருநாட்டு வளநலங்களை பற்றி பேசி சிலாகித்து கொள்வதும்... நம் நாட்டு ரஜினி ஸ்டைலை பற்றியும், ஜப்பானின் சுத்தம் மற்றும் நேரத்தவறாமை பற்றியும்... என்று இவர்களது நட்பு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருந்தது...


கலகலப்பாக போய்க்கொண்டிருந்த அவர்களது நட்புக்கதை... நாங்கள் ஷூட்டிங் முடிந்து ஒரு சின்ன ஃபேர்வெல் பௌலிங் கேம் விளையாடி பிரிந்த போது... இவர்கள் இருவர் மட்டும் விரைவாக விளையாடி முடித்து.. அவர்களுக்கு மட்டுமே புரிந்த அந்த தமிழும் ஜப்பானும் கலந்த மொழியில் நட்பு பாராட்டி வந்தனர்...



பௌலிங் முடிந்து அனைவரும் புகைப்படம் பரிமாறிக்கொண்ட போது... இவர்களது முகம் மட்டும் விட்டுப்பிரியப்போகும் வாட்டத்தை கொண்டிருந்ததை நாங்கள் அனைவரும் காண நேரிட்டது... இருவரும் பிரியும்போது கண்ணீருடன் விடை கொடுத்து கொண்ட அந்த செண்டிமெண்ட் காட்சி இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை... உண்மையில் இந்த நட்புக்கு முன்ஜென்ம முடிச்சு ஏதோ ஒன்று இருக்க வேண்டும்... அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... இவர்களுக்காகவாவது நாங்கள் மீண்டும் ஜப்பான் போய் படம் எடுத்தால் நன்றாக இருக்குமோ? என்று எங்களை யோசிக்க வைத்த இந்த நட்புக்காக கதை... என்றென்றும் தொடர, இந்திய, ஜப்பானிய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்...

(தொடரும்)


Signature

Popular Posts