எங்கள் குழுவின் முதல் படமான 'ஓர் இரவு' திரைப்படத்தை 'அம்புலி 3D' டீம் பார்ப்பதற்காக பிரத்யேக காட்சி ஒன்றை சென்ற வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு, தேவி ஸ்ரீ தேவி ப்ரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தோம்.
↑ 'ஓர் இரவு' இயக்குனர்கள்
ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்
'அம்புலி 3D' குழுவினரில் சுமார் 60% ஆட்கள் வந்திருந்து சிறப்பித்தனர். மீதமிருந்த நண்பர்கள் தத்தம் பணியில் வெளியூர்களில் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.
படத்தை பார்த்து பாராட்டியதோடு பலரும் 'ஏன் இந்த படத்துக்கு நீங்கள் சரியாக பப்ளிசிட்டி செய்யவில்லை..! ஏன் A சென்டர் தியேட்டர்களில் திரையிடவில்லை' என்று ஏகத்துக்கும் திட்டி தீர்த்தனர். கண்டிப்பாக 'ஓர் இரவு' படத்தை ரீ-ரிலீஸ் செய்யும்படி அறிவுறுத்தி சென்றனர்.
↑ டான்ஸ் மாஸ்டர் தினா அவர்களுடன்
↑ ஸ்டண்ட் மாஸ்டர் T.ரமேஷ் அவர்களுடன்
↑ திரு. டேனியல் ப்ரொடக்ஷன் மேனேஜர் சக்தி அவர்களுடன்
↑ அண்ணன் தேனி முருகன் & ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் சந்தனபாண்டியன் அவர்களுடன்
↑ கோகுல் மற்றும் நண்பர்கள்
↑ உமா ரியாஸ்
↑ மேக்கப் சசி (நடுவில் இருப்பவர்) அவர்களுடன்
↑ காஸ்ட்யூமர் பாபு (குழந்தையுடன்)
↑ லைட் டிபார்ட்மெண்ட் ஷக்தி (ப்ரௌன் ஷர்ட்)
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட IOB-ல் பணிபுரியும் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள், படத்தை பார்த்த அடுத்த நாள் எனக்கும் ஹரிக்கும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு நீண்ட நேரம் பேசி பாராட்டி கொண்டிருந்தார். படத்தை பார்த்து பயந்த அவரது இன்ஜினியரிங் படிக்கும் மகன், இரவு 1.30 மணியளவில் கதவு தட்டி அப்பா அம்மாவுக்கு நடுவில் படுத்து கொண்டதாக கூறினார். இப்படம் சரியான ஆடியன்சுக்கு போய் சேர்ந்திருந்தால் இது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும், எப்படியாவது ரீரிலீசுக்கு முயலுங்கள் என்று வற்புறுத்தினார். 70களில் அன்னக்கிளி படத்தை முதலில் ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிறகு அந்த படத்தையும் இசையையும் கொண்டாடியதை உதாரணம் கூறினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நாங்களும் அந்த எண்ணத்தில் (ரீ-ரிலீஸ்) இருப்பதால்தான் இப்படம் குறித்த எந்த உரிமையையும் இன்னும் எவ்விடத்திலும் வியாபாரப்படுத்தாமல் வைத்திருக்கிறோம்.
↑ IOB ஸ்டாஃப் நண்பர்கள்
↑ மற்றும் நண்பர்களின் குடும்ப நபர்கள்
இந்த பிரத்யேக காட்சி, 'அம்புலி 3D'படப்பிடிப்பில் உடன் பணியாற்றிய அத்தனை நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் ஒரு get togetherஆக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி..!



















