Monday, May 26, 2014

"ஆ"மயம் 04 - அடுத்த படம் பற்றிய முன்னறிவிப்பு


'ஆ' படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததுமே, நண்பர்கள் சிலர், "முதல் படம் 'அம்புலி' அடுத்த படம் 'ஆ' என்று நீங்கள் அகரவரிசைப்படி தலைப்பு வைத்துவருகிறீர்கள்... சூப்பர்..." என்று வாழ்த்தினர்... அப்போதுதான், எங்களுக்கே தெரியாமல், அகர வரிசையில் எங்கள் படங்களின் தலைப்புகள் அமைந்திருப்பது தோன்றியது. ஆனால், உண்மையில் அகரவரிசைப்படி வைக்கவேண்டும் என்று வைக்கவில்லை.. காரணம், ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பதே ஒரு பெரிய வேலை... அதுவும், ஏற்கனவே தலைப்பு வைப்பதற்கு சில எழுதப்படாத விதிகள் சினிமாவில் உண்டு...

1. பாசிடிவ் டைட்டிலாக இருக்க வேண்டும்
2. கதைக்கு சம்மந்தப்பட்ட டைட்டிலாக இருக்க வேண்டும்
3. எல்லா வயது மக்களுக்கும் பிடிக்கும்படியும், வாயில் சுலபமாக நுழையும்படியும் இருக்க வேண்டும்
4. இதில் மூன்றெழுத்து, இரண்டெழுத்து... போன்ற Seasonal Sentiments
5. புரியும் வார்த்தையாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் சங்க கால தமிழில் புரியாத வார்த்தையாக இருந்தால் அதற்கு தனியாக விளக்கம் கொடுத்து புரிய வைக்க மெனக்கெட வேண்டும்
6. ஏற்கனவே பலருக்கும் தெரிந்த அல்லது விளம்பரப்படங்களில் வந்த ஃபேமசாக சொற்றொடராக இருத்தல் நலம்...
7. கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழில் இருக்க வேண்டும்... இது அனைவருக்கும் பொருந்தாது,  தமிழ்ப்பற்றாளர்கள் விதிவிலக்கு

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தலைப்பை தேடுவதற்குள் தலை சுக்குநூறாய் வெடித்துவிடும். இதில், அகர வரிசை என்ற வரையறைக்குள் சிக்கிக்கொண்டால், மேலும் கஷ்டமாகிவிடும் என்பதால், அடுத்த படத்திற்கு 'இ' என்ற முறையில் தலைப்பு அமையுமா என்று தெரியிவில்லை.. ஆனால், நிச்சயமாக 'இ' என்ற எழுத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது மட்டும் தெரிகிறது...

இதையெல்லாம் தாண்டி ஒரு கூடுதல் சமாச்சாரம் உண்டு, அதாவது, எனது முதல் 'அம்புலி' இல்லை... 'ஓர் இரவு' தான் (இந்த படத்திற்கு முதலில் 'இரா' என்று தலைப்பு வைத்து பிறகு 'ஓர் இரவு' என்று மாற்றியது தனிக்கதை)... 'ஓர் இரவு'-ஐ தொடர்ந்து அகரவரிசைப்படி வைத்திருந்தால், 'ஔ' எழுத்தில்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும்... யோசித்து பாருங்கள் 'அம்புலி' படத்திற்கு 'ஔ'வில் தலைப்பு வைத்திருந்தால் என்ன வைத்திருக்க முடியும்.... இந்த எழுத்தில் ஏதாவது மாற்றுத்தலைப்பு தோன்றினால் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

5 comments:

Philosophy Prabhakaran said...

அதானே பார்த்தேன்... முதல் பத்தியை படித்துவிட்டு உங்கள் முதல் படத்தை நீங்களே மறந்துவிட்டீர்களோ என்று பயந்துவிட்டேன்...

// புரியும் வார்த்தையாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் சங்க கால தமிழில் புரியாத வார்த்தையாக இருந்தால் அதற்கு தனியாக விளக்கம் கொடுத்து புரிய வைக்க மெனக்கெட வேண்டும் //

தெகிடி, சரபம் என்றெல்லாம் தலைப்பு வைக்கிறார்கள்... நன்றாகத் தான் இருக்கிறது... ஆனால் இதனால் காமன் மேன்கள் வரவு கணிசமாக குறையும்...

பேசாமல் அடுத்ததாக உங்கள் ஓர் இரவு படத்தையே பட்டி டிங்கரிங் பார்த்து இரா என்ற பெயரில் வெளியிடலாமே... இப்போ வேற ஹாரர் ட்ரெண்ட் ஓடிக்கிட்டிருக்கு...

DREAMER said...

வணக்கம் பிரபாகரன்,
'ஓர் இரவு' படத்தை நியாபகம் வைத்திருக்கும் வெகு சில நண்பர்களில் நீங்களும் ஒருவர்.. மிக்க மகிழ்ச்சி..! அந்த படத்தை ரீரிலீஸ் செய்ய பல முயற்சிகள் எடுத்து கொண்டுதானிருக்கிறோம்.. அது 'ஆ'வைத் தொடர்ந்து வந்தால், நீங்கள் சொன்னதுபோல், நல்ல ஐடியாவாகத்தான் இருக்கும்.. 'இ' வரிசையும் பூரணமடையும்...

இன்னொரு ஸ்க்ரிப்ட் சம்மந்தமாக உங்களது அந்தமான் பயணத்தொடரைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்... மிக சுவாரஸ்யமாக இருக்கிறது... எனது ப்ரிப்ரொடக்ஷன் வேலைகளை சுலபமாக்கியதற்கு மிக்க நன்றி..! இணைந்திருப்போம்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Philosophy Prabhakaran said...

தீவுகள் என்றாலே ஒரு கிக் இருக்கிறது அல்லவா...

அந்தமான் தீவுகளை அல்லது ஏதேனும் ஒரு தீவை வைத்து நிறைய அருமையான கதைகள் புனையலாம்... அந்தமானில் ஒரு குறிப்பிட்ட தீவில் sentinelese என்ற இன மனிதர்கள் இருக்கிறார்கள்... அவர்களைப் பற்றி தேடிப் படியுங்கள்... sentinelese பற்றி ஒரு திரைப்படம் வந்தால் அட்டகாசமாக இருக்கும்...

Unknown said...

hi
iam really like ur way of direction
iam not getting the ஓர் இரவு cd if able to possible for
ஓர் இரவு DVD give the link
yoursgmdinesh@gmail.com

DREAMER said...

Sentinelese பற்றிய அறிமுகத்திற்கு நன்றி பிரபாகரன்.. நிச்சயம் படிக்கிறேன்..

வணக்கம் தினேஷ்,
Thanks for your appreciation Dinesh... Regarding, ORR ERAVUU we haven't released the DVD rights of the film yet, as we have plans to redo it in 3D in different languages. I'll try to make sure you see the film through any other means...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Popular Posts