இந்த MOTION POSTER (MOSTER என்றும் சொல்கிறார்கள்) என்ற கான்செப்ட் சில வருடங்களுக்கு முன்பு TERMINATOR SALVATION என்ற படத்திற்கு செய்து வெளியிட்டிருந்தார்கள்.. (அதற்கு முன்பே பல படங்களுக்கு வந்திருந்தாலும் நான் முதலில் பார்த்தது இதுதான்) அது பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் உயிரோடு அசைவுடன் + இசையுடன் இருந்தால் எப்படியிருக்கும்.. அதுதான் மோஷன் போஸ்டர்கள்...
ஒரு படத்தின் டீசர் கொடுக்க வேண்டிய விளைவை கிட்டத்தட்ட இந்த மோஷன் போஸ்டர்கள் கொடுத்துவிடுகின்றது... ஒரு நாவலின் மிக சுவாரஸ்யமான வரிகளை கோடிட்டு காட்டுவது போல், ஒரு படத்தின் சரியான Mood-னை வெளிப்படுத்த.. இந்த மோஸ்டர்கள் உபயோகப்படுகின்றன...
வருங்காலங்களில் இது போன்ற மோஷன் போஸ்டர்கள் டிஜிட்டல் பேனர்களாய் பொது இடங்களில் மாட்டப்படலாம்.. அப்போது, பார்ப்பதற்கு 'ஹாரி பார்ட்டர்' படத்தில் வரும் அசையும் புகைப்படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதுபோல் தோன்றலாம்..
ஏற்கனவே அம்புலியில் இதை முயன்றிருந்தோம்.. தமிழில் வெகு சில படங்களுக்கே இந்த DMP (DIGITAL MOTION POSTER) வெளியானது... சட்டென நினைவுக்கு வருவது... ஏழாம் அறிவு, நண்பன், சமீபத்தில், விடியும்முன் போன்ற படங்களின் Motion Posters'தான்...
இதோ.. .'ஆ' படத்தின் முதல் Motion Poster.. படத்தின் தீம் மியூசிக்கின் பின்னனியுடன்...
#Aaaah Digital Motion Poster 001
'ஆ' படத்தில் வரும் ஐந்து கதைக்கும் தனித்தனியே மோஷன் போ்ஸ்டர் செய்து வெளியிட உத்தேசம்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
2 comments:
"ஆ மயம்" வெற்றியடைய வாழ்த்துக்கள் ஹரீஸ்!!
தொடர்ந்து உங்க வலைத்தளத்திலும் எழுதுங்கள்.. கேணிவனம் போல் இன்னொரு கதையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்...
வணக்கம் நாடோடி நண்பரே,
வாழ்த்துக்கு மிக்க நன்றி... திரைக்கதை எழுத ஆரம்பித்ததிலிருந்து கதை எழுத போதிய நேரம் கிடைப்பதில்லை... ஆனால், நிச்சயம் எழுதுகிறேன்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
Post a Comment