Showing posts with label மோஷன் போஸ்டர். Show all posts
Showing posts with label மோஷன் போஸ்டர். Show all posts

Tuesday, May 27, 2014

'ஆ'மயம் 05 - 'ஆ' படத்தின் DIGITAL MOTION POSTER


இந்த MOTION POSTER (MOSTER என்றும் சொல்கிறார்கள்) என்ற கான்செப்ட் சில வருடங்களுக்கு முன்பு TERMINATOR SALVATION என்ற படத்திற்கு செய்து வெளியிட்டிருந்தார்கள்.. (அதற்கு முன்பே பல படங்களுக்கு வந்திருந்தாலும் நான் முதலில் பார்த்தது இதுதான்) அது பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் உயிரோடு அசைவுடன் + இசையுடன் இருந்தால் எப்படியிருக்கும்.. அதுதான் மோஷன் போஸ்டர்கள்...

ஒரு படத்தின் டீசர் கொடுக்க வேண்டிய விளைவை கிட்டத்தட்ட இந்த மோஷன் போஸ்டர்கள் கொடுத்துவிடுகின்றது... ஒரு நாவலின் மிக சுவாரஸ்யமான வரிகளை கோடிட்டு காட்டுவது போல், ஒரு படத்தின் சரியான Mood-னை வெளிப்படுத்த.. இந்த மோஸ்டர்கள் உபயோகப்படுகின்றன...

வருங்காலங்களில் இது போன்ற மோஷன் போஸ்டர்கள் டிஜிட்டல் பேனர்களாய் பொது இடங்களில் மாட்டப்படலாம்.. அப்போது, பார்ப்பதற்கு 'ஹாரி பார்ட்டர்' படத்தில் வரும் அசையும் புகைப்படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதுபோல் தோன்றலாம்..

ஏற்கனவே அம்புலியில் இதை முயன்றிருந்தோம்.. தமிழில் வெகு சில படங்களுக்கே இந்த DMP (DIGITAL MOTION POSTER) வெளியானது... சட்டென நினைவுக்கு வருவது... ஏழாம் அறிவு, நண்பன், சமீபத்தில், விடியும்முன் போன்ற படங்களின் Motion Posters'தான்...

இதோ.. .'ஆ' படத்தின் முதல் Motion Poster.. படத்தின் தீம் மியூசிக்கின் பின்னனியுடன்...
#Aaaah Digital Motion Poster 001

'ஆ' படத்தில் வரும் ஐந்து கதைக்கும் தனித்தனியே மோஷன் போ்ஸ்டர் செய்து வெளியிட உத்தேசம்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Tuesday, January 31, 2012

தமிழ் படங்களுக்கும் டிஜிட்டல் போஸ்டர்கள் உண்டு

வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் MOTION POSTERS எனப்படும் டிஜிட்டல் போஸ்டர்களை பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். அதில் ஹிந்தி படங்கள் டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்திருப்பதாகவும், தமிழ்ப்படங்களும் இனிமேல் இந்த வகையான டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்...

இனிமேலென்றில்லை... நம் அம்புலி படத்துக்காக ஜூலை 23, 2011 அன்றே (ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் ஆரம்பிக்கும்போது) ஒரு மோஷன் போஸ்ட்ரை வெளியிட்டிருந்தோம்...


MOTION POSTER #01 OF AMBULI


அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 31, 2011 மற்றும் ஜனவரி 29, 2012 அன்று என்று மொத்தம் இதுவரை மூன்று மோஷன் போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறோம்...


                                                      MOTION POSTER #02 OF AMBULI

MOTION POSTER #03 OF AMBULI

சரி, நாங்கள் புதியவர்கள் எங்களது  படம் பெரிய நட்சத்திர படம் இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், இயக்குநர் ஷங்கர் அவர்களின் சமீபத்திய படமான 'நண்பன்' படத்தின் சார்பாகவும் ஒரு மோஷன் போஸ்டர் டிசம்பர் 27, 2011 அன்று வெளிவந்திருக்கிறது...  இதோ...


நாளிதழ்கள் வரலாற்று பதிவுகள் என்றிருக்கும்போது இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts