Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Friday, May 16, 2014

"ஆ"மயம் 02





'ஆ'கு பெயர்

சில வருடங்களுக்கு முன்பு, சுஜாதா அவர்களின் நாவல்களை back to back வாசித்துக்கொண்டிருந்த சமயம், தேடித் தேடி அவரது நாவலை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒருமுறை ஒரு நாவல் வாங்கி வந்து ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்... அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், நாவலின் தலைப்பை ஏதாவது ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பார்கள். அந்த தலைப்பு 'ஆ'...


அட்டகாசமான அமானுஷ்ய நாவல்... எனக்கு அந்த நாவலின் கதை பிடித்திருந்தாலும், மற்ற சுஜாதாவின் நாவல்களின் தலைப்பை தாண்டி இந்த நாவலின் தலைப்பு அப்படி பிடித்து போனது... 'ஆ'... இதைவிட ஒரு ஹாரர் கதைக்கு தலைப்பு வைக்க முடியுமா என்று தெரியவில்லை... தலைவர் எப்படி யோசித்தாரோ... அவரது ரசிகன் என்ற முறையில் தலைவர் சுஜாதாவிற்கு நன்றி... அந்த தலைப்பு, வெகுநாட்களாகவே என்னுள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது... அம்புலியை தொடர்ந்து அடுத்த ஹாரர் கதை.. அதுவும், உலகில் உள்ள வெவ்வேறு ஊரில் நடக்கும் ஹாரர் என்று முடிவானதும்... நீண்ட நாட்களாகவே என் மனதிலிருந்த இந்த தலைப்பை எனது நண்பர் ஹரியிடமும் தயாரிப்பாளர் V. Loganathan அவர்களிடமும் கூற, ஒருமனதுடன், அனைவருக்கும் பிடித்துப்போய் 'ஆ' என்று வைத்துவிட்டோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இத்தலைப்பை பதிவு செய்ய முயன்ற போது ஏற்கனவே இதை வேறொரு கம்பெனியினர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறவுஉம்... ஒரு வாரமாக யோசித்தும் வேறெந்த தலைப்பும் சிறப்பாக தோன்றவில்லை.. தோன்றியதும் 'ஆ' அளவிற்கு ஈர்க்கவில்லை.. பிறகு, அந்த முன்பதிவு செய்த கம்பெனிக்காரர்களிடமே பேசி... சம்மதிக்க வைத்து.. தலைப்பை பெற்றுக்கொண்டோம்...

டிஸ்கி : தலைப்பு மட்டுமே தலைவரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதே தவிர, அந்த கதைக்கும் இந்த திரைப்படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்... 


Signature

Saturday, April 07, 2012

எண்ணத்திரை : [சுஜாதா, மறைவாய் வாழ்கிறார்]

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை இப்போதுதான் தூசிதட்டி எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஏனோ, வழக்கம்போல் முதலில் சுஜாதாவின் '21ஆம் விளிம்பு' சிக்கியது.

சுஜாதாவின் '21ஆம் விளிம்பி'ல் அவர் தமிழக அரசாங்க நிருபரின் சார்பாய் முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களுடன் மேற்கொண்ட உலகச் சுற்றுப் பயணத்தைப் பற்றி படிக்க முடிந்தது... படித்து முடிந்ததும் நாமும் ஏதோ அந்த சுற்றுப்பயணத்தில் பங்கு பெற்றது போன்றதொரு உணர்வை மிக இயல்பாய் ஏற்படுத்தியுள்ளார்... ஒரு பகுதியில் சிங்கப்பூரை பற்றியும் மலேசியாவைப் பற்றியும் அவரது பார்வையையும், நம்மூரின் பல இயலாமைகளையும் வருத்தத்தோடு ஒப்பிட்டுள்ளார். இதிலிருக்கும் சில தகவல்களை 'அந்நியன்' பட விழிப்புணர்வு ஸ்பீச்சில் (அவரே) எழுதியிருப்பது தெரிகிறது. (உதாரணம் : 'சிங்கப்பூர்... பெங்களூரைவிட சிறிய ஊர் ஆனால்...'என்று வளரும் வசனம்.)


டி.என்.ஏ. பற்றி, கன்னடத் திரைப்படங்கள் பற்றி, தூர்தர்ஷனின் அப்போதைய (?) தரத்தைப் பற்றி, நாதஸ்வரத்தின் விலைகளும், அதை திறம்பட வாசிக்கும் வித்துவான்கள், அவர்கள் பிரயோகிக்கும் டெக்னிக்கல் வார்த்தை... ஜப்பான் பயணம், மலேசியா பயணம், சிங்கப்பூர் பயணம், பாரதியார் அரிதாய் பிரயோகித்த 'லிமரிக்' வகை கவிதைகள். இப்படி அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரமாய் தகவல்கள் தளும்புகிறது.

அறியாத அறிவியல் தகவல்களை வழக்கம்போல் வாரிக் கொடுக்கும் வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர் சந்தேகமின்றி சுஜாதான். இப்புதகத்தை படித்து முடித்ததும் ஒரு விஷயம் புரிந்தது... சுஜாதா சார் நம்மைவிட்டு மறைந்துவிடவில்லை... மறைவாய் வாழ்கிறார்... அவரைக் காண விரும்புவோர் அவரது எந்தவொரு புத்தகத்திலும் பின்னட்டையில் காணலாம்... அவரிடம் பேச நினைப்போர் கேள்வியை மனதில் நினைத்துக் கொண்டு அவரது புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து படிக்கலாம். நிச்சயம் விடை கிடைக்கும்.


பெயர் : 21ஆம் விளிம்பு
எழுத்தாளர் : சுஜாதா
வெளியீடு : திருமகள் புத்தக நிலையம்
இப்புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்கவும்







---------------------


Signature

Popular Posts