Wednesday, May 14, 2014

"ஆ"மயம் 01



'ஆ' திரைப்படம் குறித்து வெளியான செய்திகளையடுத்து, நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்... மிக்க நன்றி..

குறிப்பாக வலையுலக நண்பர்களில், 'மெட்ராஸ்பவன்' சிவகுமார் முதலில் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்ததோடு படத்தை பற்றிய செய்தியை ஜில்மோரில் எழுதி வெளியிட்டார்... மேலும் அவர் கூறியபோதுதான் உண்மைத்தமிழன் அவர்கள் Tamilcinetalkல் ஏற்கனவே படத்தை பற்றி எழுதிவிட்டது தெரியவந்தது. அவருக்கும் நன்றி... நண்பர் ரஹீம் கஸாலி ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.. அவரோடு ஏற்கனவே இத்திரைப்படத்தை குறித்து ஓர் இரவு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன்... கதைப்படி, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்களை தொகுத்து திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருந்தபோது, மலேசியாவில் இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டேன், கஸாலி அவர்கள் ஏற்கனவே மலேசியாவில் வசித்தவர் என்பதால், அவருடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தேன். அந்த உரையாடல நடந்த நாட்களை அழகாய் நினைவுகூர்ந்தார்...

பிறகு, Bingleguy, என்ற நண்பர் எங்கள் குழுவின் நலன்விரும்பி வசந்தராமன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்... படத்தின் பெயர்விளக்கத்தை பற்றி எழுதும்படியும் கேட்டுள்ளார்.. நிச்சயம் எழுதுகிறேன்...

மேலும் சில நண்பர்களிடமிருந்து, கேணிவனத்தை எப்போது திரைப்படமாக எடுப்பீர்கள் என்ற கேள்வியும் எழுந்தது... வழக்கம்போல், முயற்சிகளை கைவிடாமல் மேற்கொண்டு வருகிறேன்... இம்முறை பல வலையுலக நண்பர்கள், வலைப்பூவில் வாழ்த்தாமல், ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்... ஃபேஸ்புக்கில் 'ஆ' படத்தை பற்றிய செய்திகளையும், புகைப்பட பகிர்வுகளையும் தெரிந்துக்கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன்...




இதுவரை நாளிதழ்களிலும், இணையத்திலும் வெளியான 'ஆ' பற்றி செய்திகளின் தொகுப்பினை இப்பதிவில் இணைத்துள்ளேன்...









Signature

3 comments:

Philosophy Prabhakaran said...

வாத்தியாருடைய தலைப்பு...

TOIயில் செய்தி படித்தேன்... எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்...

குறிப்பாக கடலுக்கு நடுவே நடைபெறும் சம்பவம் என்னவென்று தெரிந்துகொள்ள ஆசை...

வாழ்த்துகள் :)

DREAMER said...

வணக்கம் பிரபாகரன்,
வாத்தியார் தலைப்பேதான்... மலைத்துப்படித்த மிகச்சில டைட்டில்களில் இதுவும் ஒன்று... இந்த தலைப்பை பதிவு செய்ய போகையில், வேறு ஒருவர் முன்பே பதிவு செய்து வைத்திருந்ததால், முதலில கிடைக்கவில்லை.. பிறகு 3 மாதங்கள் காத்திருந்து, அவர்களிடம் கோரிக்கை விடுத்து விடுத்து வந்த விடாமுயற்சியால், பிறகுதான் கிடைத்தது...
வாத்தியார் ஸ்டைலிலேயே (ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் 'ஆ' என்று கத்துவது போல்) ஒவ்வொரு கதையின் முடிவிலும் 'ஆ' என்று முடிவது போல் அமைத்துள்ளோம்.
வாழ்த்துக்கு நன்றி..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

zeemanugolini said...

Harrah's Philadelphia Casino & Racetrack - Mapyro
Search for Harrah's Philadelphia Casino & Racetrack 광주광역 출장샵 in Chester, PA. The 문경 출장안마 Harrah's Philadelphia Casino & Racetrack 여주 출장마사지 is a hotel/casino located in 군산 출장샵 Chester, PA 경상북도 출장마사지

Popular Posts