இக்கதையின் இதர பாகங்களை படிக்க
பாகம் - 11 பாகம் - 12 பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15
பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் -20
பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம்-24 பாகம்-25
பாகம் - 26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29
--------------------------------------------------------------------

பாகம் - 30
ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அந்த காலை வேலையில் தாஸ், சந்தோஷ், லிஷா மூவரும் காரில் சீறிக்கொண்டிருந்தனர். தாஸின் கையில், முன்னாள் இரவு, சந்தோஷ் வீடியோவில் கண்டெடுத்த சித்தரின் பாடல் ப்ரிண்ட் அவுட் இருந்தது. அதை தாஸ் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தான்.
என்கண் நிறையிறை யவன்
எண்கண்ணு வுடையவனா ஆனதில்
நான் முகனவன் முகமதில்
நாரெண் டெட்டாம் கண்
நீகண்ட ததுவொன்றெனி
லெஞ்சியுள தேழென வெடுத்துரைத்தேன்
எனதா ஆசனுக்கு
என்று சித்தர் எழுதிய இப்பாடலை பார்த்தபடி தாஸ் காரில் சீறிக்கொண்டிருந்தான். தாஸ் அந்த பாடலுக்கு மனதினில் உரையெழுதிக் கொண்டிருந்தான்.
'பாஸ்..? இந்த பாடலோட பொருள் உங்களுக்கு ஏதாவது புரியுதா..?' என்று கேட்டான்
'புரியற மாதிரித்தான் இருக்கு கொஞ்சம் டைம் கொடு... சொல்லிடுறேன்..'
'நான் வேணும்னா ஹெல்ப் பண்ண்டடுமா..?' என்று லிஷா கேட்டாள்
'இல்ல லிஷா... ஜஸ்ட் கிவ் மி ஃப்யூ மினட்ஸ்..' என்று மீண்டும் பாட்டில் லயித்தான்.
சில நிமிடங்கள், சாலையோடு சேர்ந்து கரைந்தது...
சந்தோஷ், தான் கொண்டு வந்திருந்த புது பேட்டரியை தாஸின் செல்ஃபோனில் பொருத்திக் கொண்டிருந்தான்.
தாஸூக்குள் ஒரு தெளிவு... பாடலின் பொருளை பிடித்துவிட்டான். சித்தர் கூறிவிட்டு சென்ற மாபெரும் ரகசியமது என்று தெரிந்து கொண்டான்.
ஆனால் கார் தாஸின் ஆஃபீசை இதற்குள் நெருங்கி விடவே, மூவரும் இறங்கி... நீண்ட நாட்களாக பூட்டியிருந்த தாஸின் 'Ancient Park'-இனுள் நுழைந்தனர்.
தாஸின் ஆஃபீஸறையில் நுழைந்து, ஏஸியை போட்டு, மிதமான ஆரஞ்சு வெளிச்சத்தில் அமர்ந்தனர்.
'என்ன பாஸ்... பாட்டு என்னன்னு தெரிஞ்சுதா..?' என்று மீண்டும் சந்தோஷ் ஆவர்மாய் கேட்க, சூழலை சுவாரஸ்யமாக்கும்பொருட்டு தாஸ் சிரித்தபடி லிஷாவிடம்...
'பாட்டுல என்ன இருக்குன்னு சொல்லணும்னா, லிஷா நீ போய் 3 பேருக்கும் காஃபி கொண்டுவா...' என்று கூற, லிஷா அந்த பாடலின் பொருளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் எழுந்து சென்றாள்.
அடுத்ததாக சந்தோஷிடம் திரும்பி, 'நீ என்ன பண்றேன்னா, இந்த சித்தர் பாட்டோட ப்ரிண்ட் அவுட்-ஐ ஸ்கீர்ன்ல ப்ரொஜெக்ட் பண்ணு..' என்றான். சந்தோஷ் எழுந்து தனது பெண்-டிரைவில் இருந்த அந்த சித்தர் பாடல் கொண்ட ஸ்க்ரீன்ஷாட் ஃபோட்டோவை லேப்டாப்பினில் இணைத்து, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய திரையில் ரிஃப்ளெக்ட் ஆகும்படி ப்ரொஜெக்ட் செய்தான்...
லிஷா இதற்குள், காஃபி மெஷினிலிருந்து, சுடச்சுட 3 காஃபியை கொண்டு வந்து கொடுத்தாள்.
மூவரும் அமர்ந்து காஃபியை குடித்தனர். தாஸ் எழுந்து சென்று ஒரு போர்டு மார்க்கர் எடுத்துக் கொண்டான்.
திரையில் தெரிந்து கொண்டிருக்கும் சித்தர் பாடலை அந்த போர்டிலேயே மார்க் செய்தபடி கீழ்கண்டவாறு எழுதி காட்டியபடி பொருள் உரைத்தான்.
என் கண் நிறை இறை அவன் (பிரம்மா)
'என் கண் நிறைந்த கடவுள் அப்படின்னு தன்னோட கடவுள் பிரம்மாவைப் பத்தி சொல்றாரு..' என்று தொடர்ந்து எழுதினான்
எண் (8) கண் உடையவன் ஆனதில்
'அந்த பிரம்மா கடவுள் 8 கண் உடையவருன்னு சொல்றாரு...'
நான்முகன் = பிரம்மா முகம் அதில்
'4 முகம் கொண்ட பிரம்மாவுக்கு...'
நாரெண்டு எட்டு உள்ளதாம் கண் (4X2=8)
'4X2 எட்டு கண்ணு இருக்கிறதால...'
நீ கண்டதது ஒன்றெனில்
'நீ பாத்தது ஒண்ணுதான்...'
எஞ்சியுள்ளது ஏழு என எடுத்துரைத்தேன்
'இன்னும் மிச்சமிருக்கிறது 7 இருக்குன்னு சொல்றாரு...'
என் தாசனுக்கு
'தாசன்-னா..? சீடன்..! தன்னோட சீடனுக்கு சொல்ற மாதிரி எழுதியிருக்காரு...' இல்லை மறைமுகமா சீடனுக்கு சொல்ற மாதிரி எனக்கும் சொல்லியிருக்கலாம். ஏன்னா என்னையும் தாஸ்-னுதான் அவர் கூப்பிட்டாரு...' என்று தாஸ் கூறி முடித்து காஃபியைத் தொடர்ந்தான்.
லிஷா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.., 'தாஸ்... இது உண்மையா..?'
'உண்மையா இருக்கிறதாலத்தானே எழுதியிருக்காரு..?' என்று தாஸ் அவளுக்கு பதிலளிக்க, சந்தோஷ் சற்று புரியாமல் விழித்தான்.
'என்னது உண்மையான்னு பேசிக்குறீங்க..? எனக்கு புரியல..?'
'அடப்பாவி சேண்டி, இதுகூடவா புரியல...? உன்னை கட்டிக்கிட்டு நான் எப்படித்தான் காலந்தள்ள போறேனோ..' என்று அவனை லிஷா செல்லமாய் திட்டினாள்...
'நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம் டியர்... நீ இப்ப என்ன விஷயத்தை உண்மையான்னு ஆச்சர்யமா கேட்டே..?'
'டேய், அந்த சித்தர் கேணிவனத்தைத்தான் பிரம்மாவோட கண்ணுன்னு ஏற்கனவே சொல்லியிருக்காருல்ல... இப்போ இந்த பாட்டு, நாம பாத்தது ஒரு கண்ணுதான், ஆனா, மொத்தம் 8 கண்ணு, அதுல ஒண்ணு போக மிச்சம் இன்னும் 7 கேணி இருக்கிறதா சொல்லியிருக்காரு... கரெக்டா தாஸ்..?' என்று தாஸை கேட்டாள்
'பர்ஃபெக்ட்லி ரைட் லிஷா...' என்று கூறினான். இப்போது சந்தோஷூம் ஆச்சர்யத்தில் மூழ்கினான்.
'பாஸ்... ஒரு கேணிவனத்துக்கே நாம் இவ்வளவு பாடுபட்டோம். அப்போ இன்னும் 7 இருக்கா..' என்று கேட்டான்
தாஸ் அதற்கு கண்களால் ஆம் என்று பதிலளித்தபடி அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
'பாஸ், இது எங்கேயிருக்கும்னு உங்ககிட்ட நேர்ல பேசும்போது ஏதாவது அந்த சித்தர் சொல்லியிருக்காரா..?'
'எங்கேயிருக்குன்னு சொல்லலை, ஆனா, அதோட தன்மையை மறைமுகமா சொல்லியிருந்தாரு... உன் பிறவியில் உன்னை நீயே பார்க்க 'இந்த' காலத்துவாரத்தில் முடியாது-ன்னு சொன்னாரு... அப்போ அதுக்கு என்ன அர்த்தம், மத்த கேணியில இந்த விஷயம் சாத்தியம்னுதானே..! ஆனா, அது அப்போ புரியல... இப்போத்தான் புரியுது..' என்றான்.
'பாஸ், அப்போ, மத்த கேணியில ஒவ்வொரு கேணிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்னு சொல்றீங்களா..?'
'ஆமா...'
'எங்கேன்னு போயி தாஸ் இதெல்லாம் தேடுறது...' என்று லிஷாவும் ஆர்வத்துடன் கேட்டாள்
'எங்கே வேணும்னாலும் இருக்கலாம் லிஷா... இனிமே பழைய கோவிலுங்களுக்கு போனா, அங்கே கிணறு ஏதாவது மூடியிருக்கான்னு பாக்கணும்... அதுல எந்த கிணறும் காலத்துவார கேணியா இருக்கலாம்..? இது ஜஸ்ட் ஒரு கெஸ்ஸிங்-தான்'
'பாஸ்... எனக்கு தெரிஞ்சு திருவொற்றியூர்ல ஒரு கோவில்ல ஒரு கிணறு மூடியிருக்கும்... ஆனா, அதுக்கு அவங்க வேற காரணம் சொல்றாங்க... அதாவது, கண்ணகி மதுரையை எரிச்சிட்டு கோபமா அங்க வந்தப்போ அவங்களை ஏதோ ட்ரிக் பண்ணி அந்த கிணத்துக்குள்ள போட்டு அடச்சிட்டாங்களாம்... சினம் குறையாத கண்ணகி இன்னும் அந்த கிணத்துக்குள்ள இருக்கிறதாவும், அதை திறந்தா, மறுபடியும் கோபத்தோட வந்து உலகத்தையே எரிச்சிடுவாங்கன்னும் சொல்றாங்க...'
'இந்த பழங்கதைகள் எல்லாம், கேக்குறதுக்கு சுவாரஸ்யமாவும் நம்பறதுக்கு கஷ்டமாவும் இருக்கும். ஆனா, ஒவ்வொரு கதைக்கு பின்னாடியும் அந்த கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத ஏதோ ஒரு பெரிய உண்மை மறைஞ்சியிருக்கும். உதாரணத்துக்கு இப்போ, இந்த கண்ணகி கிணறுக்குள்ள காலத்துவாரம் இருக்குன்னே வச்சிக்கோங்க... அதை ஓபனா சொல்லாம இப்படி ஒரு புனைவுக்கதையை வச்சி சொல்லியிருக்கலாமில்லியா... இதுவும் ஒரு ப்ளைண்ட் அஸெம்ப்ஷன்தான். நம்மளை சுத்தி நம்ம முன்னோர்கள் விட்டுட்டு போன எத்தனையோ ரகசியங்கள் இருக்கு... அது ஒவ்வொன்னும் ஒவ்வொருவிதத்துல ஒரு பொக்கிஷம்தான்... நாம முன்னோர்களையும் மறந்துட்டோம் பொக்கிஷத்தையும் தொலைச்சிட்டோம். இன்னைக்கு எத்தனையோ தாத்தாக்கள் விட்டுட்டு போன மருத்துவ குறிப்புக்கள்லாம் பொட்டலம் சுத்துற பேப்பரா தொலைஞ்சி இருக்கு...' என்று தாஸ் மிகவும் ஃபீலிங்குடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவனது செல்ஃபோன் ஒலித்தது...
ரிங்டோன் பாடல்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை - வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை!
டிஸ்ப்ளேவில் ஓல்டு ஃப்ரெண்டு என்று வந்தது...
அட..! தாத்தா..! என்று குதூகலத்துடன் ஃபோன் எடுத்தான்.
'ஹலோ... தாத்தா..?' என்று தாஸ் ஆனந்தமாக ஆரம்பிக்க, மறுமுனையில் சுசீலாம்மா...
'தம்பி, நான் சுசீலா பேசுறேம்ப்பா..?'
'சுசீலாம்மா..? சொல்லுங்க..'
'தா... தாத்தாவுக்கு, ரொம்ப முடியலப்பா... நான் நேத்துலருந்து உங்கிட்ட பேச பாக்குறேன். உன்னை பிடிக்கவே முடியல... சீ..சீக்கிரம் வந்துடுப்பா... எதுவும் நடக்கும்போலருக்கு...' என்று பூடகமாய் சொல்ல... தாஸ் புரிந்து கொண்டான்.
'நா... நான்... வர்றேம்மா... இ..இப்பவே வர்றேன்...' என்றான்
----------------------------------------
கந்தன் கொள்ளை கிராமத்தில்...
தாத்தாவின் அறையில் தாஸ், சந்தோஷ் மற்றும் லிஷா இருந்தனர்... சுசிலாம்மா சுவரோரமாக சாய்ந்தபடி நின்றிருந்தார்.
தாஸ் கட்டிலில் படுத்திருக்கும் தாத்தாவை சமீபித்து அமர்ந்தான்...
'தா... தாத்தா..' என்றான்.
அவர் சுயநினைவு தப்பியவராயிருந்தார். தாஸ் அழுதான். லிஷாவும் சந்தோஷூம் அருகில் வந்து அவனை தேற்றினார்கள்.
சுசீலாம்மா மெல்லிய குரலில் புலம்பினாள்.
'உன்னிய பாக்கணும்னு துடியாக் கெடந்தாரு தம்பி... மனுசன் ஒருதடவை உன்னிய பாத்துட்டாருன்னா நிம்மதியாயிடும்... இப்போ நீ வந்தும் முழிப்பில்லாம போச்சேன்னுதான் கஷ்டமாயிருக்கு..' என்று கூறினாள்
தாஸூக்குள் மிகவும் குற்றவுணர்வாய் இருந்தது... தாஸ் சிறுவயதிலிருந்து தாய் தந்தையில்லாமல் தாத்தாவுடன் மட்டுமே வளர்ந்தவன். ஆனால், தாய் தந்தை பாசத்தை உணராத குறை எள்ளளவும் இல்லாதபடி தன்னை வளர்த்த தாத்தா இப்போது இப்படி சுயநினைவில்லாமல் ஜடமாய் கிடப்பது மிகவும் வேதனையளித்தது...
நான் மட்டும் கேணிவனத்துக்கு பயணப்படாமலிருந்திருந்தால், இப்போது தாத்தாவுடன் பேசியிருந்திருக்கலாம். கடைசி காலத்தில் மனிதன் தன்னுடன் என்னவெல்லாம் பேச ஆசை பட்டிருப்பார். எப்போதுமே என்னுடன் வந்து சில நாட்களாவது தங்கிவிட்டுப் போ என்று கெஞ்சி கெஞ்சி கேட்பாரே... சே..! என்ன பேரன் நான்... இவருக்கு என்ன கைமாறு செய்திருக்கிறேன். இவரை விட்டுப் பிரிந்து இத்தனை வருடங்களாய் வேலை! எழுத்து! புத்தகம்! என்று இவரை மறந்தேவிட்டேனே..! என்று மனதிற்குள் தன்னைத் தானே தாஸ் ஏகத்துக்கும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று சடகோப சித்தரின் ஞாபகம் வந்தது.. மனதால் அவரிடம் பிரார்த்தனை செய்தான்.
ஐயா..! சித்தரே..! உன்னைப் பார்க்கத்தானே, நான் இவரை புறக்கணித்து வந்தேன். இப்படி எங்களிருவரையும் பேசவிடாமல் செய்தல் நியாயமா..! எனது அன்புக்குறிய தாத்தாவிட்ம நான் பேச வேண்டும்... எப்படியாவது எனக்கு உதவி செய்யுங்கள்..! உங்களுக்கு கோடி புண்ணியம்..! என்று அவன் மனதிற்குள் நடத்தும் பிரார்த்தனைக்கு கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது...
திடீரென்று தாத்தா பேசினார்...
'தா..ஆஆஆ...ஸ்ஸ்...' என்று மிகவும் மெல்லிய குரலில் வார்த்தை வந்தது
தாஸ் அவர் கைகளை கெட்டியாக பிடித்தான்.
'தாத்தா... ஓ..ஓல்டு ஃப்ரெண்டு... நா.. நான் வந்துட்டேன்...' என்றான்
'தா..ஆஆ...ஆஸ்.ஸ்...' என்றார்
சுசீலாம்மா முகம் மலர்ந்தாள். நல்லவேளை இரண்டு பேரும் பேசிக் கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சி அது...
தாத்தா தனது மெல்லி குரல்களில் தாஸ்க்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொன்னார்
'நா... நான்... ஒரு அ..நாதை... ரொ...ம்ம்.. ப.... க..ஸ்டப்பட்... வளந்தேன்.. நிறைய... சாதி..ச்சேன்...'
அவர் சொல்வது புரிந்தாலும், அவர் சொல்லும் விஷயம் புதிது என்பதால் தாஸ் குழம்பியபடி 'தாத்தா..?' என்றான்
'ஆ..னா... நா..ன்... அநாதை... நீ... அநாத ஆயிடக்கூடா..து...ன்னுதான்... நா... நான்...தி..திரும்பி... வந்தேன்...' என்றார்
தாஸூக்கு ஒன்றும் புரியவில்லை...
'உன்ன... பாசமா... நானே... வளத்தேன்...'
'தாத்தா..?'
'நா..நான்... உ..உன்... தாத்தா.. இ...ல்ல...'
'தாத்தா... என்ன சொல்றீங்க.. தாத்தா... அப்போ நீ..நீங்க... யாரு...' என்று கண்களில் நீர்வழிந்தபடி கேட்டான்
அவர் மிகவும் பிரயத்தனத்துடன், தனது இடதுகையை தன் தலையணைக்கு கொண்டு செல்ல முயன்றார்... அவர் கைகளில் சக்தியற்று தலையணையை எட்ட முடியாமல் தவித்தது.. தாஸ் அவர் எதையோ எடுக்க முயல்வதை புரிந்துக் கொண்டு அவர் தலையணையை கொஞ்சமாக எடுத்துப் பார்த்தான். அங்கே ஒரு குட்டி சாவி இருந்தது...
'சாவியா..? இந்த சாவியா..! இதோ இதோ..' என்று அதை எடுத்து அவர் கண்முன் காட்டினான்.
'அவர் தனது கைகளை தாஸின் கைகளில் வைத்து அழுத்தி, அந்த சாவியை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி அவன் கையை மூடினார். பிறகு மெல்லிய குரலில்
'நா...ன்.... நீ...' என்று கூறியபடி மூச்சை துறந்தார்...
சுசீலாம்மா ஓவென்று அலறினாள். தாஸ்க்கு அவர்கூறிய கடைசி வார்த்தைகள் இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது... அதற்கு என்ன அர்த்தம்... என்று யோசித்தபடி தனது கைகளிலிருக்கும் சாவியைப் பார்த்தான்... மெல்ல எழுந்தான்.
சுசீலாம்மா தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்க... லிஷா அவளை தாங்கலாக பிடித்துக் கொண்டு தேற்றிக்கொண்டிருந்தாள். சந்தோஷ் அமைதியாக ஓரமாக நின்றிருந்தான்.
தாஸ் அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தான். அறையின் ஓரத்தில், தாத்தாவின் மரபீரோ கம்பீரமிழந்து 'எனது எஜமான் இறந்துவிட்டான்' என்பது போல் தாத்தாவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தபடி நின்றிருந்தது.
அதை சமீபித்தான்.
மெல்ல அதை திறந்தான்.
உள்ளே, ஒரு லாக்கர் அறை போல் இருந்தது...
அதையும் திறந்தான்.
உள்ளே பணம் வைக்கும் இரும்பு பெட்டி ஒன்று இருந்தது...
தனது கையிலிருக்கும் சாவியை அந்த பெட்டியில் பொருத்தி பார்த்தான்.
திறந்துக் கொண்டது...
உள்ளே..! ஒரு பழைய புத்தகமும் ஒரு கடிதமும் இருந்தது...
அந்த புத்தகத்தை பிரித்துப் படித்தான். அது நேற்றிரவு தாஸ் ஆஸ்பிடலில் எழுத ஆரம்பித்த கேணிவனம் புத்தகம். நேற்று இரவு வரை ஐந்தரை பாகம் மட்டுமே எழுதி முடித்த புத்தகம் இன்று முழு புத்தகமாய் அவன் கையில்...
குழம்பினான். உடனிருந்த கடிதத்தை பிரித்து படித்தான்.
'அன்புள்ள என் பிரதி தாசுக்கு,
சிறுவயதில் அநாதையாக வளர்ந்த எனக்கு பாசம் நேசம் போன்ற அந்நிய வார்த்தைகள் மீது ஆசை வந்தது... வாழ்வில் எத்தனையோ விஷயங்களை சாதிக்க துடித்தேன். அதில் சிலவற்றை செய்தும் முடித்தேன். ஆனாலும், இன்னொருவர் அரவணைப்பில் அன்பில் திளைப்பதுமென்பது கடவுள் போல் கண்ணுக்கு தெரியாத பொருளாகவே இருந்தது... இந்நிலையில் என் இளமைக்காலத்தில் கேணிவனத்தின் மூலம் காலத்துவாரம் என்ற மாபெரும் பொக்கிஷம் எனக்கு தெரியக் கிடைத்தது... அதுவும் ஒன்றல்ல ஏழு என்பது தெரிந்து, அதில் என் வாழ்நாட்களில் நான்கு காலத்துவாரங்களை கண்டுகொண்டேன்.
கல்யாணம் செய்து கொண்டேன். துணைவியின் மூலம் அன்பும் ஒரு அன்பான மகனும் கிடைத்தான். ஆனால், ஒரு விபத்தில் சீக்கிரமே இருவரும் மீண்டும் என்னை பிரிந்து சென்றார்கள். நான் நினைத்தால் அவர்களை கேணிவனத்தை பிரயோகித்து காப்பாற்றியிருக்கலாம். ஆனால், நான் சித்தருக்கு அளித்த வாக்கின்படி, அவசியமில்லாமல் இயற்கை நிகழ்வுகளை மாற்றியமைக்க கூடாது என்பதில் திண்ணமாய் இருந்துவிட்டேன். மனைவி மகனின் அன்பை மறக்க, என்னை முழுமையாக பயணங்களில் ஈடுபடுத்திக் கொண்டேன். பல அரிய பொக்கிஷங்களை கண்டெடுத்தேன். பல்வேறு பகுதிகளுக்கு பலவருடங்கள் பயணித்தேன். எனது வாழ்க்கையில் பயணமும், சாகசமும் பஞ்சமில்லாமல் நிகழ்ந்தது..! எனக்கேற்பட்ட பஞ்சமெல்லாம் பாசத்திற்குத்தான்.
அந்நேரத்தில் பாசத்துக்கு துடிக்கும் இன்னொரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது..! யாரோ ஒருவரை தத்தெடுப்பதற்கு நானே என்னை ஏன் தத்தெடுத்து வளர்க்க கூடாது என்று தோன்றியது... நான் கண்டுபிடித்த காலத்துவாரங்களில் 4ஆவது கேணியின் வாயிலாக எனது பிரதியை நான் நோக்கும் விதமாய், எனது 64 வயதிலிருந்து 60 வருடம் பின்னோக்கி எனது 4ஆம் வயதிற்கு காலப்பயணம் மேற்கொண்டேன். நானே அநாதையாக இருக்கும் உன்னை தத்தெடுத்து தாத்தாவாய் வளர்த்தேன். நானான உன்னின் மீது பாசத்தை பொழிந்து அன்பும் கணிவும் கொடுத்து வளர்த்தேன்.
உன் வாழ்வில் இன்னும் நிறைய அனுபவங்கள் உனக்கு கிடைக்கவிருக்கிறது. நான் எதிர்காலத்திலிருந்து வந்ததற்கு அடையாளமாய் நான் கொண்டு வந்ததெல்லாம் ஒரே ஒரு பொருள்தான்.. அது நான்(நீ) எழுதிய கேணிவனம் என்ற புத்தகம்தான். இதில் நான் புனைந்து எழுதிய சில விஷயங்கள், அடுத்த 7 கேணியைத் தேட உனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்..! நடக்கப்போவதை நடந்திருந்து பார்..! என்று சித்தர் கூறியதை மறவாதே..! நான் எதிர்காலத்தில் நடக்கப்போவதை உனக்கு ஆருடம் சொல்லப்போவதில்லை..! ஆனால், எதிர்காலம் நிகழ்காலத்தைவிட மிகவும் மோசமானதாய் இருக்கும்... இந்த வாக்கியம் எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தும். எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிச்சலையும் திடத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் பரிணாம வளர்ச்சி..! அது இயற்கை உனக்கு கொடுக்கும்.
இப்படிக்கு அன்புடன்
நீ..!'
கடிதத்தை படித்து முடித்து திரும்பி கட்டிலில் இறந்துக் கிடக்கும் தாத்தாவைப் பார்த்தான். உடம்பெல்லாம் மயிர்கூச்செரிவது போலிருந்தது...
லிஷா ஒருமுறை 'உங்க தாத்தா ஜாடை அப்படியே உங்கிட்ட இருக்கு..' என்று சொன்னதும்...
'இவர்தான் என் தாத்தா, இவர் பேர் தசரதன். இவரு பேரைத்தான் எனக்கு வச்சிருக்காங்க...' என்று தாஸ் பலரிடம் கூறியதும் நினைவுக்கு வந்தது...
பயங்கரமாக அழுகை வந்தது... ஓடிச்சென்று அவர் பாதங்களைப் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
'நீ யாராக இருந்தாலும், எனக்கு நீ தாத்தாதான். இத்தனை வருடமும், அன்பில் திளைக்க செய்த நீ என் தாத்தாதான். தமிழை கற்றுக் கொடுத்தாய், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்ததாய், பள்ளிக்கு என்னுடன் நடந்து வந்தாய், கோவில்களுக்கு அழைத்து சென்று சிற்பங்களின் மேன்மைகளை புகட்டினாய்... இப்படி அரிய பல விஷயங்களை அன்புடன் கற்றுக் கொடுத்த நீ என் தாத்தாதான்' என்று கதறியழுதான்.
அருகிலிருந்த அனைவரும் தாஸ் இப்படி அழுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தாஸ் அவர் கால்களை கட்டிப்பிடித்தபடி அழுதுமுடித்து மெல்ல நிமிர்ந்தான்.
அவர் உள்ளங்கால் இரண்டிலும், 12ஆம் நூற்றாண்டில் நள்ளி-யால் வரையப்பட்ட அதே தோல்சித்திரம்...

- நிறைவு -
இதுநாள் வரையிலும் இத்தொடரை பொறுமையாக வாசித்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி...
64 comments:
பயங்கரம்... அசத்திட்டீங்க.. கொஞ்சமும் யூகிக்க முடியாத எபிசோட் இது.. கலக்கலா முடிச்சிருக்கீங்க..
கதையில் சில நம்ப முடியாத விஷயங்கள் இருந்தாலும்
சுவாரசியம் குன்றாமல் கொண்டுசென்றவிதம் அருமை.
கடைசி பாராக்கள் மனதை கலங்க வைத்துவிட்டது.
வாழ்த்துக்கள்.
nice one.. I try to send a detailed comments later.
சான்ஸே இல்லங்க ஹரீஷ்.. இப்படி ஒரு முடிவை யாரும் எதிர்பார்த்திருக்கவே முடியாது..
இதோட கேணிவனம் முடியுதுங்கறது கொஞ்சம் கவலையாதான் இருக்கு.. இந்தத் தொடரை ரொம்ப மிஸ் பண்றேன்..
தொடர்ந்து இதுபோல கதைகளை எழுத வாழ்த்துக்கள்..
முடிவும்
சிலிர்க்கிறது
முடிவில்லா
பயணத்தில்
முழுவதுமாய்
மூழ்கினோம்
கேணிவனக்
கிணற்றினிலே
இமைகூடே
தொடர்கையிலே
மனம் செல்லும்
வனத்தினிலே
பயனித்த
பாக்கியம்
பெற்றோமே
உண்மைகள்
உவமையாக
நீர் வடித்த
காவியம்
உணர்ச்சிகளும்
உண்மையென
உள்மனது தான்
சொல்ல.......
வாழ்த்த வயதில்லை வணக்கத்துடன் தினேஷ்
யூகிக்க முடியாத முடிவு....
வாழ்த்துக்கள்.
“//எதிர்காலம் நிழக்காலத்தைவிட மிகவும் மோசமானதாய் இருக்கும்.
இந்த வாக்கியம் எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தும்.//”
அடுத்த தொடர்கதை எப்போது?
ஆவலுடன் காத்திருக்கின்றோம்....
ஹாய் ஹரீஷ்,
வேலை பளு காரணமா இன்னைக்கு தான் உங்க கடைசி இரண்டு பதிவுகளையும் வாசித்தேன்.
உண்மையச் சொல்லுங்க கேணிவனம் கற்பனையா இல்ல உண்மையா?
பாராட்டரதுக்கு வார்த்தையே இல்லை.
உங்க உழைப்பு, உங்க கற்பனை, கரு எல்லாமே அற்புதம்.
கதை தோன்றிய கதையையே நீங்க எழுதலாம். அந்த அளவுக்கு ரொம்ப சிறப்பா அமைந்திருக்கு உங்க முதல் நாவல்.
திரைக் கதையா வரும் போது இதே சுவாரஸ்யத்தோட இன்னும் மிரட்டலா வரும்னு எதிர்ப்பார்க்கிறேன்.
சில சந்தேகங்கள்:
1. தசரதன் மற்ற ஏழு கேணிகளையும் கண்டுபிடிச்சிட்டார்னா அது அத்தனையுமே இந்தியாவுலதான் இருக்கிறதா சொல்றாரா?
2. மற்ற கேணிகளை அமைத்தவரும் சித்தர் தானா?
3. தசரதன் தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தாரா அல்லது தன் காலத்துக்கு தசதரனை எடுத்துக் கொண்டு வந்தாரா?
- விலானி உதய் ராஜ், மலேசியா.
பாராட்ட வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன் ஹரீஷ்! இன்னும் எனக்கு பிரமிப்பு நீங்கவில்லை, இந்த பாகத்தை மூன்று முறை படித்து விட்டேன்! கதை முடிந்தது என நினைக்கும்போது சற்றே வருத்தமாகத்தான் இருக்கிறது. நல்லதொரு வாசிப்பு அனுபவம் கொடுத்தமைக்கு நன்றி ஹரீஷ்.
super story... keep it up hareesh...
ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு அருமையான தொடரைப் படித்து,ரசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி!
கலக்கிட்டிங்க போங்க. எப்போ அந்த மற்ற கேணிகளை பார்க்க போறீங்க?
அழகு!!!
rombha azhaga kondu vandhutheenga...konjam kooda ethirpaarkatha mudivu,
please mudinja part 2 start pannunga...
meethi keni lam paarkkanum avala irukku
என்னய மாதிரி ஒரு சாப்ட்வேர் ஆசாமி மொழில்ல சொல்றதா இருந்தா ஒரு இண்டெபனட் லூப் மாதிரி இருக்கு இந்த கதை.. தாஸ் ... ஒ... ஒ.. சாரி.. ஹரிஷ்.. செமயா இருக்கு.. முடிஞ்சா இத ஸ்கிரின்ல கொண்டு வாங்க ஹரிஷ்.... சான்ஸ்லெஸ்ஸா இருக்கும்... நன்றி :)
அன்புடன் வணக்கம்
""இதுவரை பொறுமையாக தொடர்ந்து படித்தமைக்கு நன்றி""" என்று சுலபமாக கூறி விட்டீர்கள் எனக்கு ஏற்பட்ட டென்சன் அடுத்து என்ன நடக்கும் என்று அனுமானிக்க முடியாத அளவு ஒரு கதை நகர்த்தி கொண்டு ...எத்தனை பழமையான நூல்களின் பரிச்சயம் இருந்தால் தான் இது போன்ற ஒரு தொடரை எழுத முடியும் .கோர்வை ..எழுத்து நடை ..பெரிய நாவல்கள் எழுதும் ஆசிரியர்கள் போல அடுத்து ஒரு தொடர் எழுதுங்கள் தயவு செய்து. நன்றாக வளருங்கள் !!!! வாழ்த்துக்கள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
இப்படியும் முடிக்கலாமா? சே... சான்ஸ் லெஸ்....
சீக்கிரம் கேணிவனம் 2 ஆரம்பிங்க தாஸ்... சே... பாஸ்
ஹரீஷ்,
நீங்கள் அருகில் அமர்ந்து கூறிய பல கதைகள்...பொன்னான தருணங்கள் அது. ஐ ரியலி மிஸ் தோஸ் மொமண்ட்ஸ். 'ராமன் எஃபெக்ட்' க்ளைமேக்ஸை சொன்னபோது, அதுவரை 'என்ன இருக்கு இந்த கதைல' என்றிருந்த உணர்வு, 'வ்வ்வ்வாட்!' என்று புருவம் உயர்த்த வைத்தது. அந்த நொடியில் ஏற்பட்ட உணர்வை இன்றும் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டேன்.
அதன்பின் நீங்கள் பல கதைகள் கூறியிருந்தாலும், பல கதைகளை எழுதியிருந்தாலும், 'கேணிவனம்' உங்கள் கிரீடத்தில் ஒரு வைரம் என்பேன். என்ன வாசித்தீர்கள், எங்கு பயின்றீர்கள் இப்படியொரு மொழி நடையை கற்க. இக்கதை கற்பனையா, உண்மையா என்று யோசிக்க வைக்கிறீர்களே...அடுத்தவன் மண்டைய பிச்சுக்க வெக்கறதுல என்னய்யா சந்தோசம் உமக்கு :))
30 பகுதிகளுக்கும் வாசகர்களை கட்டிப்போடுவதென்பது எளிதல்ல. எப்போதெல்லாம் 'தொய்வு ஏற்படுகிறதே' என்ற எண்ணம் வருகிறதோ, சடாரென ஒரு திருப்பம் வைத்து டெம்போவை (மன்னிக்கவும்..தமிழ்ல தெரியல) எகிறவைத்து....அடப்போங்க சார்!
இக்கதையை திரைப்படமாக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்....பொருத்தமான நபர்களை தேர்வு செய்யுங்கள் :)
எந்தவித காம்ப்ரமைஸுக்கும் நீங்கள் இடம் அளிக்காமலிருந்தால், இது நிச்சயமாக சூப்பர் ஹிட்!
கமெண்ட்ங்கற பேர்ல மெய்ல்ல அனுப்பவேண்டியத போட்டுட்டேன் ஸாரி :))
Really really unexpected ending!!! Romba romba nalla irundhadhu!!!! apdiye part 2 yeludha aarambichungalen pls...yethana books refer panninga andha detailsyellam lasta solrenu sonninga..podave illa.. Unmaiyave ipdi warmholes irukka? or time travel panna persons pathi yedhachum information irukka? neenga ZeeTv tv programsku yedhachum collect panningala? yedhachum irundha adhu pathi padhivu podunga pls....apuram oru doubt..Guna yen mental aginan? avanukku yen kenivanam theriyala? Apuram chakravarthi,professor yellam innum thedikitu irukkangala? adhu pathiyum sollunga... Romba romba intersting thrilling novel padichom... Romba thanks!!!
Excellent finishing Nanba!! I think I never forget this story Nanba! Please start another story soon.
Ungalin anaithu ulaipirkkum enadhu manamaarndha Vazhthukkal!!
Anbudan,
Abbas..!
Harish
This story is really good. Amazing. Best wishes for taking this story as a movie.
Bye
Lakshmi Narayanan Ayyasamy
ஹரிஷ்ஜி,
ரொம்ப நல்ல கதைய முடிச்சுடீங்க.
வாழ்த்தக்கள். கண்டிப்பாக இந்த தொடர் அனைவருக்கும் நீங்கா நினைவில் இருக்கும்.
அன்புடன்,
செல்வமணி.
வாவ்...
எதிர்பாராத முடிவு ஹரீஷ்...
செமயா எழுதியிருக்கீங்க...
ஓரு நாவலாக, புத்தகமாக வெளியிட உகந்த அருமையான எழுத்துநடை நண்பா....
முந்தய பாகங்களை விட இது மிக மிக அருமை.....
வாழ்த்துக்கள்... :-)
எதிர்ப்பார்க்கவே முடியாத முடிவு ஹரீஷ்! ரொம்ப நம்ப முடியாத முடிவாவும் இருக்கு! அப்ப மத்த பாகமெல்லாம் மட்டும் நம்ப முடியுதான்னு கேட்டா, டைம் ட்ராவலை நாம நிறைய பேசி கேள்விப்பட்டுருக்கோம்.. ஆனா இது ரொம்ப புதுசு, வியர்டா இருக்கு!!! :D கேணிவனம் முடிஞ்சு போச்சான்னு அழணும் போல இருக்கு, அப்பாடா சஸ்பென்ஸ் தீர்ந்துதுன்னு சிரிக்கணும் போலயும் இருக்கு.. வாழ்த்துக்கள் ஹரீஷ்!
...வார்த்தையே இல்ல ஹரீஷ்ண்ணா, உறைஞ்சு போக வச்சிடுச்சு இந்த பாகம்.
Very nice. You are amazing!
கண்களில் நீர் ததும்புகிறது படித்து முடிக்கையில்...
ஏனோ நெஞ்சம் கணக்கிறது. வாழ்த்த வயதில்லை. ஆகவே மனமார்ந்த வணக்கங்கள். சிஷ்யனாய் இருப்பதில்
பெருமையடைகிறேன். (மறவாதீர்... கூழாங்கள் அழுதுக்கொண்டுக் நிற்க்கிறது நீங்கள் அந்த பக்கம் வரப்போவதை அறியாமல்...)
So the Magnum Opus comes to an end.. U really hooked up the interests of hundreds of readers..Climax twist in par with Saw, Skeleton Key, Haute Tension etc. Wishes to further this fiction into moving images soon. Also, waiting for a horror centric next series Bro. BRAVO!
வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ரமேஷ்..!
வணக்கம் Lakshmi மேடம்,
கதையின் Genre - Myster/Fiction/Thriller என்பதால் அந்த நம்பமுடியாத விஷயங்களை எழுதியிருக்கிறேன். கடைசி பாராக்களை ரசித்து படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி...!
வணக்கம் மாதவன்,
உங்கள் Detailed Comments-க்காக காத்திருக்கிறேன்.
வணக்கம் பதிவுலகில் பாபு,
எனக்கும் இந்த தொடர் முடிந்து போனதில் ரொம்பவும் கவலையாத்தான் இருக்கு..! ஆனால், இதன் மூலம் உருவான நமது நட்பு வட்டம் வேறு பல கதைகளில் தொடரப் போகிறது என்றெண்ணி நம்மை நாம் தேற்றிக் கொள்ளலாம். வாழ்த்துக்கு மிக்க நன்றி..!
வணக்கம் தினேஷ்குமார்,
கவிதை நடையில் நீங்கள் இதுநாள் வரை தொடர்ந்து வாழ்த்தி வந்த வாழ்த்து மடல்கள் இக்கதைக்கு கிடைத்த மாபெரும் தூண்கள். வாழ்த்துக்கு மிக்க நன்றி!
வணக்கம் ஷக்தி,
முடிவை ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..! உங்களுக்கு பிடித்த அந்த வரிகள் எனக்கும் ரொம்ப பிடித்துப்போனது. அடுத்த தொடர்கதை எழுதுவதற்கு முன் திரையுலக வேலைகள் காத்திருக்கிறது. அதை முடித்துவிட்டு, மீண்டும் ஒரு தொடர் கண்டிப்பாக எழுதுகிறேன். உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் காத்திருப்புக்கும் மிக்க நன்றி!
வணக்கம் விலானி உதய்ராஜ்,
கேணிவனம் கற்பனையா உண்மையா என்று கேட்டிருந்தீர்கள்..! உங்கள் மனதிற்குள் இந்த கேணி சஞ்சரிப்பது நிஜம். கதை தோன்றிய கதையை கண்டிப்பாக பகிர்கிறேன். முதல் நாவலை இவ்வளவு அருமையாக பாராட்டி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! கண்டிப்பாக இக்கதைக்கு திரைவடிவம் கொடுக்கும்போது, மேலும் மெறுகூட்டி புதுப்பொலிவுடன் படைக்கிறேன்.
உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள்
1. இந்த கேள்விக்கு விடை அடுத்த பாகத்தின் கதை..!
2. ஆம், இந்த சித்தர்தான் அமைத்தார்... ஆனால் எப்படி என்பதற்கு விடை முதல் கேள்வியின் விடையே..!
3. தசரதன் தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தார்.
மீண்டும் உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
இவ்வளவு நாட்களும் தொடர்ந்து வந்து படித்து பாராட்டியதை கண்டிப்பாக மறக்கமாட்டேன்..! அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி..! எனக்கும் இக்கதை முடிந்ததில் வருத்தமே..! ஆனால் வருத்தம் போக்கிக்கொள்ளும்படி விரைவில் இன்னொரு கதையில் சந்திப்போம்..!
வணக்கம் சிவகாசி மாப்பிள்ளை,
தொடர்ந்து வந்து வாசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!
வணக்கம் மோகன்,
நீண்ட நாட்களாய் தவறாமல் தொடர்ந்து படித்து ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி!
வணக்கம் சதீஷ்பாண்டியன்,
மற்ற கேணிகளை விரைவில் பார்ப்போம்..! வாழ்த்துக்கு மிக்க நன்றி!
வணக்கம் பூபேஷ் பாலன்,
உங்கள் அழகான வாழ்த்துக்கு மிக்க நன்றி!
வணக்கம் காயத்ரி,
கொஞ்ச நாள் டைம் கொடுங்க...! மீண்டும் அடுத்த பாகத்தை எழுத துவங்குறேன்..!
வணக்கம் இராமசாமி கண்ணன்,
சாஃப்டுவேர் மொழியில் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! இதை ஸ்க்ரீன்ல கொண்டு வருவதற்கு என்னாலான எல்லா முயற்சிகளையும் கண்டிப்பா செய்றேன்..!
வணக்கம் Hamaragana,
பழமை மீது எனக்கிருந்த ஆர்வத்தில் இக்கேணிவனம் உண்டானது. இதை படித்து பாராட்டி அங்கீகரித்த தங்களைப் போன்ற அன்பர்களும் நண்பர்களும்தான் இக்கதையை இப்படி கொண்டு செல்ல மென்மேலும் உதவியுள்ளீர்கள். உங்கள் வாழ்த்துக்கள் என் பேனா மையாக நிரம்புகிறது... அடுத்த கதையெழுத என்னை ஆயத்தப்படுத்துகிறது. கண்டிப்பாக ஒரு நியாயமான இடைவெளிக்கு பின் மீண்டும் நல்லதொரு தொடர்கதையை ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி!
வணக்கம் ரகு,
எனது முதல் குறும்படத்திற்கு நீங்கள்தான் முதல் தயாரிப்பாளர்..! அந்த முறையில் அன்று நீங்கள் மனத்தாலும் பணத்தாலும் என்னை ஊக்குவித்தீர்கள்..! இன்றும் வேறுவிதத்தில் கதைப்படித்து பாராட்டி என்னை ஊக்குவித்து வருகிறீர்கள்..!
என் எழுத்து நடைக்கு காரணம் கேட்டீர்கள்..?
நாம் அதிகாலை 2.30 மணிக்கு (நைட் ஷிஃப்டில்) தேநீர் இடைவேளையின்போது, நமது அலுவலக்கத்துக்கு கீழே உள்ள பூங்காவில் நான் கதைசொல்ல நீங்கள் ஆவலாக கேட்டபடி நடையாய் நடப்போமே... நினைவுக்கு வருகிறதா... அந்த நடைதான், இன்று எனது எழுத்து நடைக்கு காரணம். அன்று என் உடன் நடந்தமைக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எவ்வளவு கதை சொன்னாலும், அலுக்காமல் நீங்கள் கேட்டதின் விளைவுதான், எனக்கு என் கதைகளின் மீது நம்பிக்கை பிறந்தது.
வணக்கம் Gomy,
PART-02 கண்டிப்பா எழுதுறேங்க..! ஆனா, கொஞ்ச நாள் அவகாசம் தேவை..! நடுவில் எனது திரைப்பட வேலைகள் போய்க்கொண்டிருப்பதால், அதை முடித்ததும் எழுதுகிறேன். இக்கதைக்கு நான் படித்த குறிப்பெடுத்த விவரங்களை சீக்கிரம் தொகுத்து போடுகிறேன். அதற்கும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்..! குணா மெண்டல் ஆனது அவனது வினைப்பயன்..! அவன் தீய எண்ணம் அவனுக்கு அப்படியொரு பலனை விளைவித்தது... அவனுக்கு கேணிவனம் தெரியாததற்கு காரணம் அவன் காட்டில் தொலைந்து போனதுதான். அப்புறம், ப்ரொஃபஸரும் சக்கரவர்த்தியும், கேணிவனத்தைப் போல் வேறு ஏதாவது ஒரு விஷயத்தின்மூலம் வரலாற்றில் பெயர் இடம்பெறும்படி ஒரு செயலை செய்ய முடிகிறதா என்று வாய்ப்பு தேடி அலுப்புடன் காத்திருக்கிறார்கள். கதையில் வேறு ஏதாவது சந்தேகமென்றாலும் கேளுங்கள்..! க்ண்டிப்பாக தெளிவு படுத்துகிறேன். வாழ்த்துக்கும் தொடர் வாசிப்புக்கும் மிக்க நன்றி!
வணக்கம் அப்பாஸ்,
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை நிறைவுடன் பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றி நண்பா..!
வணக்கம் லஷ்மி நாராயணன் அய்யாசாமி,
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! கண்டிப்பாக இதை திரைவடிவில் இயன்ற விரைவில் கொண்டு வருகிறேன்.
வணக்கம் செல்வமணி,
இத்தொடர் நீங்கா நினைவில் அனைவருக்கும் இருக்க வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!
வணக்கம் அகல்விளக்கு,
எழுத்துநடையை அன்புடன் பாராட்டியதற்கு மிக்க நன்றி நண்பா..!
வணக்கம் பொற்கொடி,
எனக்கு இது போன்ற வியர்டு விஷயங்களை கதைகளில் கோர்ப்பது மிகவும் பிடிக்கும். அதை ரசித்து படித்து வாழ்த்தி அங்கீகரித்து வலையுலக நண்பர்க்ள் அனைவருக்கும் நன்றி செலுத்து வருகிறேன். இதில் உங்களதும் பெரும்பங்கு இருப்பதில் மிக்க நன்றி! எனக்கும் ஒருபக்கம் மனம் லேசாகவும் (கதை முடிந்ததை நினைத்து) மறுபக்கம் கணமாகவும் (நட்பு வட்டம் அதிகரித்ததில்) இருக்கிறது. வாழ்த்துக்கு மிக்க நன்றி..!
வணக்கம் அன்னு,
என்ன அன்னு, உங்ககிட்டயிருந்து ஒரே வரியில கமெண்ட்-ஆ..! நீங்க நிறைய சொல்வீங்க இந்த கதையோட க்ளைமேக்ஸ் பற்றி-ன்னு நினைச்சேன். ஒருவேளை தனியா இமெயில் எழுதிட்டிருக்கீங்களோ..? வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி!
வணக்கம் சித்ரா,
தொடர்ந்து வந்து வாசித்து வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றிங்க..!
வணக்கம் தினேஷா,
இந்த கதை எழுதி முடிக்கிறதுக்கு முன்னாடி இக்கதையின் க்ளைமேக்ஸ் ரெண்டே பேருக்குத்தான் தெரியும்..! ஒண்ணு எனக்கு..! இன்னொன்னு கதை பதிவிடுறதுக்கு முன்னாள் ராத்திரி உனக்கு..! தொடர்ந்து ஆர்வம் காட்டி வாழ்த்தி வந்ததற்கு நன்றி நண்பா..! அதென்ன கூழாங்ல் அழுதுக்கொண்டிருக்கிறது... ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது மாதிரி..! சரி நாளைக்கு நேர்ல வந்து கேட்டுக்குறேன்...
வணக்கம் VampireVaz,
தொடர்ந்து வந்து வாசித்து வாழ்த்தியதற்கு நன்றி Bro..! அதுவும் மாபெரும் திரைப்படங்களின் க்ளைமேக்ஸூடன் இக்கதையின் க்ளைமேக்ஸை ஒப்பிட்டு வாழ்த்தியதற்கு மீண்டும் நன்றி! அடுத்து ஹாரர் சீரிஸ்-ஆ..! ஓகே..! கண்டிப்பாக முயற்சிக்கிறேன்... கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்...!
//கடிதத்தை படித்து முடித்து திரும்பி கட்டிலில் இறந்துக் கிடக்கும் தாத்தாவைப் பார்த்தான். உடம்பெல்லாம் மயிர்கூச்செரிவது போலிருந்தது... //
உங்க எழுத்தை படிக்கும் எல்லோரின் நிலையும் இப்படி தான் இருக்கும்னு எனக்கு தோணுது... எதிர்பார்த்தபடி கதைய கொண்டு போறது ஒரு விதம். எதிர்பாராத திசைல பயணிக்க வெக்கறது இன்னொரு விதம்
உங்களுது இது ரெண்டுக்கும் அப்பார்பட்டதுனு எனக்கு தோணுது. அமானுஷ்ய விசயங்கள வெச்சு புனைவு எழுதறது அத்தனை சுலபம் இல்லை. இன்னும் இது புனைவு தானா இல்ல கதைல வர்ற படி ஏதோ மர்மமானு எங்களை பயப்பட வெச்சுட்டு இருக்கறது தான் உங்க எழுத்தோட சக்சஸ்
எழுதறது எல்லாரும் எழுதலாம். ஆனா சின்ன சின்ன details எல்லாம் சிரத்தை எடுத்து விளக்கம் சொன்ன விதம் அற்புதம். நெறைய வரலாற்று சம்பவங்கள தைரியமா இணைச்சு, சித்தர் பாடல்களுக்கு விளக்கம் குடுத்து, கற்பனைக்கு அப்பாற்பட்ட திசைல கதய கொண்டு போனது தான் கிரேட். நெறைய ஹோம் வொர்க் செஞ்சு இருக்கீங்க...அதுக்கே ஒரு பெரிய கிளாப் குடுக்கணும்...
எனக்கு இது போல கருவில் எழுதி அனுபவம் எதுவும் இல்லைனாலும்(முடியும்னும் தோணல), படிக்கும் போதே நெறைய கேள்விகளும் குழப்பங்களும் வரும், அதை வெச்சு சொல்றேன், you did a great job. Excellent write up
No more words to say. You will go places very soon. I would then be proud to call myself as one of your early day readers. I don't think many of us would take so much effort to write a story in a blog, you did it as you want to give the best to the readers. Hats off to that effort. All the best
இல்ல ஹரீஷ்ண்ணா... முதல் தடவை படிச்சு முடிச்சப்புறம் வேற எதுவுமே தோணலை. கமெண்ட் எழுதனுமேன்னு எழுதிட்டு கிளம்பிட்டேன். அதன் பின் இப்ப மருபடி மறுபடி உக்கார்ந்து அமைதியா படிச்சாஅ...இன்னும் அதிகமா அந்த முடிவும், அதிலிருந்த ரகசியமும் பிரமிக்க வைக்கிறது. ஜேம்ஸ் பாண்டு கதை மாதிரி நீளும், நீளனும், ஒவ்வொரு கேணிக்கும், அப்படின்னு தோணுது. ஆனால் உங்க வேலை பளுக்களின் நடுவில் இது முடியுமா தெரியலை. எனக்கு புரியாத ஒரு விஷயம், தாஸுக்கு வயசாகறப்ப அவர் மறுபடி டைம் டிராவல் செய்வாரா? அவருடைய பிரதிதான் தாத்தான்னா, அவர் இறந்தபின் அந்த வயதை எப்படி தாஸால் எட்ட முடியும்? சுருக்கமா, 64 வயது ஆனபின் தாஸின் வாழ்வில் என்ன நடக்கும்?
போன பாகத்தில் சந்தோஷும், சுசீலாம்மாவும் டிரை செய்றப்ப ஏன் தாஸோட மொபைல் ஸ்விட்ச் ஆஃபாக இருந்தது? அதை எழுதலை?
//நிழக்காலத்தைவிட //
எழுத்துப்பிழை
நள்ளியைப் பற்றி சொன்ன சித்தர், தாத்தாவைப்பற்ரி போட்டுடைக்காமல் விட்டது ஏன்? (கதையாசிரியர் சஸ்பென்ஸா வெப்போம்னு சொல்லிட்டாரோ??)
தாஸ்தான் தாத்தான்னா, தாஸ் பயணப்பட்ட அந்த கேணிவனத்தைப்பற்றி விளக்கங்களை நிறைய விளக்காமல் இருந்த மர்மமும் இதுதானோ??
இன்னமும் எனக்கு பல விஷயங்களின் வியப்பு அகலவில்லை. அடுத்த பாகம் இருக்குன்னு சொன்னதால் சில கேள்விகளை அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் வலையுலகில், virtual friends மாதிரி படிக்கும் எங்களுக்காக இவ்வளவு மெனக்கெட்டு தேடி, நேரமெடுத்து எழுதியதற்கு எத்தனை பாராட்டு, எத்தனை புகழ்ந்தாலும் குறைவாகவே ஆகும் அண்ணா. இதன் மூலம் வாசகர்களாகிய நாங்களும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்ததே பெரிய சந்தோஷம். இன்னும் இது போல நிறைய எழுதவும், இத்துறையில் சாதிக்கவும் வாழ்த்துக்கள் ஹரீஷ்ண்ணா. தமிழில் ஒரு ஹாரி பாட்டர் போல ஆனால், குழந்தைகளின் நாவலாய் இல்லாமல் பெரியவர்களுக்கு ஏற்ற தீனி இது. முழு வடிவமாகவும், திரை வடிவிலும் மெருகேற வாழ்த்துக்கள்ண்ணா... மிகுந்த சந்தோஷங்கள்...வாசிப்பு அனுபவத்தை தந்ததற்கு :)
மிக அருமையாக முடித்துள்ளீர்கள்-
வாழ்த்துக்கள்
excellent end to an excellent story. I am literally short of adjectives to talk about this story and you as well.Hoping to seeing this on big screen soon.
அன்புடன் வணக்கம்
திருமதிய!! திருவா!! அப்பாவி தங்கமணி.!!!.. ஆங்கிலதில் எழுதயுள்ள விமர்சனம் மிக அருமை.!!I would then be proud to call myself as one of your early day readers.// ME TOO !!!நன்றி அவர்களுக்கு !!!அது சரி ஹரீஷ் நீங்கள் அடுத்த தொடர் நியாமான இடைவெளி விட்டு ஆரம்பம்!!!! நாங்கள் அதுவரை என்ன செய்வது.தினமும் மெயில் பார்க்கும்போதே உங்களது ப்ளாகும் திறந்து விடுவது வழக்கம் . இனி .
Top Story i have ever read in my life, very well paced and organised the story. nothing can be said except "Hats Off to U Bro". Tamil cinema looking forward u for the magnificient and multi talented director in the coming year. All the best..! Our Support will be with u forever. I am proud to be your reader from the first episode.
வாவ்!! நிஜமாவே எதிர்பாராத முடிவு. கதை முடிஞ்சிருச்சேன்னு வருத்தமும்!!
ஒரு டவுட். கதையை ஆரம்பிக்கும் போதே முடிவை யோசிச்சுட்டீங்களா. இல்ல, போக போக தான் டெவலப் பண்ணுனீங்களா.. தசரதன் - தாஸ் பேரு வச்சது coincidenceஆ இல்லயான்னு தெரிஞ்சுக்க ஆர்வம் :)
கதைக்கு ஏற்ற மாதிரி படங்களும் அருமை!! எங்கிருந்து பிடிச்சீங்க??
வணக்கம் அப்பாவி தங்கமணி,
உங்க வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி..! அந்த காலத்துல ஒரு கதை எழுதி அதை நம்ம நட்பு வட்டத்துல படிக்க வைக்கிறதே அரும்பாடு... ஆனா இன்னைக்கி நம்மகிட்ட இந்த வலைப்பதிவுலகம் ஒரு தனி உலகமே இருக்கு..! கண்ணுக்கு தெரியாத எத்தனையோ நண்பர்கள் இந்த உலகத்துல உலா வர்றாங்க..! அவங்களுக்கு மத்தியில ஒரு கதையை கொண்டு போய் சமர்ப்பிக்கிறதுங்கிறது கிட்டத்தட்ட சங்கப்பலகையில நம்ம படைப்பை வைக்கிற மாதிரிதான். அதுல இந்த கேணிவனம் தேறிடுச்சுன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு..! நட்புடன் இணைந்திருப்போம். நன்றி!
வணக்கம் அன்னு,
அப்பாடா, இப்போதான் திருப்தியா இருக்கு..! இந்த கமெண்ட்டுக்குத்தான வெயிட்டிங்..!
இப்போ உங்க கேள்விகளுக்கான விடைகளைப் பாப்போம்
1. தாஸின் 64ஆவது வயதில் மீண்டும் இதே நடக்கும் என்று அர்த்தமில்லை..! ஏனென்றால், இப்போது நாம் கதையில் 1ஆம் மற்றும் 2ஆம் காலக்கட்டத்தை பார்த்ததுபோல், தாஸ் தாத்தாவாக பின்னோக்கி பயணித்து வந்தது என்பது மறைமுகமான 3ஆவது காலக்கட்டம். இப்போது நீங்கள் க்ளைமேக்ஸை தெரிந்து கொண்டு மீண்டும் இந்த கதையைப் படித்துப் பார்க்கும்போது, உங்களுக்கு இந்த மறைமுக காலக்கட்டம் பற்றி நன்றாகவே தெரியவரும். தாத்தாவின் ஒவ்வொரு வசனமும் இந்த 3ஆம் காலக்கட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டவை...!
2. போன பாகத்துல சுசீலாம்மா தாஸூக்கு ஃபோன் பண்ணும்போது, தாஸின் மொபைலில் பேட்டரி இல்லை..! காரணம், அந்த பேட்டரி இருந்த இடத்தில்தான், 1ஆம் காலக்கட்டத்தில் எடுத்த வீடியோக்கள் கொண்ட மெமரி கார்டு-ஐ தாஸ் மறைத்து வைத்து கொண்டுவந்தான். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி போகும்போது காரில் சந்தோஷ் புது பேட்டரியை தாஸின் மொபைலில் லோடு செய்வது போல் எழுதியிருக்கிறேன்.
3. நள்ளியைப் பற்றி சொன்ன சித்தர், தாத்தாவை பற்றி சொல்லாததற்கு காரணம், நள்ளிக்கும் தாஸூக்கும் எந்த ஒரு உணர்ச்சிகரமான சொந்தமுமில்லை..! அவனை பற்றி தெரிந்து கொள்வதில் தாஸூக்கு ஆச்சர்யமே தவிர வேறு எதுவும் உணர முடியாது. ஆனால், தாத்தாவைப் பற்றி சித்தர் சொன்னால், அவனுக்கு தாத்தாவுக்குமான எமோஷனல் பாண்டிங் பாதிக்கப்படும், இதனால், தாத்தா உயிருடன் இருக்கும்போதே அவன் அனாதையாக உணரக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று முக்காலமும் உணர்ந்த சித்தர் ஊகித்திருந்ததால் இதைப்பற்றி தாஸிடம் கூறவில்லை...
4. தாத்தாவாகவும் தாஸே இருந்தும், தனது இளைய தாஸிடம் கேணிவனத்தைப் பற்றி கூறாதமைக்கு காரணம், ஒன்று, தாத்தா எதிர்காலத்தைப் பற்றி எதையும் கூறக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொண்டது காரணம். இரண்டு, எதையும் தேடிக்கண்டுபிடிப்பதுதான் தாஸின் இயல்புத்தன்மை. அது மாறாமல் இருக்கவும் வேண்டும் என்றது மற்றொரு காரணம். இருந்தாலும், தாத்தா பூடகமாக சில விஷயங்களை அவனுக்கு உணர்த்தி வந்திருப்பார் என்பது நீங்கள் மீண்டும் படித்துப் பார்த்தால் புரியும்.
தொடர்ந்து வாசித்து பாராட்டி வந்தமைக்கு மிக்க நன்றி!
வணக்கம் பாலாஜி சங்கர்,
முடிவை ரசித்து பாராட்டயதற்கு மிக்க நன்றி நண்பரே..!
வணக்கம் கல்யாண்,
கதையை ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே..! விரைவில் இதை உங்கள் விழித்திரையில் காண்பிக்க முயற்சிகளை மேற்கொள்கிறேன். நன்றி!
வணக்கம் Hamaragana Sir,
நான் அடுத்த தொடரை ஆரம்பிக்கும் வரை, எனது அடுத்த திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். விரைவில்...
வணக்கம் கோபி,
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி..! கண்டிப்பாக நீங்கள் கூறியதுபோல், திரைத்துறையில் நல்ல படைப்புகளை முடிந்தவரை கொடுக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறேன். நன்றி!
வணக்கம் அனு,
கதையை ஆரம்பிக்கும்போதே கதையின் அவுட்லைனை மட்டும் வைத்திருந்தேன். ஆனால் இடையிடையில் ஏகப்பட்ட மாறுதல்களை நிகழ்த்தியுள்ளேன். ஆனால், க்ளைமேக்ஸ் மட்டும் கதையின் பாதியில்தான் (தாத்தாவின் இண்ட்ரோவுக்கு முன்) தீர்மானித்தேன். படங்களை நானே டிஸைன் செய்தேன். இக்கதைக்கு ஏற்ற ஓவியங்களை நண்பர் ஒருவர் வரைந்து கொடுப்பதாக வாக்களித்துள்ளார். அதையும் சேர்த்து இதை நூலாக வெளியிடும்போது இணைத்துவிடலாம். தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் என்றென்றும் நன்றிகள் பல...!
-
DREAMER
Great work DREAMER !! All your Dreams comes True !
Harish, like to hear from you soon with the same kind of electrifying story, please. Meantime, I will read your other stories. However, don't take more time, because I already finished most of the stories:).
Anbudan, Abbas..!
ஹாய்
இதோட முடிஞ்சது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.ஆனா என்னகேனமோ இந்த தடவ "தேஜாவு" படம் நாபகம் வந்துச்சு.பட் கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு.எதுக்கும் மறுபடியும் படிச்சு பர்கறேன்.இல்லன கொஞ்சம் விளக்க முடியுமா.
அடுத்த ஒரு நல்ல ரொமாண்டிக் thriller எழுதுங்க.ஆவலோட காத்துட்டு இருக்கோம்.
அப்புறம் ஒரு விஷயம்,
நெறைய பேரு ப்ளோக்ல கதை எழுதுறாங்க.ஆனா அதுல romance ன்ற பேருல நெறைய விரசம எழுதுறாங்க.உங்களோட எழுத்து நடை அதுல இருந்து டிப்பிறேண்ட ரொம்ப நல்ல இருக்கு.வாழ்த்துக்கள்.
நான் இந்த கதைய எங்க அம்மாக்கு recommend பண்ணி இப்ப அவங்களும் படிக்கச் ஆரம்பிகிரங்க.
"
நான் வாசிச்ச அருமையான மறக்க முடியாத சில கதைகளுள் கேணிவனமும் முக்கியமான ஒன்றாகிவிட்டது.
உங்க மூளையோட எண்ணஓட்டங்களும் அதை எழுத்துகள்ள வெளிப்படுத்துற நடையும் ஆச்சரியப்பட வைச்சுது சார்.
நிறைய புகழ்ச்சி கிடைத்தால் சில மனிதர்கள் மேலும் வித்தியாசமா சிந்திக்காம அதே பாணிலயே செயற்பட ஆரம்சிச்சிடுவாங்க. ஆனா நீங்க தொடர்ந்தும் இதே மாதிரி தரமான நல்ல பல கதைகள் படைக்கணும் கனவுத்தெரழிற்சாலைலயும் வெற்றிச்சாதனைகள் படைக்கணும்னு மனசார வாழ்த்தறேன்.
உங்க கதைகள் எல்லாத்தயும் படிச்சிருக்கேன்.
யூகிக்க முடியாத முடிவுகள் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் திருப்பு முனைகள் முற்றிலும் மாறுபட்ட தரமான எழுத்து நடை என 100% ரசிக்க வைச்சிவீங்க...
கமன்ஸ் மூலம் உங்கள வாழ்த்தறதயே பெரிய பாக்கியமா கருதறேன்.
நன்றி.
Hello Abbas,
Very happy to know that you are reading all my stories and also thank you very much for your wishes. Now I'm wishing to entertain people visually, So I'm starting a new feature film. Beacause of which I could be able write another story only from May 2011. Will share the details about the new project soon. Meanwhile I'll try to fnd some time to write short stories as well.
வணக்கம் விஜி,
உங்களுக்கு என்ன சந்தேகம்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா விளக்கம் சொல்றேன். எனது எழுத்துநடையை பாராட்டியதற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த கதையை மே 2011-ல எழுத ஆரம்பிக்கிறேன். இதுக்கு நடுவுல கேணிவனத்தை புத்தகமா வெளியிடுறதுக்கான முயற்சிகளும் செய்ய வேண்டியிருக்கு..!
//நான் இந்த கதைய எங்க அம்மாக்கு recommend பண்ணி இப்ப அவங்களும் படிக்கச் ஆரம்பிகிரங்க.//
தயவு செஞ்சி அம்மா படிச்சி முடிச்சதும் என்ன சொன்னாங்கன்னு கமெண்ட் போடுங்க..! இல்லை எனக்கு இமெயில் அனுப்பினாலும் சரி.
வணக்கம் CoolBoyகிருத்திகன்,
மனசார நீங்க வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி..! உங்க பெயரை கதாநாயகனோட பெயரா யூஸ் பண்ணி ஒரு கதை எழுதனும்னு ஆசை..! அடுத்த தடவை அதை செஞ்சிடுவோம். எனது கதைகளின் பொது விமர்சனத்தை மிகவும் ரசித்து படித்தேன்.
//கமன்ஸ் மூலம் உங்கள வாழ்த்தறதயே பெரிய பாக்கியமா கருதறேன்.//
கமெண்ட்ஸ் எழுதுறதே நீங்க பாக்கியம்னு நினைச்சா, நான் உங்களோட அருமையான கமெண்ட்ஸ்-ஐ படிச்சி அதிலருந்து வாழ்த்து வாங்கிக்கிறதை பெரும்பாக்கியமா கருதுறேன். நன்றி..! நட்புடன் இணைந்திருப்போம்.
-
DREAMER
மிக அருமையா முடிச்சிருக்கீங்க! சூப்பர் சார்!
அசத்தலான கதை,சிறப்பா திரைக்கதை அமைச்சு நல்ல டெக்னாலாஜியோட நல்ல மேக்கிங்கும் சேர்ந்தா சூப்பரான பாண்டஸி படம் ரெடி.வாழ்த்துக்கள்.
vanakam naresh
Romba arumai. nan en valvil idu maduri oru naval padidadu illa. ovvoru partum romba arumaiya irukku. meendum idu ponra navel neenga elutha vendum
anbudan
arun
qatar
வணக்கம் எஸ்.கே,
வாழ்த்துக்கு மிக நன்றி..!
வணக்கம் அருண்,
நீங்கள் குறிப்பிட்ட அம்சங்களுடன் சீக்கிரமே இதை திரைப்படமாக்க முயற்சிக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி..!
வணக்கம் அருண் (Qatar),
பொறுமையாக படித்து வாழ்த்தியதற்கு நன்றி..! அடுத்த கதையை Groundwork முடித்து கொண்டு முடிந்தவரை விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்.
-
DREAMER
If i get a chance to meet you, I will give a hug and say, GOOD JOB, SIR!
Nobody else could have written this novel in a better way. I just liked it... Congrats and good luck for all your future works!! :-)
Thanks to my friend, Kayathri who had introduced me to this webpage..
tremendous tremendous Job U have done.. ஒரே மூச்சுல மொத்தத்தையும் படிச்சு முடிச்சேன்... இதை போல் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் மிக சிலரே.. Keep going.. all the best.. :) மேலும் பல படைப்புகளை அளியுங்கள்.. :) வாழ்த்துக்கள்.. :) நன்றி.. :)
Hats off... Superb..
I was reading from the first episode and each and every episode were special and fantastic... Nice flow in your words. I was shocked reading the ending. Very nice.. Expecting this as a novel..
--
Abarajithan
Boss... Really awesome story...!!! Read it in 2 hrs...!!! Very much interesting story...!!!
Hats off to u...!!!
Arul Murugan S.
மிகவும் அற்புதமான படைப்பு என்னை மறந்து இதில் ஆழ்ந்தேன் நன்றி!
Dear Sundar,
ThanX for your Hug & wishes. ThanX to Kayathri for recommending this story..!
Dear Siva Ranjan,
ஒரே மூச்சில் முழுக்கதையையும் படித்து, அதே மூச்சில் என்னை பாராட்டவும் செய்த இனிய நண்பர் சிவரஞ்சனுக்கு மிக்க நன்றி..!
Dear Abarajithan,
ThanX for experiencing Kenivanam. Your expectation and wishes will support me to bring this as a book very soon.
Dear Arul Murugan,
ThanX for Experiencing Kenivanam..!
வணக்கம் ராஜகோபால்,
மெய் மறந்து படித்து வாழ்த்திய நண்பர் ராஜகோபாலுக்கு மிக்க நன்றி..!
-
DREAMER
Interesting...
உண்மையிலேயே ஒரே நாளில் அத்தனை பாகங்களையும் படித்து முடித்து விட்டேன். அந்த அளவிற்கு சுவாரிஸ் யமாக இருந்தது. இக்கதையை எனக்கு அறிமுகப் படுத்தியமைக்கு என் சகோதரர் தினகரனுக்கு நன்றிகள் பல. ஹரீஷ் sir, உண்மையிலே நான் அங்கு பயணித்த உணர்வு!!!!!!! மிக மிக அருமை!!!!!!!!
Hi Hareesh..!
I got a chance today t read your story :-) Wow ...is what I can all say ...! Superb story ....I just loved it ...thanks for this story
Have you written a part 2, it's 2021 already. Have you published this work as a book? Is there anyway I can follow you like in a blog or something?
Post a Comment