Monday, August 30, 2010

"கேணிவனம்" - பாகம் 09 - [தொடர்கதை] பாகம் - 09

'என்ன லிஷா சொல்றே... குணாவைக் காணோமா..? எங்கே போனான்...?' என்று சந்தோஷ் அதிர்ச்சியாய் கேட்க...

'ஆமா சாண்டி(Sandy), சாப்பிட்டு முடிச்சி கூடவே வந்த ஆளு, கை கழுவிட்டு, கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் போயிட்டிருந்தாரு... அப்புறம் ஆளக்காணோம்... தேடிப்பாத்தா எங்கேயும் இல்ல..?' என்று லிஷா குழப்பமாக கூற...

தாஸ் சட்டென்று எழுந்து... கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் வேகமாக நடந்தான்... லிஷா அவனை பின்தொடர்ந்து போக, சந்தோஷ் வாசலை நோக்கி ஓடினான்.

கான்ஃபரன்ஸ் ஹாலில், பழையபடி ஆரஞ்சு கலர் வெளிச்சமும், லேப்-டாப்பும், அதிலிருந்து ப்ரொஜெக்ட் செய்யப்பட்ட ஃபோட்டோவும் இருந்தது.

தாஸ் லேப்டாப் அருகில் சென்று அதை இயக்கிப் பார்த்து, ஒரு நிம்மதி பெருமூச்சுடன், 'நல்ல வேளை, அவன் லேப்டாப்-ஐ ஆக்ஸஸ் பண்ணலை..' என்றான்.

சந்தோஷூம் உள்ளே நுழைந்தவனாய், 'பாஸ், வெளியே செக் பண்ணிட்டேன். ஆள் எஸ்கேப்...' என்று கூற

தாஸ், முகத்தை குழப்பமாக வைத்துக் கொண்டு, யோசித்துக் கொண்டிருக்க... சந்தோஷ் மீண்டும்...

'விடுங்க பாஸ், நீங்க எங்கே மறுபடியும் காட்டுக்குள்ள கூட்டிட்டு போயிடுவீங்களோன்னு பயந்து ஓடிப்போயிருப்பான்'

'இல்ல சந்தோஷ்... அவன் நம்ம கிட்ட ஒழுங்கா சொல்லிட்டு போயிருக்கலாம்... ஆனா, சொல்லிக்காம ஓடிப்போயிருக்கான்னா..! இதுல ஏதோ இருக்கு..'

ஒரு சின்ன இடைவெளி விட்டு, சுவற்றிலிருந்த ஓவியத்தை பார்த்தபடி தாஸ் மீண்டும் தொட்ர்ந்தான்...

'அவன்கிட்ட தெரிஞ்சிக்கிட்ட டீடெய்ல்ஸைவிட, அதிகமான டீடெய்ல்ஸ் நாமதான் சொல்லியிருக்கோம்...' என்று வருத்தத்துடன் கூறினான்.

லிஷாவும் குழப்பத்துடன்... 'மே பி... அவன் நமக்கு முன்னாடி அந்த கோவிலுக்கு போய் ஏதாவது பண்ணிடலாம்னு ஸ்டுபிட்டா யோசிச்சியிருந்தா..?'

'அந்தாளு அவ்ளோ யோசிக்கிறவனா தெரியில லிஷா... ரயில்வே ஸ்டேஷன்லருந்து உன்கூட கார்ல அவன் கொண்டுட்டு வந்த லக்கேஜ்-ஐயே விட்டுட்டு ஓடியிருக்கான்...' என்று சந்தோஷ் நக்கலாக கூறினான்.

'அவன் அந்த கோவிலுக்கு மறுபடியும் தனியா போகமாட்டான்னுதான் நானும் நினைக்கிறேன்.' என்று தாஸூம் கூற, அந்த அறையில் ஒரு சின்ன மௌனம் நிலவியது.

'சரி..! சரி..! பாஸ், அந்தாளை விடுங்க... நம்ம அடுத்த ஸ்டெப் என்ன..?  அதச் சொல்லுங்க.. ' என்று சந்தோஷ் கூற... தாஸும் அடுத்தது என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ரம்யமான வீணை ஒலி, அந்த அறையின் சீலிங்கில் பொருத்தபட்டிருக்கும் ஸ்பீக்கரில், மெலிதாக கேட்டது. அது தாஸின் ஆஃபீசின் காலிங் பெல்...

தாஸ் எழுந்து சென்று அறையின் கதவின் அருகிலிருக்கும், செக்யூரிட்டி அலாரம் மானிட்டரில் பட்டனை அழுத்திப் பிடிக்க... அதில்... கீழே ANCIENT PARK கதவருகில், ஒரு 60 வயது மதிக்கத்தக்க நபர் நின்றிருப்பது தெரிந்தது...

தாஸ், முகத்தில் மகிழச்சியுடன், 'ப்ரொஃபஸர்..?' என்று சொல்லிக்கொண்டான்.

------------------------

ப்ரொஃபஸர் கணேஷ்ராம்... வயது 63, கண்ணாடியணிருந்தார். ரிடையார்டு தொல்லியல் ஆய்வாளர். தற்போது, பார்ட் டைம் ப்ரொஃபெஸர். அரிய புத்தகங்களை தேடிப்பிடித்து குறிப்புகள் எடுத்துக் சேகரிப்பதில் ஆர்வலர். 
 
தாஸ்-க்கு ஒரு வகையில் குருவைப் போன்றவர்.
நலன்விரும்பி, நண்பர், ஆலோசகர் இப்படி பல வகையில் நெருங்கிய அவரை இந்நேரத்தில் சந்திப்பதில் தாஸ் மிகவும் சந்தோஷப்பட்டான்.

கீழே ஹாலுக்கு இறங்கி வந்து அவரை வரவேற்றான்.

'வாங்க ஃப்ரொஃபஸர் சார்...'

'என்னய்யா தாஸ்.. எப்படி இருக்கே?'

'நல்லாயிருக்கேன் சார்... என்ன 2 மாசமா லைப்ரரிக்கு வரவேயில்ல... நீங்க கேட்ட புக்ஸையெல்லாம் கஷ்டப்பட்டு கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன்.' என்று தாஸ் கூற, ப்ரொஃபஸர் ஆச்சர்யமாக...

'என்னது கிடைச்சிடுச்சா... ரொம்பவும் ரேர் புக்ஸ் ஆச்சேய்யா..?'

'கிடைச்சிடுச்சு சார்... வாங்க உட்காருங்க' என்று இருவரும் அந்த கூடத்தில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தனர்.

'நானே உங்களை வந்து சந்திக்கலாம்னு இருந்தேன். ஒரு ஹெல்ப் வேணும் சார்..?'

'என்னய்யா... உன் அடுத்த புக் எழுத தொல்பொருள் தகவல்கள் ஏதாவது வேணுமா..?'

'தகவல் வேணும், ஆனா, தொல்பொருள் பத்தியில்ல... ஒரு ஓவியத்தை பத்தி..'

'என்ன ஓவியம்.. கண்ணுல காட்டு... சொல்லிடுவோம்..' என்று அவரும் ஆர்வமாக...

'ஒரு நிமிஷம் இருங்க சார்... நான் போய், அந்த ஓவியத்தை கொண்டு வர்றேன்..' என்று தாஸ், ஆர்வத்தோடு எழுந்து சென்றான்.

மேலே ஏறிவந்து தாஸ் மீண்டும் கான்ஃபரன்ஸ் ரூமுக்குள் நுழைய, அங்கே... சந்தோஷ் லிஷாவிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தான்.

'இப்போ நீ போயே ஆகணுமா..?' என்று அதட்டலாக பேச...

'ஏண்டா இப்படி இருக்கே..! நான் ஒரு காரியமாத்தானே அவனை பாக்க போறேன். நீ ஏன் அனாவசியமா பயப்படுறே..?' என்று அவள் சந்தோஷூடன் சண்டை போட... இதை கவனித்த தாஸ்

'எக்ஸ்யூஸ்மி என்ன பிரச்சினை..?' என்று இருவரையும் பார்த்தபடி கேட்க

'பாஸ், நீங்களே நியாயத்தை கேளுங்க... எவனோ ஒரு வெள்ளைக்காரனாம், இண்டர்நெட் ஃப்ரெண்டாம், அவன் இண்டியா வந்திருக்கானாம்... இவ, அவனோட ஹோட்டல் ரூம்லியே போய் அவனை பாக்க, தனியா கிளம்பி போறா... நானும் கூட வர்றேன்னா கேட்க மாட்டேங்குறா...'

'நீ வேண்டாம் சேண்டி (Sandy), சில விஷயம் தனியா போனாத்தான் காரியமாகும்டா...' என்று லிஷா, தனது ஹேண்ட் பேக்-ஐ எடுத்தபடி பேச...

'யாரு லிஷா அது..?' என்று தாஸ், லிஷாவிடம் கேட்க...

'பேரு ரிச்சர்ட்... என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டு...' என்று தீர்க்கமாக கூற

'பாருங்க பாஸ், இந்த மாதிரி இண்டர்நெட் ஃப்ரெண்ட்ஸையெல்லாம் நம்பி தனியா போறது ரிஸ்க்-னு சொன்னா கேக்க மாட்டேங்குறா..!'

'வேலையில்லாம நான் ஏன் அவன்கிட்ட போவப்போறேன்' என்று லிஷா சத்தமாக கூறிவிட்டு, திரும்பி தாஸிடம்...

'தாஸ், நீங்க என்கிட்ட, உங்க டைம் டிராவல் விஷயத்தை ஃபோன்ல சொன்னவுடனேயே நான் இதைப் பத்தி நிறைய டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதுல இந்த ரிச்சர்ட்-டோட ஹெல்ப்பும் ஒண்ணு, அவன் ஒரு ஜியாலஜிஸ்ட் எக்ஸ்பர்ட். அவங்கிட்ட நிறைய தகவல்கள் கிடைக்கும்னுதான், மறைமுகமா அந்த கிணறு பத்தி விசாரிச்சிட்டிருக்கேன். அவன் இப்ப ஏதோ தகவல் கிடைச்சிருக்கு நேர்ல வா சொல்றேங்குறான். இதுல என்ன தப்பு..?' என்று கேஷூவலாக சந்தோஷ் பக்கம் திரும்பியபடி கேட்க

'எனக்கு பயமாயிருக்கு லிஷா, நீ இப்படி அடிக்கடி தனியா போய் எங்கேயாவது ஏடாகூடமா மாட்டிப்பியோன்னு ரொம்பவும் பயமாயிருக்கு' என்று கூற, அந்த அறையில் ஒரு சின்ன அமைதி... பிறகு லிஷா, சந்தோஷை நெருங்கி வந்து, மலர்ந்த முகத்துடன்...

'எனக்கு எதுவும் ஆகாதுடா... நான் எப்பவும் உன் லிஷாதான்... பயப்படாதே' என்றவள், அவன் கன்னத்தில் அவசரமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, யாருடைய பதிலுக்கும் காத்திராமல் அங்கிருந்து கிளம்பினாள்...

சந்தோஷ் அவளையே பார்த்துக் கொண்டிருக்க... தாஸ், அவனருகில் வந்து...

'சந்தோஷ்..! அவ ரொம்ப உஷாரான பொண்ணு, அவளுக்கு எதுவும் ஆகாது.. ரிலாக்ஸ்...' என்று கூற அவன் சகஜமாகிறான். இருவரும் தாஸின் ஆஃபீஸ் அறைக்கு வருகின்றனர்.

'நீ அந்த ஓவியத்தோட ப்ளோ-அப் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தியே அதை எடு... quick..?' என்று சந்தோஷை ஏவிவிட்டு, அவன் தனது அறையிலிருக்கும் தனது பர்சனல் புத்தக அலமாறியிலிருந்து சில புத்தகங்களை எடுத்து கொண்டிருந்தான்...

சந்தோஷ் அந்த ஓவிய ப்ரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ள, தாஸ் தனது கையில் 4 புத்தகங்களை அள்ளிக் கொள்ள... இருவரும் அறையிலிருந்து வெளியேறினார்கள்.

சந்தோஷ் நடந்தபடி கேட்டான்...

'இந்த ஓவியத்தை இப்ப என்ன பண்ணப் போறோம் பாஸ்..?' என்று கேட்க

'அடுத்த ஸ்டெப் என்னன்னு கேட்டேல்ல... இந்த ஓவியத்தை ரீட் பண்றதுதான் நம்ம அடுத்த ஸ்டெப்...'

'அதான், மணிக்கணக்கா, இந்த ஓவியத்தை உத்து உத்து பாத்துட்டோமே... இதுல வேற என்ன இருக்க போகுது..?'

'நாம பாத்ததுக்கும், ஒரு எக்ஸ்பெர்ட் இந்த ஓவியத்தை ரீட் பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...' என்று கூற

'என்ன வித்தியாசம்..?' என்று கேட்க

'நீயே பாத்து தெரிஞ்சுக்கோ..' என்று தாஸ் கூறிக்கொண்டே படியிறங்கி, கூடத்தில் அமர்ந்திருந்த ப்ரொஃபஸர் கணேஷ்ராமை நெருங்கினான்.

'சாரி ப்ரொஃபஸர் சார்... ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா..?' என்று கேட்டபடி, கொண்டுவந்த புத்தகங்களை அவர் கையில் கொடுத்தான்..

அவர் கையில் வாங்கியபடி, வாயெல்லாம் பல்லாக, 'இந்த புத்தகங்களை படிக்க எத்தனை வருஷமா வெயிட் பண்ணியிருக்கேன் தெரியுமா..? தாஸ், இதெல்லாம் எங்கேயா புடிச்சே...' என்று ரகசியம்போல் கேட்க...

'ப்ளீஸ் சார், அதைமட்டும் கேக்காதீங்க..'

'சொல்லமாட்டியே... உன் வாயிலருந்து ஒரு விஷயத்தை பிடுங்கவே முடியாதே..' என்று அவர் தாஸை கலாய்த்தபடி, 'சரி ஏதோ ஓவியம்னியே எங்கே..?' என்று கேட்க

தாஸ் சந்தோஷைப் பார்த்து, 'சந்தோஷ், அதை டேபிள்ல ஸ்ப்ரெட் பண்ணு..' என்றதும், சந்தோஷ் அந்த ஓவியத்தை எதிரிலிருந்த டேபிளில் விரித்தான். மூவரும் அந்த ஓவியத்தை சுற்றி நின்று கொள்ள, ப்ரொஃபஸர் கணேஷ்ராம், தனது கண்ணாடியை கூர்மையாக பிடித்தபடி, அந்த ஓவியத்தை ஏற இறங்க பார்த்தார்.

'க்ளேரிட்டி தெளிவில்லாம இருக்கே..?' என்று அலுத்துக் கொண்டார்...

'மொபைல் கேமிராவுல, ரொம்பவும் டல் வெளிச்சத்துல எடுத்த ஃபோட்டோ... அதான்..!'

'எங்கேய்யா எடுத்தே..?'

'ஒரு கோவில்ல ரூஃப்ல இருந்துச்சு...' என்று கூற, அவர் தாஸை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, மீண்டும் அந்த ஓவியத்தில் கண்களை மேயவிட்டார்.

சந்தோஷ் அலுப்புடன் அருகில் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு, அவர் பேச தொடங்கினார்.

'ரொம்ப பழங்காலத்து ஓவியம்தான்... கலர்ஸ் அதிகமா யூஸ் பண்ணலை... கருப்பு, வெள்ளை, மஞ்சள், காவி நாலு நிறம்தான் யூஸ் பண்ணியிருக்காங்க...' என்றவர் சற்று இடைவெளி விட்டு, தாஸை ஏறிட்டு பார்த்து...

'இந்த ஓவியம், கலையம்சத்துக்காக வரையப்பட்டதில்லை... லாவண்யம், பாவம் எதுவும் சரியா இல்ல... அதாவது அலங்காரங்கள் இல்ல... பார்டர் கூட, பர்பஸ்ஃபுல்லா வச்ச மாதிரிதான் இருக்கு...' என்றதும், தாஸ் சந்தோஷை பார்க்கிறான்.

அவர் தொடர்ந்தார்...

'சித்திர லட்சணப்படி இந்த ஓவியம் 'சித்திர பாசம்'ங்கிற ஸ்டைல்ல வரையப்பட்டிருக்கு... அதாவது, தட்டையான 2D இமேஜிங் ஸ்டைல்... இந்த ஸ்டைல்லதான், எஜிப்ஷியன் ஓவியங்கள்லாம் அதிகமா வரைஞ்சிருக்காங்க... அதுமட்டுமில்ல, இந்த ஓவியத்தை 'நாகரம்'-ங்கிற வகையறைக்குள்ள சேக்கலாம்.

'அப்படின்னா..?'

'இந்த ஓவியம், ஒரு குழுவினர் சேர்ந்து ஏதோ சாங்கியம் செய்றதை சொல்லுது... அதாவது ஒரு சாரார்களுடைய நாகரிகத்தை காட்டுது... Cultural Depiction... இதை 'விஷ்ணு தர்மோத்தரம்'-ங்கிற ஓவிய சாஸ்திரப்படி, 'நாகரம்'-ங்கிற கேட்டிகரில வரும்...'

அந்த ஓவியத்தை இன்னும் குனிந்து நெருங்கி பார்த்து, ஒரு இடத்தில் கையை சுட்டிக்காடியபடி தொடர்ந்தார்...

'இவருதான் இந்த ஓவியத்துக்கு தலைவன்  or மூல நாயகன் or கடவுள்' என்று ஓவியத்தில், வட்டவடிவ பெரிய கருப்பு புள்ளிக்குள் நடுநிலையாக அமர்ந்திருக்கும் ஒரு உருவைத்தை காட்டினார். தொடர்ந்து, இன்னொரு உருவத்தை சுட்டிக்காட்டி, 'இவருக்கு அடுத்ததா இந்த உருவத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க...' என்று இன்னொரு அரசன் போன்ற உருவத்தை காட்டினார்.

'எப்படி சொல்றீங்க சார்..?' என்று இம்முறை சந்தோஷ் கேள்வி கேட்க

அவர், தனது சட்டைப்பையிலிருந்து, ஒரு பேனாவை எடுத்து, மூடி திறக்காமல், அந்த ஓவியத்தில் அந்த பேனாவை வைத்தபடி, ''ம்ம்ம்... கற்பனையா, இந்த ஓவியத்துக்கு உள்ளே 2x2ன்னு 4 கட்டம் போட்டுக்கோங்க...' என்று ப்ளஸ் குறி போல் கோடு போட்டு காட்டினார்.

'இப்ப, இந்த நாலு கட்டத்துக்குள்ள இருக்கிற ஓவியங்களையும், வேற வேற ஆளு வரைஞ்சதா நினைச்சிக்கோங்க..!'

'சரி?'

'இந்த நாலு ஓவியத்துல எது பெட்டரா, அதிக நுணுக்கத்தோட வரையப்பட்டிருக்குன்னு பாருங்க... உங்களுக்கே வேரியேஷன்ஸ் தெரியும்...' என்று கூற, சந்தோஷ் அந்த 4 கட்டங்களையும் உற்றுப்பார்த்து...

'இந்த 3-வது கட்டத்துல, டாப்ல இருக்கிற இந்த உருவம்தான் கொஞ்சம் போல்டா நல்லாயிருக்கு...'

'அவருதான் இந்த ஓவியத்துல தலைவன்... அதுக்கடுத்ததா போல்டா இருக்கிற இந்த அரச உருவம் இரண்டாவது நாயகன்-னு சொன்னேன்...  இன்னும்  உன்னிப்பா பார்த்தா, நிறைய விஷயம் சொல்ல்லாம்.' என்று கூற, சந்தோஷ் அவரை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் ஆர்வம் தாங்காமல், 'சார், இந்த ஓவியத்துக்குள்ள இத்தனை விஷயங்கள் இருக்கா..?' என்று கேட்க

'இந்த ஓவியம்னு இல்லப்பா, எந்த ஒரு ஓவியத்துலயும், ஏகப்பட்ட தகவல்கள் புதைஞ்சிருக்கும்... இன்னைக்கு, நம்ம காலகட்டத்துல, தகவல் பறிமாற்றம்-ங்கிறது  சாட்டிலைட் அளவுக்கு முன்னேறியிருக்கலாம். ஆனா, அந்த காலத்துல, ஓவியங்கள்தான் தகவல் பறிமாற்றம்... ஒரு குழந்தை பேப்பர்ல கிறுக்கிறதை உத்து பாத்தீங்கன்னா, அதுல அந்த குழந்தையோட எண்ணங்கள் பதிவாகியிருக்கும். அதே மாதிரிதான், மொழி இல்லாதப்போகூட, அந்த காலத்து மனுஷங்க, ஓவியங்கள் மூலமா அவங்களோட எண்ணங்களை பதிவு செஞ்சிட்டு போயிருப்பாங்க...' என்று கூற, சந்தோஷ் அவரையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

தாஸ் அவரிடம், 'சார், இந்த ஓவியம் எந்த காலக்கட்டத்துல வரையப்பட்டதுன்னு சொல்ல முடியுமா..?' என்று கேட்க

'இந்த ஓவியத்தோட தொனிப் பொருளையும்,  டிஸைன் பேட்டர்ன்ஸையும் அனலைஸ் பண்ணா சொல்லிடலாம்... அதுக்கு, நான் இதை ஒரு நைட் ஃபுல் உக்காந்து ஸ்டடி பண்ணனும்' என்று கூற, தாஸ் சிறிது யோசித்துவிட்டு, அந்த ஓவியத்தை சுருட்டி அவரிடமே கொடுத்தான்...

'சார், இந்த ஓவியம் எனக்கு ரொம்ப முக்கியம். இதுல, உங்களால வேற என்னல்லாம் தகவல் திரட்ட முடியுமோ திரட்டி கொடுங்க...' என்று கேட்க, அவர், அந்த ஓவியத்தை ஆர்வத்துடன் வாங்கி கொண்டு, தாஸ் கொடுத்த புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு தாஸையும் சந்தோஷையும் திரும்பி பார்த்தபடி அங்கிருந்து கிளம்பினார்.

அதே நேரம்...

லிஷா, ஒரு ஹோட்டல் அறையில், ரிச்சர்டுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க... ரிச்சர்ட் அவளிடம் கூறும் தகவல்களை கேட்டு, அவள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துக்கொண்டிருந்தாள்.

இதுவரை, அவளும், தாஸும், சந்தோஷும்... 'டைம் டிராவல் கிணறு' என்று நினைத்துக் கொண்டிருந்தது... கிணறே இல்லை என்பது தெரிந்தது.

(தொடரும்...)


Signature

27 comments:

Viji said...

ஹலோ
ரொம்ப நல்ல எழுதறீங்க.ரொம்ப ரொம்ப விறு விறுப இருக்கு.ரொம்ப நாள் ஆச்சு ராஜேஷ் குமார் novelam படிச்சு.அந்த குறைய நீங்க சரி பணிடீங்க.ரொம்ப நன்றி.

Gayathri said...

nice...suspense thangala

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப சின்ன போஸ்டா இருக்குங்க...but lots of details though... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்க... கதை விறுவிறுப்பா போயிட்டு இருக்கு... good job

Sam Riyas said...

mikavum arumai

வேங்கை said...

ஹரிஷ் ரொம்ப யோசிக்காதீங்க

தல வலி வந்துற போகுது (சும்மா)

உண்மையா ஹரிஷ் இந்த பாகம் - விவேகம்

ரொம்ப ரொம்ப கலக்கல்

dineshar said...

ஏகப்பட்ட தகவல்கள் புதைஞ்சிருக்கு... அபாரம் அண்ணா.... உங்களை எந்திரன் என்று அழைக்கலாம்...

சைவகொத்துப்பரோட்டா said...

சபாஷ் ஹரீஷ், அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மற்ற பாகங்களை இப்போது தான் படித்து கொண்டிருக்கிறேன்..

முகவும் அருமையாக இருக்கிறது..

DREAMER said...

வணக்கம் விஜி,
ஆஹா, ராஜேஷ் குமார் மாதிரி இமயங்களின் பெயரோடு சேர்த்து பாராட்டியதற்கு நன்றி!

வணக்கம் காயத்ரி,
சஸ்பென்ஸ்... இன்னும் நிறைய இருக்கு..! தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி!

வணக்கம் அப்பாவி தங்கமணி,
அடுத்த பாகம் இன்னும் கொஞ்சம் பெருசா போட முயற்சிக்கிறேன்! தகவல் திரட்டத்தான் நேரம் அதிகமா தேவைப்படுது..!

வணக்கம் SAM...
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!

வணக்கம் வேங்கை,
ரொம்ப யோசிச்சி, தலைவலி வருதோ இல்லியோ, முடி கொட்டாம இருந்தா சரி..! இந்த பாகத்தை ஒரு வார்த்தையில் 'விவேகம்' என்று பாராட்டியதற்கு நன்றி!

வணக்கம் தினேஷா,
'எந்திரன்'-னு சொல்லிட்டீங்க.. தலைவர் ஃபேன்ஸ் கோவிச்சுக்கப் போறாங்க...! அன்புக்கு நன்றி! தகவல் புதையல்... இன்னும் நிறைய இருக்கு!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
மிக்க நன்றி நண்பா..! விரைவில் அடுத்த பாகத்தை போட்டுவிடுகிறேன்.

வணக்கம் வெறும்பய,
தொடரை ஆரம்பத்தில் இருந்து படித்து வருவதற்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

-
DREAMER

Madhavan Srinivasagopalan said...

உங்களுக்குள் ஒரு ராஜேஷ் குமார் மறைந்துள்ளார்..
நாவல் விறு விருப்பாக இருக்கிறது..
தொடரவும்..

Unknown said...

மிகவும் அருமையா இருக்குங்க... அந்த காலத்துல ஓவியம் மூலமாவே மெசேஜ் கன்வே பண்ணியிருக்காங்கற மேட்டர்...ரொம்ப புதுசா இருக்குங்க...

kathir said...

nice anna bookmarkla poaattu continuousa padikirean...next eapanna

Ramesh said...

ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போயிருக்கீங்க...ஓவியத்தைப் பத்தின உங்க ஆராய்ச்சி அருமை...புதுமையா இருந்தது..

நாடோடி said...

ஒரே மூச்சில் க‌தை முழுவ‌தும் ப‌டிக்க‌ வேண்டும் போல் இருக்கிற‌து ஹ‌ரீஸ்.. சீக்கிர‌ம் அடுத்த‌ பார்ட்டை போடுங்க‌ள்..

அருண் பிரசாத் said...

செம.... அவ்வளதான் சொல்வேன்...

தொடருங்கள் :)

Ahamed irshad said...

விறுவிறுப்பு..

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
//இதுவரை, அவளும், தாஸும், சந்தோஷும்... 'டைம் டிராவல் கிணறு' என்று நினைத்துக் கொண்டிருந்தது... கிணறே இல்லை என்பது தெரிந்தது.//
காய்கள் நகர நகர விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது...... கடைசி ஒரு மணித்துளி சிந்திக்க வைத்துவிடுகிறீர்கள்..

DREAMER said...

வணக்கம் மாதவன்,
ஆஹா, த்ரில் மன்னன் ராஜேஷ்குமார் சாருடன் ஒப்பிட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் பதிவுலகில் பாபு,
இந்த ஓவிய விஷயத்துக்காக நான் தகவல் தேடியலைந்த களைப்பெல்லாம், நீங்கள் நல்லாயிருக்குன்னு சொல்ற இந்த ஒரே ஒரு வார்த்தைக்காகத்தான். அந்த வகையில் மிக்க நன்றி!

வணக்கம் கதிர்,
புக்மார்க் போட்டு கதையை தொடர்ந்து படித்து ஆதரவு தந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி!

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
ஓவிய ஆராய்ச்சியை ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி!

வணக்கம் நாடோடி நண்பரே,
எனக்கும் முழுக்கதையை ஒன்றாய் படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளது. எப்படியும் இன்னும் ஒரு பத்து அல்லது பதினைந்து பாகமாவது போகுமென்று நினைக்கிறேன்.

வணக்கம் அருண்பிரசாத்...
"செம...", இந்த ஒரு வார்த்தையே போதும்... தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!

வணக்கம் அஹமது இர்ஷாத்...
விறுவிறுப்பு என்று ஒரே வார்த்தையில் பாராட்டியமைக்கு நன்றி!

வணக்கம் தினேஷ்குமார்...
விறுவிறுப்பு கொஞ்சமும் குறைக்காமல், கதைக்கு தேவையான மூவ்ஸ்-உடன் காயை நகர்த்துகிறேன். தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும், பொறுமையான காத்திருப்புக்கும் மிக்க நன்றி!

-
DREAMER

Aba said...

Is that a warmhole???

சீமான்கனி said...

தொடர்ந்து படிக்க படிக்க சுவாரஸ்யம் குறையாம ஆர்வம் அதிகமாகுது...இதை நாவலா போட்டுறலாம் ஹரீஷ் ஜி..தொடரட்டும்...

Chitra said...

Best wishes!

Janaki. said...

i am eagrly waiting for the next episode

DREAMER said...

வணக்கம் கரிகாலன்,
உங்கள் Guessing அருமை..!

வணக்கம் சீமான்கனி,
நல்ல ஐடியாங்க... இதை நாவலா போட முயற்சிக்கிறேன். யாராவது நண்பர்கள் அதுக்கு guide பண்ண முன்வராங்களான்னும் பாப்போம்...

வணக்கம் சித்ரா,
வாழ்த்துக்கு நன்றி..!

வணக்கம் ஜனா,
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

VampireVaz said...

Pace never slackens.... surprises never end... top notch bro

DREAMER said...

ThanX Vaz...

-
DREAMER

Mrs. Arunprasath said...

A very good thriller. I dont know to read tamil, but i still ask my husband to read your story for me. Keep going.. Cant wait to read the next episode.

DREAMER said...

Hello Mrs. Arunprasath,
I am really happy to know your interest in reading this story. Also thanX to your Husband for reading it... I'll post the next episode by tonight... ThanQ

-
DREAMER

Popular Posts