Friday, August 27, 2010

"கேணிவனம்" - பாகம் 08 - [தொடர்கதை]இக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-05-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-06-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-07-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்

பாகம் - 08

சுவற்றில் ப்ரொஜெக்ட் செய்யப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த தாஸ்... எழுந்து அந்த ஓவியத்தை நெருங்கி சென்றான்.

'சந்தோஷ், நாங்க ரெண்டு பேரும் எப்படி வெவ்வேற காலக்கட்டத்துக்கு வந்து சேர்ந்தோம்னு தெரிஞ்சிடுச்சி...'

'எப்படி பாஸ்...' என்று சந்தோஷ் கேட்டுக் கொண்டிருக்க...

தாஸ் அந்த ஓவியத்தை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தான்.  இதுவரை அந்த ஓவியத்தில் பார்க்காத ஒரு விஷயம், தாஸ் கண்களுக்கு தெரிந்தது. அது... அந்த ஓவியத்தை சுற்றி வரையப்பட்டிருந்த பார்டர்.

ஓவியத்தின் மையப் பகுதியிலேயே இதுவரை தனது கவனம் இருந்துவந்ததால், அந்த பார்டரில் இருக்கும் டிஸைனை அவன் கவனிக்காமல் விட்டிருந்தான்.


அந்த பார்டர், பார்ப்பதற்கு அலங்காரத்திற்காக வரையப்பட்ட ஒரு சாதாரண பொருளாகவே  தெரிந்தது. ஆனால், அதை உற்று நோக்கையில், அதில் வரிசையாக குட்டி குட்டி வளையங்கள் இருப்பது தெரிந்தது. அந்த வளையங்களை எண்ணினான்.

'1.2.3.4.....60... யெஸ்... நான் நினைச்சது சரிதான்...' என்று மீண்டும் குதூகலித்துக் கொண்டிருக்க...

'என்னது 60...? ' என்று லிஷாவும் ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

'சொல்றேன்... குணா அங்க நடந்ததை சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுது... அநேகமா நீங்களும் நோட் பண்ணியிருப்பீங்க... அதாவது, குணா, புலிக்கு பயந்துக்கிட்டு, அந்த கிணத்தோட மூடியா இருந்த வட்ட வடிவ கல்-ஐ, வேறு திசையில திறந்து கிணத்துக்குள்ள குதிச்சதா சொன்னார்..'

'ஆமா..'

'அப்போன்னா, அந்த கிணத்தோட மூடிதான், வெவ்வேற காலக்கட்டத்துக்கு போறதுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கு... அதாவது டைம்-ஐ ப்ரிசெட் செய்றதுக்கு, இல்லைன்னா, கோ-ஆர்டினேட்ஸ் செட் பண்றதுக்கு பயன்பட்டிருக்கனும்..'

'ஓ..' என்று லிஷா ஆச்சர்யம் காட்டினாள்.

'இருந்தாலும், அந்த மூடி-யோட ஃபோட்டோ கையில இல்லாததால, வெறும் அனுமானத்தின் அடிப்படையில, இதை எப்படி எடுத்துக்கிறதுன்னு குழம்பிட்டிருந்தேன். ஆனா, குழப்பமே இல்லாம இந்த ஓவியத்துல அதுக்கான விடை கிடைச்சுடுச்சு..'

'என்ன இருக்கு அந்த ஓவியத்துல..' என்று சந்தோஷ் கேட்க

'இதோ, இந்த ஓவியத்தோட பார்டரை பாருங்க...' என்று கூற, அனைவரும் அந்த சுவற்றில் இருக்கும் ஓவியத்தை பார்க்கும்படி தாஸ் சற்று விலகி நின்றான்.

குணாவும் ஒன்றும் புரியாமல் ஆர்வமாக அந்த ஓவியத்தை உற்று பார்த்துக் கொண்டிருக்க, தாஸ் தொடர்ந்தான்...

'இந்த பார்டர்ல, வரிசையா அடுக்கப்பட்டிருக்கிற குட்டி குட்டி வட்டங்கள் எல்லாம், அந்த மூடி கல்லோட வெவ்வேறு பொசிஷன்ஸை காட்டுது... இது மொத்தமா கூட்டினா அறுபது வருது..'

'60 என்ன கணக்கு..?' மீண்டும் லிஷா...

'தமிழ் வருஷங்களோட மொத்த எண்ணிக்கை 60... 'பிரபவ'-ங்கிற வருஷத்துல தொடங்கி, 'அக்ஷய' வருடம் வரைக்கும் இந்த 60 வருஷங்கள்தான் மாறி மாறி சைக்கிளாயிட்டு இருக்கும். இப்போ நாம இருக்கிறது 23ஆவது ஆண்டு, 'விரோதி' ஆண்டு... இந்த ஓவியத்துல இருக்கிற மாதிரி ஒவ்வொரு பொஸிஷன்ல, அந்த கல்-ஐ ஃபிக்ஸ் பண்ணி வச்சிட்டு கிணத்துக்குள்ள இறங்குனா.. அந்த வருஷத்துக்கு போயிடலாம்... இப்ப புரியுதா..?' என்று கூறி, மூவரையும் பார்க்க, அவர்கள் ஆச்சர்யமாக அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

'வாவ்... பாஸ்... அந்த கிணறு உண்மையிலேயே பயங்கரமான கிணறுதான்...' என்று சந்தோஷ் வாயைப் பிளந்து அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்க...

லிஷா முகம் இன்னும் குழப்பத்தில் இருந்தது.

'தாஸ், அப்படிப் பாத்தாலும், குணா, குதிச்சது, நீங்க இறங்கின இடத்துக்கு வேறு திசையிலதானே..? அப்படிப்பாத்தா, இவரு வேற ஏதோ ஒரு வருஷத்துக்குத்தானே போயிருக்கணும்..?'

'இருக்கலாம், ஆனா, குணா முழு பலங்கொண்டு அந்த கல்லை தள்ளியிருக்காரே தவிர அந்த கல்லை சுத்திவிடல... சுத்தியிருந்தாருன்னா, இந்நேரம் அவர் எங்கே இருந்திருப்பாரோ தெரியல... அவர் தள்ளுனதுல ஒரு சின்ன வேரியேஷன் ஏற்பட்டு, அவர் அட்வான்ஸா 30 மணி நேரம் முன்னாடி வந்து சேர்ந்திருக்காரு... அந்த வகையில அவர் சொன்ன மாதிரி, அவரோட அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்தான்..' என்று கூறி, குணாவைப் பார்க்க, அவன் இன்னும் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தான்.

லிஷா, அந்த ஓவியம், இருந்த தாஸின் லேப்-டாப் அருகில் சென்று அமர்ந்து, அந்த ஓவியத்தை சூம்(ZOOM) செய்தாள், அதில், அந்த பார்டர்களிலிருந்து வெவ்வேறு வட்ட வடிவங்களை மேலும் மேலும் சூம் செய்ய, அதில் தெளிவில்லாமல், சில எழுத்துக்களும் தெரிந்தது...

'லிஷா, குட் வர்க்... அந்த எழுத்துக்களோட ஷார்ப்னஸ்-ஐ கொஞ்சம் கூட்டினேன்னா, ஓரளவுக்கு படிக்க முடியும். ப்ளீஸ் ட்ரை இட்..' என்று கூற, லிஷா அதை செய்தாள்.

அந்த எழுத்துக்களைப் படிக்க...

'நா..டி...'

'விநா...டி...'

'த... த... தற்பரை...' என்று மிகுந்த சிரமத்துடன் சந்தோஷ் அந்த எழுத்துக்களை படித்து காட்டினான்.

மேலும் ஏதேதோ எழுத்துக்கள் நீண்டுக்கொண்டே போனது.

'ஓ மை காட்...' என்று அந்த எழுத்துக்களை பார்த்துக் கொண்டிருந்த தாஸ் வாயைப் பிளந்தான்.

'என்ன தாஸ்... என்னாச்சு..?' என்று லிஷா கேட்க...

'லிஷா, யு நோ வாட்... இதெல்லாம், தழிழ் காலசாஸ்திரப்படி இருக்கிற டைம் யூனிட்ஸ்...' என்று கூறி அதை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

'இதெல்லாம் எதுக்கு பாஸ் இதுல போட்டிருக்கு..?'

'இது எல்லாத்தையும் பேஸ் பண்ணி, அந்த மூடியில கோ-ஆர்டினேட்ஸ் செட் பண்ணா, எந்த காலத்துக்கும் போயிட்டு வரலாம்..' என்று தாஸ் கூற...

'அப்படியா..' என்று சந்தோஷும் இப்போது ஆர்வமாக அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்க...

தாஸ், சந்தோஷை திரும்பி பார்த்தபடி, 'அப்படித்தான் நினைக்கிறேன்..' என்று தீர்க்கமாக கூறினான்.

குணா இதுவரை மூவரும் பேசிக்கொண்டிருப்பதை வாயைப்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

'எக்ஸ்யூஸ்மி..? நீங்கள்லாம் என்ன பேசிட்டிருக்கீங்கன்னு எனக்கு புரியல..?' என்று கூற மூவரும் அவனை திரும்பி பார்க்கின்றனர்.

அவன் தயக்கத்துடன், 'சாரி, என்னனென்னவோ சொல்றீங்க... எனக்கும் இன்னமும், அந்த கிணத்துல குதிச்சதும், எப்படி பாம்பேவுக்கு திரும்பி வந்தேன்னு தெரியல..? ஏதோ விளக்கம் சொல்றதா சொன்னீங்க..?' என்று தயக்கமாய் கேட்க... தாஸ், தனது கடிகாரத்தை பார்த்தான்... பிறகு அவனை நெருங்கி வந்து...

'குணா, உங்களுக்கு பசிக்குதா..?' என்று கேட்க...

ஆமாம் என்று தலையாட்டினான்.

'அப்ப வாங்க... சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்..' என்று கூற... அங்கிருந்து அனைவரும் எழுந்தனர்... லிஷா அந்த ஓவியத்தை திரும்பி திரும்பி பார்த்தபடி, நடந்து சென்றாள்...

------------------------------------

தாஸின், ஆஃபீஸில், 10 பேர் அமர்ந்து சாப்பிடும்படி ஜன்னலோர டைனிங் ஹால் இருந்தது. அதில், இவர்கள் நால்வரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தாஸ் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

'மிஸ்டர் குணா... அந்த கிணறு, ஒரு டைம் மெஷின்..?' என்று கூற, அவன் சாப்பிடுவதை நிறுத்தி தாஸையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சுதாரித்துக் கொண்டு...

'என்ன தாஸ்... இதையெல்லாம் நம்புறீங்களா..?' என்று நக்கலாக கேட்க...

'பின்ன? எப்படி நீங்க 23ஆம் தேதியிலருந்து, 25ஆம் தேதிக்கு வந்து பாம்பே ஹோட்டல் ரூம்ல இருந்தீங்க..' என்று சந்தோஷ் குணாவை கேட்க...

'அது... நான் ஏதோ சுரங்கம் வழியா வெளிய வந்து விழுந்திருப்பேன்னு நினைச்சேன்... அப்ப யாராவது என்னை காப்பாத்தி கொண்டு போய் ஹோட்டல்ல படுக்க வச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்'

'நல்ல வச்சிருப்பாங்க... இருக்கிறதை புடுங்கிக்கிட்டு, துரத்திவிட்டிருப்பாங்க.. நீங்க பாம்பேல, ஒவ்வொருத்தரையா பார்த்து, சார்.. நான் சென்னையிலருந்து வந்தேன், என் பர்ஸ் பொருள் எல்லாம் காணாம போயிடுச்சி, ஒரு 500 ருபீஸ் கொடுத்தீங்கன்னா திரும்பி போயிடுவேன்-னு கெஞ்சிக்கிட்டு சுத்தியிருப்பீங்க..' என்று சந்தோஷ் குணாவை நக்கலடிக்க

'சந்தோஷ்..?' என்று தாஸ் அவனை கண்டித்தான்.

குணா, சந்தோஷை முறைத்துக் கொண்டிருக்க... தாஸ் அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று யோசித்தவன், சட்டென்று ஒரு யோசனையுடன் தொடர்ந்தான்

'குணா, நீங்களும் நானும் ட்ரெயின்ல முத முதல்ல சந்திச்சிக்கிட்டது 'பாயிண்ட்-A'ன்னு வச்சிக்குங்க..' என்று கூறி, ஒரு கண்ணாடி க்ளாஸை எடுத்து முன்வைத்தான்.

'நீங்களும் நானும், அந்த கிணத்துல இறங்கினது 'பாயிண்ட்-B'... இப்ப நாம இருக்கிறது 'பாயிண்ட்-C'... இப்ப, நான் சொல்றதை தெளிவா கவனிங்க..' என்று 3 டம்ளர்களை A B C என்று வரிசையாக அடுக்கியபடி, ஒரு ஸ்பூனை எடுத்து அந்த க்ளாசுகளுக்கிடையில் நுழைத்தபடி விவரித்தான்.

'நான் அந்த கிணத்துல இறங்கி, B-க்கும், A-க்கும் முன்னாடி வந்து சேர்ந்தேன்' என்று ஒரு ஸ்பூனை A டம்ளருக்கு அப்பால் வைத்தான்.

'நீங்க அந்த கிணத்துல இறங்கி B-க்கும், C-க்கும் நடுவுல வந்து சேர்ந்திருக்கீங்க...' என்று இன்னொரு ஸ்பூனை எடுத்து, B-க்கும் C-க்கும் இடையில் வைத்தான்.

'இப்ப புரியுதா..?' என்று கேட்க, குணா தாஸை உற்றுப் பார்த்து...

'புரியிற மாதிரி இருக்கு...' என்று சற்று யோசித்து, மீண்டும் ஒரு கேள்வி எழுந்தவனாய், 'அப்ப என் சூட்கேஸ், மொபைல் எல்லாம் எப்படி பாம்பேல ஹோட்டல் ரூமுக்கு வந்தது?' என்று கேட்டான்.

'நான் பாயிண்ட்-Aக்கு வந்துட்டதால, எனக்கு பாயிண்ட்-Bல நடக்கப்போற விஷயம் தெரிஞ்சுபோச்சு, அதாவது, நாம ட்ரெயினை மிஸ் பண்ணிட்டு காட்டுக்குள்ள அலையப்போறோம்னு தெரிஞ்சு போச்சு, அது நடக்கக்கூடாதுன்னு நினைச்ச நான், அடுத்த ஸ்டேஷன்லியே இறங்கிட்டேன். அதனால, அந்த சம்பவம் நடக்கலை... பாயிண்ட்-A-ல ட்ரெயின்ல இருந்த குணாவுக்கு இது  எதுவுமே தெரியாது. அவர் வழக்கம்போல, ஆஃபீஸ் விஷயமா, பாம்பேவுக்கு போய், ரூம் போட்டுக்கிட்டு, க்ளையண்ட்-ஐ சந்திக்கிற நினைப்புல இருந்திருப்பாரு... அப்பதான், நீங்க அந்த இடத்துக்கு டைம் ட்ராவல்-ல திரும்பி வந்தீங்க..' என்று கஷ்டப்பட்டு நடந்ததை கூற முயல...

குணா மீண்டும், 'அப்ப அந்த குணா எங்கே..?' என்று கேட்க...

தாஸ் சிரித்தபடி, 'குணா டபுள் ஆக்ஷ்ன்லாம் கிடையாதுங்க... டைம் ட்ராவல் ஆகி திரும்பி வந்ததும், அந்த குணா, ரீப்ளேஸ் ஆகி நீங்க அவர் இடத்துக்கு வந்துடுவீங்க...'

'அப்போன்னா, நீங்க பாயிண்ட்-Aக்கு திரும்பி வந்து ட்ரெயின் பர்த்-ல படுக்கிறதுக்கு முன்னாடி, அங்கே ஏற்கனவே ஒரு தாஸ் படுத்துக்கிட்டு இருந்திருப்பாரு இல்லியா..?' என்று குணா கேட்க...

'பரவாயில்லியே... நீங்க புரிஞ்சிக்கிட்டீங்க...' என்று கூறி தாஸ் மீண்டும் சாப்பிட துவங்கினான்.

'எனக்கு தெரிஞ்சு உலகத்துலியே டைம் ட்ராவல் பண்ணது நீங்க ரெண்டு பேருதான்னு நினைக்கிறேன்..' என்று லிஷா கூற சந்தோஷ் மறுத்தான்

'ஏன், தெலுகு ஹீரோ பாலகிருஷ்ணா கூடதான் டைம் ட்ராவல் பண்ணியிருக்காரு..'

'எப்போ..?'

'ஆதித்யா 369-ன்னு ஒரு தெலுகு படத்துல... சூப்பர் படம் அது..'

'என்ன ஜோக்கா... நான் நிஜ லைஃப்ல சொல்லிக்கிட்டிருக்கேன்டா..' என்று லிஷா அவனை செல்லமாக திட்டினாள்.

'நிஜத்துலயும், டைம் ட்ராவல் பண்ண ஒரு ஆள் இருக்காரு லிஷா..' என்று தாஸ் கூற, மூவரும் அவனை ஆவலோடு பார்த்தார்கள்

'அவர் பேரு ஜான் டைட்டர் (John Titor)..'

'யாரவரு... உங்களுக்கு தெரிஞ்சவரா..?' என்று சந்தோஷ் கிண்டலடிக்க, தாஸ் அவனை பார்த்தபடி தொடர்ந்தான்.

'2036-ஆம் ஆண்டுலருந்து வந்திருக்கிறதா இவர் சொல்லிகிறாரு.. இங்க வந்ததும், அவரோட டைம் ட்ராவல் மெஷின் ரிப்பேர் ஆயிடுச்சாம்... அதனால, திரும்பி போறதுக்கு ரொம்புவம் சிரமப்பட்டுக்கிட்டு இருக்கிறதா சொல்றாரு... எந்நேரமும் நான் திரும்பி போயிடுவேன்னு உறுதியளிக்கிறாரு... இண்டர்நெட்டுல ரொம்ப ஃபேமஸ்... Google-ல அவரைப்பத்தி தேடிப்பாருங்க ஏகப்பட்ட கதையிருக்கு'

'உண்மையா இருக்குமா பாஸ்..?'

'தெரியல... ஆனா, அவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்காங்க, ஏகப்பட்ட ஸ்பான்ஸர்ஸ் இருக்காங்க... பயங்கர பப்ளிசிட்டி... அவர் பேரை வச்சி படமெல்லாம் எடுக்க போறாங்களாம்...' என்று தாஸ் கூற, மூவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

'அப்போ உங்க ரெண்டு பேர் பத்தியும் இண்டர்நெட்ல போட்டுடலாமா..?' என்று சந்தோஷ் ஆர்வமாக கேட்டான்.

'வேண்டாம் சந்தோஷ்... தயவு செஞ்சி அப்படி எதுவும் பண்ணிடாதே..? இந்த கிணறு பத்தின விஷயத்தை சீக்ரெட்டா மூவ் பண்ணாதான், இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க முடியும். அவசரபட்டு இதை பப்ளிசிட்டி பண்ணிட்டோம்னா... பிரச்சினையாயிடும். இப்போதைக்கு இந்த கோவிலை பத்தி வெளியே எந்த நியூஸும் வரக்கூடாது' என்று தாஸ் கூறுகிறான்.

இதற்குள் அனைவரும் சாப்பிட்டு முடிக்க... அங்கிருந்து எழும்போது தாஸின் மொபைல் ஃபோன் ஒலித்தது..

பழைய பாடல் ரிங்டோன்
ஆண்டவன், உலகத்தின் முதலாளி
அவனிடம் நானொரு தொழிலாளி...


மற்ற மூவரும் எழுந்து கைகழுவ சென்றுவிட, தாஸ் தனது மொபைல் டிஸ்ப்ளேவில் "OLD FRIEND" என்று வருவதைப் பார்த்து, முகம் மலர்ந்தபடி.. ஃபோனை எடுத்தான்.

'தாத்த்த்தா.. எப்படி இருக்கீங்க..?'

'நல்லாயிருக்கேம்ப்பா... நீதான் இந்த தாத்தாவை மறந்துட்டே...'

'உங்களை மறப்பேனா தாத்தா..? நீங்கதான் என் இன்ஸ்பிரேஷன்..'

'சந்தோஷம்ப்பா... உன் அடுத்த புக் எப்போ..?'

'அடுத்து இனிமேதான் எழுதனும் தாத்தா..'

'எழுதினதும், எனக்குதான் ஃபர்ஸ்ட் கொடுக்கணும்... மறந்துடாதே...'

'கண்டிப்பா தாத்தா... நீங்கதான் என் ஃபர்ஸ்ட்டு ரீடர்..' என்று கூற, சந்தோஷ் கைகழுவிவிட்டு அங்கு வந்தான்.

தாஸ் ஃபோனில் தொடர்ந்தான்...

'தாத்தா, நானே உங்களுக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன்... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...' என்று கூற

'என்ன விஷயம்ப்பா..?'

'நேர்ல வந்து சொல்றேனே..?'

'முதல்ல கிளம்பி வா... உன்னை பாத்து ரொம்ப நாளாச்சுப்பா..?' என்று அந்த கிழவர் கெஞ்சுகிறார்

'சீக்கிரமா வரப்பாக்குறேன் தாத்தா... நிறைய பேச வேண்டியிருக்கு...' என்று தாஸ் கூற

'சரிப்பா... நீ வேலையப்பாரு... நான் அப்புறமா ஃபோன் பண்றேன்... வச்சிடட்டுமா..?'

'சரி தாத்தா..' என்று ஃபோனை கட் செய்தான்

சந்தோஷ், ஆர்வமாக டிஷ்யூவால் கைதுடைத்தபடி... 'யாரு பாஸ்...?'

'என் தாத்தா, சின்ன வயசுலேர்ந்து என்னை இவருதான் வளத்தாரு... யு ஷூட் மீட் ஹிம்... பயங்கர நாலெட்ஜ்... எந்த டாபிக் பத்தி கேட்டாலும், ரொம்ப நேரம் பேசுவாரு... அவ்வளவு தகவல்கள் கையில இருக்கும். எனக்கென்னமோ இந்த கேணிவனத்தை பத்தி இவருகிட்ட சொன்னா, ஏதாவது தகவல் தெரிய வரும்னு நினைக்கிறேன்.' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, லிஷா ஓடி வருகிறாள்...

'தாஸ்...' என்று ஓடி வந்து மூச்சு வாங்கியபடி நின்றவள், தாஸையும் சந்தோஷையும் பதற்றத்துடன் பார்த்தபடி...

'குணாவை காணோம்... எங்கே தேடியும் கிடைக்கல...' என்று அவள் கூற... சந்தோஷூம், தாஸூம் லிஷாவை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்...

(தொடரும்...)


Signature

25 comments:

அருண் பிரசாத் said...

first

Ramesh said...

பல்ஸ் எகிறவைக்கிறீங்களே பாஸ்..சூப்பர்ங்க....

Unknown said...

நல்லாயிருக்குங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணுங்க..

அருண் பிரசாத் said...

உங்க பதிவுக்கு வெயிட் பண்ணிட்டே இருக்கறேன், முதல்ல நான் தான் படிக்கனும்னு. தீவிர விசிறியாகிட்டேன். (வேர்த்தா சொல்லுங்க...)

அடுத்த பதிவு திங்கள் இல்லை ஞாயிறு இரவு தானே! ;)

அனு said...

ம்ம்ம்.. செம த்ரில்லிங்கா போய்ட்டு இருக்குது... பேசாம நீங்க எல்லா பார்ட்டையும் போட்டதுக்கு அப்புறம் படிச்சிருக்கலாம்.. இப்போ, ஒரே சஸ்பென்ஸா இருக்குது...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Oh my god... எத்தனை details எத்தனை facts ... நெறைய homework பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது... ரெம்ப நல்ல போகுது கதை... அந்த குணா என்ன மறுபடியும் டைம் travel பண்ண போய்ட்டாரோ... I've seen lots of timetravel movies in english and read lots of novels too... but this one is so peculiar and connected with real facts too...very interesting... great job

VampireVaz said...

திருப்பங்கள் நிறைந்த மலைப்பாதை போல செல்கிறது கதை. Bravo!

வேங்கை said...

ஹரிஷ் ரொம்ப அருமை

அதும் A B C விளக்கம் சூப்பரோ சூப்பர்

கொஞ்சம் Logic கேள்விகள் இருந்தாலும் இந்த பாகம் - வேகம் !!!

நல்ல வேளை ஹரிஷ், நண்பனோட கல்யாணத்துக்கு வெளியூர் கிளம்பிகிட்டு இருந்தேன் இப்போ பாக்காம இருந்தா திங்கள் தான் படிச்சு இருப்பேன் ! அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க .....

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
காட்சியில் ரசிக்கவும் வைத்து கற்பனையில் ருசிக்கவும் வைக்கிறீர் நண்பரே விரைவில் முடிக்காமல் விரைந்து சென்ருக்கொண்டிருந்தால் இன்னும் இனிமையாக இருக்கும்
நான் உங்கள் எழுத்துக்களைப் பார்த்துவிட்டு என் வாழ்வில் நடந்த சில சுவாரஷ்யமான உண்மைச் சம்பவங்களை எழுத துணிந்துள்ளேன் தங்கள் ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை வருத்தமாக உள்ளது நண்பரே........

http://marumlogam.blogspot.com/2010_08_01_archive.html

Madhavan Srinivasagopalan said...

ஆஹா.. நல்லா போகுது..
நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது..
தாஸ் 'பின்னோக்கி' போனதுனால, அவரால 'குணா' வ பேரு சொல்லி கூப்புட முடிஞ்சுது.,. அதே சமயத்துல, 'குணா' க்கு 'தாசைத்' தெரியல.. ..

இருந்தாலும்.. கொஞ்சம் மேல படிச்சுட்டு, சிந்திச்சி பாக்குறேன், ஏதாவது இடருதாணு..

தொடருங்கள்..

DREAMER said...

வணக்கம் அருண்பிரசாத்,
ஆஹா, இனிமே எனக்கு வேர்க்கவே வேர்க்காது..! அடுத்த பதிவு, அதிகபட்சம் திங்களுக்குள் போட்டுவிடுகிறேன்... அதுவரை காத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாங்க பிரியமுடன் ரமேஷ்,
தொடர்ந்து படித்து பல்ஸ் ரேட் கூட்டிக் கொள்வதற்கு ரொம்ப நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

வாங்க பதிவுலகில் பாபு,
அடுத்த பாகம், திங்களுக்குள் கண்டிப்பாக போட்டுவிடுகிறேன்...

வாங்க அனு,
எல்லா பாகமும் எழுதிட்டு, டெய்லி ஒண்ணு என்கிற விகிதத்தில் போட்டிருந்தாலும், நன்றாகத்தான் இருந்திருக்கும். என்ன செய்ய! முதல் முறையா தொடர தொடர எழுதிப் பாக்கலாமேன்னு நினைச்சி ஆர்ம்பிச்சுட்டேன்! தொடர்ந்து வந்து படித்து ஆதரவு கொடுப்பதற்கு மிக்க நன்றி!

DREAMER said...

வாங்க அப்பாவி தங்கமணி,
ஸ்கூல் படிக்கும்போது கூட இவ்வளவு homework பண்ணியிருக்கமாட்டேன்னு நினைக்கிறேங்க! வரவிருக்கும் பாகங்களில், இன்னும் நிறைய தகவல் தேவைபடுது... அதுதான் அடுத்த எபிசோடுக்கு தாமதம்..! முடிந்தவரை சீக்கிரமா ஒவ்வொரு பாகத்தையும் முடிக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.
//I've seen lots of timetravel movies in english and read lots of novels too... but this one is so peculiar and connected with real facts too...very interesting... great job //
அவார்டு கிடைத்ததுபோல் இருக்கிறது.! மிக்க நன்றிங்க!

வாங்க VampireVaz,
கதையின் நடையை 'மலைப்பாதை பயணம்' என்று வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! ThanX Bro

வாங்க வேங்கை,
பாகம் 08-ஐப் படித்துவிட்டு, உங்கள் நண்பரின் கல்யாணத்திற்கு கிளம்பியதால், உங்க நண்பரின் கல்யாணத்திற்கு வாழ்த்துக்களை என் சார்பாகவும், நம்ம தாஸ், குணா, சந்தோஷ், லிஷா சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிடுங்கள் (கதைக்குள்ள ட்ராவலாயிட்டேன்!) நீங்கள் திங்களன்று திரும்பி வரும்போது, பாகம்-09-ஐ படிக்கும்படி சீக்கிரம் பதிவிடுகிறேன். தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

DREAMER said...

வாங்க தினேஷ்குமார்,
கதையுடன் நீண்ட நாள் பயணம் செய்ய எனக்கும் ஆசைதான். முடிந்தவரை, நல்ல திருப்பங்களோடு, இன்னும் கதையை வளர்க்க பார்க்கிறேன்! தகவல் சேகரிப்புக்குத்தான் நிறைய நேரம் தேவைப்படுகிறது. தொடர் வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தினேஷ்! உங்கள் வலைப்பதிவில், நீங்கள் எழுதும் உண்மை சம்பவங்கள் 6 பாகத்தையும் ஒரே மூச்சில் படித்து கருத்திட்டிருக்கிறேன். அருமையான நடை, நல்ல முயற்சி, தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறேன்.

வாங்க மாதவன்,
கதை சார்பாக உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இக்கதை முடிவதற்குள் சுவாரஸ்யமாக விடையளிக்க முயற்சிக்கிறேன். தொடர் வருகைக்கும், வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

-
DREAMER

சீமான்கனி said...

ஹரீஷ் ஜி...நகம் கடிக்க பத்து விரல்கள் பத்தவில்லை இவ்வளவு குழப்பமான கதையை தெளிவா புரிய வைக்கிறீங்க...இது உங்களால் மட்டுமே சாத்தியம்...அது சரி...பக்கத்தில் இருந்த குணா எங்கே???

சைவகொத்துப்பரோட்டா said...

உள்ளேன் ஐயா (முதல் பாகத்தில் இருந்து படித்து விட்டு வருகிறேன் ஹரிஷ்)

நாடோடி said...

ந‌ல்ல‌ திரில்லிங் ஹ‌ரீஸ்... ந‌ல்லா போகுது தொட‌ருங்க‌ள்.

சைவகொத்துப்பரோட்டா said...

முதல் பாகத்தில் இருந்து அனைத்தையும் படித்து விட்டேன், சுவராசியமாய்
செல்கிறது!! நன்றி ஹரீஷ்.

Janaki. said...

SUPERB VERY INTERSTING I AM EAGRLY WAITING FOR THE NEXT EPISODE

DREAMER said...

வாங்க சீமான்கனி,
கடிக்கப்பட்ட உங்கள் விரல் நகங்கள் மீண்டும் வளர்வதற்குள் அடுத்த பாகம் போட்டுவிடுகிறேன். தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி!

வாங்க சைவகொத்துப்பரோட்டா,
நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை புரிந்துள்ளீர்கள். மிக்க நன்றி!

வாங்க நாடோடிநண்பரே,
தொடர்ந்து படித்து ஆதரவு தருவதற்கு நன்றி!

Welcome Jana,
ThanX for your visit & interest... I'll publish Next Episode on Monday..!

-
DREAMER

எஸ்.கே said...

ரொம்ப சுவாரசியமாக போகுது சார்! அடுத்த பகுதி படிக்கணும்னு ஆர்வத்தை தூண்டுது! ரொம்ப நன்றி சார்!

DREAMER said...

வாங்க எஸ்.கே.,
கருத்து பகிர்ந்து கொண்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

-
DREAMER

Parthasarathy said...

story is going nice.eagerly expecting next part.

செம்மொழியான் said...

என்ன ஹரீஸ் நீங்க ஜான் டைட்டர் ரோட காலத்துக்கே போயி டைம் மெசின பத்தி ஆராச்சி பண்ணிட்டு வந்திகலா....
கதை நல்லா விருவிருப்பா போகுது.....
வழ்த்துக்கள்

Cinema Paiyyan said...

கதை அருமை நண்பரே... தொடர்ந்து படித்து வருகிறேன், இன்று தான் என் கருத்தை பதிவு செய்கிறேன்... அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்

சமுத்ரா said...

You are a good writer..keep it up

Popular Posts