Saturday, November 20, 2010

"கேணிவனம்" - பாகம் 29 - [தொடர்கதை]



இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
பாகம் - 11          பாகம் - 12         பாகம் - 13          பாகம் - 14         பாகம் - 15  
பாகம் - 16        பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20
பாகம் - 21          பாகம் - 22        பாகம் - 23          பாகம்-24          பாகம்-25
பாகம் - 26          பாகம்-27          பாகம்-28

--------------------------------------------------------------------

பாகம் - 29

2ஆம் காலக்கோட்டில் நடந்துக் கொண்டிருப்பது...

இதுவரை தாஸின் லேப்டாப் திரையில், ஹேண்டிகேமிராவில் பதிவான 12ஆம் நூற்றாண்டு காட்சிகளையும், 1ஆம் காலக்கட்டத்தில் நடந்ததாக தாஸ் கூறியதையும் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்த லிஷாவும், சந்தோஷூம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

'பாஸ்... என்னென்னவோ நடந்திருக்கு..! எங்க உயிரையே காப்பாத்தியிருக்கீங்க..! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்ன தெரியல பாஸ்..!' என்று சந்தோஷ் செண்டிமெண்டாக ஆரம்பித்தான்.

'நன்றி சொல்ல வேண்டியதெல்லாம் அந்த சித்தருக்குத்தான். இப்படி ஒரு கேணி இருக்கிறதாலதான் இதெல்லாம் சாத்தியமாச்சு.!' என்று தாஸ் சித்தரை நினைவுக்கூர்ந்தான்.

'ஆமா தாஸ், இந்த கேணிவனம் உண்மையிலேயே ஒரு டைம் ட்ரெஷர்-தான்' என்று லிஷாவும் கூறினாள்.

'பாஸ், இப்போதான் உங்ககிட்ட கேணிவனம் இருக்கிறதுக்கான எல்லா வகையான ஆதாரமும் இருக்கே..! வீடியோ கேமிராவுல 12ஆம் நூற்றாண்டு காட்சிகளும் பிடிச்சிட்டு வந்துட்டீங்க..! இதையெல்லாம் வச்சி இனி கேணிவனத்தை கவர்மெண்ட்கிட்ட ப்ரூஃப்-ஓட சொல்லிடலாமே..! உங்க பேரு எங்கேயோ போயிடுமே பாஸ்..?' என்று கூற

தாஸ் பேசாமலிருந்தான். அவன் மௌனத்தை கண்ட லிஷாவும் சந்தோஷூக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள்

'தாஸ், சேண்டி சொல்றதுதான் கரெக்ட்-னு எனக்கும் தோணுது..! இதுக்கு மேலயும் இந்த விஷயத்தை மறைச்சி வைக்கணுமா, இந்த விஷயம் வெட்ட வெளிச்சமாக வேண்டாம்னு நினைச்சா, டாப் சீக்ரெட்-ஆ வேணும்னா மிலிட்டரியில கூட சொல்ல்லாமே..!' என்று தன் பங்குக்கு கூறினாள்.

'இல்ல லிஷா, அந்த சித்தர் இந்த கேணிவனத்தை உருவாக்குன நோக்கத்தை கேட்டதுக்கப்புறம் இந்த விஷயத்தை வெளியே சொல்லணுமான்னு தோணுது..?'

'ஏன்..?'

'அரசர்களுக்கு மத்தியில போர் வராம நிறுத்துறதுக்கு அந்த சித்தர் உருவாக்கின இந்த கேணிவனத்தை பத்தி இப்போ நாம வெளியே சொன்னா, வருங்காலத்துல இதை சொந்தமாக்கிக்கிறதுக்கு, நாடுகளுக்கு மத்தியிலியே ஒரு போர் வந்தாலும் வரலாம்...'

'என்ன பாஸ் சொல்றீங்க..?'

'ஆமா, கஜினி முகம்மது நம்ம நாட்டுக்குள்ள  படையெடுத்தது எதுக்கு, நாட்டை ஆளுறதுக்கா..? சோமசுந்தரேஸவரர் கோவில் பொக்கிஷத்தை ஆக்கிரமிக்கிறதுக்குத்தானே..? ஈஸ்ட் இண்டியா கம்பெனிக்காரங்க நம்ம நாட்டு வளத்தைப் வியாபாரத்து மூலமா பாத்து வியந்துதான் நாட்டையே ஆக்கிரமிச்சாங்க... இப்படி பல உதாரணமிருக்கே..? இந்த கேணிவனம் அப்படி ஒரு உதாரணமாகிடக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்'

'சரி தாஸ், இந்த கேணிவனத்தைப் பத்தி யாருக்கும் தெரியாமலே போய், பாழடைஞ்சி காடுமண்டி கிடக்குறதுல என்ன லாபம்...' என்று லிஷா கேட்டாள்

அதுவும் சரிதான் என்று யோசித்த தாஸ், சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தான்.

'இரகசியத்தை இரகசியமா வைச்சு பாதுகாக்குறதுதான் ரொம்ப கஷ்டம். அதையே பகிரங்கப்படுத்திட்டா, யாருக்கும் அது மேல கவனம் திரும்பாது...' என்றான்

'பகிரங்கப்படுத்துறதா..?'

'எப்படி..?' என்று லிஷாவும் சந்தோஷூம் மாறி மாறி கேட்டனர்.

'இந்த கேணிவனத்தைப் பத்தின விஷயங்களை ஒரு நாவலா எழுதப்போறேன்..'

'பாஸ், எல்லாருக்கும் தெரிஞ்சிடுமே..?'

'எல்லாருக்கும் ஒரு சுவாரஸ்யமான புனைவுக் கதையாத்தான் தெரியும். அது ரொம்ப ரொம்ப சேஃப்... இது உண்மையா இருக்கிற ஒரு விஷயத்தை பத்தின கதைன்னு கெஸ் பண்ண மாட்டாங்க... அப்படி உண்மையா இருந்தா ஏன் இப்படி பகிரங்கமா எழுதப்போறான்-னுதான் நினைக்கத் தோணும். அதே நேரம், அந்த கதையில கேணிவனம் பத்தின உண்மை காலாகாலத்துக்கும் ஒரு அச்சிடப்பட்ட ஆதாரமா கதைவடிவில இருக்கும்... எப்போ இந்த விஷயத்தை வெளியில கொண்டு போகணுமோ அப்போ கொண்டு போயிடலாம்.' என்று தாஸ் கூற, லிஷாவும் சந்தோஷூம் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

'தாஸ், இது சேஃபா..?' என்று லிஷா சந்தேகத்துடன் மெல்லிய குரலில் கேட்டாள்.

'இதுதான் ரொம்ப சேஃப் லிஷா...! இந்த கேணிவனத்தை பத்தின ஆதாரங்களை நம்மகிட்டயே வச்சிருந்தா, சக்கரவர்த்தி, ப்ரொஃபஸர் மாதிரி ஆட்களால என்னிக்கும் நம்ம உயிருக்கு ஆபத்து வரலாம், அப்படியில்லாம இந்த ஆதாரங்களையெல்லாம் எங்கேயாவது சேஃபா ஒளிச்சு வச்சுட்டு, அந்த ஆதாரங்கள் இருக்கிற இடத்தையும் பூடகமா இந்த நாவலோட சேர்த்து இழைச்சுடறேன். வாசகர்களை பொறுத்தவரைக்கும் கேணிவனம் ஒரு சுவாரஸ்யமான நாவல்... ஆனா, நம்மளை பொறுத்த வரைக்கும், அந்த புத்தகம், கேணிவனத்தை ரீச் பண்றதுக்கான ஒரு எழுத்துவடிவிலான மேப்' என்று கூறினான்.

இப்போது இருவருக்கும் இந்த யோசனை புரிந்தும் பிடித்தும் போனது.

'ஓகே பாஸ்... சவுண்ட்ஸ் குட்..' என்று சந்தோஷ் தன் பங்கிற்கு வாக்களித்தான்.

'சேஃபான ரூட்-னுதான் நினைக்கிறேன்...' என்று லிஷாவும் இந்த யோசனைக்கு சம்மதித்தாள்.

சந்தோஷ் கடிகாரம் பார்த்தான்.

'லிஷா?! விசிட்டிங் அவர்ஸ் முடியப்போகுது, நாம போயிட்டு நாளைக்கு காலையில வந்துடலாம்.. பாஸ், நாளைக்கு உங்களை டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லியிருக்காங்க... நீங்க இன்னிக்கி நைட் நல்லா ரெஸ்ட் எடுங்க... நாளைக்கு நாங்க வந்து உங்களை கூட்டிட்டு போறோம்...'

'ஓகே..! சந்தோஷ் ஒரு நிமிஷம்..? நாளைக்கு வரும்போது, இந்த சித்தரோட சில ஃபோட்டோஸ் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஒரு ப்ளோ-அப் ப்ரிண்ட்-அவுட் எடுத்துட்டு வந்துடு...!' என்று தனது லேப்டாப்-லிருந்து மெமரி கார்டு-ஐ கழட்டிக் கொடுத்தான்.

'அப்படியே என் செல்ஃபோனுக்கு ஒரு பேட்டரியும் வாங்கிட்டு வந்துடு சந்தோஷ்..?' என்று தாஸ் சந்தோஷிடம் கேட்டுக்கொள்ள...

'ஓகே...' என்று கூறி இருவரும் விடை பெற்று சென்றனர்.

--------------------------------

மாலை 7.45...

அந்த ஆஸ்பத்திரி அறையிலிருக்கும் பால்கணியில் நாற்காலி போட்டு தனது லேப்டாப்புடன் தாஸ் அமர்ந்து கொண்டான்.

சென்னையின் இரவு நேர ட்ராஃபிக் லைட்டிங், அந்த பால்கணி வழியாக பார்க்க மிக அழகாக காட்சியளித்தது...
சூழலை சில நிமிடங்கள் ரசித்துவிட்டு, கண்மூடி நடந்து முடிந்த அத்தனையையும் நினைத்துப் பார்த்தான்...

கண்களை திறந்தான்.

தனது லேப்டாப்பில் கேணிவனம் கதையை தட்டச்ச ஆரம்பித்தான்.

[கேணிவனம் - பாகம் - 01

முன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிருந்தது. மணி முற்பகல் 11 என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு மேகமூட்டத்துடன் அந்த காடு மாலைவேளை போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது.]

--------------------------------------------------------

அன்றிரவு... சந்தோஷ் தனது அறையில், அந்த சித்தரின் ஃபோட்டோவை ஸ்கரீன்ஷாட் எடுப்பதற்காக தாஸ் கொடுத்த மெமரி கார்டில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்று உலகில் எத்தனையோ பேர், இயற்கை காட்சிகளை படம்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னதான் முயன்றாலும், இப்படி காலத்தில் பின்னோக்கி சென்று 1000 வருடத்திற்கு முந்தைய இயற்கை காட்சிகளை படம்பிடிக்க முடியுமா..? ஆனால், இதோ, இன்று அவன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அப்படிப்பட்டவைதான். என்ன ஒரே வருத்தம், இதை காட்சிகளாக மட்டுமே பார்க்க முடிந்தது... நேரில் சென்று பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், அந்த வாய்ப்புதான் கிட்டாமல் போய்விட்டதே! என்ற ஆசையும் வருத்தமும் சந்தோஷூக்குள் எழுந்தது...

வேண்டாம் இப்படி ஆசைப்பட வேண்டாம். இது ஆசையல்ல பேராசை...

ஏற்கனவே பேராசையால் பைத்தியமான குணாவின் நினைவு  வந்தது... குணாவை எண்ணி சந்தோஷ் வருந்தவும் செய்தான். காலம் அவனை தேற்றும் என்று எண்ணிக் கொண்டான். இனி அந்த கேணிவனத்தை பற்றி ஆசைப்படக்கூடாது என்று முடிவெடுத்தான்.

இருப்பினும், இந்த வீடியோ கேணிவனம் இருப்பதற்கான வலுவான ஆதாரம். இவ்வளவு அரிய விஷயத்தை மிகவும் சர்வ சாதாரணமாக தன்னை நம்பி கையில் கொடுத்திருக்கும் தாஸ்-ஐ எண்ணி சந்தோஷ் வியந்து கொண்டிருந்தான்.

இதை கொண்டு போய் யாரிடமாவது நாம் கொடுத்தால் என்னவாகும்..? அவரவர்கள் எண்ணத்திற்கேற்ப இதை உபயோகித்து கொள்வார்கள்.

உதாரணத்திற்கு, இதை சக்கரவர்த்தியிடம் கொண்டு போய் கொடுத்தால், அவன் ப்ரொஃபஸர் கணேஷ்ராமையும் தன்னையும் கொன்றுவிட்டு தனியாளாக கேணிவனத்தை மீண்டும் தேட ஆரம்பித்திருப்பான்...

ப்ரொஃபஸர் கணேஷ்ராமிடமே கொடுத்தால், அவர் இதைவைத்து வரலாற்றில் தன் பெயரை இடம்பெறும்படி செய்து கொள்வார்... ஆனால் தனது முதுமையினால் தனியாளாக இதை தேட முடியாமல் மீண்டும் சக்கரவர்த்தியின் உதவியை நாடியிருப்பார்.

இன்ஸ்பெக்டர் வாசுவிடம் கொடுத்தால், அவர் இதுபோன்ற சூப்பர்நேச்சுரல் விஷயங்கள் உண்மையா என்று சோதனை செய்து பார்த்து தனது தர்க்க ரீதியான நம்பிக்கைகளை தெளிந்து கொண்டிருப்பார். ஆனால் அவரும் அதன்பிறகு என்னவாக வேண்டுமானாலும் மாறலாம்.

இப்படி எதுவும் செய்யாமல், இதையே திரும்ப கொண்டு போய் தாஸிடம் கொடுத்தால்... அவர்தான் அந்த சித்தரின் எண்ணத்தை புரிந்துக் கொண்டு இதை பத்திரப்படுத்தி வைப்பார்.

லிஷா சொன்னதுபோல் இது ஒரு டைம் ட்ரெஷர்... அதனால், தாஸ் எடுத்த முடிவுதான் சரியானது...

பொக்கிஷத்தின் தன்மை அதை செலவழிப்பதில் இல்லை...! பாதுகாத்து வைப்பதில்தான் இருக்கிறது.

சந்தோஷ் மனதிற்குள் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, அவன் கண்களிரண்டும் ஆச்சர்யத்தில் விரிந்து அந்த வீடியோ காட்சிகளை கண்டுகொண்டிருந்தது...

அந்த காட்சிகளிலிருந்து, அந்த சித்தரின் வெவ்வேறு கோணத்தில் இருக்கும் ஃபோட்டோக்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தெரிவு செய்துக் கொண்டிருந்தான்.

வீடியோவில்...

சித்தரின் பிரேதத்தை தாஸ் கோவில் கூரையிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான். இருட்டில் ஷூட் செய்ய உதவும் இன்ஃப்ரா ரெட் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டிருந்த காட்சிகளவை. அதில் தாஸ் ஒரு கையில் ஹேண்டிகேமிராவுடன் மறுகையில் சித்தரின் பிரதேத்தை எடுத்துக் கொண்டு வெளியேற போராடிக் கொண்டிருக்க... சித்தரின் உடம்பிலிருந்த ஒரு ஓவியம் கேமிராவில் பதிவாகியிருந்தது... அது சந்தோஷின் கண்களை கவர்ந்தது...

அதை மட்டும் ஃப்ரீஸ் செய்து பார்த்தான்.

அது ஓவியமல்ல... ஒரு பாடல்... என்று தெரிந்தது... அதை படிக்க முயற்சி செய்தான். கொஞ்சம் சிரமமாக இருந்தது... அந்த ஃபோட்டோவை மட்டும் ஃபோடோஷாப்பில் ஏற்றி, அந்த பாடலை படிக்குமாறு ப்ராஸஸ் செய்தான். 

ஃபோட்டோஷாப் ஜாலத்தினால், அந்த பாடலை இப்போது தெளிவாக படிக்க முடிந்தது...

அந்த பாடல், தாஸூக்கு சொல்லப்பட்ட ஏதோ ஒரு ரகசிய தகவல் போல் இருந்தது... உடனே தனது செல்ஃபோனை எடுத்து தாஸூக்கு டயல் செய்தான்.
The Number you are trying is currently Switched Off... 

'ஸ்விட்ச்டு ஆஃப்' செய்யப்பட்டிருப்பதாக செய்தி ஒலித்தது...

தாஸின் செல்ஃபோனில்தான் பேட்டரி இல்லையே என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகம் வந்தது...

------------------------------------

அதே 'ஸ்விட்ச்டு ஆஃப்' என்ற இயந்திரக்கன்னியின் ஆபரேட்டர் குரல் கந்தன் கொள்ளை கிராமத்தில், தாஸின் தாத்தா வீட்டிலிருந்த லேண்ட்லைன் ஃபோன் மூலமாக சுசீலாம்மாவின் காதினில் கேட்டுக் கொண்டிருந்தது....

(தொடரும்...)


Signature

27 comments:

க ரா said...

கல்க்கல் பாஸ் :)

Cinema Paiyyan said...

Padichitu comment panrathukula second comment ah poiruche.. anyhow superb as usual.

Anonymous said...

mm ennappa late pannitinga?
its ok hareesh...unga vasagar enra muraiyil vandha kobam....

apram as usual nalla viru viruppa pogudhu kadhai...

unmaya sollunga neenga dhaan dasa?
kenivanam unmaya?
engala koottittu ponga pa!!!
he..he..

-akshu

தினேஷ்குமார் said...

வின் வியக்கும்
வித்தையெல்லாம்
நம் மண்ணில்
புதையுண்டு கிடக்க
புரியாத புதிராய்
புலப்படும் சிலரில்
விதைக்கப்பட்டு
முளைக்கின்றன
முடிவில்லா
முடிவில் தொடரும்
முன் ஜென்ம
நிகழ்கள்.........

Raghu said...

ஹ‌ரீஷ்! முடிய‌ப்போகுதுன்னு நினைச்சேன், ம‌றுப‌டியும் டாப் கிய‌ர்ல‌ எகிறுது! என்ன ம‌னுச‌ன‌ய்யா நீர் ;))

//இந்த கேணிவனத்தைப் பத்தின விஷயங்களை ஒரு நாவலா எழுதப்போறேன்//

இது சூப்ப‌ர், ப்ரில்லிய‌ண்ட் ஹ‌ரீஷ்!

ம‌றுப‌டியும் சொல்றேன். முத‌லில் புத்த‌க‌ வ‌டிவிலும், சீக்கிர‌ம் திரை வ‌டிவிலும் காண‌ ஆர்வ‌மாயிருக்கிறேன்..பார்த்து செய்ங்க‌

ஷக்தி said...

அதே சுவாரஸ்யம்....
வாழ்த்துக்கள்.
அந்த சித்தர்தான் தாஸின் தாத்தாவா?
”//இது உண்மையா இருக்கிற ஒரு விஷயத்தை பத்தின கதைன்னு கெஸ் பண்ண மாட்டாங்க... அப்படி உண்மையா இருந்தா ஏன் இப்படி பகிரங்கமா எழுதப்போறான்-னுதான் நினைக்கத் தோணும்.//”

இதுதான் உங்க பதிலா?

hamaragana said...

அன்புடன் வணக்கம்
பாகம் 29 ..இல்..///தனது ஹேண்டிகேமிராவின் இன்ஃப்ரா ரெட் வெளிச்சத்தை உபயோகித்து தேட, சித்தர் சொன்னதுபோல் உள்ளே இரகசிய அறையும், அதில் சித்தரின் உடம்பும் இருந்தது... மிகுந்த சிரமத்துடன் அவரது உடலை கீழிறக்கினான்அவரது உடலையும், கேணிவனக்கோவிலின் பாழடைந்த தோற்றத்தையும் சுற்றி சுற்றி ஹேண்டிகேமிராவில் பதிவு செய்து கொண்டான். கேமிராவில் "Battery Low" என்று எச்சரிக்கை வந்தது... சிறிது நேரத்தில் கேமிரா பாட்டெரி தீர்ந்து அணைந்து போனது. அதை கீழே வைத்துவிட்டான்/////
பாகம் 28 ..இல்//// சித்தரின் பிரேதத்தை தாஸ் கோவில் கூரையிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான். இருட்டில் ஷூட் செய்ய உதவும் இன்ஃப்ரா ரெட் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டிருந்த காட்சிகளவை. அதில் தாஸ் ஒரு கையில் ஹேண்டிகேமிராவுடன் மறுகையில் சித்தரின் பிரதேத்தை எடுத்துக் கொண்டு வெளியேற போராடிக் கொண்டிருக்க... சித்தரின் உடம்பிலிருந்த ஒரு ஓவியம் கேமிராவில் பதிவாகியிருந்தது... அது சந்தோஷின் கண்களை கவர்ந்தது.///""""".ஒரு கையில் ஹேண்டிகேமிராவுடன் மறுகையில் சித்தரின் பிரதேத்தை எடுத்துக் கொண்டு வெளியேற போராடிக் கொண்டிருக்க... சித்தரின் உடம்பிலிருந்த ஒரு ஓவியம் கேமிராவில்"""" .. இது எப்பிடி சாத்தியப்பட்டது வேறு எந்த காமிராவில்பதிவு செய்தார் ...
ஒரு த்ரில்லிங்கான திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது எப்போது அடுத்த பதிவு வரும் என காக்க வைத்துள்ளீர்கள் அதுவே உங்கள் வெற்றி .. வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

அருமை! அருமை! சுவாரசியத்திற்கு எல்லையே இல்லை! முடியப் போகிறது என்று பார்த்தால் மீண்டும் ஏதோ ஒரு சுவாரசியம்! தொடருங்கள்!
வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

//பொக்கிஷத்தின் தன்மை அதை செலவழிப்பதில் இல்லை...! பாதுகாத்து வைப்பதில்தான் இருக்கிறது.//

இந்த வார்த்தைகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டு காலங்காலமாக இருக்க வேண்டும்.

உங்கள் உழைப்பு நன்றாகத் தெரிகிறது.

all the best.

அனு said...

ஆஹா..முடியப் போகுதுன்னு நினைச்சா இன்னொரு ட்விஸ்ட்டா?

தாத்தா தான் சித்தர்னு next partல சொன்னீங்கன்னா, அவரே ஏன் அவரோட (சித்தரோட) உடலை எடுத்து கேணிவனத்துல போடலை-ன்னு கேட்பேன்..

btw,நீங்க தான் தாஸ்-ஆ? நீங்க சொன்ன க்ளூஸ்-அ வச்சு நாளைக்கே கேணிவனத்தைக் கண்டுபிடிக்க கிளம்புறேன்..

dineshar said...

தெளிவான கதைப்பின்னல் அருமை. நீங்கள் வரப்போவதை அறியாமல் கூழாங்கல் ஒன்று அழுதுக்கொண்டு நிற்க்கிறது அண்ணா.

Viji said...

ஹலோ
போன அதியதுகே கமெண்ட் போடா வேண்டியது.
ஓவவரு அத்தியாயமும் கலக்றீங்க.
என்னகேன்னமோ இந்த அதிதியாயம் படிச்சதும் ராபர்ட் பிரவுன்,illuminati ,rose இதெல்லாம் நாபகம் வருது.அது மாதிரி இருக்கு நீங்க கொண்டுட்டு போறது.
CONGRATS

சைவகொத்துப்பரோட்டா said...

தாஸ் (ஹரீஷ்) என்னையும் கேணி வனத்துக்கு கூட்டிட்டு போங்களேன்.

Unknown said...

ரைட்டு.. கேணிவனத்தை தேடிக்கிட்டு எல்லாரும் கிளம்பிட்டாங்க..

இந்த பாகத்தையும் ரொம்ப அருமையா கொண்டு போயிருக்கீங்க..

Ramesh said...

அருமையா இருக்கு ஹரீஷ்.. முடியப்போகுதுன்னு நினைச்சா.. மறுபடியும் சஸ்பென்ஸ் வைக்கறீங்க..சூப்பர்

Anonymous said...

kalakkal anna! very interesting

பாலாஜி சங்கர் said...

கதைக்குள் கதையா அருமை

பாலாஜி சங்கர் said...

நான் உடனே முதல் பாகம் சென்று பார்த்தேன் அதில்தான் உங்கள் வெற்றி

VampireVaz said...

great going as usual bro!

Unknown said...

Hello hareesh sir!! yenakkum "Hamaragana"vukku vandha adha Doubt dhan! pls clear pannunga... apdiye professor yenna aanarnu ketadhuku lost in timenu sonningalla..avar yendha kaalathukku ponarnum konjam clear pannunga pls...

Anisha Yunus said...

அப்ப இது தாஸ் எழுதின கதையா? நீங்க எழுதலையா? இல்ல நீங்கதான் தாஸா? ஹி ஹி... நல்ல ஐடியா ஹரீஷ்ண்ணா. ஆனால், மறுபடியும் சுசீலாம்மா ஃபோன் பண்ணறாங்கன்னா, தாத்தாக்கு என்ன ஆச்சு?

DREAMER said...

வணக்கம் இராமசாமி கண்ணன்,
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

வணக்கம் கோபி,
கமெண்ட் நம்பர் எதுவாயிருந்தாலும் வாழ்த்து வாழ்த்துதானே..! அதை அன்புடன் பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி!

வணக்கம் Akshu,
கேணிவனம் உண்மையா பொய்யா என்று அடுத்த பாகத்தில் க்ண்டிப்பாக பதில் இருக்கிறது. வாழ்த்துக்கும்... வாசகரின் உரிமையான கோபத்துக்கும் மிக்க நன்றி!

வணக்கம் தினேஷ்குமார்,
உங்களது பாராட்டு மழையில் குடைபிடிக்காமல் குழந்தையாய் நனைந்தேன்..!

வணக்கம் ரகு,
மென்மேலும் நீங்கள் அளித்து வரும் ஊக்கத்திற்கு நன்றி ரகு... உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன் ரகு, அடுத்த பாகத்துல கேணிவனம் முடியுது...

வணக்கம் ஷக்தி,
உங்களது அனுமானங்கள் அருமை..! பதில் அடுத்த பாகத்தில் இடம்பெறும்...

வணக்கம் Hamaragana சார்,
ஒரே கேமிராதான் தாஸ் வச்சிருந்தது... இண்ஃப்ரா ரெட் என்பது, ஹேண்டிகேமிராவில் இருள்நிறைந்த பகுதிகளை ஷூட் செய்ய உதவும் ஒரு ஆப்ஷன். அதை உபயோகித்து, கோவில் கூரைக்குள்ளிருந்த இரகசிய அறையில் தாஸ் பிரவேசித்தான். அப்போது அவன் பிரவேசமும், அவன் சித்தர் உடலை கண்டுபிடித்து மிகுந்த சிரமத்துடன் அந்த பிரேதத்தை இறக்கியது என்று அனைத்துமே ரெக்கார்டு ஆகியிருந்தது... அந்த காட்சியைத்தான் சந்தோஷ் எடிட்டிங் அப்போது பார்த்ததாக எழுதியிருக்கிறேன்..! காட்சியில் இருப்பது ஒரே கேமிராத்தான்.. அந்த கேமிராவின் மெமரி கார்டு-ஐத்தான் தாஸ் தனது செல்ஃபோனில் வைத்து 21ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு வந்தான்..! உங்கள் வாழ்த்துக்கும் வர்ணனைக்கும் மிக்க நன்றி! மேலும் ஏதாவது சந்தேகமிருந்தால் கண்டிப்பாக கேளுங்கள்..!

வணக்கம் எஸ்.கே.,
சுவாரஸ்யத்தை ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் மாதவன்,
//இந்த வார்த்தைகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டு காலங்காலமாக இருக்க வேண்டும்.//
மிக்க நன்றி... உங்கள் வாழ்த்து மென்மேலும் சிறப்பாக எழுத ஊக்கப்படுத்துகிறது.

வணக்கம் அனு,
உங்கள் அனுமானங்கள் அருமை..! பதில் அடுத்த பாகத்தில் இருக்கிறது.

வணக்கம் தினேஷா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

DREAMER said...

வணக்கம் விஜி,
ஆஹா..! உலகத்தின் அதிசிறந்த எழுத்தாளரோடு என்னையும் ஒப்பிடுறீங்களே..! பெருமையாவும், பயமாவும் இருக்குங்க..! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
என்னை தாஸூன்னே கூப்பிட்டாச்சா..! கேணிவனத்து ரகசியமா ஒரு ட்ரிப் போடுவோம். வெகு சில பேரை மட்டும் அழைச்சிட்டு போறேன். ஆனா, யாருக்கும் சொல்லிடாதீங்க..! தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! உங்களையும்

வணக்கம் பதிவுலகில் பாபு,
ட்ரிப்-ல மெம்பர்ஸ் அதிகமாயிட்டே போறாங்களே..! வாழ்த்துக்கு நன்றி நண்பா..!

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
சஸ்பென்ஸ் அடுத்த பாகத்துல கண்டிப்பாக வெளிப்படும்..! வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் சாந்தி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் பாலாஜி சங்கர்,
Recursiveஆக எழுதிப்பார்ப்போமே என்று கதைக்குள் கதையாக எழுதினேன். அதை ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் VampireVaz,
ThanX for the appreciation Bro...!

வணக்கம் Gomy,
Hamaragana அவர்களுக்கு வந்த டவுட்-ஐ க்ளியர் பண்ணிட்டேன்.
ஒரே கேமிராதான் தாஸ் வச்சிருந்தது... இண்ஃப்ரா ரெட் என்பது, ஹேண்டிகேமிராவில் இருள்நிறைந்த பகுதிகளை ஷூட் செய்ய உதவும் ஒரு ஆப்ஷன். அதை உபயோகித்து, கோவில் கூரைக்குள்ளிருந்த இரகசிய அறையில் தாஸ் பிரவேசித்தான். அப்போது அவன் பிரவேசமும், அவன் சித்தர் உடலை கண்டுபிடித்து மிகுந்த சிரமத்துடன் அந்த பிரேதத்தை இறக்கியது என்று அனைத்துமே ரெக்கார்டு ஆகியிருந்தது... அந்த காட்சியைத்தான் சந்தோஷ் எடிட்டிங் அப்போது பார்த்ததாக எழுதியிருக்கிறேன்..! பிறகு, ப்ரொஃபஸர் கணேஷ்ராம் (1ஆம் காலக்கட்டத்தில் இருந்தவர்) தப்பான நோக்கத்தோட வெற்றி பெற முயன்றப்போ, தப்பான கோ-ஆர்டினேட்ஸ் செட் பண்ணி (அது என்னன்னே தெரியாத ப்ரிசெட் செட்டிங்க்ஸ்) கேணிக்குள்ள விழுந்து தொலைஞ்சி போயிட்டார்..! அவ்வளவுதான்..! அவர் திரும்பி வருவது அசாத்தியம்..! அவர் கதை முடிந்தது...! கதையில் மேலும் ஏதாவது சந்தேகமிருந்தாலும் கேளுங்கள்..! கண்டிப்பாக தெளிவு படுத்துகிறேன்.

வணக்கம் அன்னு,
ஐடியாவை ரசித்து பாராட்டியதற்கு நன்றி அன்னு..! தாத்தாவுக்கு என்னாச்சுன்னு அடுத்த பாகத்துல சொல்றேன்..! அடுத்த பாகத்தை இன்னும் 3 நாட்களுக்குள் போட்டுவிடுகிறேன். அதுதான் கேணிவனத்தின் இறுதிபாகம்.

Viji said...

ஐயோ
முடிய போகுதா?
ஒன்னு புதுசா ஒன்னு ஆரம்பிங்க,இல்ல இத continue பண்ணுங்க.

அன்னு said...

//அடுத்த பாகத்தை இன்னும் 3 நாட்களுக்குள் போட்டுவிடுகிறேன். அதுதான் கேணிவனத்தின் இறுதிபாகம். //

அண்ணா, என்ன இது திடீர்னு? ஆஹா... பாதில விடற மாதிரியே ஒரு ஃபீலிங். உண்மைலயே முடிய போகுதாண்ணா.. இன்னொரு தொடரை ஆரம்பிச்சு விட்டுட்டு அப்புறம் ‘முற்றும்’ போடுங்க :))

Cinema Paiyyan said...

Hareesh unga kitta irundhu oru thigil thodar ethirpaakurom next, Orr iravu thaan paaka mudiyamaye poiduchi

hamaragana said...

anbudan vanakam,அடுத்த பாகத்தை இன்னும் 3 நாட்களுக்குள் போட்டுவிடுகிறேன். அதுதான் கேணிவனத்தின் இறுதிபாகம். //please you do one think pick up all viewers to KENIVANAM so that we are satisfy...

Popular Posts