Sunday, December 19, 2010

திரைப்படவிழாவில் 'ஓர் இரவு' - திரைப்பட அனுபவம்

வணக்கம் நண்பர்களே,

16ஆம் தேதி, லேசான தூறலுடன் தொடங்கிய மயக்கும் மாலை பொழுதில், நானும் எனது படக்குழுவினரும், அரங்கிற்கு வந்து சேர்ந்தோம். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது... வெளியே காலையில் எனது உதவி இயக்குனர் வந்து ஒட்டிவிட்டு சென்ற 'ஓர் இரவு' போஸ்டர் தெரிந்தது.

அரங்கினுள்ளே இன்னும் முந்தைய திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததாக தெரிந்தது. காத்திருந்தோம். வெளியே கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. ஒருசிலர், போஸ்டரை காட்டி, 'இது நல்ல படம்' என்று தம் நண்பர்களிடம் சான்று அறிவித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு தெம்பூட்டியது.

முந்தைய திரைப்படம் முடிந்து, கூட்டம் வெளியே வந்ததும், புதுக்கூட்டம் அரங்கிற்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. நாங்களும் உள்ளே சென்று, 'ஓர் இரவு' டிவிடி-ஐ ப்ரொஜெக்டர் ஆபரேட்டரிடம் கொடுத்து, சோதனை ஓட்டம் பார்த்துக் கொண்டோம்.

5.30 மணிக்கு, படம் போடுவதற்கு முன், ரேவதி மேடம் வந்து ஒரு சின்ன உரை நிகழ்த்தினார்கள். ''திரைப்படம் பார்க்கும்போது, தயவு செய்து, செல்ஃபோன் பேசுவதையோ, SMS அனுப்புவதையோ, எழுந்து வெளியே அடிக்கடி சென்றுவருவதையோ தவிருங்கள். அமைதியாக படத்தைப் பாருங்கள். கலாட்டா செய்து கொண்டு பார்ப்பதற்கு இது பொது திரையரங்கு அல்ல, நீங்களெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியன்ஸ் என்பதால், கண்ணியம் காத்திருங்கள்'' என்று மிகச்சுருக்கமாக பேசிவிட்டு சென்றார்கள்.

பிறகு ஒருவர் எங்களிடம் (3 இயக்குனர்கள் நான், ஹரி ஷங்கர் மற்றும் கிருஷ்ண சேகர்) வந்து, இயக்குனர் அறிமுகம் கொடுக்கலாமா..? ஏதாவது பேசுகிறீர்களா..? என்று கேட்டார். இல்லை சம்பிரதாயங்கள் வேண்டாம் முதலில் அனைவரும் படத்தை பார்க்கட்டும் என்று தவிர்த்துவிட்டோம்.

பிறகு, ஒரு இளம்பெண் 'ஓர் இரவு' திரைப்படத்தை பற்றி சின்ன அறிமுக உரையை  நிகழ்த்திவிட்டு சென்றார். விளக்குகள் அணைக்கபட்டன, நாங்கள் மூவரும், முதல் வரிசையில் அமர்ந்து கொண்டோம். படம் திரையிடப்பட்டது.
நாங்கள் எதிர்ப்பார்த்தைவிட கூட்டம் நிரம்பி வழிந்தது. ரேவதி மேடம் கூறியது போல், அனைவரும் கண்ணியமாகவே படம் பார்த்தனர்.

சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தேன், அரங்கம் நிறைந்திருந்தோடில்லாமல், அதிகம் பேர், நின்று கொண்டும் படம் பார்த்து கொண்டிருந்தது மிகவும் ஊக்கமளித்தது.

7 இடங்களில் கைத்தட்டல்கள் எழுந்தது சந்தோஷமாக இருந்தது.

இரண்டு மணிநேர திரைதியானம் முடிந்து விளக்குகள் போடப்பட்டதும், மீண்டும் கைத்தட்டல், ஏதேதோ பேசியபடி அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அதில் எங்களது பின்னால் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், எங்கள் மூவரில், 'கிருஷ்ண சேகர்' என்பவரை அடையாளம் கண்டுபிடித்தார் (அவர் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்ததால்). உடனே, எங்கள் மூவரையும் தெரிந்து கொண்டு, சூழ்ந்து கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து, VisCom மாணவர்கூட்டம் எங்களை சூழ்ந்துகொண்டது. இப்படிப்பட்ட படத்திற்கு ஏன் மிக குறைவான பப்ளிசிட்டி செய்தீர்கள் என்று கேட்டார்கள். மீண்டும் திரையிட்டால் எங்கள் ஆதரவு நிச்சயம் என்றார்கள். ஒரு சிலர் தமது கல்லூரியில் இப்படத்தை ஸ்பெஷல் ஸ்கீரினிங் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி அனுமதி கேட்டார்கள். மேலும், மற்ற திரைப்பட விழாக்களுக்கும் தவறாமல் இப்படத்தை அனுப்பும்படி அன்புக்கட்டளையிட்டார்கள். அடுத்த படத்தை பற்றி ஆவலோடு விசாரித்தார்கள். சிலர் உதவி இயக்குனராக சேர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். இப்படியாக, சுமார் 20 நிமிடங்கள் பேசிவிட்டு அவரவர்கள் விசிடிங் கார்டுகளை கொடுத்தும் வாங்கியும் சென்றது மிக மகிழ்ச்சியான அனுபவம்.

பிறகு, 3 CIFF Volunteer பெண்கள் 'ஓர் இரவு' பற்றி விழா தினசரியில் எழுதுவதற்காக பேட்டி எடுத்துவிட்டு சென்றனர்.

மறக்கமுடியாத அனுபவமாக அன்றைய மாலை அமைந்தது.

விழா தினசரியில் வெளியான 'ஓர் இரவு' திரையிடப்பட்ட அனுபவம் இதோ உங்களுக்காக..!பின்குறிப்பு - புகைப்படம் எடுக்க முடிவில்லை..! மன்னிக்கவும்..!

அன்புடன்
HARESH NARAYAN


Signature

22 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

மீண்டும் வாழ்த்துக்கள் ஹரிஷ், இந்தப்படம் (பொது) திரை அரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதா என்ற விவரம் தாருங்களேன் அல்லது இந்தப்படம் நான் பார்க்க வேண்டும் என்றால் எவ்வாறு பார்க்க இயலும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் சகோதரா.. நீங்கள் கூறுவதை கேட்க்கும் பொது எனக்கே பெருமையாக உள்ளது.. மேலும் பல வெற்றிகள் பெற மனமார வாழ்த்துகிறேன்...

தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சகோதரா நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.. இந்த படத்தை எப்படி பார்ப்பது என்ற விவரம் தந்தால் மகிழ்வேன்..

எதிர்பார்க்கிறேன் தங்கள் பதிலை ஒரு ரசிகனாய்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் சகோதரா

a said...

வாழ்த்துக்கள்..........

Unknown said...

வாழ்த்துக்கள் ஹரிஷ்.. ரொம்ப சந்தோசமாக இருக்கு..

நான் இன்னும் உங்க படத்தைப் பார்க்கலைங்க.. இவ்வளவு தரமான படத்தை மீண்டும் வெளியிட்டால் நாங்களும் பார்ப்போம்..

வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள்......!

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துகள்......!

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
வெகு தூரம் தள்ளி இருக்கிறேன் உங்களுடைய படைப்பை பார்க்க ஆவல் என்ன செய வேண்டும்..

அக்னிபாசுதன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் Dreamer!

Kiruthigan said...

வாழ்த்துக்கள் Boss......

Ramesh said...

Valthukkal harish. Manasukku romba sandhosama irukku.

Anisha Yunus said...

anna, jus came home after giving birth to our second son. :) and t only blog which i visited during hospital stay and now is yours. i am so so happy after reading kalaippuli's remarks. if they were true from his heart, u dont need any more wishes from anyone at all. iam sure it was a splendid time there, i missed it. congrats once again and all t best wishes for all 3 of u anna. kalakkungnna... :))

வேங்கை said...

வாழ்த்துக்கள் ஹரிஷ்

நான் இன்னும் படம் பார்க்கவில்லை

எப்படி பார்ப்பது ?

செகண்ட் ரிலீஸ் பண்ணுவீர்களா ?

DREAMER said...

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
நண்பா வாழ்த்துக்கு நன்றி..! இந்த படம் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அடுத்த வாரமே ஒரு பெரிய படம் வெளிவந்ததால் எங்கள் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை..! சன் டிவியில் ஜூன் 18ஆம் தேதி 'டாப் 10 மூவிஸ்'ல் 3ஆவது இடம் கிடைத்தது. ஆனால், அன்று திரையரங்குகளில் படம் தூக்கப்பட்டிருந்தது. இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் பிக்-அப் ஆக குறைந்தது இரண்டு வாரங்களாவது திரைப்படம் ஓடவேண்டும். ஆனால் சரியாக பிக்-அப் ஆகிற வேளையில் படம் தூக்கப்பட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. போகட்டும்..! மீண்டும் வெளியிடுவோம் என்ற நம்பிக்கையில், எந்த உரிமையையும் யாரிடமும் கொடுக்காமல் அடுத்த ரிலீஸூக்காக மிகப்பொறுமையாக காத்திருக்கிறோம்.

வணக்கம் வெறும்பய,
வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரா..! சிங்கப்பூரில் ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில் இப்படத்தை வெளியிடலாம் என்ற முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. விரைவில் தெரிவிக்கிறேன்..! இதோ பதில் உங்களுக்காக..! ஒரு நண்பனாய்..!

வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் யோகேஷ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் பதிவுலகில் பாபு,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! கண்டிப்பாக இப்படத்தை மீண்டும் வெளியிடுகிறோம்..! உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கிறேன்..! மிக்க நன்றி..!

வணக்கம் ராம்சாமி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் மாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் மாதேவி,
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..!

வணக்கம் ஹமாராகானா சார்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! நீங்கள் இப்படத்தை பார்ப்பதற்கான ஏற்பாட்டை விரைவில் செய்கிறேன்..!

வணக்கம் அக்னிபாசுதன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கிருத்திகன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி Bro..!

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் அன்னு,
ஆஹா..! இரண்டாம் குழந்தை பிறந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மிக்க வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..! ஹாஸ்பிடலில் வைத்தும் என் Blog-ஐ நீங்கள் படித்தது எனக்கு அவார்டு கிடைத்தது போல் இருக்கிறது சகோதரி..! உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை முடிந்தால் வலையில் ஏற்றுங்கள்..! நாங்களும் கண்டு மகிழ்வோம்..! மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும்..!

வணக்கம் வேங்கை,
மீண்டும் படத்தை எப்பாடுபட்டாவது வெளியிடுகிறோம்..! கொஞ்சம் காத்திருங்கள் நண்பா..! இல்லையென்றாலும், நீங்கள் படம் பார்க்கும் வகையில் ஏதாவது ஒரு வழி செய்கிறேன்..! வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

-
DREAMER

Anonymous said...

Pinreenga Harish !! I am eager to see the movie Harish ! Any private links ?

Anbudan, Abbas

Raghu said...

'அருணாச்ச‌ல‌ம்' ப‌ட‌த்துல‌, வில்ல‌ன்க‌ளெல்லாம் 'போயிடு போயிடு'ன்னு சொல்லும்போது, த‌லைவ‌ர் 'இனிதான் ஆர‌ம்ப‌ம்'னு ஒரு தாளில் எழுதிவைப்பார்.

கொஞ்ச‌ம் எக்ஸாக‌ரேட் ப‌ண்ற‌தா கூட‌ நீங்க‌ நினைக்க‌லாம் ஹ‌ரீஷ். என‌க்கென்ன‌வோ இந்த‌ ப‌திவை ப‌டிக்கும்போது அந்த‌ காட்சிதான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது.

ப‌ட்டைய‌ கிள‌ப்புங்க‌ ஹ‌ரீஷ் :))

//மீண்டும் வெளியிடுவோம் என்ற நம்பிக்கையில், எந்த உரிமையையும் யாரிடமும் கொடுக்காமல் அடுத்த ரிலீஸூக்காக மிகப்பொறுமையாக காத்திருக்கிறோம்//

க‌வ‌லைப்ப‌டாதீங்க‌ ஹ‌ரீஷ்..

துச்ச‌மாக‌ நினைத்தோர்
துர‌த்திக்கொண்டு வ‌ருவ‌ர்
வாய்ப்பினை வ‌ழ‌ங்கிட‌

அச்ச‌மின்றி எதிர்கொள்வாய்
அவ்வ‌ர‌ச‌ர்க‌ள்
கூச்ச‌ப்ப‌ட்டு நின்றிட‌

க‌டைசி ஆறு வ‌ரிக‌ளை க‌வித்...ச‌ரி வேண்டாம்...ஏதோ நினைப்பில் எழுதி உங்க‌ளை கொடுமைப்ப‌டுத்துவ‌த‌ற்கு..'ம‌ன்னிக்க‌வும்'னுலாம் கேட்க‌மாட்டேன். அடுத்த‌வ‌ர்க‌ளை அல‌ற‌விடுவ‌தில் கிடைக்கும் சுக‌மே அலாதிதான் :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரிஷ்... படத்தை பார்க்க ஆவல் தூண்டும் பதிவு எங்களுக்கு... DVD கிடைக்கும் வழி சொன்னால் நாங்களும் பார்த்து மகிழ்வோம்... நன்றி

DREAMER said...

வணக்கம் அப்பாஸ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!அனைவரும் படம் பார்க்கும்படியான ஏற்பாட்டை விரைவில் செய்கிறேன்..! அதுவரை கொஞ்சம் காத்திருக்கவும்..!

வணக்கம் ரகு,
ஊக்கமளிப்பதில் உங்களை மிஞ்ச யாருமில்லை..! என்னை ஊக்கப்படுத்தி, இந்த கலைக்களத்தில் தள்ளிவிட்டவர் நீர். அதற்கு என்றென்றும் நன்றி..! இன்றுவரை உமது சேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காலம் பார்த்து உம்மையும் களத்தில் கடத்தாமல் விடமாட்டேன்..! விரைவில்..!

வணக்கம் அப்பாவி தங்கமணி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! அனைவரும் படம் பார்க்கும்படியான ஏற்பாட்டை விரைவில் செய்கிறேன்..! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நன்றி..!

-
DREAMER

Abbas said...

Haresh, I am also from Singapore. So it will be nice if it showed in any local channels may be VASANTHAM channel. If you want any help we can try to do for you.

Virudhu vaangiyadharkkum Manamaarndha Vazhthukkal !!

Anbudan!

Rengo said...

வாழ்த்துக்கள் Boss......

Popular Posts