Saturday, July 23, 2011

நடிகர் ஆர்யா அம்புலி 3D வெப்ஸைட் துவக்கி வைத்தார்..!


PLEASE VISIT WWW.AMBULI3D.COM FOR "AMBULI 3D"s OFFICIAL WEBSITE

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடிகர் ஆர்யா அவர்கள் "அம்புலி 3D" திரைப்படத்தின் இணையதளத்தை துவக்கி வைத்தார். இணையதளத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு கருத்து தெரிவித்தார்.

நெற்றியில் ஒரு சின்ன வெட்டுக்காயம் என்றாலும், பார்க்க அழகான ஹாரிபாட்டர் போலவே தெரிந்தார்.

படத்தின் சில காட்சிகளையும், ட்ரெய்லரையும் பார்த்துவிட்டு "நல்ல முயற்சி நன்றாக உள்ளது" என்று பாராட்டினார்.

அவர் அம்புலி திரைத்தளத்தை துவக்கி வைத்த காணொளி இதோ...









இணையதளத்தை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண் (DREAMER)


Signature

Tuesday, July 19, 2011

'அம்புலி 3D' படக்குழுவினர்களுக்காக 'ஓர் இரவு' சிறப்புக் காட்சி

எங்கள் குழுவின் முதல் படமான 'ஓர் இரவு' திரைப்படத்தை 'அம்புலி 3D' டீம் பார்ப்பதற்காக பிரத்யேக காட்சி ஒன்றை சென்ற வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு, தேவி ஸ்ரீ தேவி ப்ரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தோம்.



↑ 'ஓர் இரவு' இயக்குனர்கள்
ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்


'அம்புலி 3D' குழுவினரில் சுமார் 60% ஆட்கள் வந்திருந்து சிறப்பித்தனர். மீதமிருந்த நண்பர்கள் தத்தம் பணியில் வெளியூர்களில் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.

படத்தை பார்த்து பாராட்டியதோடு பலரும் 'ஏன் இந்த படத்துக்கு நீங்கள் சரியாக பப்ளிசிட்டி செய்யவில்லை..! ஏன் A சென்டர் தியேட்டர்களில் திரையிடவில்லை' என்று ஏகத்துக்கும் திட்டி தீர்த்தனர். கண்டிப்பாக 'ஓர் இரவு' படத்தை ரீ-ரிலீஸ் செய்யும்படி அறிவுறுத்தி சென்றனர்.




↑  டான்ஸ் மாஸ்டர் தினா அவர்களுடன்


↑  ஸ்டண்ட் மாஸ்டர் T.ரமேஷ் அவர்களுடன்


↑  திரு. டேனியல் ப்ரொடக்ஷன் மேனேஜர் சக்தி அவர்களுடன்


↑  அண்ணன் தேனி முருகன் & ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் சந்தனபாண்டியன் அவர்களுடன்


↑  கோகுல் மற்றும் நண்பர்கள்


↑  உமா ரியாஸ்



↑  மேக்கப் சசி (நடுவில் இருப்பவர்) அவர்களுடன்



↑  காஸ்ட்யூமர் பாபு (குழந்தையுடன்)


↑  லைட் டிபார்ட்மெண்ட் ஷக்தி (ப்ரௌன் ஷர்ட்)


குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட IOB-ல் பணிபுரியும் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள், படத்தை பார்த்த அடுத்த நாள் எனக்கும் ஹரிக்கும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு நீண்ட நேரம் பேசி பாராட்டி கொண்டிருந்தார். படத்தை பார்த்து பயந்த அவரது இன்ஜினியரிங் படிக்கும் மகன், இரவு 1.30 மணியளவில் கதவு தட்டி அப்பா அம்மாவுக்கு நடுவில் படுத்து கொண்டதாக கூறினார். இப்படம் சரியான ஆடியன்சுக்கு போய் சேர்ந்திருந்தால் இது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும், எப்படியாவது ரீரிலீசுக்கு முயலுங்கள் என்று வற்புறுத்தினார். 70களில் அன்னக்கிளி படத்தை முதலில் ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிறகு அந்த படத்தையும் இசையையும் கொண்டாடியதை உதாரணம் கூறினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாங்களும் அந்த எண்ணத்தில் (ரீ-ரிலீஸ்) இருப்பதால்தான் இப்படம் குறித்த எந்த உரிமையையும் இன்னும் எவ்விடத்திலும் வியாபாரப்படுத்தாமல் வைத்திருக்கிறோம்.

↑  IOB ஸ்டாஃப் நண்பர்கள்


↑ மற்றும் நண்பர்களின் குடும்ப நபர்கள்


இந்த பிரத்யேக காட்சி, 'அம்புலி 3D'படப்பிடிப்பில் உடன் பணியாற்றிய அத்தனை நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் ஒரு get togetherஆக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி..!


Signature

Thursday, July 14, 2011

"தமிழ் டைஜஸ்ட்" வழங்கும் கவிதைப் போட்டி


வணக்கம் நண்பர்களே..!

சமீபத்தில் எனது நண்பர்கள் ஆக்கத்தில் உருவான  'தமிழ் டைஜஸ்ட்' என்ற ஆங்கிலம் வழி தமிழ் பயிற்சி-யைப் பற்றி தெரியவந்தது. இந்த பயிற்சி முறையில், ஆங்கிலம் தெரிந்த யாரும் தமிழை எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வண்ணம் பாடதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த தரமான பயிற்சி முறையை விளம்பரப்படுத்தும் வகையில் இவர்களது இணையதளமான http://www.tamildigest.com/ -ல் ஒரு கவிதை போட்டி நடத்துகிறார்கள். இந்த போட்டியில் தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

போட்டியை பற்றி மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக்கவும் http://tinyurl.com/5uzmffx

http://www.tamildigest.com/ இணையதள வெளியீட்டின்போது...
(Photo Courtesy : http://www.behindwoods.com/)

நேர்மையான முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் உண்டு.

வலைப்பதிவுலகில் தமிழ் கவிதைகள் எழுதும் புதுக்கவிகள் ஏராளம் என்று என் தரப்பில் என் நண்பர்களிடம் வாதாடிக் கொண்டிருந்தேன். எனவே இந்த கவிதை போட்டியை பற்றி இதோ இங்கே பகிர்ந்துள்ளேன்.

நம் வலையுலக நண்பர்கள்(ளும்) போட்டியில் கலந்து கொண்டு  வெற்றி பெற வாழ்த்துக்கள். போட்டியை பற்றி முடிந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

Signature

First News about "AMBULI 3D" on Net..!

INDIAGLITZ : 'Ambuli 3D' - With a difference

For all those of you who sulk at this, the makers of 'Ambuli 3D' vouch that you will be awed and proud of this 3D film that's take you onto a rural journey into Indian villages, in 3D!

Sounds interesting right?

'Ambuli 3D' is the brainchild of the makers who had come out with 'Orr Eravuu' last year, the latter was a horror thriller with a scientific approach to supernatural beings. The film also won the 'Best Independent Film' at the Chennai International Film Festival.

'Ambuli 3D' is inspired from a folklore tale which is being told in various parts of village in south India. The film is canned in various parts of villages in Tamil Nadu.

The USP of the film is that it is shot using a state of the art 'Panasonic 3D camera' claim the makers. Normally, a 3D film is shot with two cameras fit in a single huge rig  and have lot of constrain in using the rig because of its huge, heavy and consumes a lot of time for setting it up.

With this, constrains have been overcome. It�s digital, compact and has two lenses fixed in a single body which acts like a human eye (just like the camera used in Avatar) which gives a brilliant 3D effect and setting the convergence is also made simple. At the same time while shooting itself you will be able to see the output live in 3D.

This feature film that is coming up in 3D will see a website launch on July 15.



Signature

Monday, July 11, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 8

மூணாறில் "அம்புலி 3D"


யாரோ சென்ற வருடம் (2010) எனது பிறந்தநாளுக்கு வாழ்த்தும்போது, 'அடுத்த பிறந்த நாளுக்கு நீ நல்ல உயரமான இடத்தில் இருக்க வேண்டும்' என்று வாழ்த்தியிருப்பார்கள் போல... அதனாலோ என்னவோ, இந்த முறை எனது பிறந்த நாள் 6600 அடி உயர மலைப்பிரதேசமான 'மூணாறில்' கொண்டாடப்பட்டது. அதுவும், எனது "அம்புலி 3D" படப்பிடிப்பு குழுவினருடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய அனுபவம் என்றென்றும் மறக்கமுடியாது. என்ன ஒரே வித்தியாசம் 'ஹேப்பி பர்த்டே டு யூ' பாடலுக்கு பதிலாக, நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த டூயட் பாடல்தான் பின்னனியில் ஒலித்து கொண்டிருந்தது.



↑ தயாரிப்பு நிர்வாகி திரு. சக்திவேல் கத்தியை கொடுக்க...


↑  ஹரியுடன்...

↑  கேமிராமேன் சதீஷூடன்...

↑  டான்ஸ் மாஸ்டர் தினாவுடன்...


கேக் வெட்டும்போது முகத்தில் கரி பூசுவது போல் கேக்-ஐ பூசும் பழக்கத்தை யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை... கேக் வெட்டி, கொண்டாடி முடித்து பார்க்கும்போது, எல்லோர் முகத்திலும் ஹுரோயின் முகத்தில் போடும் மேக்கப்-ஐ காட்டிலும் அதிகமான க்ரீம் பூசப்பட்டிருந்தது.


சாமிக்கு வெண்ணை சாற்றியது போல் தெரிபவர்
துணை இயக்குனர் தினேஷா


வெட்கத்துடன் கேக்-ஐ பெற்று கொள்பவர் சாம் (இசையமைப்பாளர்)


கேக்கினால் நலுங்கு வைத்து கொள்பவர்
துணை இயக்குனர்


அன்புத்தொல்லையால் அவதிப்படுபவர்
உதவி இயக்குனர் தளபதி (பெயரே தளபதிதான்)


லைட்மேன் சீஃப் மோகன் அவர்களுடன்...


கொண்டாட்டத்திற்கு பிறகு
எங்கள் திறந்தவெளி டெம்பரவரி ரெஸ்டாரண்ட்-ல்

மூணாறு... கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் கடவுளுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் பூலோக சுவர்க்கம். மலைப்பாதையில் பயணம் செய்யும் போது 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்...' பாடல் ஞாபகம் வரும், சில சிகரங்களைப் பார்க்கும்போது இயற்கையை பற்றி க(வி)தை எழுத தோணும். இங்கு வாழும் மலைவாழ் மக்களை பார்க்கும்போது 'கொடுத்து வைத்தவர்கள் ' என்று போற்ற தோன்றும். 'வருடத்தில் ஒரு மாதமாவது வந்து தங்கிவிட்டு போக வேண்டும்' என்று உறுதிமொழி எடுக்க தோன்றும். கடமைக்கென்றில்லாமல், கண்ட நேரத்தில் பெய்யும் மழையின் சாரல்கள் நம்மை அடிக்கடி மயிர்கூச்செரிய செய்யும்.

"அம்புலி 3D"-ன் நான்கு இசையமைப்பாளர்களில் ஒருவரான 'சாம்' அவர்களின் பிறந்த  ஊர் மூணாறுதான் என்பதால், அவர்மூலமாக நல்ல லொகேஷன்களை கேட்டு தெரிந்து கொண்டோம். 'மைனா' புகழ் திரு. மூணாறு சுப்பிரமணி அவர்கள்தான் லொகேஷன் மேனேஜர்... அவரிடம் இடங்களை கூறி லொகேஷன்களை தேடிப்பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை...

மூணாறில் இன்னொரு விஷயம் மிகவும் பிரசித்தம். அது இங்கிருக்கும் 'அட்டை பூச்சிகள்'... காட்டுமிருகங்களான புலி, சிங்கம்,கரடி போன்றவைகள் நம்மை மிரட்டாத அளவுக்கு ஒரு மிரட்டலை இங்கிருக்கும் அட்டை பூச்சிகள் நமக்கு கொடுக்கின்றன. எங்கள் படப்பிடிப்பு குழுவில் இருந்த அத்தனை பேரும், புல்தரையில் பணிபுரியும்போது, பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பெருமை இந்த அட்டைபூச்சிகளையே சாரும். (ஒரு சின்ன சீக்ரெட் : மேலிருக்கும் பர்த்டே ஃபோட்டோவில் நன்றாக உற்று பாருங்கள்.., அனைவரும் பேண்ட்-ஐ முட்டிவரை தூக்கிவிட்டிருப்பதை காணலாம்... எல்லாம் அட்டை பயம்தான்.)

அன்று மூணாறு ஷெட்யூலில் கடைசி நாள்... ஒரு கோல்ஃப் கிரவுண்டில் டூயட் பாடல் எடுத்துக் கொண்டிருந்தோம்... நடன இயக்குனர் திரு. தினா மாஸ்டர் நேர்த்தியாக பாடலை முடித்து கொண்டிருந்தார். ஆனால், வழக்கமாய் மாலை மட்டுமே பெய்யும் மழை அன்று கொஞ்சம் முன்னாலேயே வந்துவிட்டது. மழை நிற்கட்டுமே என்று அனைவரும் ஒரு பெரிய டார்பாலின் விரிப்பிற்குள் கமுக்கமாய் நின்று கொண்டோம். மழை நிற்காமல் வந்து கொண்டேயிருந்தது. நேரம் அதிகமாகவே, ஷூட்டிங் தாமதமாய்க்கொண்டிருப்பதால்... எங்களுக்குள் கலக்கம் கொஞ்சமாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. எங்கள் கலக்கத்தை குறைப்பதற்காக, கேமிராமேன் சதீஷ்... தனது அஸிஸ்டென்ட் மொபைலில் 'ஊரவிட்டு ஊருவந்து...' என்ற பாடலை போட்டு, அந்த செல்ஃபோனை மைக்-ல் பிடித்தார். அந்த பாடல் ஸ்பீக்கரில் நல்ல சத்தமாக கேட்க ஆரம்பித்தது. ப்ரொடக்ஷன் டீமில் ஜெகதீஷ் என்ற ஒருவர் திடீரென்று பாடலை கேட்டதும் நடனமாட ஆரம்பித்தார். மழையில் அவர் ஆடிய ஆட்டம்... கதகளியும் குத்தாட்டமும் கலந்து ஒரு புது மாதிரியாக இருந்தது. அனைவரும் அவரை ரசித்து ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர். பாட்டு முடியவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. அன்று மாலைக்குள் பாடல் படப்பிடிப்பும் நல்லபடியாக நடந்து முடிந்தது.

மூணாறு படப்பிடிப்புடன் அவுட்டோர் ஷூட்டிங் மொத்தமும் நல்லபடியாக  நிறைவுபெற்றது. அன்றே யூனிட் அனைத்தையும் பேக்-அப் செய்து அனுப்பிவிட்டு... அடுத்தநாள், எங்கள் முதல் படமான 'ஓர் இரவு'  படப்பிடிப்பு நடத்திய வீட்டை சென்று தரிசித்துவிட்டு வந்தோம்.


'ஓர் இரவு' வீடு...

'ஓர் இரவு' ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட நண்பர்களில், லொகேஷன் மேனேஜர் திரு.நிக்ஸன் மற்றும், சரவண பவன் ஹோட்டலில் உணவு உபசரிப்பாளர் திரு.அழகர்சாமி ஆகியோரை  சந்தித்தோம். மூணாறில், வியூபாய்ண்ட் என்னும் இடத்திலுள்ள டீகடையில் (நாங்கள் வழக்கமாக டீ அருந்தும் இடத்தில்) ஏலக்காய் வாசனையுடன் டீ குடித்துவிட்டு... கிளம்பினோம்... சென்னைக்கு அல்ல... வரும் வழியில் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது...

அதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்...

(தொடரும்)


Signature

Thursday, July 07, 2011

"AMBULI 3D" Website Coming Soon

"அம்புலி 3D படப்பிடிப்பு அனுபவம் 8"ஆம் பாகம் almost முடித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் பிழை திருத்தம் முடிந்ததும் பதிவிடுகிறேன். அதுவரை இந்த "அம்புலி 3D வெப்ஸைட் ப்ரொமோ"வை பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இதோ...




Signature

Popular Posts