Thursday, March 03, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 2



அம்புலி : மகளிர் ஸ்பெஷல்

"டாவின்ஸி கோட்" புத்தகத்தில், பெண்கள் இவ்வுலகினில் எப்படி எக்கலாஜிக்கலி பேலன்ஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பற்றி சில விளக்கங்கள் வரும். இந்த பேலன்ஸை, மோனலிஸா ஓவியத்தில், டாவின்ஸி எப்படி சூட்சமமாக சொல்லியிருக்கிறார் என்பதை பற்றி மிக சுவாரஸ்யமாக டான் ப்ரௌன் அவர்கள் விளக்கியிருப்பார்... அதே போல், திரு. கல்கி அவர்கள் தனது கதைகளின் கருவை ஒரு பெண்ணின் சபதத்தையோ அல்லது வைராக்கியத்தையோ முன்வைத்து எழுதியிருப்பார்.

அம்புலியிலும், ஒரு பெண்ணின் கருவே, கதையின் கரு... அப்படிப்பட்ட கதையின் கருவாக இடம்பெறும் முக்கிய காட்சிகளை கலைராணி, உமா ரியாஸ்... ஆகியவர்கள் ஒத்துழைப்பில் சமீபத்தில் ஒரு கிராமத்தில் படம்பிடித்து முடித்தோம்...

கலைராணி மேடம்... பெயருக்கு ஏற்றார் போல், கலையில் ராணிதான்.... மிக தத்ரூபமான நடிப்பு... நல்லதொரு இன்வால்மெண்ட். அம்புலியில் தனது கதாபாத்திரத்தை பற்றி அவர் கேட்டு தெரிந்து கொள்ளும்போது, கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கி பிறகு ஷாட் எடுக்கும்போது, மிக அழகாக அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினார். ஓன் டேக் ஆர்டிஸ்ட் என்று சொல்வது மிகவும் பொருந்தும். இவர் நடிக்கும்போது மட்டும் ஷூட்டிங் வேடிக்கை பார்க்கும் கிராமத்து பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


படப்பிடிப்பின் போது இவருக்கு கடும் காய்ச்சல் அடித்து கொண்டிருந்தது, ஷூட்டிங் நடத்தமுடியுமோ என்று நாங்கள் ஐயுறும்போது, துளியும் தடங்களின்றி எடுக்க, அவர் கொடுத்த ஒத்துழைப்பை என்றும் மறக்க முடியாது. காட்சிகளுக்கு மத்தியில் ஒரு சின்ன இடைவேளையிலும், கயிற்று கட்டிலிலும், தரையிலும் அவர் படுத்து உறங்கி குட்டி குட்டி ஓய்வுகள் எடுத்து கொண்டு நடித்து கொடுத்தார். அவரது காட்சிகள் முடிந்ததும், தான் அம்புலியில் பங்கேற்று நடித்த பாட்டி கதாபாத்திரத்தின் உடைகளையும், அணிகலன்களையும் அடையாளமாக வைத்து கொள்ளப்போவதாக கூறி கேட்டு வாங்கி சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து உமா ரியாஸ் அவர்கள்... இவரை நல்ல நடிகை என்பதைவிட, எங்கள் குழுவுக்கு கிடைத்த நல்லதொரு தோழி என்றுதான் சொல்ல வேண்டும். தோழி மட்டுமின்றி ஒரு வெல்விஷரைப் போல், படப்பிடிப்பில் துளியும் முகம் கோணாமல், எத்தனை முறை காட்சியை மாற்றியமைத்து எடுத்தாலும், மிகவும் இயல்பாக நடித்து கொடுத்தார். இவரிடம் டைரக்டராக கூடிய தகுதி அதிகம் உள்ளது. இவரது ஸ்பெஷாலிட்டியான மிமிக்ரி கலையை (குறிப்பாக திரு. தேங்காய் சீனிவாசனின் உச்சாடனங்கள்) படப்பிடிப்பு இடைவேளையில் செய்து காட்டி ஒட்டு மொத்த குழுவின் கவனத்தையும் ஈர்த்து கைதட்டு வாங்கினார்.

 
என்னதான் ஷாட் எடுக்கும் முன்பு மிகவும் ஜாலியான முகபாவத்தில் இருந்தாலும், கேமிரா ரோல் ஆனதும், சட்டென்று தனது கதாபாத்திரத்தின் முகபாவத்துக்கு வந்து விடுவது கண்டு வியந்தேன். இவர் நடித்த 'அன்பே சிவம்' எனக்கு பிடித்த படங்களில் ஒன்று, அதில் அவரது நடிப்பை கண்டு வியந்திருந்ததால், நம் படத்தில் இவரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் ஈடேறியதில் மகிழ்ச்சி..!

அம்புலியில் அடுத்த பெண், போன பதிவிலேயே நான் அறிமுகம் செய்துவைத்த எங்களது திரைப்படத்தின் கதாயாகியான சனம். புதுமுகம்தான் என்றாலும் ஆங்கில ஸ்டேஜ் ப்ளேக்களில் அதிகம் பங்கேற்றவர் என்பதால் நடிப்பிற்கு பஞ்சமில்லை... தமிழ் நன்றாகவே பேசுகிறார். (ஆச்சர்யம்..!)


தன்னுடைய காட்சிகளில் மட்டுமில்லாமல், மற்ற காட்சிகள் எடுக்கும்போதும் ஆர்வமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி கவனித்து வருகிறார்... நடிகை என்று அலட்டிக் கொள்ளாமல் குழுவில் அனைவரிடமும் இதமாய் பேசி வருவதால், இவர் நன்றாய் வர வேண்டும் என்று பலரும் நினைக்கும்படி நடந்து கொள்வது மகிழ்ச்சி..!

இப்படத்தில் இன்னும் ஒரு கதாநாயகியான திவ்யா நாகேஷ்... அவரது காட்சிகள் இன்னும் எடுக்கப்படாததால் அவரை பற்றி இப்பதிவில் சொல்ல முடியவில்லை...

மகளிர் தினம் சமீபத்தில் இருப்பதால், அன்று பதிவிட நேரம் இருக்குமோ இல்லையோ என்று இன்றே பதிகிறேன். மேலும் அதிக விவரங்களோடு "அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவத்தை அடுத்த பதிவில் பதிகிறேன்.



Signature

20 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vaazhthukkal. kalakkungka

Madhavan Srinivasagopalan said...

vaazhthukkal.

Chitra said...

இவர்களை பற்றி வாசிக்கும் போது, இவர்களின் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தும் படத்தைப் பார்க்க ஆவல் கூடுகிறது. அனைவரின் உழைப்பும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வேங்கை said...

வணக்கம் ஹரிஷ்,

அடுத்து உமா ரியாஸ் அவர்கள்... இவலை (இவரையா) நல்ல நடிகை என்பதைவிட, எங்கள் குழுவுக்கு கிடைத்த நல்லதொரு தோழி என்றுதான் சொல்ல வேண்டும்.

இது தவறு என்று நினைத்தால் பிழையை திருத்தவும் ..........

ஹரிஷ் அருமை .. எதிர் பார்ப்பு கூடுகிறது ...வாழ்த்துக்கள்

Murali said...

வணக்கம் ஹரீஷ் ,
அடுத்த படிப்பான அம்புலிக்கு வாழ்த்துக்கள்,
ஓர் இரவு படம் பார்க்க என்ன தான் வழி

ஆவலுடன்
ச.முரளி

DREAMER said...

வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..!

வணக்கம் மாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் சித்ரா,
படத்தை பற்றிய உங்கள் ஆவலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..!

வணக்கம் வேங்கை,
எழுத்துப்பிழையை சரியாக சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி..! மாற்றிவிட்டேன்..! வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் முரளி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! 'ஓர் இரவு' படத்தை பலரும் பார்க்க வேறு வெவ்வேறு முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். கனிந்ததும் தெரிவிக்கிறேன்..!

-
DREAMER

praveen said...
This comment has been removed by the author.
praveen said...

Best of Luck 4 u r Project

Praveen
(Mumbai)

VampireVaz said...

interesting...

Anonymous said...

machi this is sathish your super mama da..

machan perumaiya irrukuda mathavanga comments pakkum pothu..

yennaku theriynchu yentha directarum nadigaikalai pathi womens dayla sonnathu illai...

nee solli kalachita

thanks for your pengalukku mariyadhai...

thayavu seidhu or erravu dvd release pannu

yenga office friends parkkanum sollaranga

after that review from suhasini with gautham for the movie nadunisi naikkal..

because gautham quoted your movie for pov shots..

make it soon.

Raghu said...

//குழுவில் அனைவரிடமும் இதமாய் பேசி வருவதால், இவர் நன்றாய் வர வேண்டும் என்று பலரும் நினைக்கும்படி நடந்து கொள்வது மகிழ்ச்சி//

இது உங்க‌ளுக்கும் பொருந்தும் ஹ‌ரீஷ்...உங்க‌ளுடைய‌ ஹ்யூம‌ர் ப்ள‌ஸ் டைமிங் சென்ஸை ப‌ல‌முறை ர‌சித்திருக்கிறேன்.

ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் ப‌ண்ண‌ சொல்லி கிட்ட‌த‌ட்ட‌ அஞ்சு வ‌ருஷ‌மாச்சு..ந‌ல்லா இருங்க‌ப்பு..ந‌ல்லாயிருங்க‌

Unknown said...

very thoughtful of you to present this piece closer to Women's day .... Hows the movie coming up?

அக்னிபாசுதன் said...
This comment has been removed by the author.
அக்னிபாசுதன் said...

அருமை அருமை... அம்புலி மேன்மேலும் வளர்ந்து பூரண அம்புலியாய் ஒளி வீசட்டும்... All the best again ஹரீஷ் :)

DREAMER said...

வணக்கம் ப்ரவீண்,
ThanX for your wishes...

வணக்கம் Vaz,
Thanx...

DREAMER said...

வணக்கம் சதீஷ்,
'ஓர் இரவு' படம் குறித்து கவுதம் மேனன் அவர்கள் குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி..! 'அம்புலி'க்கு பிறகே 'ஓர் இரவு' டிவிடி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். காரணம், கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இப்படி ஒரு தீர்மானம். இருப்பினும், நீயும் உன் நண்பர்களும் 'ஓர் இரவு' படத்தை பார்க்க காட்டும் ஆவலுக்கு மிக்க நன்றி..!

வணக்கம் ரகு,
காமெடி ஸ்க்ரிப்ட் ஒண்ணு தயாராயிட்டேஏஏஏஏஏஏ இருக்கு..! சீக்கிரமே சொல்றேன்..!

வணக்கம் வசந்த்ஜி (Bingleguy),
Movie is shaping up well..! As of now, 30% of "Ambuli" is completed... Will update more about the movie here... ThanX for your visit.

வணக்கம் அக்னிபாசுதன்,
அம்புலி குறித்த உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

Abbas said...

Wow, its great to hear that you have start rolling camera again !! Awaiting to see both the moviews (Ambuli & Or Iravu).
I was not around for couple of months. Sorry for the late comments.

Mikka Mahizhchi nanba !!
Vazhthukkal !

Anbudan,
Abbas..!

Free Traffic said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

பிரபல பதிவர் said...

All the best....
come out with a blackbuster

புவனேஸ்வரி ராமநாதன் said...

அம்புலி திரைப்படம் நல்லபடியாக அமைய
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரிஷ் நாராயண்.

Popular Posts