Thursday, October 13, 2011

ரயில் சிநேகம்...


     (Photo Courtesy : http://guide2chennai.blogspot.com)

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிட்டிய ரயில் பயணம்
ஜன்னலுக்கு வெளியே, நினைவுகளையும் பின்னுக்கு தள்ள
முப்பது நிமிட முத்துக்குளியலில்... முத்தாய் கிடைத்தன
சில ஞாபகங்கள்...

கல்லூரிக் கால பருவ மழையில் நண்பர்களுடன் செலவு செய்த
நட்பெனும் சில வருடங்களின் சில்லிடும் சாரல்கள்...

உண்டோம்...
உறங்கினோம்...
உறக்க கத்தினோம்...
காதலித்தோம்...
கானம் பாடினோம்...
காற்று வாங்கினோம்...
எப்போதாவது படித்தோம்...
முப்போதும் பழகினோம்...
வேற்றாரரையும் உற்றாராய் அணுகினோம்...
இப்படி நாங்கள் சில நிமிடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த
வாடகை வீடு
ரயில்..!

இரண்டு கால்களும் தண்டவாளங்களாக
தலைக்குமேலே 'மாணவன்' என்ற மின்சாரக் கம்பி பாய்ச்சிய சக்தியில்
கைகள் கோர்த்து கொண்ட சந்திப்புகளாய் (ஜங்ஷன்)
நட்பெனும் பயணம் மேற்கொண்டோம்...

அவ்வப்போது கல்லூரி எனும் பணிமனையில் ஓய்வெடுத்திருந்தபோதிலும்
தொடர்வண்டியாய் தொடர்ந்தது எங்கள் பயணம்...
ஒரு சமயம் ரயிலிறங்கினோம்...
எதற்கு..?

ரயில் சுவற்றில் மட்டும் கிறுக்கிய எங்கள் பெயர்களை
வாழ்க்கை சுவடுகளும் சுவைக்கட்டும் என்று...

இப்படி அன்று வாழ்க்கையை சுவைக்க கற்றுத்தந்த ரயில்
இன்று எங்கள் நினைவுகளை சுமந்து எங்கள் நெஞ்சில் கனக்கிறது...

தடம்புரளா எங்கள் நட்பெனும் காதலின் நினைவுச் சின்னம்
ரயில்..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

18 comments:

dineshar said...

நான் இதுவரையில் கண்டது
உங்களின் கதை முகம் மட்டுமே-இது காணாத முகம் இந்த...
உங்கள் கவிதை முகம்...
அதைப்போலவே இதுவும் அழகு
..........................

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நானும் ரயில் ரசிகன்தான்.
இந்த கவிதையையும் ரசித்தேன்.

DREAMER said...

அழகை ரசித்து பாராட்டியதற்கு நன்றி தினேஷ்...! 'கதை முகம்' கண்ணாடி போல் எளிதில் காணக்கிடைக்குது.. ஆனால் 'கவிதை முகம்' தடாகத்தில் முகம் பார்ப்பது போல் எளிதில் கிட்டுவதில்லை..!

-
DREAMER

DREAMER said...

வணக்கம் நிசாமுதீன்,
ரசித்து வாழ்த்தியதற்கு நன்றி..! நட்புடன் இணைந்திருப்போம்...

Sathish Kumar said...

varigal ninaivugalai kilari chendrana....
machan those days want to come back again thats my wish...

Madhavan Srinivasagopalan said...

//நான் இதுவரையில் கண்டது
உங்களின் கதை முகம் மட்டுமே-இது காணாத முகம் இந்த...
உங்கள் கவிதை முகம்...
அதைப்போலவே இதுவும் அழகு //

Similar opinion I have.

DREAMER said...

வணக்கம் சதீஷ்,
நண்பா உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இந்த பதிவை எழுத காரணம், நீ ஃபேஸ்புக்கில் போட்ட அந்த ஃபோட்டோதான்... Days cannot come back but you can travel to & fro in your memories... be glad that you own lot of'em...

வணக்கம் மாதவன்,
similar கருத்துக்கு நன்றி! Occassionally எழுதுவேன் Regular கிடையாது.

-
DREAMER

Buce said...

I must admit Hareesh you are very impressive.

Mohan

குறையொன்றுமில்லை. said...

ரயில் பயணங்களின் சுகமும் நட்பின் ஆழத்தையும் அழகா இணைத்து கவிதை சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.

DREAMER said...

Hello Mohan,
Thanks...

வணக்கம் லஷ்மியம்மா,
படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

-
DREAMER

அருண் பிரசாத் said...

ஒவ்வொருவர் வாழ்விலும் ரயில் ஏதாவது ஒரு விதத்தில் ஒண்றிவிடுகிறது...
சுகமான நினைவலைகள் ஹாரீஸ்...

ambuli 3D said...

வணக்கம் அருண்பிரசாத்,
சரியாக சொன்னீர்கள்... பார்க்க பார்க்க அலுக்காத விஷயங்களில் ரயில், யானை, குழந்தை என்று ஒரு வரிசையை சொல்வார்கள்... நினைவலைகளில் சேர்ந்து நீந்தியதற்கு மிக்க நன்றி..!

-
DREAMER

Dr. Srjith. said...

உங்களுக்குள்ள ரசிகன் ஓடு ஒரு கவிஞனும் ஒளிந்து கொண்டு இருகிறான் .....அருமை sir

ambuli 3D said...

நன்றி டாக்டர்...

Raghu said...

ஃபீல் ப‌ண்ணாதீங்க‌ ஹ‌ரீஷ்...எல்லாம் ந‌ன்மைக்கே

DREAMER said...

வணக்கம் ரகு,
சில ஞாபக கீறல்கள்... ரேகைகளாக மாறிவிடுகின்றன... (இதுக்கும் ஃபீலிங்கா என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது..!)

-
DREAMER

DREAMER said...

Thanks Kalyan...

-
DREAMER

Abbas..! said...

Very nice Harish. Hope u r busy with Ambuli release preparations.

Anbudan,
Abbas..!

Popular Posts