Wednesday, February 08, 2012

ஸ்டார்ஸ் ஆஃப் அம்புலி 3D


வணக்கம் நண்பர்களே...

'அம்புலி 3D' திரைப்படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களை பற்றிய பாத்திரப்படைப்பு விவரங்களை அளிக்கும் 'ஸ்டார்ஸ் ஆஃப் அம்புலி' என்ற மைக்ரோ விளம்பர வீடியோக்களை இன்றுமுதல் வெளியிட்டிருக்கிறோம். அந்த வரிசையில் முதல் வீடியோவில் படத்தின் கதைநாயகனான வேந்தன் பற்றிய காணொளி இதோ...



தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய மைக்ரோ வீடியோக்கள் விரைவில் வெளிவரும்... பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

17 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா இருக்கு பாஸ். படத்தை சீக்கிரம் காட்டுங்க

congrats :)

இந்திரா said...

வாழ்த்துக்கள்.

மைக்ரோ வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்..

DREAMER said...

வணக்கம் ரமேஷ்,
கண்டிப்பா, படம் ரிலீஸ் டேட் வர்ற வெள்ளிக்கிழமை அறிவிக்கிறோம்...

வணக்கம் இந்திரா,
கண்டிப்பாக இன்னும் நிறைய வீடியோக்கள் வரவிருக்கிறது...

-
DREAMER

பத்மஹரி said...

வணக்கம் ஹரீஷ்,
எப்படி இருக்கீங்க? ரொம்ப பிசியா இருப்பீங்க! உங்க படத்தை பார்க்கனும். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட பேசனும். பிசியான நேரத்திலும் எனக்கு திருமண வாழ்த்துகள் சொன்னதுக்கு மிக்க நன்றி. கல்யாண அலைச்சல்னால உங்களை முன்னாடியே தொடர்புகொள்ள நினைச்சது முடியாம போச்சு. உங்க படம் அம்புலி, பட்டையை கிளப்ப என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹரி.

Srikumar said...

தேவிகலாவில் வரும் ஞாயிறு புக் செய்துவிட்டேன். உங்கள் வீடியோ இன்னும் ஆர்வத்தை தூண்டுகிறது .... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

Anonymous said...

வரும் ஞாயிறு எஸ்கேப்பில் ரிசர்வ் பண்ணி விட்டேன். சத்யம் காம்ப்ளக்சில் அம்புலி டிக்கட்கள் ஹவுஸ்புல். வாழ்த்துகள்.

"ராஜா" said...

சார் எங்க ஏரியா பக்கம் (virudhunagar , aruppukottai) படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க .... படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது

DREAMER said...

வணக்கம் ஸ்ரீகுமார்,
புக் செய்ததற்கு நன்றி..! கண்டிப்பாக உங்களுக்கு படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்... பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

வணக்கம் சிவகுமார்,
சத்யம் காம்ப்ளக்ஸ் ஹவுஸ்ஃபுல் ஆனதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி..! வார இறுதிநாட்களின் ஷோக்கள் அத்தனையும் நல்ல ரிசல்ட் கொடுத்திருக்கிறது. இதனால், தியேட்டர் தரப்பிலிருந்து ஷோ 'டைம்'-ஐ மேலும் கூட்டிவிடுவதைப் பற்றி பேசலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.... பார்ப்போம்...

வணக்கம் ராஜா,
உங்கள் ஏரியா மட்டுமல்ல, பல ஏரியாக்களிலிருந்து இப்போது படத்தை கேட்டுக் கொண்டிருப்பதால்... விநியோகஸ்தர்கள் விரைவில் செண்ட்டர்களை கூட்டலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.... விரைவில் சொல்கிறேன்...

-
DREAMER

karthikeyan.kg. said...

படம் பார்த்தேன் . படம் பார்க்க வந்ததில் சிலர் , கண்ணாடி நன்றாக இல்லை. சத்தம் சரி இல்லை ; என்று தான் குறை கூறினரே தவிர, படத்தை ஒன்றும் சொல்லவில்லை . இது தான் படத்தின் வெற்றி என எண்ணுகிறேன் .. நன்றிகள் மற்றுமோர் புதிய முயற்சிக்கு

kanagu said...

அம்புலி ஒரு நல்ல திரைப்பட அணுபவத்தை தந்தது ஹரிஷ். சில வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல ஹாரர்-த்ரில்லர் வகை படத்தை தமிழில் பார்க்கிறேன். ஏதோ அமானுஷ்யம் என முடிக்காமல் அருமையான அறிவியல் காரணம் வைத்திருந்தது அருமை :)

3டி தொழில்நுட்பமும் மிக சரியாக கையாளபட்டிருந்தது. நிச்சயம் நான் பார்த்த எந்த ஆங்கில படத்துக்கும் இது சளைத்ததல்ல :) ஆனால் சில காட்சிகள் மட்டும் சரியாக தெரியவில்லை.

நான் ஐநாக்ஸில் பார்த்தேன். நிறைய பேருக்கு பிடித்திருந்தது. சிலர் குழந்தைகள் படமென நினைத்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்த படம் அவ்வளவாக பிடிக்கவில்லை. :(

மேலும் பல புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் :)

alan said...

Hi
Yesterday I've watched this movie in MAYAJAL. It's a good thriller movie. I spoke to some of the audience. Here are the some of them. 1. I couldn't experience the 3D effect. I could hear from the others too. 2. It's not a child movie. My daughter didn't like it. She was saying CHUTTI SATHAN was good.

I don't want to tell bad about the movie. But wanted to share the real feedback.

Otherwise It's a very good thriller movie. No logic missing. All the best for the future movies.

Regards
Lakshmi Narayanan Ayyasamy

Srikumar said...

படம் பார்த்தேன். மிக அருமை. 3D படம் என்று அடிக்கடி கிட்ட வந்து பயமுறுத்தாமல் நமக்கு முன்னால் நடப்பது போன்ற ஒரு பிரமிப்பு. கிளிமாக்சில் வேந்தன் குகையில் தனியாக இருக்கும் போது அம்புலி அவன் மிக அருகில் வரும். அதை அப்படி கட் செய்துவிட்டு பிறகு அவன் நண்பனுடன் வெளியே வருவது போல் காண்பித்து இருக்கிர்கள். உள்ளே என்ன நடந்தது ?

"ராஜா" said...

நேத்துதான் படம் பார்த்தேன் .... சில காட்சிகள் உண்மையிலேயே பயங்கர த்ரில்லிங்கா இருந்தது... அதே போல சில காட்சிகளை 3Dயில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவமாக அமைந்தது... படம் கண்டிப்பாக ஹிட் ... அடுத்து உங்களுடைய கேணிவனம் கதையை படமாக்க பார்க்க ஆவலாக இருக்கிறேன்...

கோவை நேரம் said...

வணக்கம்....நான் எனது குடும்பத்துடன் படம் பார்த்தேன்....அருமை..முதல் முதலாக முழு நீள 3 D படம்.ஒரு சில கருத்துக்கள் மட்டும் பகிர விரும்பு கிறேன்.
1 ) படத்தில் ஆரம்பத்தில் வரும் பாடல் சலிப்பை ஏற்படுத்துகிறது.
2 ) மிக முக்கியமான நேரத்தில் விறுவிறுப்பை குறைக்க வரும் பாடல் நீக்கி இருக்கலாம்.
3 )காட்டுக்குள் இருக்கும் பார்த்திபனை அம்புலி கொல்லாமல் இருப்பது
4 ) இடைவேளையில் பார்த்திபன் எறியும் ஈட்டி நம்மை நோக்கி வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.அதே போல் ஜெகன் எறியும் ஒரு காட்சியும் ...
5 ) புல்லாங்குழல் ஊதும் நாயகன் வாயில் வைக்காமலே ஓசை வருவது எப்படி...
படத்தின் திகிலை ஆரம்பம் முதல் இறுதிவரை கொண்டு சென்று இருப்பது அருமை...வாழ்த்துக்கள்

Kiruthigan said...

ஓர் இரவவை போலவே அம்புலியையும் பார்க்க முடியாமலிருப்பது எமக்கு வருத்தத்திற்குரிய விடையமே..! யாழ்ப்பாண பக்கம் அம்புலி வருவதற்கு வாய்ப்பபேயில்லை..!!!
அம்புலி விமர்சங்கள் பார்த்தேன் அனைவரும் பாராட்டியிருக்கின்றார்கள்..! தங்கள் கதைகளே அருமையான அபவமாக இருக்கும் போது படத்தை பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை...!

Abbas..! said...

Wow !! All the comments from the papers shows your efforts and success !
I read that Ambuli - part 2 also going to start soon with you guys. Is it true ??

All the Best dude !

Cheers, Abbas..!

DREAMER said...

வணக்கம் கார்த்திகேயன்,
தங்கள் கருத்துடன் மக்கள் கருத்தையும் சேர்ந்து பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் கனகு,
படத்தை பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் லஷ்மி நாராயணன் அய்யாசாமி,
மாயாஜாலில் வெளியான ஆரம்ப நாட்களில் ஒரு பிரச்சினை இருந்தது... இடதும் வலதும் வரவேண்டிய ப்ரொஜெக்ஷன் வலமும் இடமுமாக இடம்பெயர்ந்து இருந்தது... உங்களைப் போன்ற ஒரு நண்பர்தான் இவ்விஷயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தினார்... புகார் வந்ததும் உடனே சென்று சீர்செய்துவிட்டோம். இப்போது மாயாஜாலில் மூன்று காட்சிகளும் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது.

வணக்கம் ஸ்ரீகுமார்,
தணிக்கை குழு வழங்கும் 'U' சர்டிஃபிகேட்டுக்காக சில காட்சிகளை வெட்டியெறிய நேர்ந்தது... அந்த எடிட்டிங்கில் சென்ற காட்சிகளில் தாங்கள் குறிப்பிட்ட காட்சியும் ஒன்று...


வணக்கம் ராஜா,
வித்தியாச அனுபவத்தை பார்த்து பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...! கேணிவனத்தை சீக்கிரமே திரையில் கொண்ண்டு வந்திடலாம்...

வணக்கம் கோவை நேரம்,
1 & 2) இப்படத்தில் பாடலை கொண்டுவரம் எண்ணம் எங்களுக்கு துளியும் இருந்ததில்லை ஆனால், போன படத்தில் பாட்டே இல்லை என்று வியாபாரிகள் அடித்துக் கொண்டதுபோல் இப்படத்திலும் நிகழ்ந்துவிடக்கூடாது என்று எண்ணிதான் பாடல்களை வைத்திருந்தோம்... ஆனால், இப்படத்தில் மக்கள் பாடலின்றி பார்க்க ஆர்வம் காட்டி வருவதென்னவோ உண்மைதான். ஆனால், கடந்தவாரம் நாங்கள் சென்றுவந்த தியேட்டர் சுற்றுலாவில் பல தியேட்டர்களில் பாடலை ரசித்து ஆரவாரிக்கும் மக்களையும் பார்க்க நேர்ந்தது... இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...
3) பார்த்திபன் வசிக்கும் இடம் சோளக்காட்டில் அபாயப்பகுதிக்கு அப்பாலில் உள்ளது, எனவேதான், மாணவர்கள் இருவரும் சைக்கிளில் தடம்மாறி வெகுதூரம் சென்று செங்கோடனை சந்திப்பதுபோல் சைக்கிள் சேஸிங்கில் வரும்.
4) ஈட்டி விஷயம் செய்திருக்கலாம்... அடுத்த பாகத்தில் நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்...
5) காதலி அமுதனிடம் வீட்டில் அனைவரும் உறங்குவதால் புல்லாங்குழலை ஊதவேண்டாம் என்று கூறியும், அவன் தன் காதலிக்கு மட்டும் கேட்பது போல் வாசிக்கிறேன் என்று கூறி ஊதுவது போல் ஜாடை காட்டுகிறான். அதுதான் காதலிக்கு இசையாய் கேட்கிறது என்பது போன்ற காட்சியமைப்பு அது...

மேற்கூறிய விஷயங்கள் தங்கள் கருத்துக்கு சென்றடையவில்லை என்பது எங்களின் தவறுதான் மன்னிக்கவும்... சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் கிருத்திகன்,
தமிழ்நாடு மற்றும் பெங்களூரைத் தவிர படம் இன்னும் எங்கும் வெளியாகவில்லை.. கண்டிப்பாய் விரைவில் வெளியாகும்... எனக்காக கொஞ்சம் காத்திருங்கள்... நிச்சயம் முயல்கிறேன்..

வணக்கம் அப்பாஸ்,
Thanks for your appreciation.. Happy to see good response and support from friends and media. And regarding Part 2 Yes it is true... we're working on that...

-
DREAMER

Popular Posts