Saturday, March 31, 2012

எண்ணத்திரை : ['ARTIST'-ம் அம்புலியும்]

டிஸ்கி : இனி 'எண்ணத்திரை' என்ற தலைப்பில் மனதில் எழும் எண்ணங்களை பகிரவும் பதியவும் விருப்பம் கொண்டு, இன்று முதல் துவங்குகிறேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...



சென்ற வாரம் 'தி ஆர்டிஸ்ட்' படம் பார்த்தேன்... வசனங்களற்ற வண்ணங்களற்ற வலியான கதை. மெல்லிய இறகால் வருடுவதைப்போல் சொல்லியிருந்தார்கள். ஆனால் அந்த இறகை அனுபவிக்க விடாமல் காதைக்குடைந்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு அந்நிய நண்பர்கள் இருவர்... குடித்துவிட்டு வந்து அனியாயத்துக்கு புலம்பிக் கொண்டிருந்தார்கள்... தங்கள் பணம் தண்டம் என்றும், தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோம் என்றும், ஒன்றுமே புரியவில்லை என்று தன்னிலை மறந்து புலம்பிக்கொண்டிருக்க... எனக்கும் என்னைச்சுற்றி அமர்ந்திருந்த அனைவருக்கும் வெறுப்பாய் இருந்தது... எனக்கு வருங்காலத்தில் போஜனம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை என்று அவர்களிடம் 'சார் படம் புடிக்கலைன்னா வெளியே போய் வேற படத்துக்கு டிக்கெட்-ஐ மாத்தி கேளுங்க கொடுப்பாங்க' என்று பொய் சொன்னேன்... கிளம்பிச் சென்றார்கள்... வரவேயில்லை... என்ன ஆனார்களோ தெரியவில்லை..

நாங்கள் 2010ஆம் ஆண்டு எங்கள் சொந்த நிறுவனமான 'ஷங்கர் பிரதர்ஸ்' தயாரிப்பில் 'அம்புலி' படத்தை ஆரம்பித்து Basic டிஸ்கஷன் ஆரம்பித்தபோது அம்புலியை Black and Whiteல் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். 


அஜய் மற்றும் ஸ்ரீஜித்-தை வைத்து...
Black and Whiteல் நடத்தப்பட்ட முதல்கட்ட ஃபோட்டோ ஷூட்-ல்
எடுத்த புகைப்படங்கள் இதோ...









வியாபார ரீதியாய் ஏற்படும் குழப்பங்களையும் சந்திக்க தயாராகவே இருந்தோம். நண்பர் சதீஷ் 3Dக்கு எடுத்துக் கொண்ட பயிற்சி பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது 3Dயில் படம் எடுக்க  ஒரு ஸ்க்ரிப் தயார் செய்யும்படி கூறினார்... உடனே அம்புலி கதையில் கிராமத்தில் நடக்கும் நிலவு நேர காட்சிகள் அனைத்தும் 3D'யில் செய்தால் எப்படியிருக்கும் என்று தோன்ற... அதற்கான சோதனை ஒளிப்பதிவு செய்துப் பார்த்தோம். அதில் 3D காட்சிகள் அற்புதமாக வந்திருந்தது... உடனே அம்புலியை 3Dயிலேயே எடுக்கலாம் என்று முடிவானது... பிறகு படத்தை KTVR CREATIVE REELS சார்பில் எங்களது தயாரிப்பாளரான KTVR லோகநாதன் அவர்கள் தயாரிப்பதாய் முடிவானதும் Black and White எண்ணத்தை கைவிட்டோம். நண்பர் ஹரியும் 'நாம் சொந்த தயாரிப்பில் சோதனைகள் செய்து பார்க்கலாம்... அடுத்தவர் பணத்தில் அதை செய்ய வேண்டாம்' என்று கூறவே அனைவரும் ஒருமனதாக Black and White எண்ணத்தை ஒத்திவைத்தோம் (கைவிடவில்லை).

ஆனால் Black and Whiteல் எடுத்திருந்தால் இங்கு எப்படியோ தெரியவில்லை... ஆர்டிஸ்ட் படம் ஆங்கிலத்தில்(?) போதுமான அங்கீகாரம் மட்டுமில்லாமல் ஆஸ்கார் வரை சென்று வென்றும் இருக்கிறது... இதுநிச்சயம் பெரிய விஷயம்தான்..!!!


Signature

1 comment:

Raghu said...

கடந்த சில ஆண்டுகளில் வந்த படங்களை பார்க்கும்போது, ப்ளாஷ்பேக், சுதந்திர கால கட்டம், காமெடி சீன்ஸ்...இவற்றிற்கு மட்டுமே கருப்பு வெள்ளையை உபயோகித்திருக்கின்றனர். அழுத்தமான திரைக்கதை இல்லையெனில், கருப்பு வெள்ளை நம்மூரில் வொர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகமே ஹரிஷ்

//ஒருமனதாக Black and White எண்ணத்தை ஒத்திவைத்தோம் (கைவிடவில்லை).//

இதுக்கு ஒரு 'லைக்' :)

Popular Posts