Tuesday, May 20, 2014

"ஆ"மயம் 03 - அதென்ன ஹாரர் ஆந்தாலஜி?


All time classic திருவிளையாடல் படத்தில் சிவபுராணக்கதைகளை ஔவை பாட்டி சொல்ல சொல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக்கதையா வரும்... தருமியின் கதை ஒன்று, தட்சண் யாகம் நடத்திய கதை ஒன்று, ஹேமநாத பாகவதர் கதை ஒன்று, இப்படி பல கதைகள் வரும்... இதுதான் Anthology Film அல்லது Omnibus Film என்பார்கள்.
இது போன்ற கதைகூறும் பாணி நமது தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பக்திப்படங்களுக்கே இருந்து வந்தது... திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் இப்படி பல படங்கள் உதாரணத்திற்கு கூறலாம். ஹாரரில் இதை முதல் முயற்சியாக செய்துள்ள படம்தான் 'ஆ'.

ஆந்தாலஜி என்ற வார்த்தைக்கு தமிழ்ச்சொல் என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்... உண்மையில் எனக்கும் தெரியவில்லை... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து பகிருங்கள். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையைத்தான் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இல்லை.. அவர்களே OmniBus Film என்று புதுவார்த்தையில்தான் இதை alternateஆக கூறுகிறார்கள். எனவே, தமிழில் என்னவாக சொல்லலாம் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்தால், அவர்களுக்கு MY SINCERE THANKS.

பிறமொழிகளில் இந்த திரைக்கதைவடிவம் பலவாறு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக ஹாலிவுட்டில் 80களில் ஆந்தாலஜி ஹாரர் படங்கள் மிகவும் பிரபலம். ஹிந்தியில் Ram Gopal Varma ஆந்தாலஜி ஹாரர் படமான "Darna Mana Hai" என்ற படத்தின் மூலம் ஹாரர் ஆந்தாலஜிக்கு வித்திட்டார், அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும், அதன் இரண்டாம் பாகமாக "Darna Zaroori Hai" என்று வெளியிட்டார். அதுவும் ஹிட்.அம்புலி 3D படத்திற்கு இயக்குநர் திரு.ஸ்ரீதரன் சாரை, எங்கள் கலையுலக ஆசானாக உணர்ந்து செயல்பட்டோம், அதுபோல் இப்படத்திற்கு எங்கள் ஆசான் இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்தான். காரணம், அவரது திரைப்படங்கள் அத்தனையும் ஒருவகையில் ஆந்தாஜியாகத்தான் இருக்கும். நவராத்திரி, நவரத்தினம், மேலே குறிப்பிட்ட பக்தி படங்கள் என்று பல படங்களில் இதே பாணியை கையாண்டு வெற்றிப்பெற்றவர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்.

Ace Film Director Mr. A. P. Nagarajan (ImageCourtesy thehindu.com)

பொதுவாக ஒரு படத்தை ஃபுல் மீல்ஸ் என்று கூறினால், ஆந்தாலஜியை வெரைட்டி மீல்ஸ் என்று கூறலாம். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன், நாயகி, வில்லன், க்ளேமேக்ஸ் என்று கொண்டு போவதால், படம் விறுவிறுவென்று ஓடும்.. மேலும் படத்தில் நிறைய திருப்பங்கள், நிறைய சிறப்பம்ச காட்சிகளோடு திரைக்கதை வடிவமைக்கும் வசதி இந்த ஆந்தாலஜி படங்களில் உண்டு. 

50 ஓவர்கள் மேட்ச் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் 20 ஓவர்கள் மேட்ச்சும் ஹிட் ஆனது போல், இந்த ஆந்தாலஜி பாணி படங்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப்பெற்று ஆந்தாலஜி படங்கள் நிறைய வரும் என்ற நம்பிக்கையுடன் 'ஆ'வை உங்கள் முன் விரைவில் சமர்ப்பிக்கின்றோம். 


Signature

5 comments:

Hariharan said...

Vaalthukkal Thalaiva

ISR Selvakumar said...

சூப்பர்!
எழுதிய விதத்திற்கும், உங்கள் ஆசான்களை மறக்காமல் நினைவு கூர்ந்ததற்காகவும். இந்த ஒரு குணத்துக்காகவே உங்களுக்கு மேன் மேலும் வெற்றிகள் கிடைக்கும்.

Anthologyக்கு மாற்று வார்த்தை முயற்சிக்கிறேன்.

வாழ்த்துகள்! சியர்ஸ்!

வவ்வால் said...

//ஆந்தாலஜி என்ற வார்த்தைக்கு தமிழ்ச்சொல் என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்... உண்மையில் எனக்கும் தெரியவில்லை... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து பகிருங்கள். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையைத்தான் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இல்லை.. அவர்களே OmniBus Film என்று புதுவார்த்தையில்தான் இதை alternateஆக கூறுகிறார்கள். எனவே, தமிழில் என்னவாக சொல்லலாம் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்தால், அவர்களுக்கு MY SINCERE THANKS..//

தமிழிலக்கியங்களில் சிற்றிலக்கிய வகையில் " கோவை" என ஒரு வகை உண்டு , ஐந்து திணைகளில் பாடப்பட்டு தொகுக்கப்படும் ஒரு நூல்.

கோவை என்றால் தொகுத்தல் ,கோர்த்தல், இப்படி ஐந்து திணை வகைகளில் ஒரு பாட்டுடை தலைவனை முன் வைத்து பாடித்தொகுப்பதை "ஐந்திணைக்கோவை" எனப்படும்.

மாணிக்க வாசகர் "திருக்கோவை" , ஒட்டக்கூத்தர் ,குலோத்துங்கன் கோவை என எழுதியுள்ளார்கள்

ஒரே துறையிலும்(திணை) சிலர் கோவை என எழுதியுள்ளார்கள்.

Anthology என்பதை பொதுவாக பாடல்கள் அல்லது கதை தொகுப்பு என சொல்வார்கள்.
எனவே "Anthology" திரைப்படம் என்பதும் சில சிறிய படத்துணுக்குகளை கோர்த்து உருவாக்குதல் என்பதால் "திரைப்படகோவை" அல்லது மலர்களை தொடுப்பது போல எனக்கொண்டு "திரைச்சரம்" எனவும் சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் லத்தினில் , anthos =" flower" = மலர், அல்லது இதழ், logia ="collection, = anthologia என்பதில் இருந்து தான் Anthology என்ற ஆங்கில சொல்லே உருவாகியுள்ளது.

எனவே திரைச்சரம் அல்லது பல்வேறு கான்செப்டில் "உருவானால் " திரைக்கதம்பம்" எனவும் சொல்லலாம்.

எனவே ஹாரர் ஆந்தாலஜி படம் என்பதை திகில் திரைக்கோவை /திகில் திரை கதம்பம்/ திகில் திரைச்சரம் அல்லது திகில் திரைமாலை எனலாம்.

சமீபத்தில் ,விக்ரம், ஜீவா நடித்து வந்த டேவிட் என்ற படம் கூட ஒரு வகை (நட்பு) "Anthology" படம் எனலாம்.

ஆர்வா said...

வாழ்த்துக்கள் சார்... ஆ”ச்சர்யத்தில் உறைய காத்திருக்கிறோம்...

DREAMER said...

வணக்கம் ஹரிஹரன் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

வணக்கம் செல்வக்குமார், என் மீதான உங்களது நம்பிக்கைக்கு மிக்க நன்றி..!

வணக்கம் வவ்வால் சார்.. "திரைக்கோவை" மிகப்பொருத்தமான வார்த்தையாக தோன்றுகிறது... எனது குழுவினர்களுடன் நிச்சயம் இதுகுறித்து கலந்தாலோசிக்கிறேன். ஆந்தாலஜி சொல் குறித்த கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி..!

வணக்கம் மணிகண்டவேல், 'ஆ'ச்சர்யத்துடனான உங்கள் காத்திருப்பும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...!!!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Popular Posts