Friday, June 27, 2014

'ஆ'மயம் 14 - CROCIN என்கிற மசால் தோசை



முதல்முறை கடல் கடந்து வெளியூர் போகும்போது புதிய உணவு வகை, புதிய நீர் என்று சில அசௌகர்யங்கள் ஏற்படுவது வழக்கம்.. அந்த அசௌகர்யங்கள் நாளடைவில் வளர்ந்து, நம்மூரை மிகவும் ஞாபகம் வர செய்து ஜூரமாய் வெளிப்பட்டு விடும். அதே போலத்தான், 'ஆ' படத்தில் 'சிங்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த பாலா'வுக்கும் ஜப்பான் பயணம் மேற்கொண்டதும், முதலில் குதூகலமாய் இருந்தாலும், ஓரிரு நாளிலேயே மேற்சொன்ன ஜூரம் தொற்றிக்கொண்டது.

அப்படி ஒன்றும் கடுமையான ஜூரம் இல்லை.. ஆனால், மருந்து கொடுத்தாலும் தீராத வகையான ஜூரம்... ஷூட்டிங் என்னமோ பாதிப்பில்லாமல் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. ஷெட்யூல்படி ஒரேயொரு காட்சியில் மட்டும் பாலாவை நடிக்கவைக்கமுடியாமல் போனது... அவரில்லாத அந்த காட்சியில்... 'அவனுக்கு ஜூரம்டா... சுஷூ* சாப்பிட்டு சுருண்டு படுத்துட்டான்..' என்று டைலாக் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது..  இனி எப்படி சமாளிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தோம்.

எங்களது ஜப்பான் ஷூட்டிங்கிற்கு உதவிய திரு.ஹரி நாராயண் அவர்களின் GOVINDA'S RESTAURANTக்கு சென்றிருந்தோம்... அது ஜப்பானில் அரிதாக கிடைக்கக்கூடிய PURE VEGETARIAN வகைகளில் மிகவும் பிரசித்தமான INDIAN RESTAURANT அங்கு நம்மூர் மசால் தோசையை சுடசுட  கொண்டு வந்து பாலாவின் முன்னால் வைத்ததுதான்... பாலாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது பாருங்கள்... ஆனானப்பட்ட மருந்து மாத்திரையில் குணமாகாத ஜூரத்தை ஒரு மசால் தோசை போக்கியது... அந்த மசால் தோசை புண்ணியத்தால் ஷூட்டிங் மேலும் சிறப்பாக தொடர்ந்தது...


'இது மசால் தோசையல்ல... என் ஜூரத்தை போக்க வந்த CROCIN' என்று பாலா சொன்னது இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை.. 

பிறகென்ன, ரெகுலராக நாங்கள் அங்கேயே சாப்பிட ஆரம்பித்தோம் என்று சொல்லித்தானா தெரியவேண்டும்...

(தொடரும்)

---------------------
* Sushi - ஜப்பான் டிஷ்


Signature

1 comment:

kalidasganesh said...

enna irunthalum masal dosai masal dosaithan// athan arumai mavaraipavargalukuu mattume than theriyum anyway japanirku chendru nam parampariya unavu undathai ninaithu perumai kolgiren

Popular Posts