மலைப்பாதையில் மிதமான வெயிலில் மாலை நெருங்கிக் கொண்டிருக்க, ஹேர்பின் வளைவுகளில் அந்த Ford Fiesta கார் வளைந்துக் கொண்டிருந்தது. உள்ளே 3 பேர் இருந்தனர். அந்த மூவர் முகத்திலும் பணக்காரக்களை தெரிந்தது. தெரியாமல் எப்படி இருக்கும், சென்னையில் பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் பார்ட்னர்ஸ் அல்லவா.
பின்சீட்டில் தனியாக ஜோஷ்வா அமர்ந்திருந்தான், "அதெப்படிடா ஒரு எலுமிச்சம்பழம் நம்ம பிரச்சினைய தீத்துடும். கேக்கவே சில்லியா இல்ல..." என்று ஆரம்பித்தான்.
டிரைவர் சீட்டுக்கு இடதுபக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீதர் பதிலளித்தான் "ஹேய் நம்பிக்கை வைடா... வேலைய விட்டுட்டு இவ்வளவு தூரம் எஸ்டேட் பங்களாவுக்கு வந்து அந்த மந்திரவாதி சொன்னதை செஞ்சிட்டு திரும்பிட்டிருக்கோம்! இந்த நேரத்துல போய் இதெல்லாம் நடக்குமான்னு நம்பிக்கையில்லாம பேசிட்டிருக்கே..?"
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சூரஜ் இதையெல்லாம் கேட்டபடி "ஐ அக்ரீ வித் ஜோஷ்-டா, எனக்கும் இந்த எலுமிச்சம்பழம் மேட்டரெல்லாம் சுத்தப் பேத்தலாத்தான் தோணுது.."
"டேய் இதை நீ பேசாத, அன்னிக்கி குடிச்சிட்டு இதே மலைப்பாதையில அந்த பொண்ணு மேல காரை ஏத்துனப்ப யோசிச்சியிருக்கணும், உங்ககிட்டல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தானே அந்த மந்திரவாதிகிட்ட போயிட்டு வந்தேன். இப்போ என்னமோ புதுசா கிளப்புறீங்க..? அதான் எல்லாம் செஞ்சாச்சுல்ல, இப்ப திரும்ப போகும் போது எந்த சர்ச்சையும் வேண்டாம். இனிமே ஒண்ணும் ஆகாது. பேசாம வண்டியை ஓட்டு.." என்று ஸ்ரீதர் கோபமாக கூற, சூரஜ் சிரித்துக் கொண்டான். ஸ்ரீதர் அவனை ஒருமுறை முறைத்துப் பார்த்தான்.
'அப்ப பிரச்சினைக்கு நான்தான் காரணம்னு சொல்றியா..?' என்று வண்டி ஓட்டியபடி சூரஜ் புலம்பினான்.
'நான் ஒண்ணுமே சொல்லலியே..?'
'நீங்களும்தானேடா குடிச்சியிருந்தீங்க..?', சூரஜ் கோவப்பட்டான்.
'டேய், நாங்க இந்த பிரச்சினைய உன்மேல ஏத்துறதா இருந்தா, இப்போ உங்கூட இவ்ளோதூரம் வந்து இந்த ரிஸ்க்கான வேலைய செஞ்சியிருக்க மாட்டோம்... எல்லாம் ஜோஷ்வாவுக்காகத்தான்... புரிஞ்சிக்கோ..!' என்று கூறி ஸ்ரீதர் வெளியில் வெறித்துக் கொண்டிருந்தான்.
ஜோஷ்வா, தனக்கு முன்சீட்டிலிருந்த ஸ்ரீதரின் தோளைத் தொட்டு 'தேங்க்ஸ்டா' என்றான்.
பிறகு மூவரும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர்.
மூவருக்குள்ளும், நடந்த நிகழ்வுகளின் மலரும் நினைவுகள் அவரவர் மனநிலைப்படி ஓடிக்கொண்டிருந்தது.
3 மாதத்திற்கு முன்பு...
கோடைவிடுமுறையை கழிக்க, மூவரும் காரில், எஸ்டேட் பங்களாவிற்கு செல்லும் இதே கொடைக்கானல் மலைப்பாதையில் இரவு நேரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர். குடி அதிகமாக இருந்ததால், சூரஜ் வண்டி கண்ட்ரோலை இழந்து, ரோட்டில் நடந்துப் போய்க்கொண்டிருந்த ஒரு மலைவாசிப் பெண்ணின் மீது வண்டியால் மோதிவிட்டான். அந்த பெண், கார் டயரில் சிக்கி அலறிய சத்தத்தை அந்த மலைப்பிரதேசம் எதிரொலித்தது.
பதறியபடி மூவரும் இறங்கி பார்க்க, அந்த பெண் இறந்திருந்தாள். அவள் முகம் விகாரமாக இருந்தது.
ஸ்ரீதர் கோபத்தில் கத்தினான், " F**K You சூரஜ், What have you doneடா..? Fool, அனாவசியமா ஒரு பொண்ணை கொண்ணுட்டியே..? நான் ட்ரைவ் பண்றேன்னு சொன்னேன்ல கேட்டியா..? இப்ப பாரு?'
சூரஜ் அலட்சியமாக, 'விட்றா, சரியா பாக்கலை, வேணும்னு யாராச்சும் செய்வாங்களா..?'
இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி ஜோஷ் பயத்துடன், 'டேய், எனக்கு பயமா இருக்குடா, ப்... பொ... பொ... போலீஸ்ல சொல்லிடலாம்டா..' என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
'SHUT THE F**K UP... ஜெயிலுக்கு போற ஐடியா எனக்கில்ல, உனக்கு வேணும்னா நீ போ.. போ..?' என்று சூரஜ் ஜோஷ்வாவை திட்டினான்.
'ஹே சூரஜ் காம் டவுன்' என்று ஸ்ரீதர் இருவரையும் சமாதானப்படுத்தினான்.
அனைவரும் செய்வதறியாமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஜோஷ்வா ஐடியா கொடுத்தான், 'அப்ப ஒண்ணு பண்ணலாமா, இங்கதான் யாரும் இல்லியே, அப்படியே விட்டுட்டு போயிடலாம்..'
'ஸ்டுப்பிட், இந்த ரூட்ல மேல நம்ம பங்களா மட்டும்தான் இருக்கு, போலீஸ் ஆக்ஸிடெண்டடை விசாரிச்சாங்கன்னா வித்தவுட் டவுட் நாமதான் மாட்டுவோம்... ஸம்திங் எல்ஸ்?' என்று ஸ்ரீதர் யோசித்துக் கொண்டிருக்க
'பேசாம, இப்படியே இந்த பொண்ணை மலைப்பாதையில உருட்டி விட்டுடலாம்..' என்று சூரஜ் தன் பங்கிற்கு கூறினான்.
'நோ நோ... ஒண்ணு பண்ணலாம்... இவளை நம்ம ESTATE GARDENல புதைச்சிடுவோம்.. அங்கதான் யாருக்கும் டவுட் வராது, குயிக்' என்று ஸ்ரீதர் சொல்லியதைத் தொடர்ந்து, மூவரும் அந்த பெண்ணை கார் டிக்கியில் கிடத்தினார்கள், ஸ்ரீதர் காரிலிருந்து கொஞ்சம் பெட்ரோலை எடுத்து, ரோட்டில் படிந்திருந்த இரத்தக் கறையில் ஊற்றி, சிகரெட் லைட்டரால் பற்ற வைத்தான். ஒருமாதிரியான வாடை மூவர் வயிற்றையும் புரட்டியது. ஏற்கனவே குடித்திருந்த சூரஜ் வாந்தியெடுத்தான், பிறகு ஸ்ரீதர் கார் ஓட்ட, மூவரும் எஸ்டேட் பங்களாவிற்கு வந்தடைந்தார்கள்.
கார்டனில் கிட்டத்தட்ட 2 மணி நேரமாக குழி வெட்டினார்கள். ஜோஷ்வா அந்த பெண்ணை கார் டிக்கியிலிருந்து தூக்கிக் கொண்டு வரும்போது, அந்த பெண்ணின் உள்ளங்கை ஜோஷ்வாவின் முழங்கையை ஒருமுறை இறுக பிடித்தது.
'ஹ்ஹாஆஆஆஆ..', ஜோஷ் அலறியபடி பிணத்தை நழுவவிட்டு பங்களாவிற்குள் ஓடினான்.
பயந்தவன் என்பதால் அவனை புறக்கணித்துவிட்டு, ஸ்ரீதரும், சூரஜூம் அந்த பெண்ணை புதைத்து முடித்தனர்.
ஆனால் சென்னைக்கு திரும்பிய பிறகும் ஜோஷ்வாவின் மனநிலை பயங்கரமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவன் ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தான். ஏதேதோ கண்ணுக்கு தெரிவதாக கூறினான். ஜூரம், பயம், இப்படி பல காரணங்களால் வியாபாரத்தில் அவனால் சரியாக ஈடுபட முடியவில்லை.
வேறு வழியின்றி ஸ்ரீதர் ஒரு முடிவெடுத்தான். ஜோஷ்வாவை சைக்கலாஜிக்கலி குணமடைய வைக்க வேண்டும், அதே சமயம் விஷயமும் வெளியில் தெரியக்கூடாது என்று யோசித்தவன். 2 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டான். கேரளாவிற்கு சென்று வந்ததாக பொய் கூறினான்.
கேரளாவிலிருந்து திரும்பியவனாக கையில் ஒரு எலுமிச்சம்பழத்துடன் வந்தான். கேரள மாந்த்ரீகர் இந்த எலுமிச்சம்பழத்தை அந்த பெண்ணை புதைத்த இடத்தில் புதைத்துவிட்டு, எக்காரணத்தைக் கொண்டும் திரும்பி பார்க்காமல் வர வேண்டும் என்று கூறியதாக புளுகினான்.
சூரஜ் மாந்த்ரீகத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்பதால் வர மறுத்தான். அவனை வரவழைப்பதற்காக அவனிடம் மட்டும், இது ஒரு பொய் நாடகம் என்றும் இதனால் ஜோஷ்வாவை குணமடைய வைக்க முடியும் என்றும் கூறியதால் சூரஜ்-உம், உடன் வர சம்மதித்தான்.
மூவரும் மீண்டும் கொடைக்கானல் பங்களாவிற்கு வந்து எலுமிச்சம்பழத்தை அந்த பெண்ணை புதைத்த குழியில் புதைத்துவிட்டு, திரும்பி பார்க்காமல் காரில் மலைப்பாதையில் இறங்கி கொண்டிருந்தனர்.
இப்படி நடந்த உண்மைகளை அவரவர்கள் மனதில் ஓடவிட்டபடியிருக்க...
'நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்..' என்று ஜோஷ்வா ஆரம்பித்தான்.
'என்ன..?'
'நான் அந்த பொண்ணை கார் டிக்கிலருந்து தூக்கிட்டு வரும்போது, அந்த பொண்ணோட உள்ளங்கை திடீர்னு என்னை பிடிச்சிது. அதனாலதான் நான் பயந்து போய் உள்ளே ஓடிட்டேன்..'
'அடப்பாவி, அப்படின்னா, நாம புதைக்கும்போது அந்த பொண்ணு உடம்புல உயிர் இருந்திருக்குமேடா, Why didn't you tell it, You fool?' என்று ஸ்ரீதர் கோபித்துக் கொண்டான்.
'சாரிடா..'
'ஹா ஹா... சரி விடு, இந்த மாதிரி எக்ஸ்பீரியென்ஸ்லாம் லைஃப்ல கிடைக்காது..' என்ற சூரஜ்ஜை ஸ்ரீதர் தலையில் தட்டினான்.
'ஓவ் ஓவ், அடிக்காதடா..?'
'ஹே ஜோஷ், இந்த விஷயங்களையெல்லாம் இனிமே நீ மறந்துடுவே பாறேன். அதான் அந்த மந்திரவாதி கொடுத்த எலுமிச்சம்பழத்தை புதைச்சிட்டோம்ல..? இனி பயமில்ல.. ஓகே..' என்று ஸ்ரீதர் தனது பொய்யை மெய்யாக்கிக் கொண்டிருந்தான்
'ஆமாமா... எல்லாம் அந்த மந்திரவாதி செயல்..' என்று சூரஜ் நக்கலாக கூற, ஜோஷ்வா உண்மையிலேயே தன் மனம் லேசடைவதை உணர்ந்தான்.
ஸ்ரீதர் டேஷ்போர்டிலிருந்து FILMFARE MAGAZINE எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
சூரஜ், ரியர் வியூ கண்ணாடியில் ஜோஷ்வாவை பார்த்தபடி, 'ஆனா ஜோஷ், you should be carefulடா, ஏன்னா, எலுமிச்சம்பழத்தை புதைச்சிட்டு திரும்பி பாக்காம வீடு வந்து சேரணும்னு அந்த மந்திரவாதி சொல்லியிருக்காரு... சோ எக்காரணத்துக்காகவும் திரும்பி மட்டும் பாத்துறாதே, ஓகே..?' என்று வேண்டுமென்றே பயமுறுத்தினான்.
ஸ்ரீதருக்கு இவனிடம் இந்த உண்மையை ஏன்தான் சொன்னோமோ என்றிருந்தது. ரியர் வியூ கண்ணாடியில் ஜோஷ்வாவின் முகத்தைப் பார்த்தான். அவன் மிகவும் பயந்திருந்தான்.
'ஹே ஜோஷ் பின்னாடி பாரேன் ஒரு வாட்டர் ஃபால்ஸ் எவ்வளவு அழகா தெரியுது..' என்று சூரஜ் கலாய்த்தான்... ஆனால் ஜோஷ் திரும்பாமல் இருந்தான்.
'சூரஜ் வேண்டாம் விளையாடாதே..' என்று ஸ்ரீதர் அவனை எச்சரித்தான்.
'ஜோஷ், Abovvvvve Turn' என்று ஸ்கவுட்-இல் கத்துவது போல் கத்தினான்.
இம்முறையும் ஜோஷ் அசரவில்லை. ஸ்ரீதர் புக் படித்துக் கொண்டிருக்க, வண்டி ஓரு ஹேர்பின் பெண்டில் அமைதியாக திரும்பிக் கொண்டிருந்தது. சூரஜ் மெலிதாய் சிரித்துக் கொண்டான். ஸ்ரீதர், அந்த புத்தகத்தில், Crossword Puzzle ஒன்றை கணித்துக் கொண்டிருந்தான்.
DOWN
13. RGV's horror flick starring rangeela girl (5)
B. H. O. O. T.
என்று அந்த புத்தகத்தில் எழுதிக் கொண்டிருக்க, சூரஜ் கத்தினான்.
'ஹே, ஜ்.. ஜோஷ், காருக்கு பின்னாடி அ..அ...அந்த பொண்ணு நின்னிட்டிருக்காடா..?' என்று கதறியபடி கூற ஜோஷ் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
சூரஜ் பயங்கரமாக சிரித்தான், 'ஹா ஹாஹ்ஹா... Now I got you, நீ திரும்பி பாத்துட்டே.. ஹாஹ்ஹா..' என்று சிரித்துக் கொண்டான்.
ஸ்ரீதர் தனது புத்தகத்தால் சூரஜ்-ஐ போட்டு அடித்தான். 'உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு எந்த காரியத்தையும் பண்ண முடியாதுடா..'
'ஹே ஹே, ஸ்ரீ, ரிலாக்ஸ்... வலிக்குது...' என்று கூறி சிரித்தபடி வண்டி ஓட்டிக்கொண்டே பேசினான்.
'ஜோஷ், Sorryடா, JUST FOR FUNதான். பயப்படாதே, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்' என்று சூரஜ் கூற, ஸ்ரீதரும் புத்தகத்தை மூடி வைத்தபடி 'Don't Worryடா, நாம ரொம்ப தூரம் திரும்பி வந்துட்டோம், இனிமே நீ திரும்பி பாத்தாலும் தப்பில்லை.. ஓகேவா' என்று கூறியபடி ஸ்ரீதர் ஃப்ரண்ட் சீட்டிலிருந்து திரும்பி ஜோஷ்வாவைப் பார்க்க, அங்கே...
அந்த மலைவாசிப்பெண் உட்கார்ந்திருந்தாள்...
அதே விகாரத்துடன்...
'ஆஆஆஆ...' என்று ஸ்ரீதர் அலற, அதே நேரம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சூரஜ்ஜூம் ரியர் வியூ மிரரில் பார்க்க, பின்சீட்டிலிருந்த அந்த மலைவாசிப்பெண் சூரஜ் மீது பாய்ந்தாள்.
வண்டி கண்ட்ரோல் இழந்து, மலைச்சரிவில் அடர்ந்த காட்டுக்குள் சரிந்து, கிடுகிடு பள்ளத்துக்குள் விழுந்தது...
ஸ்ரீதர் மெல்ல கண்விழித்தான்...
ஏடாகூடமான ஒரு பொசிஷனில் இருந்தபடி கை கால்களை இயக்க முடியாத நிலையில் இருந்தான்...
ஜோஷ்வாவும் சூரஜும் அருகில் இறந்திருந்தனர்...
உயரே உயரே தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை புள்ளியாக வெளிச்சம் தெரிந்தது. கார் விழுந்திருக்கும் பள்ளம் மிக ஆழமானது என்பதை ஸ்ரீதர் உணர்ந்தான். மாலை நேரம் நெருங்க நெருங்க, அந்த ஒரு புள்ளி வெளிச்சமும் மறைந்து கும்மிருட்டு சூழ்ந்தது.
அந்த இருட்டில் ஸ்ரீதரின் உயிர்துடிப்பு மட்டும் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீதர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறான். முடிந்தால் சென்று அவனை காப்பாற்றுங்கள்...
14 comments:
திக்..திக்...திகில், அருமை.
நன்றி நண்பா...
அட அருமையா இருக்குங்க உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன்..:))
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஷங்கர்...
// ஹேர்பின் வளைவுகளில் அந்த ஆல்ட்டோ வண்டி வளைந்துக் கொண்டிருந்தது. உள்ளே 3 பேர் இருந்தனர். அந்த மூவர் முகத்திலும் பணக்காரக்களை தெரிந்தது. தெரியாமல் எப்படி இருக்கும், சென்னையில் பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் பார்ட்னர்ஸ் அல்லவா.
//
கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் பார்ட்னர்ஸ் வெறும் ஆல்டொவிலா வருவார்கள். காசா பணமா நல்லா காஸ்ட்லி காரா போடுங்க ;)
மற்
நைஸ்.. பாஸ் உங்க நம்பர் கொடுங்க..
வாங்க Sankar சார்... வருகைக்கு மிக்க நன்றி...
என் நம்பர் 9884579191
Mr. damildumil,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி, அந்த காரை கவனிக்காமல் விட்டது என் பிழைதான். கார் ப்ராண்டை மாத்திட்டேன்...
உங்க இரா படத்தின் டிசைன்ஸ் பார்த்தேன்.வெற்றிக்கு என் வாழ்த்துகள் :)
எம்.எம்.அப்துல்லா
(பிண்ணனிப் பாடகர்)
//எம்.எம்.அப்துல்லா
(பிண்ணனிப் பாடகர்)//
தலைவரே எம்.எம்.அப்துல்லா உங்க பேரு, பிண்ணனிப் பாடகர்றது நீங்க படிச்சு வாங்கின பட்டமா :))))
இப்படிக்கு
டமில்டுமில்.
வெட்டி முண்டம், வீனா போன தண்டம் (Hello இது மக்கள் எனக்கு கொடுத்த பட்டம்)
@எம்.எம்.அப்துல்லா
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
//தலைவரே எம்.எம்.அப்துல்லா உங்க பேரு, பிண்ணனிப் பாடகர்றது நீங்க படிச்சு வாங்கின பட்டமா :))))
//
ஒரு பயலும் குடுக்காததால நானே எனக்குக் குடுத்துக்கிட்ட பட்டம் :)))
வாவ்...
சூப்பர் தல..
thrill a minute....
Post a Comment