முதல் நாள் எங்களது தயாரிப்பாளர் திரு. KTVR லோகநாதன் சார் அவர்களின் கல்லூரியில் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரு சின்ன விழாவோடு படப்பிடிப்பு துவங்கியது. வந்திருந்த அனைவரும் வாழ்த்தி படப்பிடிப்பை துவங்கி வைத்தனர்.
ஷூட்டிங் என்றாலே வேடிக்கை பார்ப்பவர் கூட்டம் அதிகமிருக்கும், அதுவும் 3D படம் என்றதும் இன்னும் ஆர்வமாக மானிட்டர் அருகில் வந்து பலரும் சூழ்ந்து கொண்டு மானிட்டரை எட்டிப் பார்க்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்த செக்யூரிட்டிக்களை போட்டால், அவர்களும் சேர்ந்து கொண்டு மானிட்டரை ஆர்வமாக பார்க்கின்றனர். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் மானிட்டரில் தெரியும் பிம்பம் போதையில் பார்ப்பது போல் இரண்டிரண்டாக தெரியும். பிரத்யேக கண்ணாடி அணிந்து பார்த்தால் மட்டுமே அவை 3D எஃபெக்ட் தரும். நானும் ஹரியும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, பின்னால் நிற்கும் பலரும் எங்களிடம் வந்து கண்ணாடியை போட்டு பார்க்க ஆர்வம் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் இப்படத்தை குழந்தைகள் படமாக எடுத்துவிடக்கூடாது என்ற முடிவில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இன்னமும் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் பெரியவர்களை காட்டிலும் பல குழந்தைகள்தான் ஆர்வமாக பார்க்கிறார்கள்.
கல்லூரியில் ஒரு காதல் காட்சி படம்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், 'அங்கிள்... அங்கிள்...? இது 3D படமா..?' என்று ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது, ஆனால் கூடவே எங்கள் இருவரது (நானும் ஹரியும்) மனதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது ஏன் என்று பதிவின் முடிவில் சொல்கிறேன்.
, படப்பிடிப்பில் இடைவேளையின்போது ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதை ஒரு நிருபர் படம் பிடித்து கொண்டிருந்தார். 'சாப்பிடும்போது படம் எடுக்க வேண்டாமே ப்ளீஸ்' என்று அவர் சொல்லி அந்த நிருபரை அனுப்பிவிட்டார். ஆனால், அன்று மாலையே, அவர் ஒரு கையில் ஆப்பிளுடன் பார்த்து சிரித்து கொண்டிருப்பது போன்ற அந்த புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாகிவிட்டது, அனைவரும், கையில் ஆப்பிள் வைத்து கொண்டு அவர் முன்னே சென்று நின்று, அந்த புகைப்படத்தை காட்டி, அவரை வெறுப்பேற்றி கொண்டிருந்தோம்.
நேற்று ஒரு வெள்ளைக்காரர், ஒரு பெண்ணைப் பார்த்து 'நீ கேர்ப்பமாயிருக்கே..!' (நீ கர்ப்பமாயிருக்கே) என்று சொல்ல வேண்டிய காட்சி, ஆனால் அவர் அந்த பெண்ணுக்கு அருகில் நிற்கும் ஒரு ஆணிடம் 'நீ கேர்ப்பமாயிருக்கே..' என்று கூற, அவர் பதறியடித்து 'நானில்ல... நானில்ல..' என்று அலறவும். கூடியிருந்த குழு மொத்தமும் சிரித்துவிட்டது.
நேற்று திரு. பாலா சிங் அவர்கள், தான் நடித்து முடித்த காட்சியை 3D-யில் கண்டுகளித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடன் வந்திருந்த வெள்ளைக்கார துரையும் இப்படத்தை 'அங்கு அனுப்புங்கள் இங்கு அனுப்புங்கள்' என்று ஏகத்துக்கும் பரிந்துரைத்து கொண்டிருந்தது மகிழ்ச்சியளித்தது..!
Out of Topic
கேணிவனத்திற்கு தகவல்களை சேகரித்த விவரங்களை எழுதுவதாக கூறியிருந்தேன். அதை எழுதுவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை..! ஆனால் கண்டிப்பாக அந்த விவரங்களை 'கேணிவனம்' புத்தக வடிவில் வரும்போது இணைத்து எழுதுகிறேன். பிறகு பதிவிலும் பதிகிறேன்.
கேணிவனத்திற்கு தகவல்களை சேகரித்த விவரங்களை எழுதுவதாக கூறியிருந்தேன். அதை எழுதுவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை..! ஆனால் கண்டிப்பாக அந்த விவரங்களை 'கேணிவனம்' புத்தக வடிவில் வரும்போது இணைத்து எழுதுகிறேன். பிறகு பதிவிலும் பதிகிறேன்.
(அந்த சிறுவன் கேட்டதில் மகிழ்ச்சி + அதிர்ச்சி என்று சொல்லியிருந்தேன்.
மகி்ழ்ச்சி = அவன் ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது.
அதிர்ச்சி = 'அங்கிள்' என்று அழைத்தது.)
மகி்ழ்ச்சி = அவன் ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது.
அதிர்ச்சி = 'அங்கிள்' என்று அழைத்தது.)
நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!
ஹரீஷ் நாராயண்
18 comments:
vaazhthukkal boss
பாஸ் உண்மையை தானே அந்தப் பய்யன் சொன்னான் ... ஹஹஹா. வாழ்த்துக்கள் ஹரிஷ் . வெள்ளித்திரையில் காண காத்திருக்கிறேன்
வாழ்த்துக்கள் ஹரீஷ்.. படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.. சுவையான நிகழ்வுகள். அழகான தொகுப்பு!
///அதிர்ச்சி = 'அங்கிள்' என்று அழைத்தது.// இதெல்லாம் ஒரு பொழைப்பு!
வணக்கம் ஹரிஷ்
கேணிவனம் புத்தக வடிவில் வருவதை ஆவலுடன் எதிர்பார்கிறேன் ...
அம்புலி 3D ல மட்டும் தானா ஹரிஷ் ? நார்மல் படம் போல பார்க்க முடியாதா ?
///அதிர்ச்சி = 'அங்கிள்' என்று அழைத்தது.//
பெரீப்பா அல்லது தாத்தான்னு சொல்லிருக்கணுமோ? :-)))
படம்குறித்த செய்திகள் தொடர்ந்து எழுதுங்க.
Nice to hear the happenings thru the directorial blog :) ALL THE BEST Hareesh :)
அம்புலி வெள்ளிதிரைக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
இன்னும் பல இனிய அனுபவங்கள் இனிதாய் அமைய வாழ்த்துகள் ஜி...
hareeshnna,
adutha thadavai weekendla post podaatheenga, naan latecomeraagiduren...oops!!! :)
ambuli pada title design romba arumaiyaa vanthirukku.neenga evvalavu menakkedareengannu theriyuthu :)
heroine azagaayirukkiraar. puthumugamaa??
interesting thagavalgal. kalakkunga. vaazthukkalnna.
book vadivam eppa varumnu sollunga. unga kaiyezuthu pottu kidaikkumaa? :))
வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு நன்றி..!
வணக்கம் எஸ்.கே.,
உண்மை கசக்கிறது என்ன செய்ய... அம்புலி-ஐ வெள்ளித்திரையில் கொண்டுவரும் பிரயத்தனங்கள் முழுமூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கு நன்றி...
வணக்கம் அநன்யா,
வாழ்த்துக்கும் ஆவலுக்கும் நன்றி..!
வணக்கம் வேங்கை,
கேணிவனம், பிழைதிருத்தலுக்காக ஒரு தமிழறிஞரிடம் கொடுத்திருக்கிறேன். அவரிடமிருந்து திருந்திய வடிவம் வந்ததும் புத்தகமாய் போட்டுவிடலாம்.
வணக்கம் ஹுஸைனம்மா,
பெரீப்பா, தாத்தான்னு நீங்களே சொல்லிக்கொடுத்துடுவீங்க போலருக்கு..! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.
வணக்கம் Bingleguy,
ThanX for visiting my blog... I'm so happy to receive your wishes Ji...
வணக்கம் ரஹும் கஸாலி,
அம்புலி வெள்ளித்திரைக்கும் வரும் நாளை விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். ஆவலுக்கு நன்றி..!
வணக்கம் சீமான்கனி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா..!
வணக்கம் அன்னு,
வீக்கெண்ட்லதான் எழுதுறதுக்கு கொஞ்சூண்டு டைம் கிடைக்குது..! நீங்கள் லேட்டாய் வந்தாலும் பரவாயில்லை சகோதரி, உங்கள் மறுமொழியை காலம் தாமதித்து படித்தாலும் எனக்கு மகிழ்ச்சியே..!
-
DREAMER
Nice Info Keep it up!
Home Based new online jobs 2011
Latest Google Adsense Approval Tricks 2011
Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
New google adsense , google adsense tricks , approval adsense accounts,
latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,
Quick adsense accounts ...
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
More info visit Here www.elabharathi2020.wordpress.com
விடுங்க அங்கிள்..இதுக்கெல்லாம் போய் கவலைப்பட்டுகிட்டு :))
//படப்பிடிப்பில் இடைவேளையின்போது ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்//
ஒரு
....
....
....
ஆச்சர்யகுறி
ஸார்..சனம் ஸார் :))
நைட் ஷிஃப்ட் ஹரீஷ்..அதான் இவ்ளோ லேட்டா கமெண்ட்
கலக்குங்க ஹரீஷ்.... மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
தங்களின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் ஹரிஷ்.
வாழ்த்துக்கள் நண்பரே!
வணக்கம் ரகு,
லேட்டா வந்தாலும், ஆச்சர்யக்குறி கவிதையோட களமிறங்கியிருக்கீங்க..!
வணக்கம் சிவகாசி மாப்பிள்ளை,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!
வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா..!
வணக்கம் எஸ்.கே,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!
Uncleeeeeeeee.... haha..
Keep posting.. it would be interesting to see in future... all the best
~Mohan
Dreamer,
100 நாள் களித்து முதல் முறையாக அம்புலி பார்த்தேன்.....
இதோ என் விமர்சனம்.....
+ ஆர்டிஸ்ட் selection அருமை....
+ 3D ஆங்கில படங்களை விட மிக துல்லியமாக இருந்தது,,
+ கதை, கதையில் வரும் animation காட்சிகள்.
- உங்கள் கதைகளை படிக்கும் போது கிடைத்த grip ஏனோ எனக்கு பார்க்கும் போது கிடைக்க வில்லை.
_ இதற்கு காரணம் என்று நான் எண்ணுவது.... screenplay, Editing.
- அம்புலி பத்திய flashback 3 முறைக்கு மேல் இருந்தது இதற்கு ஒரு உதாரணம்.....
+ ஒரு Blogger Director அவதாரம் எடுத்திருப்பது பெருமைக்கான விஷயமே...
வாழ்த்துக்கள்........
Post a Comment