சென்ற வாரம் பிறந்த ஊரில் (சென்னையில்) ஷூட்டிங் நடந்ததால், ஆர்வத்தில் அதை பற்றி முதலில் எழுதிவிட்டேன். மீண்டும் ரீவைண்டு செய்து, அவுட்டோம் ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களின் pending இதோ...
அவுட்டோர் ஷூட்டிங்கில் கோவை, பழனி, மேட்டூரைத் தொடர்ந்து அவினாசியில் கருமத்தம்பட்டியில் ஒரு புல்வெளியில் ஸ்டண்ட் காட்சிகள் நடந்தது. அங்கு புதுமுகங்களோடு திரு. பார்த்திபன் அவர்களும் இடம்பெறும் காட்சிகள் எடுத்து கொண்டிருந்தோம். வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் , வேறெங்குமில்லாத அளவுக்கு இங்கு மிகவும் அதிகமாக கூடிவிட்டது. சுமார் 2000 ஆட்கள் கூடிவிட்டபடியால் காவலர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் நல்லபடியாக ஷூட்டிங் நடத்தி கொண்டிருந்தோம். கூடுதலாக பார்த்திபன சாரின் ரசிகர் மன்ற ஆட்களும் வந்திருந்து படப்பிடிப்பை நல்லபடியாக நடத்த உதவினார்கள்.
நான்கு திசையிலும் 80 அடி உயரத்தில் லைட் வைப்பதற்கு பயன்படும் கோடாக்கள் சுற்றிலும் வைக்கப்பட்டிருக்க, கேமிராமேன் ரொம்ப நாளாகவே என்னிடம் அந்த கோடாவில் ஒருமுறை ஏறி பார்க்கும்படி கூறியிருந்தார். நானும் பிறகு, பிறகு என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சீக்கிரமாகவே போய்விடவே, அவர் கோடாவில் ஏறுமாறு அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். சரி ஏறித்தான் பார்ப்போமே என்று ஏற ஆரம்பித்தேன். அந்த இடம் புல்வெளி, ஏற்கனவே பரந்து விரிந்து கிடக்கும் மைதானம் என்பதால் காற்று பலமாக அடித்து கொண்டேயிருக்க... பாதி தூரம் ஏறிவிட்டேன். ஆனால் அதற்குமேல் கால்கள் நடுக்கம் காட்ட ஆரம்பித்தன. அப்படியே பாதியில் அமர்ந்துவிட்டேன். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று எண்ணியிருக்க, கீழே பார்த்திபன் சாரின் கார் வந்து நின்றது. இதுதான் சாக்கு என்று கூறி, சரசரவென்று இறங்கி வந்துவிட்டேன். கேட்டதற்கு, பார்த்திபன் சார் வந்துவிட்டார் என்று சொல்லி சமாளித்து வைத்தேன். மீண்டும் அந்த கோடாவை அண்ணாந்து பார்க்க, இதில் தினமும் இரவு முழுவதும் நின்று வேலைபார்க்கும் லைட்மேன்களை எண்ணி மிகவும் வியந்தேன். இதை உணரவைத்த கேமிராமேன் சதீஷூக்கு நன்றி..!
கோடாவில் ஏறும் முயற்சியை கைவிட்டு பாதியில் அமர்ந்தபடி
பார்த்திபன் சார் அடித்த ஜோக்கிற்கு சிரித்து, கோடாவிலிருந்து இறங்கிய களைப்பகன்றபடி...
வழக்கமாக வரும் கூட்டத்தைவிட கடைசி நாளான 4ஆவது நாள், கூட்டம் மிகவும் அதிகமாக வந்தவண்ணம் இருந்தன. கூட்டத்தை சமாளிக்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது. இதில் காட்சியை எப்படி படம்பிடிப்பது? என்று எண்ணி வருந்தி கொண்டிருக்க, படப்பிடிப்பு குழுவிலிருந்த பலரும் உதவ முன்வந்தார்கள். குறிப்பாக லைட்மேன் சீஃப் திரு.மோகன் அவர்கள், கையில் மைக் பிடித்தபடி கூட்டத்தினரிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை குதூகலப்படுத்தி நட்பு கொண்டு அவர்களை சமாளித்து கொண்டிருந்தார். குழந்தைகளை "A for AMBULI" (இதிலும் ஒரு பப்ளிசிட்டி பாருங்கள்..!) என்று மேக்கிங்க ஷூட் செய்யும் கேமிராவை பார்த்து கூறும்படி விளையாட்டு காண்பித்து கொண்டிருந்தார்.
கூட்டத்திற்கு மத்தியில் நான், ஹரி மற்றும் எங்கள் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட். பின்னால் நடுவில் நின்றிருப்பவர் லைட் சீஃப் திரு. மோகன்
ப்ரொட்யூஸர் திரு. KTVR லோகநாதன் சாரும் (வலமிருந்து 2ஆவது நபர்) அவரது நண்பர்களும். வலதுபக்கமிருப்பவர் அவரது மகன் டாக்டர். அருண்
குறிப்பாக வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் ஒருவர், குடித்துவிட்டு வந்து, படத்தில் நடித்தே தீருவேன் என்று அடம்பிடித்து கொண்டிருந்தார். தண்ணியடித்தால் சிலர் குழந்தைகளாகிவிடுகின்றனர். சாக்லெட் வாங்கித்தருவதாக ஏமாற்றுவது போல் சான்ஸ் வாங்கி தருவதாக ஏமாற்ற வேண்டியதாய் உள்ளது. அவர், யார் சொல்லியும் கேட்காமல் குறுக்கே சுற்றிக்கொண்டிருக்கவே, உதவி இயக்குனர்கள் அவரை தனியாக தள்ளி கொண்டு போய், மேக்கிங் கேமிராவை கொண்டு அவரை பாடச்சொல்லி பேச சொல்லி படம்பிடித்து கொண்டிருந்தனர். அவரும் திருப்தியாக வீடு திரும்பினார். அனேகமாக அடுத்த ப்ராஜெக்டுக்கான முதல் ஆடிஷன் ஃபூட்டேஜ் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
லைட் யூனிட்டில் திரு.பாண்டு என்று ஒரு மும்பைக்காரர் வந்திருந்தார். ஓய்வு நேரங்களில் இவரிடம் தமிழ் வார்த்தைகள் சொல்லி அதை திரும்ப சொல்லக்கேட்டு அவர் கூறும் மழலை தமிழை ரசித்து விளையாடிக் கொண்டிருப்போம். அவரும் இதை ரசித்து விளையாடுவார். பாம்பேவில் ஷூட்டிங்கின்போது கண்டிப்பாக அவரது வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்பு பொழிவார். அவினாசியில் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது, இவருக்கு கோடாவில் தேள் கடித்துவிட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று குணப்படுத்தினார்கள். அடுத்த நாளே அவரும் சகஜமானார். ஆனால் இவருக்கு தேள் கடித்த சமாச்சாரம் எங்களுக்கு அடுத்தநாள் காலைதான் தெரியவந்தது. அவினாசியில் கடைசி நாள் ஷூட்டிங் என்பதால் தடங்கல் ஏற்படாமல் இருக்கும்பொருட்டு இந்த விஷயத்தை மேனேஜர்கள் எங்களிடம் கூறாமல் இரகசியமாக கையாண்டுள்ளனர். நல்லவேளையாக அவருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியானோம்.
ஆனால் நாங்கள் தேனிக்கு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு பயணப்படும்போது இன்னொரு விஷயம் கேள்விப்பட்டு பீதிக்குள்ளானோம். அவினாசியில் நாங்கள் ஷூட்டிங் நடத்திய புல்வெளியில், ஆங்காங்கே புல்களினூடே தேள்கள் ஏராளமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருந்ததாக குழுவில் பலரும் தெரிவித்தனர். நாங்கள் படம்பிடித்தது ஸ்டண்ட் காட்சி என்பதால் புல்வெளியில் சில இடங்களில், தரையில் உட்கார்ந்து, படுத்து, உருண்டு என்று ஷூட்டிங் செய்திருந்தோம். நல்லவேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை..!
அடுத்த பதிவில் தேனியில் நடந்த பகிர்வுகளை பதிகிறேன்...
(தொடரும்..!)
20 comments:
Hi All,
There was a problem in displaying "post comment" option yesterday..! I've fixed it to post it in a seperate pop up window. Sorry for the inconvenience...
i feel being in your unit...
Good.......
ThanX Agal..!
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
வணக்கம் குரு,
வருகைக்கு நன்றி..!
ஹரீஷ், கொஞ்சம் வெய்ட் போட்டிருக்கீங்க ;)
//மீண்டும் ரீவைண்டு செய்து, அவுட்டோம் ஷூட்டிங்கில்//
அவுட்டோர்..
நேரம் கிடைக்கும்போது அடிக்கடி எழுதுங்க ஹரீஷ்
வாழ்த்துக்கள் ஹரீஸ்.. உங்கள் குழுவின் உழைப்பு தெரிகிறது..
Wow... looks like making a movie is a real adventure than anything we see in sci-fi movies. Nice narration of the shoot. Thanks for sharing. All the very best with the project. Thanks
good one...
படப்பிடிப்பு அனுபவங்கள் கூட உங்க கதைகள் போல த்ரிலிங்கா இருக்கு... ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
வணக்கம் ரகு,
வெயிட்டான கதையை யோசிச்சு யோசிச்சு... இப்படி வெயிட் போட்டுட்டேன் நினைக்கிறேன். ஹி..! ஹி..! குறைச்சுக்கிறேன். (உடம்பு வெயிட்டை மட்டும்) கேணிவனம் தாஸ் மற்றும் டீம் பங்கு பெறும் அடுத்த கதைக்கான தகவல்களை திரட்டிக்கொண்டிருக்கிறேன். கதை சம்மந்தமாக ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், அம்புலிக்கு பிறகே அது சாத்தியப்படும். அதுவரை சிறுகதைகள் எழுதலாம் என்றிருக்கிறேன்.
வணக்கம் நாடோடி நண்பரே,
உழைப்பை பகிரும்போது களைப்பு களைகிறது. வாழ்த்துக்கு நன்றி..!
வணக்கம் அப்பாவி தங்கமணி,
'அம்புலி 3D' நிச்சயம் வித்தியாசமான (இந்த வார்த்தையை சொல்லவே பயமாக இருக்கிறது) கதையாக இருக்கும். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..!
வணக்கம் சமுத்ரா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..!
வணக்கம் CoolBoy கிருத்திகன்,
உங்கள் எதிர்பார்ப்பை 'அம்புலி 3D' பூர்த்தி செய்யும் என்று நிச்சயம் நம்புகிறேன். பதிவை படித்து ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!
-
DREAMER
That was so narrative and also makes the reader get inquisitive....Great writing! :) And all the best 2 achieve ur dream!
Cheers
PK!
hai na ungaludaya ambuli out door experience is super.Intha filmla enaku oru vaaipu kutudhatharkaga thanks.intha patathula evlo problemsa face panninga ithukkaga neenga evlo kasta patingantrathu enaku therium atha kankuda parthen.evlo porumaya nammudaya ungalutaya ulaypukkundana palan nichayamaga ketaikum
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
sir unga kenivanam naval supera irunthuchu story valakkama illama openingla irunthea etho nataka povathunu oru ethir parpa earpatuthuchu.apuram rocket vegathula saspence vechu paraka arampichutuchu.pakkathuku pakkam viru virupu youkikka mudiyatha saspence+climax,muttrilum vithiyasamana kathai,kathai kalam.kathai,dialogue,kathaiya pattriya varnanai ellamea super.intha kenivanam patikum pothea oru hollywood movie partha mathire irunthuchu.nichayama itha marupatiyum patippean.enaku intha story romba romba putuchiruku.itha sikkaramagavea vellithirail kaana avalaga iruken.pls athukaga muyarchi pannungalean.ethil na romba romba putuchathu climax than. sathyama ippati oru climax ethirparkavea illa
வணக்கம் நண்பரே
நீண்டகாலமாக பணி பளு காரணமாக தங்கள் வலை பதிவு பக்கம் வர முடியவில்லை.
உங்கள் படபிடிப்பு அனுபவங்களை படித்தேன். மனதுக்கு மகிழ்சிசயாக இருக்கிறது.
உங்கள் ஓர் இரவு திரைப்படம் இங்கு மலேசியாவில் நான் வசிக்கும் பகுதியில் கிடைக்கவில்லை.
எங்கு கிடைக்கும் என்று ஏதும் விவரம் தெரிந்தால் தெரிவியுங்கள்.
நன்றி.
அன்புடன்
விலானிராஜ்,
மலேசியா
வணக்கம் பொன்னரசி கோதண்டராமன்,
Thanks for ur wishes..! Keep visiting the blog for more updates.
வணக்கம் கிருஷ்ணா,
வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி..! கேணிவனம் விமர்சனமும் படித்து மகிழ்ச்சியுற்றேன். புத்தக வடிவில் கேணிவனம் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...
வணக்கம் விலானிராஜ்,
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் கருத்துக்களை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. 'ஓர் இரவு' திரைப்படத்தின் டிவிடி ரிலீஸ் இன்னும் நிகழ்த்தப்படவில்லை. அம்புலியின் ரிலீஸுக்கு பிறகு கண்டிப்பாக 'ஓர் இரவு' திரைப்படத்தின் டிவிடி-ரிலீஸ் வேலைகளை கவனிக்கவுள்ளோம். கண்டிப்பாக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் தெரியப்படுத்துகிறேன்.
-
DREAMER
படப்பிடிப்பு அனுபவங்கள் கூட உங்க கதைகள் போல த்ரிலிங்கா இருக்கு... ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
Celebrities will tell you having their makeup at their fingertips is their essential task and it should be for every woman. That's not to if you have to pack around 50 pounds of makeup. Just a tube of lipstick can do a lot to freshen the face.Saddlebag support systems are manufactured by making use of cutting edge technology which ensures that your lower bag maintains its shape when bumped or banged. Simply sit at your laptop or computer and do a quick search online for the website that offers high quality saddlebag support systems and accessories. Make sure that the supplier integrates every piece of the kit judiciously into the structure of your bag to create a flawless structure which will keep your saddlebag looks extremely stunning,With hanging compression setting bags, You can keep your wardrobe clean while saving closet safe-keeping. Use any machine to remove air and compress your clothing. You can actually fit ten suits or jackets into one third of the space they would normally take up in your closet! Perfectly as, An airtight seal inhibits bugs, Humidity and dust from ruining your outfits.In addition to theft from autos and the quality lifestyle crimes[url=http://www.boosbag.com]bags 342[/url] Happy employees equal advantageous employees. Keep employees happy while encouraging internal branding by offering employees branded corporate apparel, Desktop items, Headwear and awards as long as they reach milestones within your company. It doesn't matter what big or small the gift, You are sure to see a rise in productivity and morale among your staff,Foil bags are also used to pack espresso beans, Insane, Loose tea leaves and ground mixes and others. This is one of the eye catching ways to show product. Similarly clear bags are also used for overall the things. The bag does not looks like the "optic" Or my new more popular "Headscarf print, The tip of the horizontally "d" Facing additional "Chemical" Need to embossed with the letters "YKK, On coach purses and the "Stipped down") Don't have a serial number. The serial number typically is made up of series of numbers or a numberandletter combination. The last 45 digits of the serial number show the style quantity of the bags.
louis vuitton pas cher The opening of the hotel coincided with the UN arrival in Geneva. sac longchamp pliage
Post a Comment