நண்பர்களுக்கு வணக்கம்,
போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து பதிவு எழுத முடியவில்லை..! இன்று 'அம்புலி 3D' இசை வெளியீடு... சென்னை காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது...
நேரில் கலந்து கொள்ள முடியாத வெளிநாட்டு நண்பர்களும் மற்றும் உள்நாட்டு நண்பர்களும் இசை வெளியீட்டு விழாவை கண்டு களிப்பதற்காக இணையதளத்தில் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கண்டிப்பாக பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
AMBUILI 3D LIVE AUDIO LAUNCH LINKS
WWW.AMBULI3D.COM
WWW.FACEBOOK.COM/AMBULI3D
WWW.CHENNAIONLINE.COM
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
Popular Posts
-
நம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...
-
பாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...
-
நண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...
-
பகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...
-
இக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...
-
2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...
-
உலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...
-
(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...
-
இக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...
-
இக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க...
12 comments:
All the best nanpa. I ll try to come...
ஹரிஷ் சார் நேற்றே செய்தித்தாள்களில் பார்த்தேன் "நாளை இசை வெளியீடு என்று".நேற்றே advance வாழ்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைதேன்.ஆனால் மறந்துவிட்டேன்.பாடல்கள் எப்படி இருக்கும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது.பாடல்களை எப்படியாவது இப்போதே கேட்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.ஆனால் எங்கும் CD கிடைக்காது என்று நன்றாக தெரியும்,நாளை எப்படியாவது பாடல்களை கேட்டுவிடுவேன்.நானும் நிச்சயம் கலந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.பாடல்கள் பெரிய வெற்றி பெறவும்,விழா நல்லபடியாக நடக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாடல்கள் வெற்றி பெறவும்,விழா நல்லபடியாக நடக்கவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாடல்களை கேட்க மிக ஆவலாய் இருக்கிறோம்... வாழ்த்துக்கள் ஹரிஷ் சார்..
இன்விடேஷன் வரல ஹரீஷ்..அது இல்லாம உள்ளே அனுமதிப்பாங்களான்னு ஒரு கூச்சம் கலந்த சந்தேகம் இருந்தது. அதுதான் போகலாமா வேணாமான்னு டபுள் மைண்ட்ல இருந்துட்டேன். கண்டிப்பா நீங்களும் பிஸியா இருப்பீங்க, உங்களை டிஸ்டர்ப் பண்றதுக்கும் விருப்பமில்ல. வீடியோ பார்த்துட்டு, ஆடியோ கேட்டுட்டு சொல்றேன். இப்போதைக்கு வாழ்த்துகள் :)
Great to know "Ambuli" reached post production stage... All the best... nice show
Regards,
Bhuvana
வணக்கம் ஹரிஷ்
வாழ்த்துக்கள் ... ஆவலுடன் அம்புலியை எதிர் பார்க்கிறோம்
இப்போதான் ஃபோட்டோஸ்லாம் பார்த்தேன் ஹரீஷ். ரொம்ப நாளைக்கு (மாதங்கள்?) அப்புறம் இப்பதான் நீங்களும், ஹரியும் தாடியை விட்டு வெளியே வந்திருக்கீங்க போல..:-)
வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு நன்றி..!
வணக்கம் ஸ்வீட் ராஸ்கல்,
பாடல்கள் இப்போது இணையதளத்தில் இருக்குது... கேட்டுட்டு கண்டிப்பா எப்படியிருக்குன்னு ணொல்லுங்க...
வணக்கம் வெறும்பய,
உங்கள் வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி...
வணக்கம் கவிதை காதலன்,
பாடல்கள் வெளியாகிவிட்டமையால், கேட்டுவிட்டு எப்படியுள்ளது என்று கருத்து தெரிவிக்கவும்.
வணக்கம் ரகு,
இன்விடேஷன் இல்லாமலே நீங்க நேர்ல வந்திருக்கலாம் ரகு, அல்லது எனக்கு ஒரு ஃபோன் பண்ணி கேட்டுட்டு வந்திருக்கலாமே..! நான் என்னதான் பிஸியின்னாலும், விழா நல்லமுறையில நடக்க நண்பர்களும் தேவையில்லையா, போங்க ரகு... உங்களை நேர்ல எதிர்ப்பார்த்தேன். பாடல் வெளியாகிவிட்டது கேட்டுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க...
வணக்கம் அப்பாவி தங்கமணி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! பாடல்களை கேட்டுட்டு கருத்து தெரிவியுங்க...
வணக்கம் வேங்கை,
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க..!
பாடல்கள் நன்றாக உள்ளது ஹரீஷ். waiting for my t-shirt.. :-) . இந்த திரைப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
வணக்கம் செல்வமணி,
பாடலை கேட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி..! டி-ஷர்ட் திங்கள் முதல் (நாளை முதல்) கொரியரில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... கண்டிப்பாக வந்துவிடும்...
-
DREAMER
வணக்கம் ஹரிஷ் வாழ்த்துக்கள் ... ஆவலுடன் அம்புலியை எதிர் பார்க்கிறோம்
Post a Comment