Monday, January 02, 2012

அம்புலி 3D : புத்தாண்டு மேஜிக் போஸ்டர்

வணக்கம்,

கடினங்களை கடந்த வருடமே கடந்துவிட்டதால்...
இனி வரும் இந்த புதிய வருடம்...
இனிமைகளை வாரி இரைத்திட...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

எனது பள்ளிக்காலத்தில் ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்த கிறித்துவ மத நண்பர்கள், கையில் ஒரு துண்டுபிரச்சார சீட்டை கொடுத்தார்கள்... அதில் கருப்பு வெள்ளையின் கலவையில் ஒரு டிசைன் இருந்தது... அதை 30 விநாடிகள் உற்றுப்பார்த்துவிட்டு வானத்தை பார்க்கும்படி போட்டிருந்தது... அப்படி செய்ததும் துண்டு சீட்டில் நாம் பார்த்த அந்த டிசைன் வானத்தில் இயேசு கிறித்துவாய் தெரியும்... இதைப்பார்த்தும் நானும் எனது நண்பர்களும் மலைத்துப் போனோம்...

அடடே..! வானத்தில் இயேசு தெரிகிறார் என்று கொண்டாட ஆரம்பித்தோம். அன்று அந்த துண்டுச்சீட்டுக்கு அப்படி ஒரு டிமாண்ட் இருந்தது... அனைவரும் வீட்டிற்கு கொண்டு போய் பெற்றோர்களிடமும் அதைக் காட்டி அவர்களையும் ஆச்சர்யப்படுத்தினோம்... சுமார் ஒரு வாரத்திற்கு பள்ளியில் இதே பேச்சாய் இருந்தது...


இதுதான் அந்த டிசைன்...

இன்று அப்படிப்பட்ட இல்யூஷன் வகை டிசைன்களை இண்டர்நெட்டிலும் நிறைய  காணக்கிடைக்கிறது... ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், பின் லேடன், ஒபாமா... இப்படி பல பிரபலங்களின் முகங்களை இந்த வகை இல்யூஷன் டிஸைன்களில் நீங்களும் ஃபேஸ்புக்கில் கண்டிருக்கலாம்...

அந்த வகையில், அம்புலி படத்திற்கு ஒரு டிசைன் செய்ய எண்ணி செயல்படுத்தியிருக்கிறோம்... நேற்றைய புத்தாண்டு சிறப்பு டிசைனாக தமிழ் நாளிதழ்களில் வெளியான டிசைன் இதோ உங்கள் பார்வைக்கு...

தமிழ் நாளிதழ்களில் அம்புலி புத்தாண்டு சிறப்பு டிசைன்

டிசைனைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

8 comments:

கவிதை காதலன் said...

தலைவா நேத்தே இதை பேப்பர்ல பார்த்தேன்.. ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருந்து.. உடனே உங்களுக்கு கால் பண்ணேன்.ரொம்ப பிஸி போல... ஃபோன்லதான் சொல்ல முடியல.. இப்ப சொல்லிட்டா போச்சு.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக அம்புலி அமைய வாழ்த்துக்களும்.. கலக்குங்க தலைவா..

DREAMER said...

வணக்கம் கவிதை காதலன்,
உங்கள் வாழ்த்தை பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி..! நீங்களும் பள்ளிக்காலத்தில் இந்த அனுபவத்துக்கு உள்ளானது குறித்து ஃபோனில் கூறியது மகிழ்ச்சியளித்தது...

நேற்று ஃபோன் செய்த நண்பர்கள் பலரும், 'அம்புலி டிசைனை பேப்பரில் பார்த்ததைவிட சுவற்றில்தான் அதிக நேரம் கண்டுகளித்தோம்' என்றதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

-
DREAMER

ரஹீம் கஸாலி said...

அருமை நண்பரே....கண்ணை விட்டு அகல மறுக்கிறது டிசைன். இந்த படத்தை பார்த்துவிட்டு எதை பார்த்தாலும் இதுதான் தெரிகிறது.
இந்த பட டிசைன் கண்ணை விட்டு அகல மறுப்பதுபோல் அம்புலி படமும் மக்கள் மனதை விட்டு அகலாமல் இருக்க வாழ்த்துகிறேன்.

ரஹீம் கஸாலி said...
This comment has been removed by the author.
இந்திரா said...

அருமையான டிசைன்..
ஆனா திரும்ப திரும்ப பாத்தா தான் புரியுது..

DREAMER said...

உங்கள் கண்ணையும் மனதையும் விட்டுவிலகாமல் இருக்கும்படி டிசைன் அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி..! நிச்சயம் படமும் இதே போல் மனதைத் தொடும்படி அமையும் என்று உறுதியளிக்கிறேன்... இமெயிலில் எனது அலைபேசி எண்ணை அனுப்புகிறேன்... கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது தொடர்பு கொள்ளவும்... மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வணக்கம் இந்திரா,
திரும்ப திரும்ப நீங்கள் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த டிசைன் வடிவமைக்கப்பட்டது... கண்டுகளித்ததற்கு மிக்க நன்றி..! உங்கள் அன்பர்கள் நண்பர்களுக்கும் டிசைனைப் பற்றி தெரியப்படுதினீர்களென்றால் மேலும் உதவியாக இருக்கும்...

-
DREAMER

ரஹீம் கஸாலி said...
This comment has been removed by the author.
Srikumar said...

தங்கள் பட அனுபவங்களை படிக்க படிக்க படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு ஆவலுடன் எதிர் பார்க்கும் ரசிகன்

There was an error in this gadget

Popular Posts