Monday, March 19, 2012

"அம்புலி 3D" : விமர்சனக்கோவை


நண்பர்களுக்கு வணக்கம்,


அம்புலி வெளியாகி வெற்றிகரமாக இன்று 32வது நாள்... பரீட்சைக் காலத்திலும் அம்புலி நன்றாக போய்க்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் குழந்தைகள்... நண்பர்கள் பலரும் ஃபோன் செய்யும்போது அவரவர் வீட்டுக் குழந்தைகள் அம்புலியைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பதாய் தெரிவித்தார்கள்... உச்சக்கட்டமாய் பெரம்பூரைச் சேர்ந்த எனது தந்தையின் நண்பர் அமரவாணன் என்பவரின் குழந்தை தனது பெயரை 'ஆர்த்தி'யிலிருந்து 'அம்புலி' ஆர்த்தி என்று மாற்றிக் கொள்ள விரும்பி அடம்பிடிப்பதாய் புலம்பினார்... தாங்க்ஸ் அம்புலி ஆர்த்தி...!



படத்தை பார்த்த நண்பர்கள் பலரும் நிறைகளை நிறையவே சொல்லியும் குறைகளை கூடுமானவரை பக்குவமாயும் எடுத்துரைத்தனர்...



A, B, C என்று அனைத்துத் தரப்பிலும் படம் சென்றடைந்திருப்பதாக எங்கள் அலுவலக அக்கௌண்டன்ட் எடுத்துரைத்தார்... மகிழ்ச்சி..!



அம்புலி குறித்து வெளியான ஆஹா ஓஹோ என்ற விமர்சனங்களும்... அய்யய்யே..! சே..! த்தூ..! போன்ற விமர்சனங்களும் எல்லாம் வந்தாகிவிட்டது... இதுவரை நான் பதிவெழுதாததற்கு முக்கியக் காரணம்... படம் வருவதற்கு முன்பு அதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சுயவிளம்பரம் செய்யலாம். ஆனால் படம் வெளிவந்ததும் அந்தப்படத்தின் தரம்தான் விளம்பரம்... அது பார்வையாளர்களின் வழியே பரவும் வாய்வழி விளம்பரம்... அந்த வகையில் 'அம்புலி 3D' படத்திற்கு மிக நல்ல Mouth Publicity கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..!



எனது எழுத்துப்பயிற்சி பதிவுலகிலிருந்து தொடங்கியதால், பதிவுலகில் நம் படம் எப்படி பேசப்படுகிறது என்ற ஆவல் எனக்கு தனிப்பட்ட முறையில் படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே இருந்து வந்தது...



பதிவுலக நண்பர்கள் 'அம்புலி'யை விமர்சித்து எழுதிய பதிவுகளை முடிந்தவரை திரட்டியிருக்கிறேன்... இவை தவிர உங்களுக்கு தெரிந்து வேறு விமர்சனங்கள் இருந்தாலும் தெரிவியுங்கள்...



கேபிள் சங்கர் http://www.cablesankaronline.com/2012/02/3.html

ரிலீசுக்கு முன்பே படத்தைப் பார்க்க கேபிளாரைஅழைத்திருந்தேன்... அவரும் குடும்பத்துடன் வந்து சத்யம் ப்ரீமியரில் கலந்துக் கொண்டார்..! நன்றி ஜி..!



ரஹும் கஸாலி http://www.rahimgazzali.com/2012/02/ampuli-3d-review.html

அரசியல் பதிவுகளுக்கு மிகவும் பிரசித்தமான நண்பர் ரஹும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி பாராட்டினார்..! அவருடன் சேர்ந்து படம் பார்த்த மற்ற புதுக்கோட்டை நண்பர்களையும் டெலிஃபோனில் பேச வைத்தார்... அவருக்கும் இந்நேரத்தில் மிக்க நன்றி..!


குறும்புகள் ரகு http://www.kurumbugal.blogspot.in/2012/02/3d.html

என் நெருங்கிய நண்பர்... நான் BPOவில் பணிபுரியும்போது இவரும் என் சக ஊழியர். பணி இடைவேளைகளில் நானும் இவரும் நள்ளிரவு 1.30மணிக்கு எடுக்கும் ப்ரேக்கில் என் கதைகளை கேட்டுக் கொண்டே தூக்கம் தொலைப்பவர். கதையை கேட்டதோடல்லாமல், ஊகத்தோடு ஊக்கத்தொகையும், நட்புக்கரத்தோடு கரண்ஸியும் கொடுத்து என் முதல் குறும்படத்திற்கு தயாரிப்பாளராய் மாறியவர். இவருக்கு இந்த பதிவின் மூல(மு)ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் திரைப்படங்களுக்கு நண்பனாய் மட்டுமில்லாமல் நடுநிலை விமர்சனங்கனாய் எழுதுவது எனது எதிர்ப்பார்ப்புக்குறியது...


எழுத்தாளர் சுப்ரஜா http://www.nanumcinemavum.blogspot.in/

சமீபத்தில் அறிமுகமான இவர் மிக நல்ல நண்பர்... படத்தை பார்த்து பாராட்டியதோடு தன்னுடைய குருநாதர் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான ஸ்ரீதர் சார்) அவர்களின் படத்தோடு சில காட்சிகளை ஒப்பிட்டு கூரியதில் மெய் சிலிர்த்தது...! ரொம்ப நன்றி சார்..!



உண்மைத்தமிழன் http://truetamilans.blogspot.com/2012/02/3-d.html

பத்திரிகை நண்பர்களுக்கான பிரத்யேக காட்சியில்தான் இவரை சந்தித்தேன்... தானும் ஒரு பதிவர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்... இவரது வலைப்பூவின் பெயைரக் கேட்டதும்... 'நீங்கதானா அது..' என்று நான் காட்டிய ஆச்சர்யத்தை அவர் படத்தைப் பார்த்து என்னிடம் காட்டினார்... அப்போதே பாராட்டி... அன்றே பேட்டி பதிவு செய்து... உடனே தன்னுடைய சேனலில் (NDTV HINDU) அம்புலி குறித்த செய்திகள் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்...



'மெட்ராஸ்பவன்' சிவகுமார்

நான் முதல் வாரம் அம்புலி குழுவுடன் தியேட்டர் ரவுண்ட்ஸ் போகும்வழியில் ஒரு ஃபோன் வந்தது... 'தன்னை சிவகுமார் என்று அறிமுகம் செய்துக் கொண்ட ஒரு பதிவர்... இதற்கு முன் தனக்கு த்ரில்லர் வகையில் தமிழில் பிடித்த படம் 'அதே கண்கள்'தான் எனவும், அதன் பிறகு 'அம்புலி'தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறி மனம் நெகிழ வைத்தார்...' அவர் எழுதிய அம்புலி விமர்சனம் இதோ... http://www.madrasbhavan.com/2012/02/3d.html



கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் சில பதிவர்களுக்கு நான் Passive Reader... நான் விரும்பி படித்த பதிவர்களும் சில புதியவர்களும் (எனக்கு) அம்புலி படத்துக்களித்த விமர்சனம் இதோ...


சி.பி. செந்தில்குமார் http://www.adrasaka.com/2012/02/3_19.html

'யாவரும் நலம்' வெங்கட் http://www.yaavarumnalam.com/2012/02/3d.html

'லக்கிலுக்' யுவகிருஷ்ணா http://www.luckylookonline.com/2012/02/blog-post_21.html

'பிலாஸஃபி' பிரபாகரன் http://www.philosophyprabhakaran.com/2012/02/3d.html

'வாங்க ப்ளாகலாம்' அனந்து http://pesalamblogalam.blogspot.in/2012/02/blog-post_19.html

'தகவல் களஞ்சியம்' கார்த்திக் http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/03/3.html

'வீடுதிரும்பல்' மோகன் குமார் http://veeduthirumbal.blogspot.in/2012/03/79.html



நண்பர் ரஹும் அம்புலி பற்றிய விமர்சனத்தை மற்றும் போட்டதோடல்லாமல் இமெயில் மூலமாய் சில கேள்விகளையனுப்பி அதற்கான விடைகளை தொகுத்து எனது பேட்டியையும் வெளியிட்டார்...

பேட்டி இதோ... http://www.rahimgazzali.com/2012/02/interview-with-ampuli-director-hareesh.html



இவையெல்லாவற்றையும் தாண்டி வழக்கமாக ஒரு படத்தின் தரத்தை மதிப்பிடக்கூடிய சினிமா சம்மந்தப்பட்ட இணையதளங்களில் வெளியான அம்புலியின் சில முக்கிய விமர்சனங்கள் இதோ..!



Behindwoods

"Ambuli is definitely a pioneer in Tamil Cinema. It has the grip of a thriller and the charm of a grandmother’s tale or folklore..."



Indiaglitz

"Call it a visual treat and a unique experience for the audience. One gets the feeling that the entire story unfolds almost in front of him /her! To Tamil audience for whom 3D films would mean those from Hollywood, here comes 'Ambuli'..."



Galatta

"Director duo Hari Shankar and Hareesh Narayan, who amazed us with their technical brilliance in Orr Iravu, is once again back with yet another supernatural thriller titled Ambuli. This is in fact a good 3D watch for Kollywood fans..!"



தினத்தந்தி

"3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மிரட்டலான படம் அம்புலி..."



குங்குமம்

"ரசிகர்களின் எந்த கணிப்பையும் தாண்டிவிடும் கதைப் பின்னல் இயக்குநர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள்..."



விகடன்

40/100... கதை நடக்கும் காலம், இரவு நேர 3டி எஃபெக்ட், திகிலூட்டும் பின்னனி இசை ஆகியவை அம்புலியை ரசிக்க வைக்கிறது...



அம்புலி பற்றி மேலும் தகவல்களுக்கு...

http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.youtube.com/ambuli3d



அங்கிங்கென்று எங்கும் அம்புலி அலை சுனாமியளவுக்கு இல்லையென்றாலும் சுமாரான அளவில் நல்லமுறையில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்ற திருப்தி...



இனி பதிவுகள் எழுத தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் நான்...



அன்புடன்

ஹரீஷ் நாராயண்


Signature

10 comments:

Madhavan Srinivasagopalan said...

Nice to hear abt. the response. All due to your tear efforts.

:-)

ஆர்வா said...

சாரி.. ஹரீஷ் சார்... படம் பார்த்துட்டு என்னால விமர்சனம் எழுதவே முடியலை.. வேலை அந்த அளவுக்கு நேரத்தை விழுங்கிடுது.. ரியலி சாரி.. இருந்தாலும் பிவிஆர்ல உங்ககிட்ட நேர்ல என்னோட கருத்தை பகிர்ந்துக்கிட்டதே ரொம்ப சந்தோஷம்... வாழ்த்துக்கள் சார்.. அட்டகாசமான படத்தைக்கொடுத்து நிறையப்பேரை ரசிக்கவும் பயப்படவும் வெச்சிருக்கீங்க.. கலக்குங்க.. உங்க சினிமா கேரியர்ல நீங்க இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள்..

Raghu said...

//இனி பதிவுகள் எழுத தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் நான்//ஒய் நாட் கேணிவனம் 2 ஹரீஷ்? ;)

கேணிவனம் கதையை புத்தகமாக வெளியிடுவீங்கன்னு நினைச்சேன் :(

FYI, நானும் விமர்சனம் எழுதியிருக்கேன் :)

DREAMER said...

வணக்கம் மாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கவிதை காதலன்,
பி.வி.ஆரில் நேரிலேயே உங்களுடைய கருத்தும் உங்கள் நண்பர்களின் கருத்தும் கிடைக்கப்பெற்றது குறித்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி..! உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..!

வணக்கம் ரகு,
இமெயிலில் உங்கள் விமரிசனம் படித்துவிட்டதால், உங்கள் வலைப்பூவில் மிஸ் செய்துவிட்டேன்.. .இப்போதுதான் படித்தேன்... பகிர்வுக்கு மிக்க நன்றி..! இதையும் லிஸ்ட்ல இணைச்சிடுறேன்..! (நல்லவேளை இன்னும் இண்ட்லியில் சேர்க்கலை.. இனி சேத்துட்டு சேத்துடுறேன்..!)

Anonymous said...

உங்கள் படத்தை பார்க்க ஆவலாக இருந்தேன்.. ஆனால் எங்கள் ஊரில் படம் வெளியாகவில்லை.. இலங்கையில் படத்தை வெளியிட முடியாதா? மாயா

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பரே....

Unknown said...

சத்யமா நான் இன்னும் படம் பார்களா... ஆனா day 1 ல இருந்து அதற்கான ஆர்வம் முகுதியாக இருந்தது....... கண்டிப்பா இந்த வாரம் பார்துவிடுவேன்.... உயரிய முயற்சிக்கு எனது வாழ்துக்கள்.....

DREAMER said...

வணக்கம் மாயா,
படத்தின் வெளிநாட்டு உரிமை இன்னும் தீர்வாகாததால் இன்னும் வெளிநாடுகளில் வெளியிடவில்லை... டீல் முடிந்ததும் விரைவில் எல்லா ஊர்களிலும் வெளியிடப்பெடும்...

வணக்கம் கஸாலி,
வெற்றிக்கு வாழ்த்திய நண்பருக்கு மிக்க நன்றி..!

வணக்கம் நந்தா,
சீக்கிரமா படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்... காத்துக் கொண்டிருக்கிறேன்..!

-
DREAMER

shortfilmindia.com said...

enjoy the sucess..:))

Anonymous said...

வெகு சீக்கிரம் வெளியிடுங்கள்.. காத்திருக்கிறோம்.. மாயா

Popular Posts