இன்று சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருக்கும் கரையான் திருட்டு விசிடி/டிவிடி/ப்ளூ ரே/டோரண்ட் டவுண்லோடுகள்தான்...
ஒரு படம் வெளிவந்த அடுத்த நாளே சில இணையதளங்களில் சுடுச்சுட இலவசமாக ஆன்லைனில் காணும் வசதி வந்துவிடுகிறது... டவுண்லோடும் செய்து கொள்ளலாம்... அதை டவுண்லோடு செய்து சில நல்லவர்கள் சுடச்சுட டிவிடியும் போட்டுவிட்டு சந்தையில் புழக்கத்திற்கு விட்டுவிடுகிறார்கள்....
18 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்குள் ஒரு டிவிடி, சந்தையில் கிடைத்துவிடுகிறது... இதில் சில விசேஷ திருட்டு வியாபார வல்லுனர்கள் வீட்டிற்கே கொண்டுவந்து ஹோம் டெலிவரி செய்தும் விடுகிறார்கள்... இப்படி இந்த வியாபாரம் அசுரத்தனமாய் வளர்ந்துள்ளது... யாரையும் குறிப்பிட்டு குறைகூறுவதற்கல்ல...
இந்நிலையில் எங்கள் அம்புலி திரைப்படத்தை முதல் வாரம் 3Dயில் மட்டுமே சுமார் 130 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தோம்... முதல் வாரம் ரிசல்ட் நன்றாக இருக்கவே, இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நம் படத்திற்கு 7 கூடுதல் திரையரங்குகள் கிடைத்தது... அதுவும் நாங்கள் வெளியிட்ட முதல்தர போலாரைஸ்டு 3Dக்குத் தேவையான மாற்றங்ளுக்கு ஒப்புக்கொண்ட 4 திரையரங்குகள் உட்பட... இதனால், 2ஆம் வாரம் திரையரங்குகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக வர ஆரம்பித்தார்கள், குறிப்பாக குழந்தைகள் பட்டாளத்தை அதிகம் அரங்குகளில் காணமுடிந்தது... இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரம் நாங்கள் வெளியிட்ட திரையரங்குகள் அனைத்திலும் போலாரைஸ்டு மற்றும் ஆனாக்ளிஃப் என்ற இரண்டு ஃபார்மெட்டிலும் 3Dயில் மட்டுமே படத்தை வெளியிட்டிருந்ததால் திருட்டுச்சந்தைக்கு எதிரான போரில் அம்புலி வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்...
நாங்கள் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் வியாபார டிசைன்களை வடிவமைக்கும்போது, படத்தின் திருட்டு டிஸ்க் வரவில்லையெனில், கீழ்காணும் விளம்பரத்தை 2ஆவது வார தொடக்கத்தில் (2ஆவது வெள்ளியன்று) வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தோம்...
ஆனால் இந்த விளம்பர டிசைனை உங்களால் வெளியிட முடியாது, உங்கள் படத்தின் டிஸ்க் நிச்சயமாய் வெளிவந்துவிடும் என்று எங்கள் குழுவுக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்...
ஆனால், 'அம்புலி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 36 நாட்களாகிறது.. இதுவரை தெளிவான ப்ரிண்ட் அல்லது 5.1 ப்ரிண்ட் என்று திருட்டுச்சந்தையில் புழங்கும் வார்த்தையில் சொல்லக்கூடிய சுத்த ப்ரிண்ட்டுகள் வெளிவரவேயில்லை...
இதுவரை இண்டர்நெட்டில் வெளியாகியிருக்கும் அம்புலியின திருட்டுப்ரிண்ட்டின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் இதோ... இதுதான்...
இது போல் மழுங்கலான இரட்டைப் பிம்பங்களை எந்த மனிதராலும் 10 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது... நல்ல தரத்தை எதிர்பார்க்கும் உண்மையான சினிமா விரும்பிகள் இதை பார்க்கவும் மாட்டார்கள்... அதையும் மீறிப் பார்ப்பவர்களுக்கு இது இண்டர்நெட்டில் இலவசமாகத்தான கிடைக்கிறது கூகிளாரை கேட்டு பார்த்துக் கொள்ளலாம்...
திருட்டு டிவிடியில் தெளிவான ப்ரிண்ட் வெளிவராமலிருப்பதற்கு 2 முக்கிய காரணங்கள்
1. அம்புலி திரைப்படத்தை 3Dயில் மட்டுமே வெளியிட்டது
2. கேபிள் சங்கர் அவர்களின் 'சினிமா வியாபாரம்' புத்தக உத்திகள்
முதல் காரணத்திற்காக, எங்கள் தயாரிப்பாளரான திரு.கே.டி.வீ.ஆர். லோகநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்... காரணம், அவர் நினைத்திருந்தால் கூடுதல் வருமானம் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிக திரையரங்குகளில் 2Dயிலும் இப்படத்தை வெளியிட்டிருக்க முடியும்... 2D திரையரங்குக்காரர்கள் படத்தை கேட்கவும் செய்தார்கள்... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை... அவரது துணிவு, இப்படத்தை மக்கள் சில நாட்களுக்கு 3Dயில் மட்டுமே கண்டு களிக்கட்டும்... படத்திற்கான டிமாண்ட் சில நாட்களுக்காவது நிச்சயம் இருக்கும், அப்போது சாவதானமாக 2Dயில் விட்டுக் கொள்ளலாம் என்று ஸ்திரமாய் நம்பினார்...
இரண்டாவது காரணத்திற்காக, கேபிள் சங்கர் அவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்... அவரது "சினிமா வியாபாரம்" புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல் படத்தி்ற்கான வெளிநாட்டு உரிமையை (2Dயில்) கொடுத்திருந்தால் இந்நேரம் தட்டு ரெடியாக இருந்திருக்கும்.. அவர் அந்த புத்தகத்தில் விளக்கியிருந்த சில உத்திகளை தெரிந்துக் கொண்டதில், 3Dயில் மட்டுமென்றால் வெளிநாடுகளில் உடனே வெளியிடலாம், இல்லையெனில் 2Dயை இப்போது வெளியிட வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்துக் கொள்ள அவரது புத்தகம் வழிவகுத்தது...
தமிழ் சினிமாவின் எதிர்காலம் 3Dதான் என்று நான் கூறவில்லை.. சில காலமாவது 3D படங்கள் தொடர்ந்து வந்தால், மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பத்தோன்றுகிறது... அம்புலி போன்ற புதுமுகங்களை வைத்து எடுத்த 3D படத்திற்கே மக்கள் இந்த ஆதரவு கொடுத்தபோது, பெருநட்சத்திரங்களின் படங்கள் 3Dயில் வந்தால் மக்கள் நிச்சயம் திருவிழாவாய் கொண்டாடுவார்கள்... நாமும் தியேட்டர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவோம்...
9 comments:
ஹாய் சதீஷ் சார்... நானும் பஜாரில் டிவிடி வாங்கப்போகும் போது நிறைய விசாரித்தேன். அம்புலி நல்ல பிரிண்ட் வரவே இல்லை என்றுதான் சொன்னார்கள். இப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுத்த தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள். கேபிள் சங்கர் சாரின் சினிமா வியாபாரம் நிஜமாவே ஒரு சினிமா ”என்சைக்ளோபிடியா”... எல்லா சினிமாக்காரர்களும் வைத்திருக்க வேண்டிய புத்தகம் அது.. வாழ்த்துக்கள் ஹரி சார்.. அடுத்த படம் என்ன?
திரையரங்கு உரிமையாளர்கள் மீதும் கொஞ்சம் தவறு இருக்கிறது ஹரிஷ். சத்யம் தியேட்டரின் தரத்துக்கு 150 ரூபாய் செலவு செய்ய பலரும் தயாராக இருப்பார்கள். ஆனால் அந்த தரத்தில் பாதி கூட இல்லாத தியேட்டருக்கு ஏன் 100௦௦ ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு நடுத்தர குடும்பத்தின் எண்ணமாக இருக்கும்.
சென்னையிலேயே, பல தியேட்டர்களில் பார்க்கிங் டிக்கட் 20௦ ரூபாய். ஆனால் சத்யத்தில் 10 ரூபாய்தான்.
படத்திற்கு இணையாக, ப்ரோமொஷனிலும் நீங்கள் காட்டிய க்ரியேட்டிவிட்டிதான் பலரையும் திரையரங்குக்கு வரவழைத்திருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் ஹரிஷ் :)
வணக்கம் கவிதை காதலன்,
வாழ்த்துக்கு நன்றி..! அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பு விரைவிலேயே பகிர்கிறேன்...
வணக்கம் ரகு,
நானும் ஒரு தியேட்டரில் பைக் பார்க்கிங்கிற்கு 65 ரூபாய் கொடுத்து புலம்பியபடிதான் வெளியேறினேன்... படத்தின் ப்ரொமோஷனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடலாம்... ஏனென்றால் அந்த மெனக்கெடல்கள் கண்டிப்பாக நல்ல பலனளிக்கிறது...இது குறித்து கண்டிப்பாக விரைவில் ஒரு தனிப்பதிவு போடுகிறேன்...
-
DREAMER
சீக்கிரம் சொல்லுங்கப்பா.. அடுத்த ப்ராஜெக்டை பத்தி.. வெயிட்டிங்.
வாழ்த்துக்கள்...
எங்கள மாதிரி தமிழ் நாட்டுக்கு வெளியில இருக்கறவங்களுக்கு எப்ப சார் ஸ்பெஷல் ஷோ ? கெடைக்கும்.. காசு கொடுத்து பாக்க நாங்க ரெடி..
'த்ரீ-டி'னா சும்மாவா..
3D-யில் படம் வந்தால் திருட முடியாது என்பது உண்மைதான். ஆனால், எல்லோராலும் அப்படி எடுக்க முடியாதே?
2D-யில் படம் வெளியிடாத உங்கள் தயாரிப்பாளரின் தைரியத்திற்கு பாராட்டுக்கள் நண்பரே....
வணக்கம் கேபிள்ஜி,
உங்ககிட்ட சொல்லாமலா... அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய இன்பத்தகவலை விரைவில் பகிர்கிறேன்ஜி...
வணக்கம் மாதவன்,
உலகமெல்லாம் பரந்திருக்கும் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் இந்த படம் சென்றடைய வேண்டும் என்றுதான் முடிந்தவரை முயன்றுவருகிறோம்..!
வணக்கம் கஸாலி,
எல்லோராலும் 3D நிச்சயமாக முடியாதுதான்... அப்படி முடிந்தாலும், 3D அலுப்புத்தட்டிவிடும்... ஏதோ ஒரு வகையில் திருட்டுச்சந்தை ஒழிந்தால் அல்லது குறைந்தபட்சம் குறைந்தாலாவது மக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயம் நல்ல காலம்தான்...
-
DREAMER
Hai,
I am searching net almost for a year to watch ur movie ORR ERAVUU. Why dont U re-release the movie.
Regards,
RAJESH
வணக்கம் கவிதை காதலன், வாழ்த்துக்கு நன்றி..! அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பு விரைவிலேயே பகிர்கிறேன்... வணக்கம் ரகு, நானும் ஒரு தியேட்டரில் பைக் பார்க்கிங்கிற்கு 65 ரூபாய் கொடுத்து புலம்பியபடிதான் வெளியேறினேன்... படத்தின் ப்ரொமோஷனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடலாம்... ஏனென்றால் அந்த மெனக்கெடல்கள் கண்டிப்பாக நல்ல பலனளிக்கிறது...இது குறித்து கண்டிப்பாக விரைவில் ஒரு தனிப்பதிவு போடுகிறேன்... - DREAMER
Post a Comment